Blog Archive
Monday, February 27, 2023
Saturday, February 25, 2023
Thursday, February 23, 2023
Monday, February 13, 2023
காருகுறிச்சிமகிமை
வல்லிசிம்ஹன்வேம்பு மணியாச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையில் தன் வழக்கமான இடத்துக்குச் சென்று கூடையை இறக்கி வைத்தார்.
ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்துக்குச் சென்று சிறிய மேஜை ஒன்றைத்தூக்கிவந்துகூடைக்குஅருகில்வைத்தார்.மேஜையின்மேல் வெள்ளைத்துணியைவிரித்து,அதன்மேல்மந்தாரைஇலைகளைப் பரப்பினார்.அதன்பின்கூடையில்கொண்டுவந்திருந்தகடம்பூர்போளிகளை ஒவ்வொன்றாகஎடுத்துஇலைகளின்மேல்அடுக்கிவைத்தார்.அவர்வாய் முனகஅன்றுமோகனராகத்தைஎடுத்துக்கொண்டது.அத்தனை போளிகளையும்எடுத்துவைத்தவுடன்,வெறும்கூடையைஎடுத்துக் கொண்டு ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இன்னும் ரயில் வர அரைமணி இருந்தது. மோகனத்தின் தைவதத்தின் சௌந்தர்யத்தை வியந்தபடி அவர் நடக்கும் போது எதிரில் யாரோ வருவதுபோலத் தோன்றியது. வருபவர் வேம்புவை நோக்கி கையை ஆட்டிக்கொண்டிருந்தார்.
ஆள் நெருங்கியதும் வருபவர் பெரிய அருணாசலம் என்று தெரிந்தது. காருகுறிச்சி அருணாசலத்தின் உடன் பிறவா சகோதரர். இருவர் ஊரும் பெயரும் ஒன்று என்பதால் இவர் பெரிய அருணாசலம். இரண்டு அருணாசலங்களுக்கும் கடம்பூர் போளி என்றால் உயிர். அதிலும் வேம்பு கொண்டு வந்து விற்கும் போளி துணைக்கு வரும் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ரயிலில் செல்லத் தயாராக இருப்பார்கள். இவ்விருவரும் பழக்கிவிட்டதில் மொத்த நாகஸ்வரக் குழுவுமே இந்தப் போளிகளுக்கு அடிமை.
அருணாசலம் கச்சேரிக்காக ரயிலில் மணியாச்சி வழியாகச் செல்லும்போதெல்லாம் அவசர அவசரமாக ஒரு பையன் முதல் கிளாஸிலிருந்து ஓடி வருவான். அவனைப் பார்த்ததுமே இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கத் தொடங்குவார் வேம்பு. ஒவ்வொரு இலைகளிலும் பத்து போளிகள் இருக்கக்கூடும். அவன் வந்ததும் அவர் கைகளில் உள்ள இலைகளை அவன் கைக்கு மாற்றிவிட்டு. “ஓடுடே! ஓடுடே!”, என்று பையனை விரட்டுவார்.
ஒவ்வொரு முறை அவர் இப்படிச் செய்யும் போதும் போளி விற்றதில் வரும் அவருடைய அந்த வாரப் பங்கைத் தாரை வார்க்க நேரிடும். அவர் மனைவிசுந்தரி எப்படியும்இழுத்துப்பிடித்துச்சமாளித்துவிடுவாள் என்று அவருக்குத் தெரியும். சமாளிக்க முடியாவில்லை என்றாலும் அருணாசலத்திடம் பணம் கேட்கமாட்டார் வேம்பு. அவரைப் பொருத்தமட்டில் அந்த மண்ணின் பெருமையே அருணாசலம்தான். சங்கீதம் என்றாலே தஞ்சாவூர் ஜில்லா என்ற நிலையை மாற்ற திருநெல்வேலி ஜில்லாவில் அவதாரம்செய்தகந்தர்வன்அருணாசலம் என்பது அவர் துணிபு.
