Blog Archive

Friday, May 26, 2023

வாழ்வு முறை

வல்லிசிம்ஹன்
சுவிட்சர்லாந்தில் படிக்கும் ஒரு மாணவர் எழுதுகிறார்:

 சுவிட்சர்லாந்தில் படிக்கும் போது பள்ளிக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தேன்.

 வீட்டு உரிமையாளரான கிறிஸ்டினா 67 வயதான ஒற்றை வயதான பெண்மணி, அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

 சுவிட்சர்லாந்தின் ஓய்வூதியம் மிகவும் நன்றாக உள்ளது, அவளது பிற்காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் பற்றி கவலைப்படாமல் இருந்தால் போதும்.

 இருப்பினும், அவள் உண்மையில் "வேலை" கண்டுபிடித்தாள் - 87 வயதான ஒற்றை முதியவரை கவனித்துக் கொள்ள.

 அவள் பணத்திற்காக வேலை செய்கிறாளா என்று கேட்டேன்.

 அவளுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது:
 "நான் பணத்திற்காக வேலை செய்யவில்லை, ஆனால் எனது நேரத்தை 'டைம் பேங்கில்' வைக்கிறேன், மேலும் எனது வயதான காலத்தில் என்னால் நகர முடியாதபோது, ​​​​நான் அதை திரும்பப் பெறலாம்."

 "டைம் பேங்க்" என்ற இந்த கான்செப்ட்டைப் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, ​​நான் மிகவும் ஆர்வமாக இருந்ததால், வீட்டு உரிமையாளரிடம் மேலும் கேட்டேன்.

 அசல் "டைம் பேங்க்" என்பது சுவிஸ் மத்திய சமூகப் பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட முதியோர் ஓய்வூதியத் திட்டமாகும்.  மக்கள் இளமையாக இருக்கும்போது முதியவர்களைக் கவனித்துக்கொள்வதில் 'நேரத்தை' மிச்சப்படுத்துகிறார்கள், மேலும் அவர்கள் வயதாகும்போது, ​​நோய்வாய்ப்பட்டால் அல்லது கவனிப்பு தேவைப்படும்போது அதைத் திரும்பப் பெறலாம்.

 விண்ணப்பதாரர்கள் ஆரோக்கியமாகவும், தொடர்புகொள்வதில் நல்லவர்களாகவும், அன்பு நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.  உதவி தேவைப்படும் முதியவர்களை அன்றாடம் கவனிக்க வேண்டும்.

 அவர்களின் சேவை நேரம் சமூக பாதுகாப்பு அமைப்பின் தனிப்பட்ட 'நேர' கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.

 அவள் வாரத்திற்கு இரண்டு முறை வேலைக்குச் சென்றாள், ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வயதானவர்களுக்கு உதவினாள், ஷாப்பிங் செய்தாள், அவர்களின் அறைகளைச் சுத்தம் செய்தாள், சூரிய குளியலுக்கு அழைத்துச் செல்வாள், அவர்களுடன் அரட்டையடித்தாள்.

 ஒப்பந்தத்தின்படி, அவரது சேவையின் ஒரு வருடத்திற்குப் பிறகு, *"டைம் பேங்க்"* அவள் பணிபுரிந்த மொத்த காலத்தைக் கணக்கிட்டு, அவளுக்கு "டைம் பேங்க் கார்டை" வழங்கும்.

 மேலும், அவளைக் கவனித்துக் கொள்ள யாராவது தேவைப்படும்போது, ​​"நேரம் மற்றும் நேர வட்டியை" திரும்பப் பெற அவள் "டைம் பேங்க் கார்டை" பயன்படுத்தலாம்.  முறையான சரிபார்ப்புக்குப் பிறகு, "டைம் பேங்க்" மற்ற தன்னார்வலர்களை மருத்துவமனையில் அல்லது அவரது வீட்டில் கவனித்துக் கொள்ளும்.

