Blog Archive

Friday, September 15, 2006

கண்ணா வா வா.



திருவளர் செல்வன் கண்ணன் இன்றுதான் வருகிறான் எங்கள் வீட்டுக்கு. இந்த வருடம் 3 தடவையாக வருகிறான். ஏற்கனவே
ஆடி மாதமே ஒரு வரவு. ஆடிப் பௌர்ணமி கழிந்த எட்டாம் நாள் வந்துவிட்டான்.
அமோகமாக எண்பது சதவிகிதம்
சீடை முறுக்கு என்று அவனுக்குக் கை காண்பித்து விட்டு,
மகிழ்ந்து அவை எல்லாவற்றையும்
எல்லோரும் கபளீகரம்
செய்தாச்சு.
நேற்று சில வீடுகளுக்கு வந்தான். பாவம் கால்கள் வலிக்கிறதோ கிருஷ்ணா உனக்கு.
எத்தனை வீடுகளில் பாதங்கள்
போட்டிருப்பார்கள்?
அத்தனை பாதங்களிலும் திருவடிகளைப்
பதித்தாயோ.
சுக்கு வெல்லம் சரியாகச் சாப்பிட்டாயா.

அவல் வறுத்தால் பிடிக்குமா? அப்படியே
சாப்பிடுவாயா? அவலுடன் அன்பு கொடுக்க
நாங்கள் குசேலர்களா //
உன்னைப் பார்த்து உருக?உடனேயே
நீயும் அணைக்க? நாங்கள் உன் குழலும் இல்லையே.

அதுதான் வெண்ணை பிடிக்கிறதோ உனக்கு.
உன்னைப் பார்த்தவுடன் அதற்கு
உற்சாகம் பொங்கி வெண்ணையாகக்
கரைந்து விடுகிறது.
கரைந்து ,உன்னில் இணைந்து 'வேறு' என்பதே இல்லாமல்
ஒன்றாகத்தான் ஆசை.
நீயே வந்து ஆட்கொண்டால் தான் எங்களுக்குப் பெருமை.
நீ வரும் நேரத்தை நாங்கள் அறிந்து கொண்டால்
போதும்.
அந்த அறிவையும் நீதான் கொடுக்க வேண்டும்.


இதோ இன்றைய தினமணியில் கண்ணனைப் பற்றி
வந்த அரும் உரை.
கண்ணன், பாண்டவர்களைப் பார்க்க வனத்திற்கு வந்தாராம்.
அப்போது பாண்டவர்கள் குளிக்க ஏதுவாக ஒரு பெரிய பாண்டத்தில் தண்ணீர் கொதிக்க வைக்க திரௌபதி அடுப்பில் தணல் சேர்த்துக்கொண்டு இருந்தாளாம்.
சிறிய நேரம் கழித்து சோதித்தால் தண்ணீர் சூடாகவே இல்லை.
மற்றவர்கள் தொட்டுப் பார்த்தால் சுடவில்லையாம்.
அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
இதென்ன அதிசயம்!!அக்கினி சூழ எரிகிறது,, தண்ணீர் கொதிக்கவில்லையே என்று கிருஷ்ணனைப் பார்த்தார்களாம்.
அவன் சிரிக்கிறான்.
அந்தத் தண்ணீரைக் கீழே கொட்ட சொல்லுகிறான்.
ஒரு தவளைக் கொட்டிய தண்ணீரிலிருந்து குதித்து
ஓடுகிறது.
என்ன பண்ணுவது த்ரௌபதி
நீ ஊற்றிய தண்ணீரில் இருந்த தவளை முன்னாலேயே என்னைச் சரண் அடைந்துவிட்டது.
அதைக் காப்பாற்ற
அக்கினியின் தன்மையை மாற்றிவிட்டேன் என்றானாம்.
(புசித்துவிட்டுக் கூட ) பஜனை செய்வோம் கண்ணன் நாமம்!

