Monday, February 23, 2026

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன்

Saturday, July 22, 2006
ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார்



கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி.

கண்ணனைப் பார்த்ததில்லை அவள். காணாமலே , கேட்டே, காதல் கொண்டாள்.
அவனில்லாமல் தன் வாழ்வு இல்லை என்ற தீர்மானத்துக்கு
உடனே வநதாள்.
இது , இந்த முறை நடப்பது வழக்கம்தான்.
பத்து வயதோ ,அதற்கு முன்னால் திருமணம் செய்யும் நாட்கள் அவை.
பத்து வயதில் காதல் வருமா.?
வரும். 
வந்து காதலித்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன் பேதைப்பருவம் 
என்று சொல்லப்படும்
என்று அழைக்கப்படும் அந்தக் காலங்களில்,
அத்தை மகனும் மாமன் மகளும் அறிமுகம் செய்து கொள்வதே கணவனும் மனைவியாகத்தான்.
இப்போது எங்களுக்கு அடுத்த தலைமுறையில் அனைவரும் சகோதர சகோதரியாகவே அறியப்படும் அழகும் இருக்கிறது.
இப்போது, இந்தப்பதிவில்
ருக்மிணியின் காதல் நிறைவேறப்போகும் நேரம்!

அது ஒரு கனவுகளில் சஞ்சரிக்கும் காலங்களாக இருக்கத் தேவை இல்லை.
உணர்வுகள் மட்டுமே அறிந்து தேர்ந்து தன் துணையை 
அடையாளம் கண்டு கொள்ளும்.அந்த துவாபரயுகத்தில்,

அரசுகளும் அரசுகளும் திருமணம் செய்து கொண்டன.
ருக்மிணியின் தந்தைக்குக் கண்ணன் மேல்தான் நினைவு
தன் சிறு மகளுக்கு ஏற்ற காளை அவன் என்று தீர்மானம்.
செய்து ஆண்டுகளாகிவிட்டன.

நடுவில் வந்தவன் சிசுபாலன்.

கண்ணனிடம் வேண்டுமென்றே பகை வளர்த்தவன்
இல்லாததும் பொல்லாததுமாக தூற்றுக்களை பரப்பி
தனக்கென ஒரு கும்பலைச் சேர்த்துக்கொண்டான்.

அவன் வலையில் சிக்கினவர்களில் ஒருவன் ருக்மி...ருக்மிணியின் அண்ணன்.

அவன் நினைப்பு வேறாகப் போயிற்று.
ஜரசந்தன்,சிசுபாலன் இவர்கள் கூட்டத்தில் தன் பெருமை உயரும்,
தன் தங்கையைக் கடி மணம் செய்து கொடுத்து விடலாம் என்று நினைத்து ,
தன் தந்தையிடமும் சொல்லி விட்டான்.
அவருக்கோ தனக்குப் பிறகு நாட்டை ஆளப்போகும் மகனை மறுத்து சொல்ல பயம்.
ஜராசந்தனின் கொடூரமான குணநலங்களையும் அறிந்தவர் அவர்.
சிசுபாலனின் அக்கிரமங்களும் தெரியும்.
 இந்த அரக்கர்கள் முன்னால் ஒரு சிற்றரசன் தானே அவர்,?
வாய்மூடி மௌனியானார்.

ருக்மிணியின் மனதறிந்தவன் கண்ணன்.
அவனுக்குப் பொறுப்பும் நிறைய. பொறுமையும் அப்படியே.
அவன் உலக அதிபதி. அவனுக்கு இந்த அரசியல் முறைகள் தெரிந்ததால் அமைதியாக இருந்தான்.
காலம் கனிவது என்று ஒரு சொல் அப்போதும் உண்டு.
ருக்மிணிக்கு ஒரு நாள் நகருவதே நரகமாக இருக்கிறது.
சுயம்வரம் ஏற்பாடுகள் என்ற பெயரில் சிசுபாலனுக்கு அவளை மணமுடிக்க ஆலோசனைகள் ஆரம்பித்து முன்னேறிக்கொண்டு இருந்தன.
மனதுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு ஏழைப் புரோஹிதரை அழைத்து ஆலோசனை
கேட்கிறாள்.
அழகாக ஒரு எளிமையான கடிதம் கிருஷ்ணனுக்கு
வரைகிறாள்.
"கிருஷ்ணா,
என் உயிர்,என் தலைவன்,என் கடவுள் நீதான்.
உன் ஒருவனுக்குத்தான் நான் உரிமை,
இங்கே சேடி நாட்டு அரசனுக்கு என்னை
மணமுடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

