Blog Archive

Tuesday, April 19, 2011

சித்திரைத் திருநாள்

fullmoon
 இந்தத் திங்கள்  இந்த நிலா.
இந்தப் படங்கள் எடுப்பதற்குள் 
ஊன்  உருகித்தான் விட்டது.
அவ்வளவு குளிர்.10 டிகிரி 
 நமக்கு ஒத்து வர மாட்டேன் என்கிறது.:)
மாசில் வீணையும் 
மாலை மதியமும்
வீசும் தென்றலும்
வீங்கிள வேனிலும்
 மூசு வண்டரைப் பொய்கையும் 
போன்றதே  ஈசன் எந்தை இணையடி நீழலே

இந்தப் பாடல் தான்  நினைவுக்கு வந்தது.
ஒரு சத்தம் கிடையாது. ஆறு மணிக்கு சாயந்திர வேளையில் நிசப்தம்.
எட்டு மணிக்கு சாப்பாடு முடிந்து 
நித்திரை கொள்ள இந்த ஊர் தயார்.
ஒன்பது மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கிறது.
"நேரத்தோடு சாப்பிட்டு நேரத்தோடு படுத்துக்கணும்*
தாத்தா குரல் காதில் விழுகிறது:)

  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

14 comments:

பாச மலர் / Paasa Malar said...

ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு நிலா...என்றாலும் அதே நிலா...குளிர் ஒரு சங்கடம்தான்....

ராமலக்ஷ்மி said...

எங்கு சென்றாலும் நிலவு உங்களைத் தேடி வந்து விடுகிறாள் பாருங்கள்:)! அருமையான பகிர்வு வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
உங்கள் நிலவை இப்போதுதான் பார்த்து வருகிறேன்.
கை அசங்காமல் படம் எடுக்க முடியவில்லை. முயற்சிக்கறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு பாச மலர்,
நேற்று இரவு எடுக்க முடியவில்லை. காலையில்
எடுத்த படங்கள் இவை. நிலவு ஒன்றுதான் நம்மை எப்பவும் தொடருகிறது. அதுவும் இப்போது கோடை ஆரம்பம் என்பதால்
:)--

சாந்தி மாரியப்பன் said...

அருமையான பகிர்வு வல்லிம்மா..

மாதேவி said...

குளிர்நிலா கதைசொல்ல வருகிறாள்...

கோமதி அரசு said...

நேரத்தோடு சாப்பிட்டு நேரத்தோடு படுத்துக்கணும்*
தாத்தா குரல் காதில் விழுகிறது:)//

தாத்தாவிடம் கதைகள் ,நிலவில் பாட்டி வடை சுட்ட கதைகள் சொன்னது எல்லாம் நினைவுக்கு வந்ததா!

ஸ்ரீராம். said...

இருளில் ஒரு ஒளி - நிலா...

குறையொன்றுமில்லை. said...

anru vanthathum athe nila. inru vanthathum ithe nilava?

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், பதில் சொல்ல நேரம் எடுத்துக் கொண்டுவிட்டேன்.
பேரனுக்கு ஜலதோஷம்
ரொம்பக் சிரமப் பட்டுவிட்டது. இன்று எழுந்திருக்கும்
போதே சிரிப்பான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்,.
மிகவும் நன்றி மா.

--

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் குளிர் நிலாவும் சத்தம் இல்லாத சுற்றுப்புறமும்
பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க மாதேவி,
தவறாமல் வந்து ஊக்கப் படுத்துகிறீர்கள்.
மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தங்கச்சி கோமதி.
பாட்டியின் கை சோறு ,தாத்தாவின் அறிவுரைகள் எங்களை எப்போதும் நெறிப் படுத்தும்
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு லக்ஷ்மி,
அதே அதே சபாபதே:)