8 comments:

துளசி கோபால் said...

வல்லி,

ஜமாய்ச்சுட்டீங்க.

நீலக்கலர் எழுத்து சரியாத் தெரியலையேப்பா.

கண்ணன்ன்னு சொன்னதும் கலர் நீலமா ஆயிருச்சா?

இன்னிக்குத்தான் கண்ணனைப் பத்திப் படிச்சேன். எங்கேன்னு மறந்து போச்சு.

குழந்தைக் கண்ணன், பசுக்கன்றைத் தள்ளிவிட்டுட்டு, முட்டிபோட்டு அம்மா பசுகிட்டே
மடியிலிருந்து பால் குடிக்கிறான். அவனது பின் பக்கத்தை அந்த அம்மாப் பசு கழுத்தைத் திரும்பி
நக்கித்தருதாம். யசோதை கண்ணனை 'ஏண்டா இப்படி அக்கிரமம் செய்யறே?'ன்னு மிரட்டறாளாம்.

வல்லிசிம்ஹன் said...

துளசி ப்ளாகருக்கு என்னவோ ஆச்சு. நன்றிப்பா. கண்ணன் கதைகள் சொல்லிகிட்டே இன்னிக்கு இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

துளசி ப்ளாகருக்கு என்னவோ ஆச்சு. நன்றிப்பா. கண்ணன் கதைகள் சொல்லிகிட்டே இன்னிக்கு இருக்கணும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே மனமே
கண்ணன் புகழைப் பாடு
ராக ஆலாபனை செய்து பாடு
முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு
--- ஊத்துகாடு வேங்கட கவி

வல்லிசிம்ஹன் said...

நன்றி தி.ரா.ச
எனக்கு ரொம்பப் பிடித்த பாட்டு. மஹராஜபுரம் பாடிக் கேட்டால் மிக நன்றாக இருக்கும்.
பால் வழியும் முகமும்,
ஆடாது அசங்காது எல்லாமே
சுவை தரும் பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

துளசி, ப்ளாக்ச்பொட் அக்சஸ் கிடைக்கலை. இப்பவும் உங்க சிக்கு புக்கு ரயில் பாக்க முடியலை.
பாகவதக் கதைகள் கேட்கக் கேட்க ரொம்ப இனிமை.
இன்னொருத்தர் வீட்டிலே போய் உட்கார்ந்து கொண்டு , இந்த சின்னக் கண்ணன், இலை நிறைய அக்கார அடிசல் சாப்பிட்டு விட்டு இன்னும் இல்லையா பசிக்கிறதே என்கிறானாம்.
பெரியாழ்வார் பாசுரங்களில் வரும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வசன கவிதை அருமை!
//நீ வரும் நேரத்தை நாங்கள் அறிந்து கொண்டால் போதும்.
அந்த அறிவையும் நீதான் கொடுக்க வேண்டும்//
-இது தான் நச்!

முதல் படம் மிக அருமை.
"டிக்கிலோனா" கண்ணன் ஆடினால் இனிக்கிறது!! :-):-)
(தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்; சின்னக் கண்ணனைச் சீண்டி விளையாட ரொம்ப் பிடிக்கும்)

இனிய ஸ்ரீ ஜெயந்தி வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

KRS,
தவறாக நினைக்க என்ன இருக்கிறது?
இப்படி ஒரு பாட்டு இருப்பதும் ஞாபகம் வரும்.
நீங்கள் சொல்வதுதான் நிஜம்.
இந்த மாதிரி ஒரு பூச்செண்டு நம்மேல் விழுந்தால் கசக்குமா.

கொடுத்து வைக்க வேண்டுமே.
எல்லோருக்கும் குட்டிக் கண்ணன் மேல் ஆசை.
வேறு யாருக்கும் இத்தனை சாமர்த்தியம்,குறும்பு,அழகு அன்பு வரும்.
நம் கண்ணனே கண்ணன்.