About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, March 02, 2009

மகளிர் சக்தி

ஒருவர் 37 வயதுக்கு மேல் படித்துத் தலைமை ஆசிரியைப் பொறுப்பு ஏற்றவர்.இன்னோருவர் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தன் நடனத்தையும் கலைக்குழுவோடு சேர்த்து வளர்த்துக்கொண்டிருப்பவர்.

சக்தி கொடுப்பவள் அசுர சக்தியை அழிப்பவள்.


அன்பான அம்மா உனக்கு ஏது நிகர்?அவளும் ஓய்ந்து உட்கார்ந்தாள். மற்றவர்களுக்கும் ஓஒய்வெடுக்கக் கற்றுக் கொடுக்கிறாள்.
எல்லாம் அருளும் லட்சுமி
இவர்கள் அனைவரையும் இந்த மகளிர் தினத்துக்காக மட்டும் நினைக்காமல்
எப்போதும் நினைப்பேன்.
வசதிகள் அனைத்தும் இருந்து ,மக்கள் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு நம் வணக்கம் .
அதுவும் மற்ற எத்தனையோ பொழுது போக்குகள் இருக்க மெய்வருத்தம் பாராமல் தங்கள் ஆயுளையே செலவழிப்பவர்களும் எத்தனையோ.
அவர்களில் ஒருவர் எதிராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியை யாக இருந்த திருமதி.இந்திரா.
திருமணமே செய்யாமல் முழுவதும் தமிழுக்கே, அதுவும் கம்பராமாயணத்துக்கு அதிகமாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
வணக்கம் அம்மா.
அடுத்தவர் நோய் தன்னை வாட்டிய போதும் மனம் தளராது பாட்டுக்காக ஒரு குழு அமைத்து, கர்நாடக சங்கீதத்தையேத் தன் மூலதனமாக்க் கொண்டு ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகளுக்குப் பாடல் கற்பித்து இன்று அவர்களும் பிரகாசிக்கிறார்கள். அந்த சசிகலா அக்கா படம் போட மறுப்புத் தெரிவித்துவிட்டார்.
இன்னோருவர் இளவயதிலியே திருமணம் செய்து குழந்தைகளும் பெற்று,
வளமான வாழ்க்கையில், குடி(ஆல்கஹால்) புகுந்ததால் குடும்ப வாழ்வு பாதிக்கப் பட்டுக் கணவரைப் பிரிய நினைத்து,
சரியான வேளையில் கவுன்சிலிங் கிடைத்ததால், தானும் மாறித் தன் குழந்தைகளையும் மாற்றுச் சிந்தனையில் ஈடுபடுத்தி இன்று வெற்றிகரமான
குழுவுக்கு உதவியாகவும் இருக்கிறார்.சேரிகளில் நடக்கும் குடி சம்பந்தமான சோகங்களுக்கு வடிகால் அமைத்துக் கொடுக்கிறார்.
அவர்கள் குழுவுக்கே அனானிமஸ் என்று பெயர். அதனால் அவர் படமும் வெளியிடமுடியாது.
இவர்களைத்தவிர, நான் ஏற்கனவே உங்களுடனும் பகிர்ந்து கொண்ட உயர்ந்த பெண்ரத்தினங்கள்,
எங்கள் புகுந்த வீட்டுப் பாட்டி கோமளம்மாள்
என் பிறந்த வீட்டுப் பாட்டி ருக்மணி
என் அம்மா ஜயலக்ஷ்மி
என் மாமியார் கமலா சுந்தரராஜன்.
குறுகிய வட்டத்துக்குள் இவர்களை நான் வைக்க விரும்பவில்லை.
ஒவ்வொருவரும் தன் சுயத்தை இழக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை.
மற்றவர்களுக்கும் உதவியாய் இருந்துவிட்டுத்தான் விண்ணுலகம் சென்றார்கள்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்''
இது பாடல்
மாதரே மாதரை இழிவு செய்யாமல் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக இந்தத் தினத்தைக் கொண்டாடுவோம்.
இந்த வரிசையில் நம் வலையுலகச் சிந்தனையாளர்கள், இலக்கியப் பெண்கள்,ஆன்மீக வழிகாட்டிகள், நட்பிற்கு இலக்கணம் சொல்லும் பெண்கள்
இவர்கள் வரிசை இதோ.
கொத்ஸின் மாதாமகி துளசி கோபால்
அறிவுக்களஞ்சியம்,
ஆன்மீகச் சிந்தனையாளினி கீதா சாம்பசிவம்,
சகல துறையிலும் பளிச்சிடும் ஷைலஜா,
கவிதாயினி மதுமிதா,
பங்களூர்த்தென்றல் ராமலக்ஷ்மி,
நெல்லைத்தென்றல் நானானி,
அமெரிக்க கவிநயா,
மும்பையின் ஜெஸ்ரீ கோவிந்தராஜன் தாளித்தே நம்மைக் கவர்ந்தவர்.
இவர் பக்கத்தில் இருந்தால் சகலசமையலையும் கற்று,பத்திரிகை உலகையும் தெரிந்து கொள்ளலாம்.கம்பரையும் அலசலாம்:)
பிறகு நம் அருணா ஸ்ரீனிவாசன்,
உஷா ராமச்சந்திரன்,
நிர்மலா,
ராதாஸ்ரீராம்,
பத்மா அரவிந்த்,
மலர்வனம் லக்ஷ்மி
மங்கை,
முத்துலட்சுமி,
இவர்கள் அனைவரும் உடனே கவனத்துக்கு வந்தவர்கள் அனைவருக்கும் என் இனிய மங்கையர் தின வாழ்த்துகள்.
எப்போதும் போல் வாழ்க்கை உங்கள் எல்லோருக்கும் பூரணமான மகிழ்ச்சியைக் கொடுக்க என் பிரார்த்தனைகள்.
இதைதவிர, நம் மறுபாதிஆண் பதிவர்களின் துணைவிகளுக்கும் என் வாழ்த்துகள். வணக்கம்முந்திய பதிவுகள்
Posted by Picasa

37 comments:

புதுகைத் தென்றல் said...

அழகான நினைவுகூறல்.

அனைவருக்கும் மனமார்ந்த மகளீர் தின வாழ்த்துக்கள்.

goma said...

மஙையர்தின வாழ்த்துக்கு நன்றி.
அருமையாகச் சொல்லியிருக்கிறீரக்ள் மகளிர் மகத்துவம் பற்றி

ராமலக்ஷ்மி said...

மனம் கவர்ந்த.. மற்றவர்களுக்கு முன் மாதிரியான மகளிரை அறியத் தந்து கூடவே வலையுலக மகளிருக்கும் பதிவர்களின் வாழ்க்கைத் துணைவியருக்கும் வாழ்த்துக்களைச் சொல்லி நெகிழச் செய்து விட்டீர்கள்.
உங்களுக்கும் மகளிர் எல்லோருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல் ,வாழ்த்துகளுக்கு மிகுந்த நன்றி.

உங்கள் அன்புக் கணவருக்கும் வாழ்த்துகள் நம் சார்பாகச் சொல்லிக் கொள்ளலாம்.

புதுத் தோழிகளை விட்டுவிட்டேனே.
நீங்கள், கோமா, பாசமலர்,அமித்து அம்மா.சந்தனமுல்லை,வித்யா,கவிதா,
G3,
இவர்களை எல்லாம் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்.

இங்கே அவர்களுக்கும் மனம் நிறைந்த அன்பைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நம் அன்பு என்னிக்கும் நிலைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

கோமா, வாங்கம்மா.

வலையுலக மகளிர் அணி ஒன்று சேர்ந்து ஒரு கெட்டுகதர் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

ஓ, ராமலக்ஷ்மி இந்த அணுகுமுறை உங்களை நல்ல உயரங்களுக்கு அழைத்துச் செல்லும்.
நன்றாக இருங்கள் அம்மா.

புதுகைத் தென்றல் said...

வலையுலக மகளிர் அணி ஒன்று சேர்ந்து ஒரு கெட்டுகதர் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்:)//

ஐயோ!! இன்னைக்கு காலேலதான் இப்படி ஒரு கனவு கண்டேன். நீங்க பின்னூட்டத்துல கேக்கறீங்க. :)))

(நடந்தா எம்புட்டு சந்தோஷமா இருக்கும்!!!)

ஷைலஜா said...

வல்லிமா
இப்படி அன்போடு நினைவுகூர்ந்து வாழ்த்திச்சொல்ல உங்களுக்கு ஈடு இணை யார் இங்க! வலைஉலக கெட் டு கெதருக்கு நான் ரெடி !!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் வல்லியம்மா! எவ்ளோ அழகா சொல்லியிருக்கீங்க உங்க ஸ்டைல்ல! :-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துக்கள் வல்லி.மற்றும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை இங்கே சொல்லிக்கிறேன்..

கீதா சாம்பசிவம் said...

அருமையானவாழ்த்துகளும், நினைவு கூரலும். ரொம்ப நன்றியும், அனைத்து மகளிர்களுக்கும், மகளிர் பதிவர்களுக்கும் வாழ்த்துகளை நானும் தெரிவிச்சுக்கிறேன். அனைத்து ஆண்பதிவர்களின் துணைகளுக்கும் வாழ்த்துகளை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உங்களுக்கும் சிங்கத்துக்கும், வாழ்த்துகளும், வணக்கங்களும் வல்லி.

கீதா சாம்பசிவம் said...

மத்தப் பதிவுகளை இனிமேல் தான் படிக்கணும்! :((((

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஷைல்ஸ்.

இன்னும் எத்தனை பேர் வீட்டுப் போயிருக்கு.தமிழ்ப் பேராசிரியைக் கம்பனைச் சொல்ல ஆரம்பித்தால் அந்தக் கதைகாலத்துக்கே போய் விடுவார்.
ஆற்றுப்படலம் நடத்தும்போது பரதன் சொல்லும் வார்த்தைகளையும்,இலக்குவனின்கோபத்தையும் தத்ரூபமாக வர்ணிப்பார்.
உங்கள் ஸ்ரீரங்கப் பிரேமை நினைவு வந்தது;0)

மதுரையம்பதி said...

உங்களுக்கும், உங்களது இந்த போஸ்ட் மூலமாக நமது வலையுலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களைச் சொல்லிக்கறேன். :-)

மிஸஸ்.டவுட் said...

மங்கையர் தின வாழ்த்துக்கள் வல்லிம்மா ....
ஆனாலும் பழைய பதிவர்களில் தான் என் பெயர் இல்லையென்றாலும் ...புது தோழிகள் லிஸ்ட்லயும் என்னை மறந்துட்டீங்களே?!
எத்தனை பெயர்கள்னு கேட்டுட்டு கடைசியில ஒரு பெயரை கூட ஞாபகம் வச்சுக்கலையே நீங்க?

இது நியாயமா?

வல்லிசிம்ஹன் said...

நாமும் சந்திப்போமென்று நம்பிக்கை இருக்கிறது தென்றல்!முயன்றால் முடியாதது ஏதாவது உண்டா?

வல்லிசிம்ஹன் said...

வரணும் முல்லை. ரொம்ப நன்றி. நம்ம ஸ்டைலா;)))))

வல்லிசிம்ஹன் said...

உங்க மகளிர் பதிவைப் படிக்கணும்.

வாழ்த்துகள் முத்து கயல்.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
நானானி said...

உங்கள் அன்பான வாழ்த்துக்கு ரொம்ப நன்றிப்பா...வல்லி!!

வாழ்த்துக்கு வாழ்த்தெடுத்து நான் அனுப்புவதை வாங்கிக்கொள்ளுங்கள்!!!

//வலையுலக மகளிர் அணி ஒன்று சேர்ந்து ஒரு கெட் டு கெதர் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்!!//

நான் ரெடி! எங்கே கெட்டலாம்...எங்கே கெதராலாம்?

வல்லிசிம்ஹன் said...

நான் நிறைய எழுதவில்லை கீதா . சிரமப் பட வேண்டாம் .சில பல கா... ரணங்கள்,
இப்ப சரியாப் போயிக் கொண்டு இருக்கு.
கொஞ்ச நாள்ள திரும்பிடலாம் வலைக்கு. நானே இன்னும் நிறையப் பதிவுகள் படிக்கலைப்பா.
வாழ்த்துகளை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

நான் ரெடி! எங்கே கெட்டலாம்...எங்கே கெதராலாம்?//

நானும் ரெடி........

வல்லிசிம்ஹன் said...

அதானே கயல் ரமணியை எப்படி மறந்தேன்.

சாரிப்பா.
மதுரா, பிரேமலதா,காட்டாறு,கெக்கேபிக்குணி இப்படி நீண்டுகிட்டே போகிறது.
சாமி வெறூமன தந்தி வாழ்த்து கொடுக்க இந்த சவுக்காருக்காருக்குத் தெரியலையே:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.

ரொம்ப நாளைக்கு அப்புறம் எல்லோரையும் பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம் .
உங்க வீட்டுக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள்:)

மிஸஸ்.டவுட் said...

இப்பவும் மறந்துட்டீங்க தான்...பரணியா...ரமணியா ...சவுக்கார் மேடம்?!

மாதேவி said...

மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்ததுக்கும்.பலரையும் அறிமுகப் படுத்தியதற்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

மிஸஸ். டவுட்னு பேர் வச்சா!!

இப்படித்தான் குழப்பம் வரும். :)
சாரிப்பா பரணிதான்.
ஓகே??

நான் சௌகார் இல்ல:)
யார் சொன்னாலும் நம்பாதீங்க. நான் அவங்களைவிட ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பச் சின்னவங்க.....

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி, ஹையோ எப்படித்தான் இந்தத் தமிழ் உங்க கிட்ட இப்படி விளையாடுதோ.
நீங்களே ரெண்டுமூணு நாட்கள் சஜஸ்ட் செய்யுங்க.

இன்னும் இந்த மாசக் கடைசிக்குள்ள.
பார்ர்த்துடலாம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க , மாதேவி, நன்றிம்மா.

கோபிநாத் said...

அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும் ;)

கவிநயா said...

அன்பான வாழ்த்துக்கும் அருமையான நினைவு கூரலுக்கும் மனமார்ந்த நன்றிகள் அம்மா. உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் இனிய மகளிர்தின வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோபி, உங்கள் அம்மாவுக்கும் அக்கா தங்கைகளுக்கும் மகளிர்தின வாழ்த்துகள்.
நன்றி.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா, மகளிர் உலகம் நன்று பொலியட்டும். மனவளம் மேலோங்கட்டும்.

நாமும் நம்மவர்களும் ஆரோக்கிய சிந்தனையோடு இருக்க அந்த அபிராமியே அருளட்டும்.

துளசி கோபால் said...

அட! இந்தப் பதிவை இப்பதான் பார்த்தேன் ராமலக்ஷ்மி மூலமாய்!

மகளிர் தினத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

கொஞ்சம் லேட்டாச் சொல்றேனோ?

ஊஹூம், நெவர்:-)))))

ராமலக்ஷ்மி said...

மகளிர்தின வாழ்த்துக்கள்! இந்தப் பதிவு இன்றைய வலைச்சரத்தில்.., நன்றி:)!

[நீங்கள் பார்த்து விட்டிருப்பினும் இந்தப் பின்னூட்டம் ஒரு குறிப்புக்கு:)!]

கவிநயா said...

எவ்வளவு இனிமையாகவும் நிறைந்த அன்புடனும் வாழ்த்தியிருக்கிறீர்கள் அம்மா. உங்களுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளும், பணிவான வணக்கங்களும்.

கீதா சாம்பசிவம் said...

புதுப்பதிவாக்கும், என்னடா நாம் பார்க்காமலேயே நமக்குப் பின்னூட்டச் செய்திகள் வருதேனு பார்த்தேன். நன்றி வல்லி. மீண்டும் அனைவரையும் வாழ்த்த வைக்கவும், வாழ்த்துச் சொல்லவும் சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி.