கொஞ்சம் பழசு கொஞ்சம் புதுசு.
***************************************8
எது பழக்கம் எது வழக்கம் என்று யோசிக்கிறேன்.
மகிழ்ச்சியாக இருப்பது சிலருக்கு வழக்கமாகி விடுகிறது.
அந்த வழக்கத்தையேப் பழகிக் கொடுக்கும் ஒரு குருவை நான் முன்காலங்களில் பொதிகை சானலில் பார்த்து இருக்கிறேன். ஒர் ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்னால்!
''சந்தோஷம்'' என்றே ஆரம்பிப்பார். அவர் திரு நாமம் கூட திருஓம்காராநந்தா ஸ்வாமி என்று சொல்லுவார்கள்.
அவருடைய ஆசிரமம் கூட
கல்பாக்கம் ,புதுப்பட்டினத்தில் இருப்பதாகச் சொல்லுவார்கள்.
அவர் பேசும்போதே உற்சாகமாக இருக்கும்.
இவரைத் தினம் பார்த்து வாழ்க்கையில் சந்தோஷத்தைப் பயிலக் கற்க வேண்டும் என்று நினைப்பேன்.
அது அந்த மணித்துகள்கள் மட்டுமே.......
பிறகு ஏதேதோ யோசனைகள், பழைய நினைவுகள் புதிய பிரச்சினைகள்,
யாரோ எப்பவோ என்னைக் கோபித்துக் கொண்டு வார்த்தைகளைக் கொட்டிய மனிதர்கள்.
இப்படி ஒரு ஜாபிதா,லிஸ்ட் போட்டு மனம் அசை போடும்.
இது எவ்வளவு தூரம் என் உடல் நிலையைப் பாதித்து இருக்கிறது என்று
என் நாற்பதாவது வயதில் கண்டு கொண்டேன். முதலில் உயர் ரத்த
அழுத்தத்தில் ஆரம்பித்து இப்போது சர்க்கரை பகவானும் சேர்ந்து கொண்டார். அவரோட கொலஸ்ட்ரால் தேவதையும் வலம் வருகிறாளாம்:)
இதெல்லாம் கேட்டால் உடனே புத்தியோடு இருப்பவர்கள் என்ன செய்வார்கள்.?
வைத்தியர் சொல்வதை எழுதி, மனப்பாடம் செய்து
அந்த விதி முறைகளை மீறாமல் உடம்பைப் பேணுவார்களா இல்லையா.
நாமெல்லாம் வேற டைப்பு.
என்ன ,ஏதோ ஒரு அளவைக் காண்பித்து நான்நோயாளின்னு சொல்லி விட்டால்,
அதுவரை நன்றாக இருந்த நான் மாறிவிடுவேனா. என்ன. ஹ்ம்ம்ம்.
கண்போன போக்கில், வாய்(ருசி) போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
அதுதான் .. அவ்வளவுதான். கொஞ்சம், ஒரு பத்து நிமிடம் நடக்க வேண்டும்...
என்ன பிரமாதம் என்று நினைத்துக் கொண்டு தீவிரமாகச் செயல் பட ஆரம்பித்தேன்.
முதலில் நல்ல நடைக்கு நல்ல பாதுகைகள் வேணுமில்லையா.
டயபெடிஸ் ஷூ வாங்கியாகி விட்டது. அதைத்தவிர வீட்டில் போட்டுக்கொள்ளும் செருப்பு. ஏனெனில் சிறுகாயமும் பெரிதாகும் அபாயம் உண்டாம்.
எல்லாம் தயார்ப் படுத்திய நிலையில் நான் நிமிரும்போது ஒரு வாரம் ஓடி யிருந்தது.
காலையில் என்னை நடை பழக மெரினாவுக்கு அழைத்துப் போவதாகச் சிங்கமும் உறுதி சொன்னார்.
வைத்தியர் சொன்னது காலை 45 நிமிடம்.
இல்லாவிட்டால் உன் நோயும் உடல் பருமனும் குறைய வாய்ப்பெ இல்லை என்று சொல்லிவிட்டார்.
அவர் சொன்னதில் பாதிதான் காதில் போட்டுக் கொண்டதால் 45 நிமிடங்களை 20 நிமிடங்கள் ஆக்கி நடப்பதாக உத்தேசம்.
என்றுமே 5 மணி காலையில் எழுந்திருப்பவளுக்கு அன்று மட்டும் ஆறு மணி வரை விழிப்பு வரவில்லை.
அதுவோ மே மாதம்.சூரியன் ஐந்தரை மணிக்கே சன்னலைத் தட்டும் காலம்.
நம்ம சிங்கம் பொண்டாட்டிக்காக வண்டியைத் துடைத்து வைத்து, காப்பி டிகாக்ஷன் போட்டு,பாலைக் காய்ச்சி வைத்திருந்தார்.