 ஒரு நாள், நான் பள்ளியில் இருந்தேன், வீட்டு உரிமையாளர் அழைத்து, ஜன்னலைத் துடைக்கும் போது அவள் மலத்திலிருந்து விழுந்ததாகச் சொன்னாள்.

 நான் அவசரமாக விடுப்பு எடுத்து அவளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினேன்.

 வீட்டு உரிமையாளருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில நாட்கள் படுக்கையில் இருக்க வேண்டியிருந்தது.

 நான் அவளைக் கவனித்துக் கொள்ள ஒரு வீட்டிற்கு விண்ணப்பிக்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது, ​​​​அவளைப் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்று வீட்டு உரிமையாளர் என்னிடம் கூறினார்.

 அவள் ஏற்கனவே "டைம் பேங்க்" க்கு திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை சமர்ப்பித்திருந்தாள்.

 நிச்சயமாக, இரண்டு மணி நேரத்திற்குள் "டைம் பேங்க்" ஒரு நர்சிங் தொழிலாளியை வந்து வீட்டு உரிமையாளரைக் கவனித்துக் கொள்ள அனுப்பியது.

  நர்சிங் தொழிலாளி தினமும் வீட்டுப் பெண்ணை கவனித்து, அவளுடன் அரட்டையடித்து, அவளுக்கு சுவையான உணவைச் செய்தார்.

 நர்சிங் தொழிலாளியின் உன்னிப்பான கவனிப்பில், வீட்டுப் பெண் விரைவில் குணமடைந்தார்.

 குணமடைந்த பிறகு, வீட்டு உரிமையாளர் "வேலைக்கு" திரும்பினார்.  தான் ஆரோக்கியமாக இருக்கும் போதே "டைம் பேங்க்" இல் அதிக நேரத்தை மிச்சப்படுத்த விரும்புவதாக அவர் கூறினார்.

 இன்று, சுவிட்சர்லாந்தில், முதுமையை ஆதரிக்க "டைம் பேங்க்" பயன்படுத்துவது பொதுவான நடைமுறையாகிவிட்டது.

 சுவிஸ் அரசாங்கம் "டைம் பேங்க்" திட்டத்தை ஆதரிக்கும் சட்டத்தையும் இயற்றியது.

அருமையான பதிவு
படித்ததில் பிடித்தது💖

177 ) நீயும் நானுமா கண்ணா

Thursday, May 18, 2023

அம்மா அப்பா 80 ஆவது திருமண நாள்

வல்லிசிம்ஹன்



....அப்பா.... அம்மாவின் PERSONAL SPACE ம்.  PRIVACY  யும் ....

பாஸ்கர் வெளியிலிருந்து வீட்டினுள்  நுழைந்து கொண்டு இருந்தான்  இந்த US குளிருக்கு ஒரு காஃபி குடிக்கலாம் என் நினைத்தான். 

ஆனால்  அவன் மனைவி மாலா  யாரிடமோ ஃபோனில் கோபமாக  பேசிக் கொண்டு இருந்தாள்.

வாசலில் இருந்து கிச்சன் -ஐப் பார்த்தவன்... அவன் அம்மாவிடம் சைகையில் என்ன என்று கேட்க  , அம்மா நான் இல்லை என்று சைகையிலேயே சொன்னாள் ...

அப்பாடா என்று இருந்தது பாஸ்கருக்கு... மாமியார் மருமகள் பிரச்சினை இல்லை. வேறு என்னவாக இருக்குமென்று யோசித்த அவன், SOFA வில்  அமரவும்,  மாலா உள்ளே வந்து மொபைல் ஐ SOFA மேல் விட்டு எறியவும் சரியாக இருந்தது.

புருவத்தை உயர்த்திப்  பார்த்த அவனை,  ஏன் வாயைத் திறந்து என்னன்னு கேட்க மாட்டீங்களா ன்னு சாடினாள்...

எதாவது முக்கியமா இருந்தா நீயே சொல்லுவாயே அதான் வெயிட்டிங் என்றான். அவளுடைய  கண் கிச்சனுக்கு  தாவியது...