திருச்செந்தூர் பச்சைசாற்றி,திருக்குறுங்குடி உற்சவம், சுசீந்தரத்தில் ஆறாம் திருநாள் என்று அருணாசலம் வாசிக்கும் இடங்களில் எல்லாம் வேம்புவை நிச்சயம் பார்க்கலாம். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இவர் வந்தால் அருணாசலத்துக்குத் தெரிந்துவிடும். வேம்புவை அழைத்து முதல் வரிசையில் உட்காரச் சொல்லுவார். ’அந்த மரியாதைக்கு உயிரையே எழுதி வைக்கலாம். போளி எல்லாம் எம்மாத்திரம்?’ என்று நினைத்துப் புளகாங்கிதம் அடைவார் வேம்பு.
என்றுமில்லாத அதிசயமாய் இன்று ஏனோ ரயில் வராத வேளையில் பெரிய அருணாசலம் வந்திருக்கிறார்.
“இன்னிக்கு ராத்திரி ஒட்டபிடாரத்துல கச்சேரி. போற வழியில மணியாச்சி போர்டைப் பார்த்ததும் அவாளுக்கு உங்க ஞாபகம் வந்துச்சு. அதான் இங்க வந்தோம். கார் வெளியில நிக்கி.”
வேம்பு அவசர அவசரமாக ஐந்தாறு இலைகளில் போளியை எடுத்துக்கொண்டு சாலைக்கு ஓடினார்.
அவர் வருவதைப் பார்த்ததும் தன் ப்ளைமவுத் காரிலிருந்து இறங்கினார் அருணாசலம்.
“ஒட்டபிடாரத்துலகச்சேரினுதெரியாமப்போச்சே!ராத்திரிவந்துடுவேன்,” என்றபடி கைகளில் இருந்த போளிகளை நீட்டினார் வேம்பு.
“ஐயர்வாள்! நானும் மாசக்கணக்கா உங்ககிட்ட பேசணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பேசிடணும்னுதான் வந்திருக்கேன்,” என்றார் அருணாசலம்.
வேம்புவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் கைகள் இன்னும் இலைகளை நீட்டிக் கொண்டிருந்தன.அதை வாங்காமல்அருணாசலம் தொடர்ந்தார்.
“ஒவ்வொரு தடவை நம்ம பய வரும்போதும் நீங்க பாட்டுக்கு போளியைக் குடுத்துட்டு துரத்திவிட்டுறதீய, அவம் பணத்தை நீட்டக்கூட விடமாட்டீங்கீய-ங்கான். எப்பவோ ஒரு தடவைன்னா சரிங்கலாம். இதையே வழக்கமா வெச்சுகிட்டா ?”
வேம்பு லேசாகப் புன்னகைத்தார்.
“நீங்க காசு வாங்கலைன்னா இனிமேல் உங்க கிட்ட போளி வாங்கப் போறதில்லை”
வேம்பு புன்னகை மறையாமல் பேச ஆரம்பித்தார்.
“ஏ! நீ வாசிக்கற பைரவிக்கும், உசைனிக்கும் உலகத்தையே எழுதி வைக்கலாம். எனக்கு வக்கிருக்கிறது இந்தப் போளிக்குத்தான். மாசாமாசம் எங்கையாவது வாசிச்சுக் காதைக் குளிர வைக்கியே! அது போதாதா? பணம் வேற குடுக்கணுமாங்கேன்?”
“ என்ன சொன்னாலும் இன்னிக்கு எடுபடாது. பைசாவாங்கிகிட்டாத்தான் இனி உங்க கிட்ட போளி வாங்குவேன்”, என்று பிடிவாதம் பிடித்தார் அருணாசலம்.
”இப்ப நான் உன்கிட்ட எதாவது வாங்கிக்கணும். அவ்வளவுதானே?”
“ஆமா”“அப்ப எனக்கு பணம் வேண்டாம். வேற ஒண்ணு கேக்கேன்.”
“என்ன வேணும்னாலும் கேளுங்க”, என்று அவசரப்பட்டார் அருணாசலம்.
“யோசிச்சுட்டு சொல்லு. அப்புறம் முடியாதுனு சொல்லக் கூடாது” என்று குழந்தையுடன் பேரம் பேசுவது போலக் கேட்டார் வேம்பு.