எனக்கோ கால்களில் இரண்டு மூன்று கிலோக் கற்களைக் கட்டியது போல ஒரு பிரமை.:)
சரி, இன்று தவறினால் என்றும் தவறும்.
என்று நல்ல மணக்க மணக்க இருந்த 4% பால்:)
(ஸ்கிம் மில்க் தான் அனுமதிக்கப் பட்டது) கலந்த காப்பியைக் குடித்ததும் உற்சாகம் வந்தது.
கடற்கரையை அடைந்தபோது அநேகமாக எல்லோரும் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.:))))
ஏழு மணிக் கதிரவன் கிரணங்கள் சுடக் கொஞ்ச நேரம் நடந்தபிறகு அங்கேயே போட்டிருந்த
பெஞ்சில் உட்கார்ந்து ஒரு வயதானவர் கொடுத்த அருகம்புல் ஜூஸையும் குடித்துவிட்டு,வண்டி ஏறி வரும் வழியில் சரவணபவனில் இட்லி வடையும் சாப்பிட்டு மீண்டும் கணினிக்கு வந்து விட்டேன்:)
வேலையில்லாமல்தான் அது வேண்டாத சிந்தனைகளை வளர்க்கிறது.
முறையான ஒழுங்கான வளமான வேலைகளும் திட்டங்களும் போட்டால்
அது கோலெடுத்தால் குடமெடுக்கும் குரங்காகிக் கட்டுப்படுகிறது.
சண்டைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன::;
மனதுக்கும் உடலுக்கும்
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நினைவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்.
மீறி வந்துவிடலாம்.:)
இந்தத் தடவை ஆறு மாதங்கள் கழித்து வைத்தியரைப் பார்க்கப் போனால்
சர்க்கரை ஏகத்துக்குக் குறைந்திருக்கிறதே.!!!!
இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவையாவது சாப்பிடணும். கொழுப்பு கூடி இருக்கு.:(
நடக்கப் போங்க.கண்ணில சதை வளருது.
(ஐய்யொ)அறுவை சிகித்சை கூடியசீக்கிரம் செய்துடுங்க.
இதயத்தில பட்படப்பு இருக்கு.
வியர்த்துக் கொட்டினால் பாலைச்சுட வைத்து சர்க்கரை சேர்த்துக் குடித்துவிடுங்கள். சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்றிருக்கிறார்.
மத்தபடி நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க.!!!!
எனக்கு ரொம்ப சந்தோஷம்.!! என்று முடித்தார். :)
வைத்தியரிடம் போய்வந்ததிலிருந்துதான் கலக்கம் அதிகரித்திருக்கிறது!!
முன்னெச்சரிக்கையாக இருக்கப் பழகிக் கொள்ளுகிறேன்.
உய்ர்மட்ட சர்க்கரையைவிட குறைந்த அளவு சர்க்கரை அவ்வளவாக
விரும்பத்தக்கது அல்ல.
மயக்கம் தலைசுற்றல் வரவாய்ப்புகள் அதிகம்.மிகவும் குறைந்தால் ''கோமா''வில் கொண்டுவிடும் அபாயமும் உண்டு.
எனக்குச் சர்க்கரை இருப்பதால் என் வாரிசுகளுக்கும்
இந்தச் சொத்துப் போய்ச்சேராமல் இருக்கக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
கடவுளும் புத்திசாலிதான். ச்சும்மா படுத்த மாட்டார்.
பிள்ளைகள் புத்திசாலிகள். கவனமாக இருப்பார்கள்.
நோயில்லாத வாழ்க்கையை உங்கள் எல்லோருக்கும் இறைவன் அருளவேண்டும்.
இருக்க வேண்டும்.

இந்தக் கதை ஏழு
வருடத்துக்கு முந்திய கதை.
இதைச் சொல்ல வந்தது ,என்னதான் பிரச்சினை,சோகம் என்று புலம்பினாலும், தனக்கு ஒரு உடல்நலக்கேடு என்று வந்தால் எல்லாவற்றையும் மறக்கச் சித்தமாக இருந்த இந்த மனம் என்னும் குரங்கைப் பற்றித்தான்.வேலையில்லாமல்தான் அது வேண்டாத சிந்தனைகளை வளர்க்கிறது.
முறையான ஒழுங்கான வளமான வேலைகளும் திட்டங்களும் போட்டால்
அது கோலெடுத்தால் குடமெடுக்கும் குரங்காகிக் கட்டுப்படுகிறது.
சண்டைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன::;
மனதுக்கும் உடலுக்கும்
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நினைவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்.
மீறி வந்துவிடலாம்.:)
இந்தத் தடவை ஆறு மாதங்கள் கழித்து வைத்தியரைப் பார்க்கப் போனால்
சர்க்கரை ஏகத்துக்குக் குறைந்திருக்கிறதே.!!!!
இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவையாவது சாப்பிடணும். கொழுப்பு கூடி இருக்கு.:(
நடக்கப் போங்க.கண்ணில சதை வளருது.
(ஐய்யொ)அறுவை சிகித்சை கூடியசீக்கிரம் செய்துடுங்க.
இதயத்தில பட்படப்பு இருக்கு.
வியர்த்துக் கொட்டினால் பாலைச்சுட வைத்து சர்க்கரை சேர்த்துக் குடித்துவிடுங்கள். சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்றிருக்கிறார்.
மத்தபடி நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க.!!!!
எனக்கு ரொம்ப சந்தோஷம்.!! என்று முடித்தார். :)
வைத்தியரிடம் போய்வந்ததிலிருந்துதான் கலக்கம் அதிகரித்திருக்கிறது!!
முன்னெச்சரிக்கையாக இருக்கப் பழகிக் கொள்ளுகிறேன்.
உய்ர்மட்ட சர்க்கரையைவிட குறைந்த அளவு சர்க்கரை அவ்வளவாக
விரும்பத்தக்கது அல்ல.
மயக்கம் தலைசுற்றல் வரவாய்ப்புகள் அதிகம்.மிகவும் குறைந்தால் ''கோமா''வில் கொண்டுவிடும் அபாயமும் உண்டு.
எனக்குச் சர்க்கரை இருப்பதால் என் வாரிசுகளுக்கும்
இந்தச் சொத்துப் போய்ச்சேராமல் இருக்கக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
கடவுளும் புத்திசாலிதான். ச்சும்மா படுத்த மாட்டார்.
பிள்ளைகள் புத்திசாலிகள். கவனமாக இருப்பார்கள்.
நோயில்லாத வாழ்க்கையை உங்கள் எல்லோருக்கும் இறைவன் அருளவேண்டும்.
இருக்க வேண்டும்.
58 comments:
டிஸ்கி.
இது என் டயரிப் பக்கமே. அதைதவிர வேற நவீனமோ ,நாவலோ,கவிதையோ ,அனுராதா ரமணன் கட்டுரையோஇல்லை.:)
ஒரு அவசியம் என்று வரும்போது வழக்கங்களை மாற்றப் பழகிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது:)! பழக்கம் ஆன பின்னாலே அது வழக்கம் ஆகியும் விடுகிறது. நல்ல தலைப்பு, நல்ல பதிவு, நல்ல டிஸ்கி. நன்றி வல்லிம்மா.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//ஒரு வயதானவர் கொடுத்த அருகம்புல் ஜூஸையும் குடித்துவிட்டு,வண்டி ஏறி வரும் வழியில் சரவணபவனில் இட்லி வடையும் சாப்பிட்டு மீண்டும் கணினிக்கு வந்து விட்டேன்:)//
!!!
//பிறகு ஏதேதோ யோசனைகள், பழைய நினைவுகள் புதிய பிரச்சினைகள்,
யாரோ எப்பவோ என்னைக் கோபித்துக் கொண்டு வார்த்தைகளைக் கொட்டிய மனிதர்கள்.//
இவங்க இப்ப இருக்காங்களொ இல்லையோ! ஆனா ஜெயிச்சுட்டங்களே!
ஒரு முறை நேரடியா திட்டினப்ப ஒரு பாதிப்பு. இப்ப பல காலங்களுக்கும் அப்புறம் திருப்பி பாதிப்பு- ஒண்ணும் கூட செய்யாமலே! இப்பாஅடி ஆங்களுக்கு வெற்றியை வலிஞ்சு தரத்தான் வேணுமா?
முடிஞ்சு போன விஷயத்திலே பாடம் கத்துக்க முடிஞ்சா கத்துக்கலாம். இல்லைனா அத அசை போடறதுல ஒரு புண்ணியமும் இல்லை!
ஆமா போட்டொ என்னது? சாப்பிடத்தான் முடியலை சுட்டுடலாம்ன்னு சுட்டீங்களா?
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச தயிரை விட்டுட்டு கடைஞ்ச மோர் சாப்பிடுங்க. எடை தானா குறையும்!
வாங்கப்பா ராமலக்ஷ்மி.
நாலு வருடங்களில் நல்ல பழக்கங்களும் பழகி இருக்கின்றன.
உப்போ உறைப்போ,சர்க்கரையோ அதிதமாக இருந்தால் சாப்பிடப் பிடிப்பதில்லை.
வெளியில் போக முடியாத தினங்களில் வீட்டில் ஒரு சுவரில் மாட்டியிருல்க்கும்ம் ஸ்வாமி படங்களை அறுபது தடவையாவது சுற்றி வருவது என்று வைத்திருக்கிறேன். அளவெல்லாம் எவ்வளவோ குறைந்திருக்கின்றன.
நன்றிம்மா.
அது முதல் நாள்பா முல்லை.
இப்பவெல்லாம் ஓட்ஸ் தான் காலை உணவு.
இதெல்லாம் உங்களுக்கு ஒரு முன்னோடி(?)யா இருந்து சொல்கிற வார்த்தைகள். எதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கலாம் இல்லையா!!
வரணும் வாசுதேவன்.
உண்மைதான். அவங்க எல்லாம் பரமபதம் அடைந்தாச்சு.
இந்தக் கட்டுரையில் அவர்கள் வந்துவிட்டார்கள். இருபது வருஷங்கள் கழித்து சில பேருக்கு வாய்ப்ப்பளித்தது எனக்கு நானே . அளவோடு பேசும் குணத்தை வரவழைத்துக் கொள்ளத்தான்.
எப்படிக் கண்டுபிடித்தீர்கள் !நான் போட்டோ எடுக்கும்போது பின்னால் இருந்து பார்த்த மாதிரி சொல்கிறீர்களே.:)))))
அந்த நினைப்பில தான் அந்த போட்டோ.!!
//கோலெடுத்தால் குடமெடுக்கும் குரங்காகிக் கட்டுப்படுகிறது.
//
நல்ல உவமானம். ரொம்ப நாள் கழிச்சு வரேன் இங்க. அவ்ளோ வேலை, வீட்லயும், ஆபிஸ்லயும்.
ச.முல்லை நுண்ணரசியல் பண்ணி இருக்காங்க வல்லிமா, :)
கீதா பாட்டி வந்தா டக்குனு கண்டுபுடிச்சுடுவாங்க. :p
இன்னமும் புரியலைன்னா தனி மெயிலுல சொல்றேன். :))
அம்பி நிஜமாவா.
நுண்ணரசியலா செய்திருக்கு இந்த முல்லை. ஐயகோ.
ஓ வயசான பெரியவர்னு சொன்னதைச் சொல்றீங்களா:)
என்னைவிட வயசானவரா அவர் இருந்தார்.
நானே உங்களுக்கு எழுதணும்னு இருந்தேன் விகடன்ல கலக்கறாப்பில இருக்கே!!! வாழ்த்துகள் அம்பி.
நன்றி வல்லியம்மா..நீங்க பல விஷயங்களில் முன்னோடிதான்!
ஆகா..ஒரு அப்பாவிப் பொண்ணைப் போய் இப்படி சொல்லீட்டீங்களே!
அம்பி..நீங்க தங்க வளையலுக்கு செஞ்ச நுண்ணரசியலைவிடவா! :-))
நானே வல்லியம்மாதான் நுண்ணரசியல் செஞ்சுட்டாங்களோன்னு வியந்துப்போய்ட்டேன்! என்னன்னா, அந்த டிஸ்கி..நாந்தானே பழைய டைரிலேர்ந்து கதை,கவிதைன்னு அப்பப்போ இம்சை பண்ணுவேன்! அதான் அந்த அவ்வ்வ்! மத்தபடி வேற எந்த அரசியலும் இல்லை!! அவ்வ்வ்வ்!
அம்பி ,இந்தத் தங்கமான பொண்ணை நுண்ணரசியல் பண்ணீட்டீங்களா.
சேச்சே. எங்க முல்லை ,அதுவும் பப்புவோட அம்மா அதெல்லாம் செய்யாது.
ஆமாம் தெரியாமத்தான் கேக்கறேன், பையனுக்கு எதுக்காக வளையல்:)
வரப்போகிற மருமகளுக்காகச் சேர்க்கிறாரோ!!!!!!
குச்சியை எடுத்தால் குரங்கை ஆட்டுவிப்பது எல்லாம் வித்தை தெரிந்தவனுக்கு மட்டும் தானம்மா! நடைமுறையில் பார்த்தால், குரங்குகள் கையில் குச்சியும், ஆடிக் கொண்டிருப்பது நாமாகவும் இருப்பது தெரிய வரும். Creature of habits என்ற நிலையைத் தாண்டி வருவது, கொஞ்சம் எடையைக் குறைக்க, சர்க்கரையைக் குறைக்க தினசரி walking, jagging இப்படி அதிகப் படியான பிரயாசை தேவைப்படுகிற விஷயம்.
கடைசியா, சொன்னீங்களே 'மீறி வந்துடலாம்'னுட்டு! கையை குடுங்க! அதுதான் நிஜம்.
சுவரில் மாட்டியிருக்கும் சுவாமி படங்களை அறுபது முறை சுற்றி வருவீர்களா? அந்த வித்தையை எனக்கும் கற்றுக் கொடுங்களேன்!
காலை ஏழு மணிக்கு கலைஞர் டிவியில் மங்கயர் உலகம் நிகழ்ச்சியில் ரேவதி சங்கரனின் சிரித்தமுகமும் மனதை வருடி விடும் வார்த்தைகளும்தான் எனக்கு அன்றைய டானிக்.