ஓ... அம்மா இருக்கா, அதனால சொல்ல யோசிக்கிறாள் போல , என்று நினைத்த அவன்,  அம்மா நீ போய் படுத்துக்கோ. போம்மா ...  ஸ்ரீநாத் தூங்கிண்டு இருக்கான் பாரு ... என்றதும் அம்மா அவனைப் பார்த்து சிரித்து கொண்டே நகர்ந்தாள். 

சரி அம்மா போயிட்டா சொல்லு என்ன பிரச்சனை...

எப்படி சொல்வது எனக்கு சொல்றதுக்கு வெக்கமா மட்டும் இல்லை கேவலமாகவும்   இருக்குனு சொல்ல...

அப்படி யாருட்ட  பேசினே ?

எங்க அம்மாவிடம் என்று சொல்ல .,
 
அவன் நிமிர்ந்தான் ...

இதோ பார் வாய்க்கு வந்தது பேசாதே என்ன சொன்னாங்க, கரெக்ட்டா சொல்லு ...

அடுத்த மாதம் உங்க அம்மா இந்தியாவுக்கு போறாங்க, அதனால எங்க அம்மா அப்பாவை இங்கு வரச் சொல்லி ஃபோன் பண்ணினேன்...

சரி அதுக்கு நீ இந்த அளவுக்கு பீல் பண்ற மாதிரி என்ன சொன்னாங்க அதை முதல்ல சொல்லு...

எங்க அம்மாக்கு எத்தனை வயசு தெரியுமா உங்களுக்கு...

ஒரு 68 இருக்கும்...

அப்பாவுக்கு...

74 இருக்கும்...

சரி விஷயத்துக்கு வா...

எனக்கு அசிங்கமா இருக்கு சொல்றதுக்கே....

அம்மாக்கும் அப்பாக்கும் இனிமே கொஞ்சம் PRIVACY வேணுமாம் PERSONAL SPACE வேணுமாம்...

பேரன் பேத்தியுடன் சந்தோஷமா  இருக்கனும் என்று யோசிக்கிற இந்த வயசான  காலத்தில PERSONAL SPACE ம் PRIVACY ம்  வேணும்னு அவங்க சொல்லறதை, உங்ககிட்ட சொல்லறதுக்கே எனக்கு வெக்கமாவும் அசிங்கமாவும் இருக்கு ...

சரி OK விடு. நான் NEXT WEEK உங்க அம்மாகிட்ட பேசுறேன்   அதுவரை அமைதியாக இரு என்று சொன்ன அவன் தன் IN LAWS பற்றி யோசிக்க ஆரம்பித்தான், அருமையான மனிதர்கள்.. என்னாச்சு ??.

அடுத்த வாரம் பேசும் வரை வெயிட் பண்ணலாம் என்று முடிவு செய்தான்...

அன்று SUNDAY மாலா வை அழைத்த அவன், இதோ பார் உங்க அம்மா அப்பாவுடன் பேசப் போறேன்,

நான் ஃபோன் ஐ ஸ்பீக்கர்ல போடறேன்... ஆனால் ஒரு கண்டிஷன்  ஃபோன் SWITCH OFF செய்யும் வரை நீ எதுவும் பேசக்கூடாது என்று சொல்லி விட்டு பாஸ்கர், மாலாவின்  அம்மாக்கு Call  செய்தான்..
 
ஹலோ...

ஹலோ மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க ...

குழந்தை எப்படி இருக்கான், மாலா எப்படி இருக்கா..

மாலா என் மேல் கோபமா இருக்காளா மாப்பிள்ளை??  ...

இல்லம்மா என்ன விஷயம் ஏன் அவளுக்கு கோபம்...

இல்லை மாப்பிள்ளை என்னையும் அப்பாவையும் USA கிளம்பி வரச் சொன்னா, நான் இப்போ வரலேன்னு சொல்லி காரணத்தை சொன்னேன், கோபத்துல  ஃபோனை  கட் பண்ணீட்டு போயிட்டா...