“அதெல்லாம் யோசிச்சாச்சி! உங்களுக்கு வேணுங்கறதைச் சொல்லுங்க.”
“திருனேலி ஜில்லால ஓங் கச்சேரி நடக்காத ஊரே இல்லைங்காவோ. ஆனால் நீ வாசிக்க ஆரம்பிச்ச இந்த இருபத்தஞ்சு வருஷத்துல இந்த மணியாச்சியில மட்டும் உன் கச்சேரி நடக்கவே இல்லை. நான் பொறந்து வளர்ந்த ஊருல உன் நாகஸ்வரத்துல இருந்து ராகம் ஆறா ஓடணும். அது நடந்தாப் போதும். எனக்கு ஜென்ம சாபல்யம்தான்.”
இப்படி ஒரு வேண்டுகோளை அருணாசலம் எதிர்பார்க்கவில்லை.
“வாசிச்சுட்டாப் போச்சு. உங்க வீட்டுக்கே வந்து வாசிக்கறேன்”
”இல்லை! இல்லை!”, தலையைத் தீர்மானமாய் ஆட்டினார் வேம்பு.
அவர் மனக்கண் முன் பெரிய மேடையில் அருணாசலம் அமர்ந்து வாசிக்க ஆயிரக் கணக்கான ரசிகர் கூட்டம் பந்தலில் உட்கார்ந்து கேட்கும் காட்சி விரிந்துவிட்டது.
“சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு இந்த ஸ்டேஷன் பிள்ளையார் கோயில்ல நீ வாசிக்கணும்.” என்று சொல்லிவிட்டு கையில் இருந்த போளிகளை அருணாசலத்திடம் கொடுத்துவிட்டு திரும்ப நடைமேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் வேம்பு.
உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது வேம்புவுக்கு. “முட்டாப்பயலுவோ! மாணிக்கத்தைக் கையில வெச்சுக்கிட்டு அனுபவிக்கத் தெரியலையே இந்த மூதிகளுக்கு. எவ்வளவு கட்டியாண்டா என்ன? ஆபோகியில் மத்யமத்தைத் கம்மலா தொடும்போது வாய்விட்டு ‘ஆமாம்பா’-னு ரசிக்கத் தெரியாதவன் மனுஷனா?”, என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு நடந்தார்.
அடுத்த நாள் விழித்ததும்தான் தான் எடுத்துக் கொண்டுள்ள காரியத்தின் முழுப் பரிமாணம் அவருக்குப் புலப்படத் துவங்கியது.
அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபிமானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான். ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப்பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும். அருணாசலம் கச்சேரி என்றால் எத்தனையோ ஊரிலிருந்து பெரிய பிரமுகர்கள் வருவார்கள் – அவர்கள் உட்கார நாற்காலிகள் வாடகைக்கு எடுக்க வேண்டும். ஊரைக் கூட்டி சாப்பாடு போடாவிடினும், ஆளுக்கு ஒரு கை சுண்டலாவது பிரசாதமாகக் கொடுக்க வேண்டாமா?
இந்தச் செலவுகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போதே அவருக்குத் தலை சுற்றியது. இந்த வார போளிக் கணக்கை கடம்பூருக்குச் சென்று பைசல் செய்தால் கையில் முப்பதைந்து ரூபாய் மிஞ்சும். அதை வைத்து என்ன கச்சேரி நடத்துவது?
வேம்பு தனக்குத் தெரிந்த ஊர்காரர்களை சென்று சந்தித்து விஷயத்தைச் சொன்னார். இவர் கேட்பதற்கு உதவக் கூடிய ஊரென்றால் இது நாள் வரை அருணாசலம் கச்சேரி அங்கு நடக்காமலா இருந்திருக்கும்? பல இடங்களில் தம்படி கூடப் பெயரவில்லை. அருணாசலம் பெயருக்காக சிலர் அஞ்சும் பத்தும் கொடுத்தனர். மூன்று நாட்கள் அலைந்ததில் மொத்தம் நூற்றி ஐம்பது ரூபாய் தேறியது.
சதுர்த்திக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வேம்பு போளி விற்க ரயிலடிக்குப் போன நேரம் போக வசூல் விஷயமாக யாரையாவது சந்தித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு ஒன்றும் பெரியதாகத் தேறவில்லை.
’அருணாசலம் வேண்டாம் என்பதற்காக வெறும் தேங்காய் மூடியோடா அனுப்ப முடியும்? இன்னும் ஐந்நூறு ரூபாயாவது இருந்தால்தான் ஓஹோவென்று இல்லாவிடினும் ஓரளவவாவது ஒப்பேற்றமுடியும்,’ என்றுவெதும்பியபடிவீட்டுக்குள்நுழைந்தார்வேம்பு.
இரவுச் சாப்பாடு முடிந்ததும் வேம்புவின் மனைவி ஒரு கவரை எடுத்து வந்தாள். அதில் நானூறு ரூபாய் பணமிருந்தது.
“ஏதிந்தப் பணம்?” என்று வேம்பு கேட்டு முடிக்கும் முன்பே கழுத்தில் கட்டியிருந்த மஞ்சள் கயிரை எடுத்துக் காட்டினாள் சுந்தரி.
“என்ன சுந்தரி இப்படிப் பண்ணிட்ட? உன் கிட்ட இருந்த ஸ்வர்ணமே அதுதானே?அதைப்போய்வெக்கலாமா?”,என்று தழுதழுத்தார்வேம்பு.
“உதவிக்கு இல்லாத ஸ்வர்ணம் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? ஒரு வாரம நீங்கப் படற வேதனையை என்னால பார்க்கமுடியல.”, என்று சலனமேயில்லாமல் கூறினாள் சுந்தரி.
வேம்பு அவள் கைகளை இழுத்து விரல்களைக் கோர்த்துக்கொண்டார்.
சதுர்த்தியன்று மாலை ஆறு மணிக்கு அருணாசலம் காரில் வந்திறங்கினார். சற்றைக்கெல்லாம் பெரிய அருணாசலம், பெரும்பள்ளம் வெங்கடேசன், அம்பாசமுத்திரம் குழந்தைவேலு முதலான அவர் குழுவினர் பெரிய வண்டியில் வந்து இறங்கினர். வேம்பு அருணாசலத்தின் கையைப் பிடித்துக் கொண்டு பிள்ளையார் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். குருக்கள் அர்ச்சனை செய்த பின் மாலை முதலான மரியாதைகளை குழுவினருக்குச் செய்தார்.
பந்தலில் கூட்டம் அம்மியது. சங்கரன்கோயில், கழுகுமலை, களக்காடு, கடையநல்லூர், சுரண்டை, எட்டையபுரம், புளியங்குளம் என்று பல ஊர்களில் இருந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அருணாசலம் மேடையேறி உட்கார்ந்த போதே கரகோஷம் ஊரை நிறைத்தது. வேம்பு முதல் வரிசையில் அருணாசலத்துக்கு நேராக அமர்ந்து கொண்டார்.
அருணாசலம் கௌளையை கொஞ்சம் கோடிகாட்டிவிட்டு, ‘ப்ரணமாம்யஹம்’ வாசிக்கத் துவங்கினார். எடுத்துக் கொண்ட காலாப்ரமாணம் மின்னல்! புரவிப்பாய்ச்சலில் ஒலித்த தவில்சொற்கள் உந்தித்தள்ள கல்பனை ஸ்வரங்கள் மட்டும் பதினைந்து நிமிடங்களுக்கு பொறி பறந்தன. வேம்பு தன்னை மறந்து தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தார்.
பாடல் முடிந்ததும் வேம்பு ஒரு நிமிடம் தலையைச் சுழற்றி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால்கூட சுந்தரியின் தாலிக்கொடி தப்பியிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.
அருணாசலம் கர்நாடக பெஹாகை வாசிக்க ஆரம்பித்தார்.