காலை ஐந்தேகால் மணிக்கு பெசண்ட்நகர் பீச்சுக்கு வாருங்களேன் சேர்ந்து நடப்போம். சேரியா?
நல்லதுகள் வரும் போது சந்தோஷமாக வாங்கிக்கொள்ளுவதுபோல் இது போல் கெட்டதுகள் வரும்போதும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள், வல்லி!
நான் என்னவெல்லாம் வாங்கியிருக்கிறேன் தெரியுமா?
ரத்த அழுத்தம், வீசிங், சைனஸ், க்ளாக்கோமா! சர்க்கரை வந்ததுபோல் வந்து போவது போல் போய்விட்டது.
பெற்றோரிடமிருந்து அவர்கள் அனுபவித்த சொத்துக்கள்தான் மட்டும்தான் வேண்டுமா? அவர்கள் அனுபவித்த இது போன்ற சொத்துக்களையும் நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்!!!
அப்படித்தான் ஆகிவிடுகிறது.
பிராயசை இல்லாமல் ஏதாவது நிறைவேறுமா. அதுவும் இளைக்கணும்னு ஒரு சங்கல்பமே செய்து கொண்டு,செய்ய வேண்டிய விஷயம்தான்.
அலுப்பாக இருந்ததால் இந்தப் பதிவை வேடிக்கையாக எழுத முயற்சி. எல்லா விஷயத்தில இருந்தும் மீளத்தான் ,இந்த முயற்சி.
நன்றி கிருஷ்ண மூர்த்தி.
நீங்க பார்க்கவில்லை இல்லையா நானானி. நடு சுவரில் சாமி படங்கள் இருக்கின்றன. பிள்ளையாரும் இருக்கிறார்.
வெளியில் நடக்கும்போதாவது தடுக்குவிழும் பயம் இருக்கும்.
நம்மவீட்டுக்குள்ள நடப்பதால் த்யானம் செய்யவும், பயிற்சிக்கும் சுலபமாக இருக்கிறது. நீங்கள் சொல்லி இருக்கும் சொத்து விவகாரம் நானாக வரவழைத்துக் கொண்டது. அம்மா அப்பா கொடுக்கவில்லை:) ஏதாக இருந்தாலும் கர்மம் தீர்ந்தால் சரி:)
எனக்கும் அவர்கள் கொடுக்கவில்லை. அவர்கள் நினைவாக வந்தது. டாக்டரிடம் போனால்,'உங்க குடும்பத்தில் யாருக்காவது ஆஸ்துமா இருந்ததா?' என்பதுதானே முதல் கேள்வி!
வேலையில்லாமல்தான் அது வேண்டாத சிந்தனைகளை வளர்க்கிறது.
முறையான ஒழுங்கான வளமான வேலைகளும் திட்டங்களும் போட்டால்
அது கோலெடுத்தால் குடமெடுக்கும் குரங்காகிக் கட்டுப்படுகிறது.
சண்டைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன::;
மனதுக்கும் உடலுக்கும்
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நினைவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்.
மீறி வந்துவிடலாம்.:)
///
நல்ல பதிவு!!! அருமை நண்பரே!!
இப்பெல்லாம் வேலையில்லாத மனசு எங்கெப்பா இருக்கு? அல்லும் பகலும் அனவிரதமும்(சரியா இது?) பதிவு எழுதரதைப் பத்தியே யோசனையா இருக்கே இந்தக் குரங்கு.(மனசைச் சொன்னேன்ப்பா)
மாடரேஷன் பின்னூட்டத்துக்கு மட்டுமில்லை, ஊட்டத்தும்(உணவுக்கும்)தான்:-)))))
போகட்டும், யார் யார் எந்த நேரத்துக்கு 'நடை' போறாங்கன்னு சொல்லுங்க. கம்பெனி கிடைக்குமான்னு பார்க்கலாம்:-))))
வரணும்பா நானானி.
நாம் வாழும் நிலை அப்படிம்மா. நமக்கு யார் விரும்பி நோய் தருவார்கள்.
நம் வாழ்க்கை முறைகள் வசிக்கும் இடங்களைப் பொறுத்து நம் ஆரோக்கியம் இருக்கிறது.
எனக்கும் ரேவதிசங்கரன் ரொம்பப் பிடிக்கும். அவங்க வாழ்த்துக்களையும் தினம் கேட்டுப்பேன்:)
வாருங்கள் தேவன்மயம்,
வருகைக்கும் ,பின்னூட்டத்துக்கும் நன்றி.
வாங்க வாங்க துளசி. இங்க எழுத்தில அப்பப்போ தான் மனசு போகிறது. நீங்க எழுதறதயும் மத்தவங்க எழுதறதையும் படிக்கிறதில மனசை விட்டுட்டா, அதுவும் அனவரதமும்????
பசங்க காதில் பட்டதோ நான் தொலைஞ்சேன்!!!
