About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, June 05, 2008

ஜூன் மாதப்புகைப்பட போட்டிக்குஇவை இரண்டு படங்களும் போட்டிக்கு அனுப்ப எடுத்தவை.

இன்னோரு படமும் உள்ளது. அது அவ்வளவு தெளிவாக இல்லை.

இருந்தும் பதிவில் இணைப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்:)
ஒன்று சிங்கத்துக்குத் தெரிந்து எடுத்தது. இன்னோன்று கண்ணாடிக்கு பின்னாலிருந்து எடுத்தேன்.
பின் ஆக்கத்துக்கு வழி இல்லை.
போட்டிக்கான படம் இரண்டாவது.18 comments:

ராஜ நடராஜன் said...

உங்கள் தேர்வான இரண்டாவது படத்தின் தரம் மூன்றாவது படத்துக்கு வந்திருந்தால் இன்னும் இயற்கையாக இருந்திருக்கும்

ராமலக்ஷ்மி said...

தெரிந்து எடுத்த படத்தை விட தெரியாமல் எடுத்தது இன்னும் இயல்பாக வந்திருக்கிறது.
(போட்டிக்கும் போகிறோம் எனத் 'தெரியுமா' Mr. சிங்கத்துக்கு.)

முதல் படம் போன்ற சில காட்சிகள் பக்கத்தில் போய் எடுக்க இயலாது. (நான் போட்டிக்கு அனுப்ப இருப்பதும் இப்படி வீட்டு பால்கனியிலிருந்து முன்னொரு சமயம் பிடித்ததுதான்.)

ஆயில்யன் said...

ரெண்டாவது போட்டோ நீங்க எடுக்கும்போது உங்களோட டார்கெட்டை நீங்க பேசி டிஸ்டர்ப் பண்ணிட்டீங்கன்னு நினைக்கிறேன்ம்மா :))

அது சரி நாய் குட்டி பொம்மை தயாராகுதா? அல்லது போஸ்ட் புரெட்க்‌ஷன் மாதிரி மெருக்கூட்டுதல் நடைபெறுதா??

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜ நடராஜன். சரிதான் நீங்க சொல்றது. ஆன அவர் வேலை செய்யற போது போட்டொக்குப் போஸ் கொடுங்கன்னா சலிப்பு வரும். இயற்கைதானே:)
அதனால் தெரிஞ்சு ஒண்ணு தெரியாம ஒண்ணு எடுத்தேன்:) ஜஸ்ட் ஃபார் ஃபன்.

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி,
தெரியும் தெரியும். தெரியாமல் எடுத்தா வம்பில்லையா:)

அனுப்புங்க அனுப்புங்க நல்லா வரும்.
கொஞ்சம் தாஜா செய்துதான் முதல் படமே எடுத்தேன்:)

வல்லிசிம்ஹன் said...

ஆயிலயன், நான் காமிராவும் கையுமாப் போனதுமே, இப்ப என்ன வேணும் உனக்கு. மனுஷனை வேலை செய்ய விட மாட்டாங்களே என்று பொய்யாக அலுத்துக் கொண்டார். அது அப்படியே படத்தில வந்துவிட்டது.
நாய் ஏற்கனவே தயாரானதுதான். அதுக்கு கண் வைக்கறத்துக்காக என் மாலைகளிலிருந்து ரெண்டு பீட்ஸ்(மணிகள்) எடுத்துப் பொருத்திக் கொண்டிருந்தார்:)

NewBee said...

வல்லியம்மா,

நலமா? :-).

படம் அருமை.எனக்கு Techinicality தெரியாது.ஆனா தலைப்புக்குப் பொறுத்தம் 3-வது படம்.ஏன்னா, 2-வது pose கொடுத்த மாதிரி இருக்கு.3-வதுல தான் வேலை செய்யறது ஆப்டா இருக்கு.கண்ணாடி நடுவுல வந்துருச்சு தான்.என்ன பண்றது????

ம்ம்ம்ம்...நல்லா குழப்பிட்டேன்ல?? ஹி...ஹி..ஹி..இன்னும் டைம் இருக்கே ;-).

எனக்கு இந்த வாட்டி தலைப்பு ரொம்ப யோசிக்க வைக்குது.வேலையக் கண்டா காமிராவைக் காணும், காமிராவைக் கண்டா வேலையக் காணோம் :(.

வல்லிசிம்ஹன் said...

குழப்பலைப்பா நியுபீ.

அதுதான் உண்மை.
இயற்கையா எடுத்தா நல்லா வருது.


நல்லா யோசிச்சுத் தெளிவா எடுத்துப் போடுவீங்களாம்:)

இலவசக்கொத்தனார் said...

நண்பர் ஜீவாவின் உந்துதலின் காரணமாக நான் உங்களுக்கு ஒரு துரோகம் செய்து விட்டேன். தயவு செய்து இங்கு வந்து பார்க்கவும்.

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ், என் மேலயும் யாராவது இவ்வளவு நம்பிக்கை வச்சு இருக்காங்களா.!!!!!
என்னனு எழுதுவேன் தெரியலையே:)

தமிழ் ஆசான் ஞாபகம் வருதே. எத்தனை நேரம் பேப்பரும் பேனாவும் உட்கார்ந்திருப்பேனு ஸ்கேலால மேஜையைத் தட்டிட்டிப் போவாரே.:)

ராமலக்ஷ்மி said...

இன்னும் தாங்கள் PIT-ல் சென்று பதியவில்லை போலிருக்கே வல்லியம்மா?

கிரி said...

நாங்களும் உங்க கூட போட்டிக்கு இருக்கோம் :-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி. பின்னூட்டமாப் போட்டேன் ராஜா. அப்புறமா வருமாயிருக்கும்.நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கிரி சார். போய்ப் பார்த்துடறேன்.:)நல்லாத்தான் இருக்கும்.

Illatharasi said...

படங்கள் நன்றாக இருக்கிறது, வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

எம்.ரிஷான் ஷெரீப் said...

முதல் படம் போட்டிக்கு நல்லாயிருக்குன்னு தோணுது.ஏன்னா பார்த்த உடனே அந்தப்பையன் மேல தான் பார்வை போகுது மேடம்.தலைப்பின் கருப்பொருளுக்கு ஏத்த மாதிரி இருக்கிறதா ஒரு எண்ணம்.ஆமா,
அங்கிள் போட்டோஸ்ல என்ன பண்றார்னு சொல்லவேயில்லையே?

வல்லிசிம்ஹன் said...

இல்லத்தரசி, வாங்கப்பா.
உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்குப்பா. எவ்வளவு உணவு வகை. இதற்கு முன் பார்க்கலயேன்னு இருக்கு.

வாழ்த்துகளுக்கு நன்றி. நல்லாப் படங்கள் போட்டவங்கதான் வெற்றி பெறணும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரிஷான்.
அந்தப் பையன் இல்லாட்டா மனுஷர், எதித்தாப்பில பள்ளிக்கூடத்தில பெயிண்ட் செய்து கிட்டு இருந்தார். கொஞ்சம் தள்ளி இருந்தார்.
அன்கிள் மரத்தில சிற்பங்கள் வுட்கார்விங் செய்வார்.
அதைத்தான் அவரைக் கேட்டு எடுத்தேன். ஒரு அல்சேஷன் நாய் செய்து முடித்து இருக்கிறார்.
நன்றிம்மா வருகைக்கு.