Blog Archive
Thursday, September 07, 2006
இங்கிதம் அறிந்தவர்
வினய அனுமான். எங்க வீட்டில் இவருக்கு அஞ்சு என்று பெயர்.
அவ்வளவு அன்பு இவர் மேல் எல்லோருக்கும்.
நம்ம வீட்டுப் பசங்க மத்திரம் என்று இல்லை.
அநேஹமாக மைலாப்பூர் வாசிகள்
எல்லோரும், சென்னையில் வசிக்கும்
கேஜி குழந்தைகளிலிருந்து,
எம்.ப்ஃஇல் முடிக்கும் சற்று வயதானவர்கள் வரை, இவரைப் படிப்பு, பரீட்சை என்று அப்பிளிகேஷன் பாஃர்ம்ஸ் வாங்கின கையோடு முறையிட்டு விட்டு, வேலை முடிந்ததும் க்ஐயோடு வடை மாலை, வெண்ணைக்காப்பு
என்று
ஒரு வழி பண்ணி வ்இடுவார்கள்.
அத்தனை பேருக்கும் இவர் எப்படித்தான் கவனம் வைத்துப் ப்ஆர்த்துக் கொள்ளுகிறாரோ என்று கூட்டம் ில்லாத மதிய நேரத்தில்
போய்ப்பார்க்களாம் என்றால் அப்போதும் விடாமல் யாரவது ஒருத்தர் அடிப் ப்ரதட்சிணம் செய்து கொண்டு இருப்பார்.
இந்த 30 வருடங்களாக இவருடைய கீர்த்தி வடபழனி,கோடம்பாக்கம்
என்று சினிமா லெவலுக்குப் போய்விட்டது.
வியாழன், சனிகளில் கூட்டம் நெறிபடும்.
அதுவும் பார் புகழ் அமெரிக்காவில் பக்த்ரகள்
நிறையவே இருக்கிறர்கள்.
படித்து வேலையாய்ப் போனவர்கள்,
திருமணம் முடித்துக் குழந்தை குட்டிகளோடு
வரும் பெண்கள், ஆண்கள்.
அனைவரும் மாறாத பக்தி கொண்டிருக்கும் இந்த ப்
பாங்க் ஆஞ்சனேயர் உன்மையிலேயெ மகா வரப்பிரசாதி.
த்ிழ்நாடு மெர்கந்டைல் வங்கியின் முகப்பில் கட்டிடத்தின் மேலே இருந்தவரைக் கீழே ஒரு சன்னிதி கட்டிக்
கும்பாபிஷேகம் செய்தார்கள்.
அப்போது காலை வேளையில் நான் போகும்போது நானும்
இன்னும் இருவரும் அர்ச்சனை செய்பவரும் தான் இருப்போம்.
கூப்பிய கரங்களோடு இந்த அனும வடிவைப்
பார்க்கும்போதெல்லாம் நம்முடைய
அறியாமையால் வரும் கர்வமெல்லாம் ஒழிந்துவிடும்.
அமைதியான காலை. சத்தமே இல்லாத சூழ்நிலை.
எதிரில் உட்கார்ந்து தியானம் செய்யலாம் என்ற நல்ல எண்ணத்தைத் தூண்டும்
மனம் ஒருமைப் படுகிறதே என்ற எண்ணத்துக்கு எதிராகக் காலை வேளை வேலைகள் என்னை வீட்டிற்கு அழைத்து
வந்துவிடும்..
இப்போது போகலாம் தானே.
பிக்கலா பிடுங்கலா.
ஆனாலும் அடிக்கொருதரம் ஹனுமானைப் பார்க்க விரைந்த கால்கள்
ஆடிக்கொருதரம் தான் போகின்றன.
எப்படி இப்படி ஒரு 'ஒரு பிடிச்சு வைச்ச பிள்ளயார் மாதிரி"
இருக்கீறோம் என்று நினைத்துக் கொள்வேன்.
நாம் போகா விட்டால் என்ன, அவர் நம்மைப் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கையா,
சோம்பலா, அவசியம் போயே ஆக வேண்டும் எந்த ஜோசியரும் சொல்லாததாலா?
தெரியவில்லை.
ஆனால் ஒவ்வொரு தடவையும் அந்தக் கோபுரத்தைத் தாண்டும் போதும் மன்னிப்புக் கேட்கிறது மனம்.
இதுவும் கடக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அய்யடா........ செல்லம்போல இருக்காரே.
நம்ம வீட்டுலே இவருக்கு 'நேயடு'ன்னு பேர். பிரிஸ்பேன்லே எனக்காகக் காத்திருந்தார்.
என் கையை( பையை) புடிச்சுக்கிட்டே நியூஸிக்கு வந்துட்டார்.
இவர் கையில் உள்ள 'கதை' வெளியே எடுக்க வரும். அப்பப்ப கை மாத்தி வச்சுப்பார்:-)))
கதையை மாத்தி வைச்சுப்பாரா?ஓ, கை மாத்தி வச்சுப்பாரா:-))
ப்ரிஸ்பேனில் உங்களை எப்படிப் பிடிச்சார்?
இதுக்கும் உண்டான கதையை சொல்லுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
துளசி , என்னமோ சொல்லப் போய்
எதையோ சொல்லி முடித்து விட்டேன்.குரு வாரத்துக்கு ஆஞ்சனேயடு வந்து விட்டார்.
வாயுபுத்திரனின் படம் ஜோர். இது லஸ்லில் இருப்பவரா இல்லை ஆள்வார்பேட்டையா? சென்னை திருமழிமிசையிலும் ஒரு வினயா பக்த ஆஞ்சநேயர் உள்ளார் பார்த்திருக்கிறீர்களா.மயிலையில் மட்டும் 5 ஆஞ்சநேயர்கள் உள்ளார்கள்.
நன்றி தி.ரா.ச.
இவர் நம்ம பாங்க் ஆஞ்சநேயர்.
அதாவது ஆழ்வார்பேட்டை தலைவர்.:-)0
தண்ணித்துறை,மந்தைவெளி,அலர்மேல் மங்காபுரம் என்று வியாபித்து வருகிறார்.
இவர் .
எங்க மாமியார் இவரை வினயா என்று சொல்லுவார்.
மத்தபடி இவர் ராமபக்த ஆஞ்சநேயர்.
I have not come to that temple. I will try to come once I come to Chennai.
Ofcourse.
you are welcome our home too.
Post a Comment