அதுக்கென்ன வாக்கர்ஸ் க்ளப்,அதுவும் பதிவர்கள் நடைக்கழகம் ஆரம்பிச்சுடலாமா.:)
//சண்டைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன::;
மனதுக்கும் உடலுக்கும்
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நினைவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்.//
உண்மைதானம்மா. அலை ஓயாத கடல் மாதிரிதான் மனசும். அனுபவப் பாடங்களை பிறருக்கும் கற்றுக் கொடுப்பதற்கு நன்றி அம்மா :)
'பதிவர்கள் நடைக் கழகம்!' ஆஹா! ஆரம்பிச்சுடலாமே! 'பநக' எப்படி? நேரத்துக்கத் தகுந்தாப்ல?
ஹுக்கும்! 'இருக்கிற கழகங்கள் போதாதுன்னு இதுவேறையா?' யாரங்கே முணுமுணுக்கிறது?
பல கழகங்களிலிருந்து விலகினவர்கள், எங்கே போறதுன்னு முழிக்கிறவங்க எல்லோரையும் சேத்துக்கலாமா?
நல்லா சொன்னீங்க. ஒரு வருஷமா வெறும் ஆசையா இருந்த உடல் எடை குறைப்பை இந்த ஒரு மாசமா ஜஸ்ட் குக் பண்ணாம பச்சையாவே சாப்பிடறதுன்னு(காய், பழம், விதை, இது மாதிரி 7 கிலோ குறைத்து இருக்கேன். ஆனா நார்மல் புட் ஆரம்பிச்சதுக்கு அப்புறம், உடல் எடையை கட்டுபடுத்தறது கஷ்டமாவே இருக்கு. காரணம் மனசுதான். இயற்கை உணவு செட்டப்ல நாக்குக்கு ரொம்ப வேலை இருக்காது. வயிறு போதும்ன்னு சொன்னா அவ்ளோதான். ஆனா சமைத்த உணவுல எவ்ளோ சாய்ஸ் இருக்கு. நாக்கு என்னா ஜொல்லு விடுதுங்கறீங்க. ம்ம்ம்...எல்லாம் ஒரு அனுபவம் தான் இல்ல. பற்று விடறதுங்கறது தானா நடக்கனும். இங்க பலபேருக்கு(என்னையும் சேர்த்துதான்) கட்டாயத்துல(டாக்டர் தான் வில்லன்) இல்ல நடக்குது.
அப்புறம் அடுத்த வாரம் இந்தியா வரேன். உங்களிடம் முன் அனுமதி பெற்று உங்களை சந்திக்கிறேன். சாந்தோம்தான் வீடு(வாடகைதான்). நன்றி...நன்றி...நன்றி...
கவிநயா, வாங்கம்மா.
யாருக்கும் கற்றுக் கொடுக்கணும்னு நினைக்கிறதே தப்பு. :)
என் அனுபவத்தை எழுத ஆரம்பித்ததே என் பதிவு. அந்த வரிசையில் இதுவும்.அட்வைஸ் செய்தா என்ன ஆகும்:(((((
வேண்டாம் பா!!!
நானானி, ஆரம்பிச்சுடலாம்.
ஆனா அதிலயும் முதலிலேயெ பிளவு வரும்.
நாம முதல்ல தெக்கால நடக்கலாம்னு ஒரு பிரிவு. இலை இல்லை வடக்கால அப்டின்னு இன்னோரு பிரிவு.;0)
உண்மையாவா விஜய்.
இயற்கை உணவு பற்றி இன்று டி.வி யில் அவ்வளவு சிலாகிச்சுப் பேசிக் கொண்டிருந்தாங்க.
ஏழு கிலோ குறைச்சுட்டு, இப்ப சமைச்சதுக்கு வந்துட்டீங்களா!!!!
கண்டிப்பா வீட்டுக்கு வாங்க.
பேசாம எல்லோரும் 'கிழக்காலே' நடங்கோன்னு சொல்லிட்டா ஆச்சு:-)
பீச் தானே? உள்வாங்கிக்கும். கோச்சுக்காது.:-)
அழைப்புக்கு மிக்க நன்றி. அவசியம் உங்களை சந்திக்கணும். ஒரே அடியா இயற்கை உணவுல இருந்தா வீட்டுல சண்டை வருது. அப்போ எதுக்கு சமைக்கறதுன்னு.(சரி...சரி...நாக்கும் ஒரு காரணம்..மெயின் பிராபளம், எங்காவது விருந்து, ஹோட்டல்ன்னு போனோம்னா நாம இலை, தழைன்னு கேக்கறத பார்த்து தலைல கொம்பு, கிம்பு, முளைச்சி இருக்கான்னு செக் பண்றாங்க. அதனால ஒரு மிக்ஸ் மாதிரி வச்சிக்க வேண்டியது தான். தினமும் உணவுல இயற்கை உணவும், சமைத்த உணவும் இருக்கா மாதிரி...சமாளிப்போம்...வாழ்க்கைன்னா சும்ம்மாவா.:)))
அட இது நல்லா இருக்கே.
துளசி!!!
ஒரே கே வெறியா!!!!:))))))
ஆமாம்பா கஷ்டம். சாப்பீட்ட்டா எல்லொரும் இயற்கையா சாப்பிடணும். ஒருத்தர் இளைச்ச்சு கிட்டேஎ போவார். இன்னோருத்தர் செழுமையா வளருவார்கள்:)
லாரல் ஹார்டி மாதிரி இருக்கும்:)))
இப்போது உடல் நல்ம்தானே...கடைசிப் பத்தி ..நல்லாச் சொல்லியிருக்கீங்க..
வல்லியம்மா நடை போகமயே என் எடை 6 கிலோகுறைந்து விட்டது. மூன்று வெள்ளையர்களான தயிர்,சக்கரை,உப்பு குறைத்தே. ஆனால் என் தங்கமணி 55 பிளட்டையும் தினம் 20 தடவை சுத்தி வருகிறாள் எத்தனை கடவுள் படங்கள் இருக்கும் எல்லார் வீட்டிலேயும்கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்
ஒன்னும் சொல்ல தெரியலம்மா...
வாங்கப்பா மலர். இப்போ நல்ல நலமாக இருக்கிறேன்.
வேண்டாததைத் தள்ளினாலேபோதும். உடல் நலமாக இருக்கிறது.
நன்றிமா.
வாங்க தி.ரா.ச சார்.
வெள்ளையனை வெளியேறச் சொல்லிடலாமா:)
ரொம்ப உண்மையான வார்த்தை.
கடைந்த மோரும், ஒரு நாளுக்கு ஒரு டீ ஸ்பூன் உப்பும்,சர்க்கரயில்லாத காப்பியும் போதும்னு வைத்தியர் வார்த்தை.
அதுபடி நடந்தால், அதாவது நடந்தால் நன்மைதான்.
ம்ம். மாமி கொடுத்து வைத்தவர்.:)
ஒண்ணுமே சொல்ல வேண்டாம் கோபிநாத்:)
நல்லா உடம்பைப் பார்த்துக் கிட்டா போதும்.
தென்மேற்கு, வடகிழக்கு எல்லாம் விட்டுடீங்களே!!வல்லி!!
இப்ப என்ன சொல்வீங்க...இப்ப என்ன சொல்வீங்க...?
வேலையில்லாமல்தான் அது வேண்டாத சிந்தனைகளை வளர்க்கிறது.
முறையான ஒழுங்கான வளமான வேலைகளும் திட்டங்களும் போட்டால்
அது கோலெடுத்தால் குடமெடுக்கும் குரங்காகிக் கட்டுப்படுகிறது.
சரியா சொல்லியிருக்கீங்க வல்லிம்மா
நானானி,
நெல்லைக் குசும்புன்னா இதுதான்:)
தென் மேற்கு உசத்தியன மூலைதான் சைனீஸ் சாஸ்திரப்படி. வடகிழக்கு சொல்லவே வேண்டாம் .மிக நல்ல இலக்கு. சரிப்பா ஓரோரு நாளுக்கு ஓரோரு
பக்கம் போலாம் ஓகேயா:))
நன்றி அமித்து அம்மா.
என் மனக் குரங்கு நல்லது நினைக்கும்போது பதிவிட்டேன். எப்பவும் சமநிலையில் இருக்க ஆண்டவந்தான் அருளணும்.
கவலை வேணாம் சகோ. நானும்'துணை'க்கு வந்துட்டேன்.
கொஞ்சூண்டு சக்கரை அண்ட் நெய் சேர்த்து புட்டு மதிய உணவு. மாவு ஹெல்தி புட்டு மாவுதான் கேட்டோ:-))))))
Life is given by God. Lets do something for it; but not worry to such an extent that life is ours for ever. Self pity needs to be driven away. Over obsession with one's own health leads to self pity and despondency. As Englishmen say, in preserving his health, he lost his living. Health helps us exist only, not how to live. We must make use of what is left in the best possible way, for which self pity will pose great difficulty.
See the world around you. Take interest in the coming generation and watch them with interest. Be concerned with social issues. Although you cant do or undo anything, yet, such interest will make you feel more involved in life.
After observing heavy doses of self pity, I think it proper to writ the above.
உவமை எல்லாம் ரொம்பவே ரசிச்சேன்!! தித்திப்பா உள்ளவாளுக்கு தான் 'தித்திப்பு' வியாதி வருமாம்!! :)) TRC சாருக்கு பதிலா உமா மாமிதான் குதிரை மைதானத்தை சுத்தி நடந்துண்டு இருக்கா!!
வேலையில்லாமல்தான் அது வேண்டாத சிந்தனைகளை வளர்க்கிறது.