நீங்க என் மாப்பிள்ளைங்கறதுக்கு மேலாக என்  பிள்ளை மாதிரி அதுனால என் மனசுல உள்ளதை உங்ககிட்டே சொல்லறேன், தப்பு இருந்தால் மன்னிச்சுடுங்க...

ஏன் பெ‌ரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்கம்மா.. சொல்லுங்க...

நான் கல்யாணம் ஆகி வரும்போது எனக்கு வயசு 21. உங்க மாமாவுக்கு  இரண்டு தங்கைகள்,  மூளை வளர்ச்சி இல்லாத அவரைவிட  இரண்டு வயசு குறைவான  தம்பி... , மாமியார் மாமனார்....

நானு‌ம் பாங்க்-ல வேலை பார்த்துண்டு இருந்தேன், இரண்டு நாத்தனார் கல்யாணம் அவர்கள் இருவருக்கும் இரண்டு இரண்டு குழந்தைகள்  பிரசவம்...

அதைவிட மூளை வளர்ச்சி இல்லாத மச்சினன் அவனுக்கு தேவையானது அனைத்தும் நான் தான் செய்ய வேன்டும் என்று பிடிவாதம் பிடிப்பவன்...

மாமியார் மாமனார் இருவரும் வயசு ஆக ஆக அவர்களுக்கு எல்லாமே கையில் கொண்டு குடுக்க வே‌ண்டு‌ம்...

இதற்கிடையில் எனக்கு இரண்டு பிரசவம், குழந்தைகள் வளர்ப்பு,  பெரியவள் மாலாவின் கல்யாணம் சின்னவளின் படிப்பு, அவளின் கல்யாணம், மாலாவுக்கு பிரசவம், சின்னவளுக்கு பிரசவம்,  மாமியார் மாமனார் மச்சினன் இறப்பு னு.... அ‌த்துட‌ன் இ‌ந்த விஷயங்கள் எல்லாம் செய்து முடிப்பதில் ஏற்பட்ட பணப் பிரச்சினை வேற....

எ‌ன்னுடைய 47 வருட கல்யாண வாழ்க்கை போன ஆறு மாத‌ம் முன்னால் வரை இப்படிதான் நட‌ந்து முடி‌ந்தது...

எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அவரோ, அவருக்கு என்ன பிடிக்கும் என்பதை நானோ  யோசிக்காமல் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்ததை எங்களுக்கு பிடித்ததாக ஏற்றுக் கொண்டு இத்தனை நாள் வாழ்ந்து இருக்கிறோம்...

நானு‌ம், என் கணவருக்கு என்ன பிடிக்கும், என்ன விரும்பி சாப்பிடுவார் என்று எதுவுமே யோசிக்காமல் மற்ற எல்லோரையும் நினைத்துத்தா‌ன் எல்லாம்  செய்வேன்...

இந்த ஆறு மாதங்களாகத்தான் நாங்கள் நிறைய யோசிக்க ஆரம்பித்தோம்...

இப்போது பண‌ம் என்பது எங்களுக்கு பிரச்சினை இல்லை, இருவரின் பென்ஷனால் தேவைக்கு அதிகமாகவே இருக்கு...

இ‌ந்த  ஆறு மாதத்தில் தா‌ன் நாங்கள் தனிக்குடித்தனமாக இருக்கோம்...

காலையில் எழுந்திருக்கும் அப்பா பால் வாங்கி வந்தால் நான் அவரு‌க்கு பிடித்த மாதி‌ரி காப்பி போட்டு அருகில் இருந்து ஆத்தி குடுப்பேன்... நா‌ன் வீடு பெருக்கினால் அப்பா துடைப்பார்... நா‌ன் சமைக்க அவர் காய் நறுக்கி குடுப்பார்...

ம‌திய‌ம்  LUNCH சுட சுட இரண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பழைய கதையெல்லாம் ரசித்து பேசி சாப்பிடுவது வழக்கமானது...