என் அன்பிற்கு பாத்திரமான இந்தப் புரோஹிதரோடு
நீ வரவேண்டும்.உடனே.
நானும் தோழியருடன் மங்கள கௌரி விரதத்தைப்
பூர்த்தி செய்ய
கோவிலுக்கு வருவேன்,அந்த க்ஷணம் நீ என்னைக் காத்து உன்னுடன்
அழைத்துச் செல்ல வேண்டும்.
உன்னுடைய வீரமும் ,என் கற்பும் இதில்  பரிமளிக்க வேண்டும்.
அப்போதுதான் எனக்கும் உனக்கும் பெருமை,
என்று
எழுதி அனுப்பி விட்டுத் தவிப்புடன் காத்திருக்கிறாள்.

வேதியரும் கண்ணனைக் கடுகி அணுகுகிறார்.
ஒரே ஒரு பார்வைதான் கடிதத்தைப் பார்க்கிறான்.
அடுத்த நிமிட்ம அவன் தேர் அந்தணரோடு
ருக்குமணியைத் தேடிப் பறக்கிறது.

(அப்போதிலிருந்தே பழகி இருக்க வேண்டும் இந்த சாரதி.பிறகுதான் பார்த்தனுக்கு சாரதி ஆகிறான்.)

மாயன் விதர்ப்ப நாட்டில் காலடி பதித்தான்..
ருக்மணி, தன் தந்தை பீஷ்மகனிடம் ஆசி பெற்று விரைகிறாள்
தன் மங்கள கௌரியைத் தரிசிக்க.

கோவிலில் பூஜித்து வெளியே வரும்போது
வருகிறது கண்ணன் ரதம்.
நீட்டுகிறான் கண்ணன் தன் பொற்கரத்தை.
பிடிக்கிறாள் ருக்மிணி தன் வாழ்வை.
அணைத்து அவளை அமர வைக்கிறான் ரதத்தில்.
துரத்தி
வரும் அத்தனை பேரையும்
வென்று த்வாரகை வந்து கோலாஹலமாக
மணம் முடிக்கிறான். மஹாராணி, கண்ணனின்
பட்டமஹிஷி ருக்மிணி தன் நாயகனுடன்
அரியணை ஏறினாள்.
மங்களம் சுப மங்களம்..



- July 22, 2006  

Saturday, February 21, 2026

பழைய பிரதாபம்.

வல்லிசிம்ஹன்

Wednesday, July 25, 2007
205,குடமிளகாய் கட்லட் 1966
----------------------------------------------------------
முன்னமேயே சொல்லி இருந்தது போல எங்க சிங்கத்துக்கு ஊரோட ஒட்டி வாழப் பிடிக்காது. அதனால் நாங்க வாடகைக்கு இருக்கிற இடமெல்லாம் தனியா, கொஞ்ச தூரத்தில தேசிய நெடுஞ்சாலை கண்ணில தென் படற மாதிரிஅமைந்திருக்கும்.அப்படி அமைந்த வீடு ,சேலத்தில ரயில் நிலையத்திலிருந்து பக்கத்தில, உமா தியேட்டர ஒட்டி ஒரு பத்து வீடுகளுக்கு நடுவில் ஒரு வீடு.
சுத்திவர வயக்காடு.
தவளை சார் தினம் வாசப்படியில் தவம் கிடப்பார்.வீட்டுக்கு வேலைக்கு வர
 சின்னப் பொண்ணு தவளை இருந்தா அதைப் பிடிக்கப்
பாம்பும் வரும் என்று பயமுறுத்தும்.:)
தவளையார்,
நான் வாசல் தெளிக்கும் போது
தண்ணீர் மேலே பட்டபிறகு என்னை ஒருதடவை முறைத்துவிட்டு தாவுவார், அவர் என் மேல் தாவாமல் இருக்கணுமே பெருமாளேனு நினைச்சுப்பேன்.

