Blog Archive

Friday, February 03, 2023

மதுரை நம் மதுரை+++++திருமண நாள்


வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத
இடம் தேடும் மனம் என்ன செய்தால் அடங்கும்>
பயணப் பட வேண்டியதுதான். 
மானசீகமாகப் போக ஒரு தடையும் இல்லையே!!!!


அனைவரும் வளமாக வாழ வேண்டும்.

பின்னோக்கிப் பயணிக்காதே. முன்னால் வருவதை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்.
இதை எல்லாம் சொன்னது கூட  என் அப்பாதான்.

அவர் வார்த்தைகளை அவரது மறைவு நாளில் 
நினைவு கொள்வதை  அவரின் சொல்லுக்கு
 எதிர்மறையாக நான் நினைக்கவில்லை.

முன்னோர்களை நன்றியுடன் நினைப்பதற்காகவே
அமாவாசை வருகிறது .வருஷந்தோறும்
திதி கொடுக்கிறோம்.
இதோ இங்கே எழுதிக் கொண்டிருக்கும் எழுத்து 
அப்பாவின் கொடை. என் மணவாழ்க்கை,
எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அவரது பங்களிப்பு,
உழைப்பு எல்லாவற்றுக்கும் இன்னோரு பிறவி எடுத்தாவது
பதில் சொல்ல வேண்டும்,.

இணையத்தில் கர்மா,அதன் பலன் என்று அதிக  செய்திகளைக்
கேட்கும் போது, நாம் தீர்மானித்துத்தான்  இந்தப் பெற்றோருக்குப்
பிறக்கிறோம். நம் துணையைத் தேர்ந்தெடுக்கிறோம்
என்ற கருத்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்
படுகிறது.

இதுதான் உனக்குக் கல்வி, இதுதான் உன் மண வாழ்க்கை,
இவர்கள் தான் உன் புத்திரச் செல்வங்கள்
என்று  கடவுள் நமக்குச் சொல்வதை 
நம்புகிறேன்.

தை மாதத் திருமணங்கள் என்று பார்க்கும்போது,
எங்கள் ,திருமணம், திருமதி கோமதி அரசு அவர்களின் திருமண நாள்,
அம்மாவின் பிறந்த நாள், எங்கள் மகன்கள், மகள்
என்று அனைவரின் மண நாட்களும் வருகின்றன.

அனைவரும் மிக மிக அருமையான நலங்களைப் பெற வேண்டும்.
நோயில்லா வாழ்வும், மகிழ்ச்சித் தருணங்களும்
இறைவன் அருள வேண்டும்.
வாழ்த்துகள்.


11 comments:

ஸ்ரீராம். said...

பெற்றோரை தேர்ந்தெடுப்பது நம் கையில் இல்லை.  சிலர் நம் ஆன்மா தேடி தெரிவு செய்கிறது என்கிறார்கள்.  இதை எல்லாம் யார் அறிவார்? 

கோமதி அரசு said...

வாழ்க வளமுடன் அக்கா.
என்றும் அன்புடன் எங்கள் மணநாளை நினைத்து வாழ்த்து சொல்லி விடுவீர்கள், நன்றி அக்கா.

//எங்கள் மகன்கள், மகள்
என்று அனைவரின் மண நாட்களும் வருகின்றன.//

அனைவருக்கும் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
இறைவன் அருளால் நலமாக பல்லாண்டு வாழ வேண்டும் மகிழ்ச்சியாக.

உங்களுக்கும் சாருக்கும் வாழ்த்துக்கள்.
அம்மாவுக்கு வணக்கங்கள்.

KILLERGEE Devakottai said...

அருமை அம்மா சிறந்த கருத்துக்கள்.
காணொளிகள் அனைத்தும் கண்டேன்

Thulasidharan V Thillaiakathu said...

எல்லோருக்கும் வாழ்த்துகள். இறைவனின் அருள் துணையிருக்கட்டும்.

கீதா

மாதேவி said...

உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

டி என் ஏ ஜோதிடம் என்று இவர் சொல்கிறார்.
சில செய்திகளைக் கிரஹிக்க முடியவில்லை.
நம் காரியங்களுக்கு நாமே பொறுப்பு.
விதியைச் சொல்லிப் பயனில்லை
என்பதை உறுதியாகக் கூறுகிறார்.
எதிர்மறை செயல்கள், எண்ணங்கள் நம் வாழ்க்கையை
மாற்றி அமைக்கும். என்று கேட்கும்போது
கொஞ்சம் பயமாக இருக்கிறது.
பார்க்கலாம் மேலும் என்ன சொல்கிறார் என்று.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதிமா,
வாழ்க வளமுடன்.

தை மாத நல்ல நாட்கள் என்று நன்மையைக் கொடுக்கட்டும்.

நம் எண்ணங்கள் ,நம் குழந்தைகளை
நல்ல படியாக வாழவைக்க வேண்டும்.
எதிர்காலம் அமைதியாக ஆரோக்கிய நிறைவுடன்
இருக்க இறைவன் அருள வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவ கோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள் அப்பா. உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் மனம்
நிறை ஆசிகள்.

நல்ல மனங்களை எப்பொழுதும் வாழ்த்துவோம். இறைவன் என்றும் நம்முடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் வளமுடன் இருக்க ஆசிகள்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
எல்லாப் பதிவுகளுக்கும் வந்து
உங்கள் எண்ணங்களைப் பதிகிறீர்கள். மனம் நிறை
நன்றி மா. வளமுடன் வாழ்க.

Thulasidharan V Thillaiakathu said...

பின்னோக்கிப் பயணிக்காதே. முன்னால் வருவதை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்.
இதை எல்லாம் சொன்னது கூட என் அப்பாதான்.//

அருமையான வார்த்தைகள் அம்மா...இது அன்று சொல்லி கருத்து போகாமல் போய்விட்டது

கீதா