முறையான ஒழுங்கான வளமான வேலைகளும் திட்டங்களும் போட்டால்
அது கோலெடுத்தால் குடமெடுக்கும் குரங்காகிக் கட்டுப்படுகிறது.
சண்டைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன::;
மனதுக்கும் உடலுக்கும்
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நினைவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்.
மீறி வந்துவிடலாம்.:)
மீறித்தான் வரணும். வந்தாகணும் இல்லையா?
நல்லாகச் சொன்னீர்கள்.
கோலெடுத்தால் குடமெடுக்கும் குரங்காகிக் கட்டுப்படுகிறது.// :)
அருமை வல்லி.
///ambi said...
//கோலெடுத்தால் குடமெடுக்கும் குரங்காகிக் கட்டுப்படுகிறது.
//
நல்ல உவமானம். ரொம்ப நாள் கழிச்சு வரேன் இங்க. அவ்ளோ வேலை, வீட்லயும், ஆபிஸ்லயும்.<<<<<<>>>
யாரு அம்பியா?:) எந்த க்ரஹத்துல இருக்கீங்க கேசரிதாஸ்?:)
வல்லிமா! சக்கரையைக்குறைச்சா நானும் இளைக்கலாம்னு பாக்கறேன் அடிக்கடி இந்த மைசூர்பாக் பண்ணச்சொல்லி அன்புத்தொல்லைவந்துவிடுகிறது!
நல்ல தலைப்பு நல்ல இடுகை....அதென்ன அனுராதா ரமணன் கட்டுரையோ இல்லைன்னு டிஸ்கி? எங்களுக்கு இணைய அனுராதாரமணன் நீங்கதான்.
அன்பு ஷைல்ஸ் , இதை நான் எழுதும் காலங்களில் திருமதி அனுராதா ரமணன் தன் நோய்களைத் தாண்டி வெற்றிபெற்ற நிகழ்ச்சிகளை அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தார்.
யாரும் நம்மளைக் காப்பி காட்(பூனை)
என்று சொல்லக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை.
கேசரிதாஸ் இப்போ எங்க இந்தப் பக்கம் வருகிறார்.
இந்தப் பின்னூட்டம் நாலு வருஷம் முன்னாடி போட்டதும்மா.
அ.ரா வும் நானும் ஒண்ணா!!!நல்ல கூத்து போ.
அன்பு மாடல்மறையொன்,
ரொம்ப சாரி.'' செல்ஃப் பிடி''க்கும் எனக்கும் ரொம்ப தூரம். நீங்கள் யாரென்று கூடத் தெரியாது. இந்த நிகழ்வை ஒரு காமெடியாகத் தொடுத்துக் கொடுத்தேன்.
நன்றி.
அன்பு துளசி, நமக்கெல்லாம் இது ஒரு சோதனையா என்ன.
மீள்வதற்கு நமக்குக் கொடுக்கப் பட்ட சந்தர்ப்பம்:)
வரணும் வரணும் தக்குடு. டிஆர் சி மாமாவை வம்புக்கு இழுக்கணுமா.:)
அம்பி கீதா போர் இப்பதாம் முடிஞ்சிருக்கு:)
தித்திப்புக்குப் பதிலா இனிமே முறுக்கு தட்டை சாப்பிடட்டுமா:)
பாலன்ஸ் ஆயிடும்.
இத்தனை சமத்துக் குழந்தைகள் இருக்கும் போது எனக்கென்ன குறைவு.!!
பின்ன வேற வழி? கீதா ,,
இப்போ முழுமூச்சாக சர்க்கரைக் குறைப்பு இயக்கத்தில் இறங்கிட்டேன்.வென்றே ஆக வேண்டும்:)
வாங்கப்பா மாதேவி.
உங்கள் பதிவுகளில் வரும் நல்ல சமையல் குறிப்புகளைப் படித்தாலே மனம் தெம்படைகிறது.
வாங்கப்பா கயல். அப்போது குரங்காட்டம் அதிகமாக இருந்ததால் கம்பெடுக்க நினைத்தேன்.
இப்போது அடங்கிவிட்டது என்றே நினைக்கிறேன்:)
எனக்குச் சர்க்கரை இருப்பதால் என் வாரிசுகளுக்கும்
இந்தச் சொத்துப் போய்ச்சேராமல் இருக்கக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
கடவுளும் புத்திசாலிதான். ச்சும்மா படுத்த மாட்டார்.
பிள்ளைகள் புத்திசாலிகள். கவனமாக இருப்பார்கள்
எனக்கும் சேர்த்து வழிமொழிகிறேன். எனக்கு வியாதிருக்கிறது என்பதைவிட அதை 4 பேருக்கு முன்னால் யாராவது சொல்லும்போது இன்னும் வலி அதிகமாகிறது.
காதுலே போட்டுக்கவேண்டிய விஷ்யம்.
Post a Comment