“நேனெந்து வெதுகுதுரா”
”வெதுகுதுரா”-வில் அந்தக் குழைவு அவரை என்னமோ செய்தது. ‘உன்னை நான் எங்கப் போய் தேடுவேன்’ என்கிற வரியில் அலைந்து திரிந்து களைத்த அத்தனை சோர்வையும் குழைத்துச் சமைத்தது போல அந்த ‘வெதுகுதுரா’ ஒலிப்பது போல வேம்புவுக்குப்பட்டது.
“உண்மைதானே! என் குரலுக்கு அகப்படறவனா இருந்தா இப்படித் தாலிக் கொடியை வெச்சு இந்தக் கச்சேரி வெக்கற நிலைமைலையா என்ன வெச்சுருப்பான்?”
வேம்புவுக்கு கண்கள் கலங்கின. தலையைக் கவிழ்த்துக் கொண்டு துண்டை முகத்தில் பொற்றிக் கொண்டார். அருணாசலம் வாசிக்க வாசிக்க அவருக்கு கண்ணீர் பெருகியது. சில நிமிடங்கள் பொலபொலவென கண்ணீர் உதிர்த்தவுடன் அவர் மனத்திலிருந்து பெரும் பாரம் நீங்குவது போலத் தோன்றியது. அவர் கச்சேரியை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தார்.
அன்றைய பிரதான ராகம் கரஹரப்ரியா. தார ஸ்தாயியில் சஞ்சாரங்கள் ஆரம்பித்ததும் காலக் கடிகாரம் ஸ்தம்பித்துப் போனது. பெரிய பெரிய ஸ்வரச் சுழல்களை தன் அமானுஷ்ய மூச்சுக் காற்றின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாய் ஏவிக் கொண்டிருந்தார் அருணாசலம். ஒவ்வொரு சுழலும் ஒவ்வொரு புஷ்பம் போல விரிய, அந்தப் புஷ்பங்களை இணைக்கும் சிறு நூலாய் ஒலித்தது அவர் மூச்சை அவசரமாய் உள்ளுக்குள் இழுக்கும் ஒலி. ஆலாபனை நிறைவடைந்த போது பெருமாளின் விஸ்வரூபத்துக்குத் தொடுத்த மாலை அந்த காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருந்தது.
‘சக்கனி ராஜமார்கமு’அருணாசலம் கீர்த்தனை வாசிக்க ஆரம்பித்த போது வேம்புவுக்கு மனம் துலக்கிவிட்டது போல ஆகிவிட்டது. ஒவ்வொரு சங்கதிக்கும் ‘ஆமாம்பா! ஆமாம்பா!’ என்று வாயாரச் சொல்லிச் சொல்லி ரசித்தார் வேம்பு.கச்சேரி இன்னும் இரண்டு மணி நேரம் தொடர்ந்தபின் வேம்புவை அருகில் அழைத்தார் அருணாசலம்.
“நாளைக்கு ஈரோட்டிலே முகூர்த்தம். இப்ப கிளம்பினாத்தான் ரயிலைபிடிக்க முடியும். உத்தரவு கொடுக்கணும்”, என்று கையைக் கூப்பி வேண்டிக் கொண்டார்.
“ஆஹா! ஆஹா!” என்றபடி அருணாசலத்தின் விரல்களைப் பற்றிக் கொண்டார் வேம்பு. அவருக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் எழவில்லை.
பிள்ளையாருக்கு தீபாராதனை ஆனதும் மங்களம் வாசித்து கச்சேரியை முடித்தார் அருணாசலம்.
வாத்தியங்களை சிஷ்யர்கள் கட்டிக் கொண்டிருந்த போது மேடையில் பிரமுகர்களும் ரசிகர்களும் அருணாசலத்தை மொய்த்துக் கொண்டனர். வேம்பு ஐயர் மேடைக்கு கீழே காத்துக் கொண்டிருந்தார்.
ஒருவழியாய் மேடையிலிருந்து இறங்கிய கலைஞர்கள் அவசர அவசரமாக ரயிலடிக்குள் புகுந்தனர். முதல் கிளாஸ் பெட்டி வருமிடத்தில் சந்திர விலாஸிலிருந்து சாப்பாட்டுடன் ஓட்டல் பையனொருவன் தயாராக நின்றிருந்தான்.அருணாசலம் வருவதற்கு காத்திருந்தது போல் வண்டி நடைமேடைக்கு வந்தது.
ரயிலில் ஏறி ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டார் அருணாசலம். ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருந்தார் வேம்பு.
“ஐயர்வாள்! திருப்திதானே?”,என்று கேட்டார் அருணாசலம்.
“இப்பவே எமன் வந்தா சந்தோஷமா செத்துப் போவேன்!”, என்றபடி ஒரு பையை நீட்டினார் வேம்பு.
துணிப்பைக்குள் பழங்கள், பூ முதலான பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றுக்கடியில் ஒரு சிறிய கவரில் நூறு ரூபாய் பணத்தை வைத்திருந்தார் வேம்பு. வண்டி ஏறியதும் கொடுத்தால் அதை அருணாசலம் பார்த்து மறுக்க வாய்ப்பு ஏற்படாது என்பது அவர் எண்ணம்.
அருணாசலம் அந்தப் பையை வாங்கி இருக்கையில் வைத்துக் கொண்டார்.வண்டி கிளம்ப ஆயத்தமானது.
”ஐயர்வாள்! நான் நேற்றைக்கு திருச்செந்தூர் போயிருந்தேன். உங்களுக்குப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்”,என்று சிறு பையை எடுத்து வேம்புவிடம் கொடுத்தார்.
வேம்பு வாங்கிக் கொண்டதும் வண்டி நகர ஆரம்பித்தது. கைகளை அந்தப் பையுடன் சேர்த்துக் கூப்பி அருணாசலத்துக்கு விடை கொடுத்தார்.வண்டி கண்ணை விட்டு நீங்கியதும் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.நடந்தபடி கையிலுள்ள பையைப் பிரித்துப் பார்த்தார். திருச்செந்தூர் இலை விபூதி கண்ணில் பட்டது. அதைப் பிரித்து நெற்றியில் இட்டுக்கொள்ள நினைத்து கையைப் பைக்குள் விட்டார் வேம்பு.
அவர் விரல்கள் சில்லென்று எதையோ ஸ்பரிசித்தன.
அந்தப் பொருளை வெளியில் எடுத்துப் பார்த்தார் வேம்பு.
சுந்தரியின் தாலிக்கொடி அவர் கண்முன் ஆடியது.
By Smt Lalitha Ramachandran
Sunday, February 12, 2023
கண்ணும் கண்ணும் கொள்ளை.....:)
வல்லிசிம்ஹன்
முதுமையும் கண் பிரச்சினைகளும்.
கண் ணில் வைத்தியம் முடிந்து கறுப்புக் கண்ணாடியும் நானுமாக ஒருநாள் வீட்டுப் பலசரக்குப் பொருட்கள் வாங்கப் போயிருந்தோம்.
கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் பழக்கம்
காரண்மாக வேண்டும் என்ற பொருட்களைத் தள்ளுவண்டியில்
போட்டுக் கொண்டு எண்ணெய் பாக்கெட்டை எடுக்க நிற்கும் போது
திடீரென்று பின்னால் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
எவ்வளவு நாள்;ஆச்சு?''
திரும்பிப் பார்த்தால் ஒரு மூதாட்டி.அதாவது என்னை விடக் கொஞ்சம் வயதானவர்.
'எதுக்குக் கேட்கறேன்னால் நானும் செய்துக்கணும். 35 ஆயிரம் லென்ஸ் மட்டும் ஆகணும் என்கிறான் என் அண்ணா பையன்.
அந்த லென்ஸ் பேர் என்னடா. கூகிள்ள தேடிக்கறேன்னு சொன்னால் ,பெயர் சொல்ல மாட்டேன் என்கிறான்.''
எனக்குத் தலை கால் புரியவில்லை.
நம்மைக் கூட மதித்து ஒரு அம்மா கேட்கிறாரேன்னு சந்தோஷம்.:0)
என்ன தெரியணும் உங்களுக்கு?
என் வைத்தியர் சொல்லும் லென்ஸ் அந்த விலைதானா.
அதற்கு உண்மையான பேர் என்ன.
அதுபோட்டால் என் கண் புரை விலகி ப் பார்வை விளங்குமா.
எனக்கோ படு உத்சாகம்.
'அதிலென்ன சந்தேகம் அம்மா. கண் நன்றாகத்தெரியும்.
அதைக் கேக்கலை....
??????
இந்ட்ரா அக்குலர் லென்ஸ் எத்தனை வகைப்படும்.
நான் பணம் கொடுக்கப் போகிற லென்ஸைத்தான்
வைத்தியர் பொருத்துவார் என்று என்ன நிச்சயம்?
ஆஹா மாட்டிக்கிட்டயா மஹாதேவி; அப்டீன்னு ஒரு குரல் .என் மனசுதான்.
உங்க டாக்டர் யார்.
ஸோ அண்ட் ஸொ. உங்களுக்கு அவரைத் தெரியுமா?
நான் விழித்தேன். எனக்கு தெரிந்த வைத்தியர்கள் எலும்பு முறிவுக்காரர்களும்,
டயபெடிஸ் மருத்துவர்களும் தான்.
''இல்லமா எனக்கு அவரைத் தெரியாது.'
ஓ ஊருக்குப் புதுsuபோல நீங்கள்.
எங்க டாக்டர் என்னை 35 வருஷங்களாப் பார்த்துக் கொண்டு வருகிறார்.''
''அப்புறம் என்ன அவரை நீங்கள் நம்பலாமே''
உங்களுக்கு யார் வைத்தியம் செய்தது?
'தெரிந்த டாக்டர் தான்.
''
நீங்கள் உங்கள் லென்ஸ் செக் செய்தீர்களா''
சொன்ன விலையைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்''
''உடனே அந்த அம்மா புலம்ப ஆரம்பித்தார்.
ஓ! உங்கள் பிள்ளைகள் இருப்பார்கள். மருமகள் இருப்பாள். கணவர் பார்த்துக் கொள்வார்,.'
எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. பிள்ளைகளும் கிடையாது(!)
உங்களுக்குக் கண்ணில் மருந்து போட உங்கள் கணவர் வருவார்.
சமையலைப் பார்க்க மருமகள் இருப்பார்''
என்னைச் சொல்லுங்கள். பணத்தை யாராவது பறித்துக் கொள்வார்களோ என்ற
பயத்தைத் தவிர வேற என்ன இருக்கிறது.என்று சொன்னவர் அழ ஆரம்பித்துவிட்டார்.
ஐய்யோ சாமி இது என்னடான்னு கவலையாகி விட்டது. இதற்கு நடுவில் சிங்கம் வேற உள்ள வந்து "என்ன 'லேடி எம்ஜியார்''(கறுப்புக் கண்ணாடி மஹிமை)
ஒரு கடுகு புளி வாங்க இவ்வளவு நேரமா' ''என்றபடி அருகே வந்தார்.
என்பக்கத்தில் அழும் பெண்ணைப் பார்த்து
என்னைச் சந்தேகமாப் பார்த்தார்.
''என்ன செய்த. இப்படி இந்த ஓல்ட் வுமன் அழறாங்களே''''
நான் அம்மாவை அங்கிருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னேன்.
கடையிலிருந்த பெண்ணிடம் ,கொஞ்சம் தண்ணீர் வாங்கி அவரைக் குடிக்கச் சொல்லி
என் புராணத்தைச் சொன்னேன்.
;;அம்மா, எங்கள் குழந்தைகள் இங்கே இல்லை.
வெளியூரில் இருக்காங்க.
கண் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள மருத்துவமனையிலேயே கற்றுக் கொண்டேன்.
ஒரு பதினைந்து நாட்களுக்கு ஒரு அம்மா எங்களுக்குச் சப்பாத்தியும், காய்கறிகளும் செய்து தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்''
உங்களாலும் முடியும்.
உங்கள் வைத்தியரை நம்புங்கள்.
தெய்வத்தை நம்புங்கள்'
கண் சரியாகிவிடும்.