அந்தப் பத்து வீட்டில முத வீட்டில் ஒரு வயசானவர்,நடு வீட்டில் நான்,
அந்தக் கோடியில் ஒரு பாட்டி,தன் பேரன் நாச்சியப்பனோடு ....இவ்வளவுதான் ஜனம்.
காலை 7.25க்கு ஜீப் வரும் ,ஐய்யா ஏறிப் போய் முனை திரும்பும் வரை பார்த்துவிட்டு, உள்ள வந்து ராத்திரி மிச்சம் வைத்த சாதமும்,தயிரும் பாட்டி கொடுத்த ஆவக்காயும் ஒரு கிண்ணத்தில் வைத்து உள்ள தள்ளினால் அடுத்த இரண்டு மணி தூக்கம்தான்.
  முதல் மகன் எண்ணில் கருக்கொண்ட நான்காவது மாதம். 
மதுரைக்குப் பிரசவத்துக்குப் போக இன்னும் நாலு மாதம் இருக்கே ,எப்படிடா பொழுது போகும் என்று யோசிப்பேன்.
கதையெல்லாம் படிச்சு முடிச்சாச்சு. வானொலி கிடையாது.
வரிந்து வரிந்து உற்றார் உறவினருக்கெல்லாம் கடிதம் போட்டாச்சு.
கடிதம் கொண்டுவரும் தபால்காரர்,பால்காரம்மா,நாடார்கடைப்பையன்,காய்வண்டிக்காரர் எல்லோருடய குடும்ப க்ஷேமலாபங்களெல்லாம் விசாரித்து வைத்தாச்சு.

வயல்களைத் தாண்டி இருக்கும் ரோட்டில் எப்பவாவது இருக்கும் 
போக்குவரத்தையும் ஜன்னல் வழியாப் பார்த்து அலுத்துப் போன நாட்களில்தான் ரேவதி பஞ்சரத்தினம் பக்கத்து வீட்டுக்குக் குடி வந்தாள்.

அவளும்,அவளுடய ரயில்வே அண்ணாவும்,அம்மாவும்
சென்னையிலிருந்து சேலத்துக்கு மாற்றல் கிடைத்து,
ரயில் நிலையத்துக்குப் பக்கத்திலிருப்பதால் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து வந்தார்கள்.
என்னைப் போலவே படிப்பு,பாட்டு, சினிமா என்று ஒரே ஒத்த விஷயங்களில் ஈடுபாடு. ஒரு வயது என்னை விட மூத்தவள். கல்லூரியில் ஹோம்சயன்ஸ் முடித்துவிட்டு யார்மேல் தன் பிராக்டிகல் வகுப்பை நடத்தலாம்னு நினைச்ச போது நான் கிடைத்ததாகச் சொல்லுவாள்.

அவள் சொல்லிக் கொடுத்த குடமிளகாய்க் கட்லெட் செய்முறை இங்கே பதிகிறேன்.
உங்களுக்கும் தெரிந்திருக்கும். இன்னோரு தடவைப் படிப்பதால் குடமிளகாய் கோபிக்காது.:))

இரண்டு பேருக்கு கட்லெட் செய்ய 2 பெரிய குடமிளகாய் சரியாக இருக்கும்.
சிற்றுண்டி...
தேவை....

திடமான பெரிய குடமிளகாய் இரண்டு.

ஸ்டஃப் செய்யத் தேவையான காய்கறிகள்
1, பட்டாணி,
2,காலிஃப்ளவர்,
3,காரட்,
4,பீன்ஸ்,

வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு 4 பெரியது.

சேர்க்க வேண்டிய மசாலா
கசகசா,சோன்ஃப்,கிராம்பு,துளி இஞ்சி,சின்னவெங்காயம் 3,பச்சைமிளகாய் 4

மேல்மாவு மைதாவும்+கொஞ்சம் அரிசிமாவும்+ ப்ரெட் தூளும்.

செய்முறை.
-------------------------------இரண்டு பேருக்கு:)

1, இரண்டு குடமிளகாயையும் நன்குக் கழுவித் துடைத்து,
நான்கு பாதிகளாகச் செய்து கொள்ளணும்.
அதில் இருக்கிற விதையெல்லாம் எடுத்துவிட்டுத் தயாரா வைத்துக் கொண்டு,
நாலு உருளைக் கிழங்கையும் குக்கரில் உப்புப் போட்டுவேகவைத்துப் பொடித்து மாஷ் பண்ணவேண்டும்.
,
2 காய்கறிகளைப் பொடியாக அரிந்துகொள்ளணும்.
எல்லாவற்றையும் உப்பு,மஞ்சப்பொடியோடு வேகவைக்கணும்.

3,
மசாலா விஷயங்களை வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளணும்.

4,மைதாமாவையும் அரிசிமாவையும் கொஞ்சம் உப்பு போட்டுத்
 தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு மாதிரிக் கரைத்துக் கொள்ளணும்.
5,
காய்ஞ்சுபோன ப்ரெட்டைத் தூள் செய்து தனியாக வைத்தால் நநம் ரெடி.
வேகவைத்த உருளைக்கிழங்கோடு ,வேகவைத்த காய்கறி,அரைத்தமசாலா எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளணும்.

ஒரு பெரிய வாணலியில் நாலே நாலு கரண்டி ரிஃபைண்ட் எண்ணையை விட்டு மிதமான சூட்டில் வைக்கணும்.
குடமிளகாய்க் கிண்ணங்களில் இந்தக் காய்கறிக் கலவையை நிரப்பி,
மைதாமாவுக் கரைசலில் முக்கி எடுத்து ப்ரெட் தூளில் ஒத்தி
சுட்ட எண்ணையில் ஜாக்கிரதையாக வைக்கணும்.
ஒரு பக்கம் வெந்தவுடன்
அப்படியே மாற்றி குடைமிளகாயோடத் தலைப்பக்கத்தை வைக்கணும்.
வடிவம் மாறாமல் அழகா இருக்கணும் இல்லையா.
இப்படியே பொறுமையா நாலு கட்லெட் என்று சொல்லப்படும் இந்த டிபனை
செய்து
புதிதாக் கலயாணமான,
நல்லா இருந்தா வல்லிம்மா காம்ப்ளிமெண்ட்.:))
சொல்ல மறந்துட்டேனே,
புதிசா ஒரு தோழி எங்க பேத்திக்குக் கிடச்சிருக்கா. அவ பேரு லல்லிம்மா:))
- July 25, 2007 20 comment

Nadigai Bhanumathi

வல்லிசிம்ஹன்

 வல்லிசிம்ஹன்

மீண்டும்மீண்டும் 
பார்த்து வியக்கும் நடிப்பு.
இத்தனை ஆளுமை ஒரு பெண்ணிற்கு
அமைந்திருந்தது
என்னை மிகவும் கவர்ந்தது.
அதுவும் அவரது குரலினிமை அவர் நடித்த படங்கள்
அத்தனையிலும் வரும் பாடல்களில்

சிறப்பாக இருக்கும். தாய்க்குப் பின் தாரம்,
மக்களைப் பெற்ற மகராசி,
சாரங்கதாரா,அன்னை,பத்து மாத பந்தம்,
மணமகன் தேவை, அறிவாளி இவை எல்லாம்
சட்டென்று மனதுக்கு வந்தவை.
நிறைய மகிழ்ச்சியைக் கொடுத்த இவர் போன்ற
நடிக நடிகையருக்கு நன்றி.
புரட்சித் தலைவர், சிவாஜி போன்ற 
மகா நடிகர்கள் அவர்களை மரியாதையுடன் நடத்தியதுதான்
என்னைக் கவர்ந்தது.
எதற்காகவும் யாரிடமும் தன் சுய மரியாதையை விட்டுக் கொடுக்காத
மனுஷி.

சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.

வல்லிசிம்ஹன் இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12   க்ரவுண்டில்    பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள...