About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Tuesday, October 18, 2011

என் இனிய ரத்தமே

இனிமையான அறிவுரை  கொடுக்கும் மருத்துவர்
கொஞ்சம்  பழசு கொஞ்சம் புதுசு.
***************************************8

எது பழக்கம் எது வழக்கம் என்று யோசிக்கிறேன்.

மகிழ்ச்சியாக இருப்பது சிலருக்கு வழக்கமாகி விடுகிறது.
அந்த வழக்கத்தையேப் பழகிக் கொடுக்கும் ஒரு குருவை நான் முன்காலங்களில் பொதிகை சானலில் பார்த்து இருக்கிறேன். ஒர் ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்னால்!
''சந்தோஷம்'' என்றே ஆரம்பிப்பார். அவர் திரு நாமம் கூட திருஓம்காராநந்தா ஸ்வாமி என்று சொல்லுவார்கள்.
அவருடைய ஆசிரமம் கூட
கல்பாக்கம் ,புதுப்பட்டினத்தில் இருப்பதாகச் சொல்லுவார்கள்.
அவர் பேசும்போதே உற்சாகமாக இருக்கும்.

இவரைத் தினம் பார்த்து வாழ்க்கையில் சந்தோஷத்தைப் பயிலக் கற்க வேண்டும் என்று நினைப்பேன்.
அது அந்த மணித்துகள்கள் மட்டுமே.......
பிறகு ஏதேதோ யோசனைகள், பழைய நினைவுகள் புதிய பிரச்சினைகள்,
யாரோ எப்பவோ என்னைக் கோபித்துக் கொண்டு வார்த்தைகளைக் கொட்டிய மனிதர்கள்.

இப்படி ஒரு ஜாபிதா,லிஸ்ட் போட்டு மனம் அசை போடும்.
இது எவ்வளவு தூரம் என் உடல் நிலையைப் பாதித்து இருக்கிறது என்று
என் நாற்பதாவது வயதில் கண்டு கொண்டேன். முதலில் உயர் ரத்த
அழுத்தத்தில் ஆரம்பித்து இப்போது சர்க்கரை பகவானும் சேர்ந்து கொண்டார். அவரோட கொலஸ்ட்ரால் தேவதையும் வலம் வருகிறாளாம்:)
இதெல்லாம் கேட்டால் உடனே புத்தியோடு இருப்பவர்கள் என்ன செய்வார்கள்.?
வைத்தியர் சொல்வதை எழுதி, மனப்பாடம் செய்து
அந்த விதி முறைகளை மீறாமல் உடம்பைப் பேணுவார்களா இல்லையா.

நாமெல்லாம் வேற டைப்பு.
என்ன ,ஏதோ ஒரு அளவைக் காண்பித்து நான்நோயாளின்னு சொல்லி விட்டால்,
அதுவரை நன்றாக இருந்த நான் மாறிவிடுவேனா.  என்ன. ஹ்ம்ம்ம்.


கண்போன போக்கில், வாய்(ருசி) போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
அதுதான் .. அவ்வளவுதான். கொஞ்சம், ஒரு பத்து நிமிடம் நடக்க வேண்டும்...
என்ன பிரமாதம் என்று நினைத்துக் கொண்டு தீவிரமாகச் செயல் பட ஆரம்பித்தேன்.

முதலில் நல்ல நடைக்கு நல்ல பாதுகைகள் வேணுமில்லையா.
டயபெடிஸ் ஷூ வாங்கியாகி விட்டது. அதைத்தவிர வீட்டில் போட்டுக்கொள்ளும் செருப்பு. ஏனெனில் சிறுகாயமும் பெரிதாகும் அபாயம் உண்டாம்.எல்லாம் தயார்ப் படுத்திய நிலையில் நான் நிமிரும்போது ஒரு வாரம் ஓடி யிருந்தது.
காலையில் என்னை நடை பழக மெரினாவுக்கு அழைத்துப் போவதாகச் சிங்கமும் உறுதி சொன்னார்.
வைத்தியர் சொன்னது காலை 45 நிமிடம்.
இல்லாவிட்டால் உன் நோயும் உடல் பருமனும் குறைய வாய்ப்பெ இல்லை என்று சொல்லிவிட்டார்.அவர் சொன்னதில் பாதிதான் காதில் போட்டுக் கொண்டதால் 45 நிமிடங்களை 20 நிமிடங்கள் ஆக்கி நடப்பதாக உத்தேசம்.
என்றுமே 5 மணி காலையில் எழுந்திருப்பவளுக்கு அன்று மட்டும் ஆறு மணி வரை விழிப்பு வரவில்லை.


அதுவோ மே மாதம்.சூரியன் ஐந்தரை மணிக்கே சன்னலைத் தட்டும் காலம்.
நம்ம சிங்கம் பொண்டாட்டிக்காக வண்டியைத் துடைத்து வைத்து, காப்பி டிகாக்ஷன் போட்டு,பாலைக் காய்ச்சி வைத்திருந்தார்.


எனக்கோ கால்களில் இரண்டு மூன்று கிலோக் கற்களைக் கட்டியது போல ஒரு பிரமை.:)

சரி, இன்று தவறினால் என்றும் தவறும்.
என்று நல்ல மணக்க மணக்க இருந்த 4% பால்:)
(ஸ்கிம் மில்க் தான் அனுமதிக்கப் பட்டது) கலந்த காப்பியைக் குடித்ததும் உற்சாகம் வந்தது.
கடற்கரையை அடைந்தபோது அநேகமாக எல்லோரும் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.:))))

ஏழு மணிக் கதிரவன் கிரணங்கள் சுடக் கொஞ்ச நேரம் நடந்தபிறகு அங்கேயே போட்டிருந்த
பெஞ்சில் உட்கார்ந்து ஒரு வயதானவர் கொடுத்த அருகம்புல் ஜூஸையும் குடித்துவிட்டு,வண்டி ஏறி வரும் வழியில் சரவணபவனில் இட்லி வடையும் சாப்பிட்டு மீண்டும் கணினிக்கு வந்து விட்டேன்:)


இந்தக் கதை ஏழு
 வருடத்துக்கு முந்திய கதை.
இதைச் சொல்ல வந்தது ,என்னதான் பிரச்சினை,சோகம் என்று புலம்பினாலும், தனக்கு ஒரு உடல்நலக்கேடு என்று வந்தால் எல்லாவற்றையும் மறக்கச் சித்தமாக இருந்த இந்த மனம் என்னும் குரங்கைப் பற்றித்தான்.

வேலையில்லாமல்தான் அது வேண்டாத சிந்தனைகளை வளர்க்கிறது.
முறையான ஒழுங்கான வளமான வேலைகளும் திட்டங்களும் போட்டால்
அது கோலெடுத்தால் குடமெடுக்கும் குரங்காகிக் கட்டுப்படுகிறது.
சண்டைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன::;
மனதுக்கும் உடலுக்கும்
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நினைவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்.
மீறி வந்துவிடலாம்.:)

இந்தத் தடவை ஆறு மாதங்கள்  கழித்து வைத்தியரைப் பார்க்கப் போனால்
சர்க்கரை ஏகத்துக்குக் குறைந்திருக்கிறதே.!!!!

இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவையாவது சாப்பிடணும். கொழுப்பு கூடி இருக்கு.:(
நடக்கப் போங்க.கண்ணில சதை வளருது.
(ஐய்யொ)அறுவை சிகித்சை கூடியசீக்கிரம் செய்துடுங்க.

இதயத்தில பட்படப்பு  இருக்கு.
வியர்த்துக் கொட்டினால்  பாலைச்சுட வைத்து சர்க்கரை சேர்த்துக் குடித்துவிடுங்கள். சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்றிருக்கிறார்.

மத்தபடி  நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க.!!!!
எனக்கு ரொம்ப சந்தோஷம்.!! என்று முடித்தார். :)

வைத்தியரிடம் போய்வந்ததிலிருந்துதான் கலக்கம் அதிகரித்திருக்கிறது!!
முன்னெச்சரிக்கையாக   இருக்கப் பழகிக்  கொள்ளுகிறேன்.
உய்ர்மட்ட சர்க்கரையைவிட    குறைந்த அளவு சர்க்கரை அவ்வளவாக

விரும்பத்தக்கது அல்ல.
மயக்கம் தலைசுற்றல் வரவாய்ப்புகள் அதிகம்.மிகவும் குறைந்தால் ''கோமா''வில் கொண்டுவிடும் அபாயமும் உண்டு.


எனக்குச் சர்க்கரை இருப்பதால் என் வாரிசுகளுக்கும்
இந்தச் சொத்துப் போய்ச்சேராமல் இருக்கக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
கடவுளும் புத்திசாலிதான்.   ச்சும்மா  படுத்த மாட்டார்.
பிள்ளைகள் புத்திசாலிகள். கவனமாக இருப்பார்கள்.

நோயில்லாத வாழ்க்கையை உங்கள் எல்லோருக்கும் இறைவன் அருளவேண்டும்.
இருக்க வேண்டும்.

Posted by Picasa