வல்லிசிம்ஹன்
அடுத்த இரண்டு நாட்களில் நிறைய விஷயங்கள் நடந்தேறின.
அடுத்த வீட்டு வினிதாவைக் கோவிலில் சந்தித்த போது
அழாத குறையாக மேக்னா குழந்தைகளை
அழைத்துக் கொண்டு தாய் நாட்டுக்குத் திரும்பும் செய்தியைச்
சொன்னாள்.
நீங்கள் இருவரும் அவளை சந்தித்துப் பேச வேண்டும். குடும்பத்தைப்
பிரிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று
வேண்டிக் கொண்டாள்.
இதில் நாம் தலையிடுவது சரியில்லை என்று
தோன்றினாலும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவு சொல்ல வேண்டும்
என்று நினைத்துக் கொண்டேன்.
அதேபோல அடுத்த நாளே நாங்கள் மேக்னாவைச் சந்திக்கச் சென்றோம்.
எங்களைக் கண்டதும், அமைதியாக வரவேற்றவள்
எப்பொழுதும் போல் டீ போட்டுத் தரட்டுமா என்று கேட்டாள்.
எல்லாமே விசித்திரமாக இருந்தது.
என்ன ஆச்சுமா பெட்டிகள் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறாய்
என்றேன்.
'ஆமாம் ஆண்ட்டி, முகேஷ் எனக்க மன நிலை சரியில்லை
என்று என் பெற்றோரிடம் சொல்லி
இருக்கிறார்.
கடந்த வருடங்கள் நாங்கள் வாழ்ந்த வாழ்கைக்கு
அர்த்தம் இல்லாமல் போகிறது.
திருமணத்துக்கு முன் இருந்தவர் வேறு
இப்போது இருப்பவர் வேறு.
குழந்தைகளையும் கவனிப்பதில்லை.
எப்பொழுது பார்த்தாலும் மௌனமாக இருக்கிறார்
இல்லை என்றால் என்னைக் கண்டபடி
ஹிஸ்டீரியா வந்த பெண் என்று பேசுகிறார்.
இப்போது எனக்கே என் மேல் சந்தேகம் வந்து விட்டது.
அலுவலகத்திலும் வேலைப் பளு அதிகம்.
குழந்தைகள் எங்களுக்குள் நடக்கும் தகராறுகளைப்
பார்த்து மிரண்டு போகிறார்கள்.
+++++++
வீடு பெட்டிகளும் உடைகளுமாக இறைந்து கிடந்தது.
வீட்டைப் பொன் போல வைத்திருப்பவள் மேக்னா.
அவள் வீடா இப்படி இருக்கிறதா? மனம் குழம்பினால் வீடும் நிலையில்லாமல் போகுமோ!
நீ மன நலமருத்துவரைப் பார்க்கப் போனியா அம்மா என்று கேட்டோம்.
நான் ஹாஸ்பிடலில் இருக்கும்போது என்னை
மன நல மருத்துவர் பார்க்க வந்தார்.
அவர் என்னிடம் குறை எதையும் சொல்லவில்லை. அளவுக்கு
அதிகமான மன அழுத்தம் இருப்பதாகவும்
நான் சில நாட்கள் வீட்டுக் கவலை இல்லாமல்
ஓய்வெடுக்க வேண்டும் என்றும் சொன்னார்.
அதனால் தான் அம்மா வீட்டுக்குக் குழந்தைகளோடு
போக முடிவெடுத்திருக்கிறேன்.'' என்றாள்.
முகேஷ் எதனால் உன்னிடம் மனஸ்தாபப் படுகிறார்
என்றும் விசாரித்தேன். .......
5 comments:
ரொம்ப சிறிய பதிவாக எழுதி நிறுத்திவிட்டீர்களே
அன்பின் முரளிமா,
இதை எழுதவே எனக்கு நாலு நாட்கள் பிடித்தது.
அவர்கள் வாழ்க்கையில் இரண்டு வருடங்களாக நடந்த பிரச்சினை
எழுத கொஞ்சம் நேரம் ஆகும். கைவலி குறைந்ததும் செய்கிறேன்.
அடந்தது என்றாலும் கொஞ்சம் யோசித்தே வார்த்தைகளைப் பதிவிடுகிறேன்.
எப்பொழுதும் நலமுடன் இருங்கள். மிக மிக நன்றிமா.
என்ன புரிதலோடு மணம் செய்கிறார்களோ... விஸ்வரூபத்தில் கமல் சொல்வது போல 'அடிச்சாலும் புடிச்சாலும் நீதானே என் பொண்டாட்டி?' என்றிருக்க வேண்டாமோ?
என்ன நடந்ததோ என்று பதட்டம் படிப்பவர்களுக்கு இருந்தாலும், உங்கள் உடல் நலனும் பார்த்துக் கொண்டு எழுதுங்கள். அனைத்தும் நல்லதாகவே நடந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாங்களும் காத்திருக்கிறோம்.
மேக்னாவுக்கு வேலைப் பழுக்களால் ஏற்பட்டுள்ள மனநலபிரச்சனைதான் காரணமாக இருக்கும்.
தாய் வீடு சென்றதும் மனது ஆறுதல் அடைந்து இருக்கலாம்.
Post a Comment