வல்லிசிம்ஹன்
அன்பின் அனைவருக்கும் இனிய கண்ணன்
பிறந்த நாள் வாழ்த்துகள். அவன் ஆசி நம் இல்லங்கள் தோறும்
நிறைந்து இருக்கட்டும்.
அவன் நடு இரவில் சங்கு சக்ரதாரியாகக் கறுப்பு
வண்ணத்தில் இருண்ட இராத்திரியில் சிறையில்
அவதரிக்கிறான். அவனுடைய வெள்ளைப்
பற்கள் பளீரிடுவதால் அவனையே அடையாளம்
கண்டு கொள்கிறார்களாம் பெற்றோர்.
என்னது பிறந்த குழந்தைக்கு ஏது பற்கள்
என்று யோசிப்பதற்குள்
தந்தையிடம் கட்டளை இடுகிறான், ''என்னை
யமுனையின் அக்கரையில் இருக்கும் கோகுலத்தில் நந்தகோபன் மாளிகையில்
விட்டு விட்டு விட்டு,
அங்கு பிறந்திருக்கும் யோக மாயையை எடுத்து வரும்படி
சொல்கிறான்.
பெற்றோரின் ஆச்சரியமும் திகைப்பும் மறையும்படி
தன் உருவத்தை மீண்டும் பிறந்த குழந்தையாக
மாற்றுகிறான்.
கண்ணனைத் தூக்கிக் கொண்டு, கொட்டும்
மழையில் வசுதேவன் செல்லும்போது
பகவான் நனையாதபடி ஆதி சேஷன் குடை
பிடிக்க ஆதிசேஷன் நனையாதபடி கருடன் வந்து
அவர்மேல் தன் பெரிய சிறகுகளை விரிக்கிறார்.
அதிசயங்களைச் சுமந்தபடி வசு தேவரும் சென்று,
நந்தன் மாளிகையில் அழுதுகொண்டிருந்த
யோக மாயையைக் கவர்ந்து மீண்டும்
சிறை வந்து சேர்கிறார்.
பிறந்ததிலிருந்து மாயக் கண்ணனாகவே இருந்து
உலகத்தாரின் சோகங்களைக் கவர்ந்து
சுகமாக இருந்த தெய்வக் கண்ணனை
என்றும் துதிப்போம்.
வாழிய கண்ணன் நாமம்