ஈவினிங் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு, பிரசாதம் சாப்பிட்டு, கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து பேசி முடித்து ஆத்துக்கு வரும்போது 8 ம‌ணி ஆகிவிடும்...

இரவில் ஒருவர் கையை ஒருவர் பிடி‌த்து‌க் கொண்டு தூங்கறோம்....

ஏன்னா பயம், நாளை விடியலில் யார் இருப்போம் என்ற உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை...

இனி எத்தனை வருஷம்  இருவரு‌ம் சேர்ந்து வாழ விடப் போறார் அந்த கடவுள் எ‌ன்று தெரியவில்லை...

அ‌தி‌ல் ஓரு நா‌ள் கூட இந்த சந்தோஷங்களை மிஸ் பண்ணிவிடக் கூடாது எ‌ன்று  நினைக்கிறோம் ...

இருபதுகளில்  நாங்கள் வாழ்ந்திருக்க வேண்டிய இ‌ந்த ஆத்மார்த்த வாழ்க்கையைத்தான் நா‌ன் அவளிடம் PRIVACY, PERSONAL SPACE என்று சொன்னேன்...

அவள் அதை வேறு விதமாக, அவள் வயசுக்கேற்ப கற்பனை செய்து கொண்டாள்...

சத்தியமாக மாப்பிள்ளை இப்பதான்  நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பு‌ரி‌ந்து வாழும்  வாழ்க்கையையே வாழ ஆரம்பித்து இருக்கிறோம் .  ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருக்கோம்...

இது தப்பா மாப்பிள்ளை...

அய்யோ நிச்சயமா தப்பு இல்லேம்மா. WISH YOU BOTH A  HAPPY MARRIED LIFE மா....

மாப்பிள்ளை ஃபோன் வச்சிடாதீங்க... உ‌ங்களு‌க்கு இப்போ நாங்கள் இல்லாமல் சமாளிக்க முடியாது என்றால்  சொல்லுங்கள், நிச்சயமாக கிளம்பி வருகிறோம்... மாலாவிடம் சொல்லுங்கள் என்று சொல்லவும்...

அம்மா எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க உங்க பொண்ணு கிட்ட பேசி நான் புரிய வைக்கிறேன்,  பை மா என்று சொல்லி ஃபோன் வைத்தான் பாஸ்கர் ...

மாலாவின் கண்களில் இரு‌ந்து கண்ணீர் வழிந்தது...

நான் தப்பு பண்ணி விட்டேன் கல்யாணம் பண்ணி  6 வருஷம் குழந்தை வேண்டாம் என்று இருந்தோம்...

நீங்கள் அந்த  6 வருஷத்தில் எத்தனை COUNTRY என்னை கூப்பிட்டு போனீர்கள் எத்தனை சந்தோஷமாக இருந்தோம்...

பாவம் அம்மா , அப்பா  அவர்கள் என் திருமணத்துக்கு முன்  எங்குமே போனது இல்லை.  இருவரும் சேர்ந்து உட்கார்ந்து பேசிக் கூட நான் பார்த்தது கிடையாது. அம்மா அவளுக்காக எதுவுமே செய்து கொள்ளவில்லை. எங்களிடமும் எதுவு‌ம் எதிர்பார்த்ததும் இல்லை...

அவளிடம் தாய்மையை மட்டுமே எதிர்பார்த்த நா‌ன் அவளுக்குள்  ஓரு பெண்மை இத்தனை வருடமாக ஏக்கத்தில் இருந்ததை புரிந்து கொள்ள வில்லை...

கணவ‌ன் மனைவி PRIVACY,  PERSONAL SPACE எல்லாவற்றையும் மூன்றாம் தரமாக கற்பனை செய்த என்னை, என்னாலேயே மன்னிக்க முடியல...

PLEASE அம்மாக்கு ஃபோன் பண்ணுங்க என்றாள்...

ஃபோன் எடுத்த அவள்,  அம்மா என்னை மன்னிச்சுடுங்க. நான்  உங்கள் மனதை காயப்படுத்தி விட்டேன். ரொம்ப சாரி  அம்மா,  நீயும் அப்பாவும் சந்தோஷமாக  இருக்கணும்...

ஆனா உனக்கு எப்பவாவது, உங்க வாழ்க்கைல BORE அடிச்சதுன்னா ஓரு ஃபோன் பண்ணுங்க,  டிக்கெட் அனுப்பி விடறேன். இங்க வாங்க  உங்க பேரனுடன் சந்தோஷமா  இருங்க...

உங்களுக்கு NO MORE DISTURBANCE FROM OUR SIDE. MARRIED LIFE ல PERSONAL SPACE  PRIVACY ங்கரதுக்கு உ‌ண்மையான அர்த்தத்தை புரிந்துகொண்டேன்...

HAPPY HAPPY MARRIED LIFE மா என்று PHONE வைத்த அவள் ஏங்க உங்க அம்மாக்கு டிக்கெட் எடுங்க மாமாவை வி‌ட்டு  ஐந்து மாசமா அவங்களை பிரிச்சு இங்க வச்சு இருக்கோம் எனவும்...

என் அம்மா  ஒடி வ‌ந்து, மாலாவின்  கை பிடித்து தாங்க்ஸ் சொன்னாள்...

மாமியார் கண்களிலும் அ‌ந்த ஏக்கத்தை பார்த்தாள் மாலா. இ‌னி த‌ங்க‌ள் சுயநலத்துக்காக பெரியவர்கள் யாரையும் பிரிப்பதும் இல்லை... அவ‌ர்க‌ள் தனிமைக்கு இடைஞ்சல் குடுக்கப்  போவதுமில்லை  எ‌ன்று முடிவு செ‌ய்து கொண்டாள்...

ஆம்,   இனி PERSONAL  SPACE ..... PRIVACY என்னும் வார்த்தைகள்  அவர்களுக்கு வேறு அர்த்தம் ....

 இவர்களுக்கு வேறு அர்த்தம் ........

_இதை உங்களுடன் பகிர்ந்த மகிழ்வுடன் ..
வெங்கட்முரளி_🙏🙏

Tuesday, May 16, 2023

உலக உயர் ரத்த அழுத்த தினம்.மே 17

வல்லிசிம்ஹன்

 இளைய சிறு வயது குழந்தைகளிலிருந்து

முதியவர்கள் வரை 
ரத்த அழுத்தம் உயர்ந்து பாதிக்கிறது.

உப்பின் அளவு ஒரு நாளைக்கு 
அரைத் தேக்கரண்டி  எடுத்துக் கொண்டால் போதும்.

உங்களுக்கு இதய அதிர்ச்சி ஏற்பட்டால்
நான் பொறுப்பில்லை என்று வைத்தியர்
சொல்கிறார்,

சரியான உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம்

இருந்தால் மட்டுமே இந்த அழுத்தத்தைத் 
தவிர்க்கலாம்.
தவிர்ப்போம். அனைவரும் உடல் நலம் பெருகி வாழ 
வாழ்த்துகள்.



Thursday, May 04, 2023

Writer Sujatha interview to Gopinath

 சுஜாதா சார்,
இன்னுமொரு பிறந்த நாள்.  மே 3.
சென்னை நாட்களில் உங்களை வாழ்த்தியதும் நீங்கள்
மென்மையாகச் சிரித்தபடி தனியாக நடந்ததும்

என்றும் நினைவில்.
நீங்கள் வாழ்ந்திருந்து  தமிழ் மக்களையும் உலகையும்
புதுப்பித்து
உங்கள் எழுத்தால் உயிர் கொடுத்திருப்பீர்கள்.
அனைத்து நலங்களுக்கும் நன்றி ஸார்.
இன்னும் உங்களைப் போல எழுத யாரும் வரவில்லை.
முடியவும் முடியாது.
அன்பு வாழ்த்துகள் ஸார்.