வைத்தியரிடமே ஒரு உதவியாளரை உங்கள் வீட்டுக்கு அனுப்பச் சொல்லி நான்கு நாட்களுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
என்றதும் ஒருவாறு தேறினார்.
என் விலாசத்தைக் கேட்டார். பக்கத்தில் உறுமல் ( Singam)சத்தம் கேட்கவே ''இங்க பக்கத்தில் தாம்மா இருக்கேன்.
அப்புறம் பார்க்கிறேன்,'' என்றவாறு வெளியே வந்தேன்.
பின்னால் அந்தப் பெண்ணின் குரல் ''வரவங்க, போறவங்க உதவியா செய்வார்கள்!! வாய்வார்த்தைக்கே வழியில்லாமல் போச்செ'கலிகாலம்!!!
என்று தன்னோடு உதவிக்கு வந்திருக்கும் பெண்ணோடு உள்ள போய் ரைஸ் ப்ரான் ஆயில் எடுத்து வைம்மா'
என்று கட்டளையிட்டார்..
எனக்கே என் கண்ணில் வைக்கப்பட்ட லென்ஸ் நான் சொன்ன லென்ஸ்தானா'என்ற சந்தேகம் வந்துவிட்டது:(
எதாக இருந்தால் என்ன. நம்பிக்கை இல்லாமல் வைத்தியம் கிடையாது.
நம்பிவிட்டால் சந்தேகம் கூடாது'
இப்படி உறுதி செய்து கொண்டேன்.:)
Thursday, February 09, 2023
Tuesday, February 07, 2023
Maurice Jarre - Dr. Zhivago 'Lara's Theme' இசை கேட்டால்..
பல விதங்களில் நாம் கடந்த தருணங்களை
நினைக்கிறோம்.
இசை அதில் ஒரு பெரிய காரணி.
இங்கே சிங்கத்துக்குப் பிடித்த பாடல்களைப்
பகிர்வதில்,
அசை போடுவதில்
ஒரு அஞ்சலி.
இந்தப் பனி சூழ்ந்த காலம் உறவுகளின் மேன்மையை
உணர்த்துகிறது.
அன்பையும் ,பாசத்தையும், நட்பையும் கொண்டாடுவோம்.
அனைவரும் வளமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Somewhere my love there will be songs to sing
Although the snow covers the hope of Spring
Somewhere a hill blossoms in green and gold
And there are dreams, all that your heart can hold
Someday we'll meet again, my love
Someday whenever the Spring breaks through
You'll come to me, out of the long-ago
Warm as the wind, soft as the kiss of snow
Lara, my own, think of me now and then
Godspeed, my love, till you are mine again
Warm as the wind, soft as the kiss of snow
Godspeed, my love, till you are mine again.
Monday, February 06, 2023
அழகன், குமரன், கந்தன், ...............................
வல்லிசிம்ஹன்
கோவில்
கதிர்காமம் கோயில் (Kataragama temple,) இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது தமிழர்கள், சிங்களர், சோனகர் மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் வழிபடப்படுகிறது.
இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் தமிழ் இந்துக்கள் இந்த இடத்தை கதிர்காமம் என்று குறிப்பிடுகின்றனர். கதிர்காமன் சைவக் கடவுளான முருகனுடன் தொடர்புடைய பெயராகும். தென்னிந்தியாவின் சைவ இந்துக்கள் இவரை சுப்ரமண்யர் என்றும் அழைக்கிறார்கள். இவர் கந்தசாமி, கதிரதேவன், கதிரவேல், கார்த்திகேயன், தாரகாசிதன் என்று அழைக்கப்படுகிறார். இந்த பெயர்களில் சில கதிர்காமத்திலிருந்து வேரான கதிரிலிருந்து பெறப்பட்டவை. "கதிர்" என்றால் உருவமற்ற ஒளி எனப்பொருள். தெய்வம் ஆறு முகங்கள் மற்றும் பன்னிரண்டு கைகள் அல்லது ஒரு முகம் மற்றும் நான்கு கைகளால் சித்தரிக்கப்பட்டுள்ளது. முருகன் மீதான அன்பின் காரணமாகவும், வினைப்பயன்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் தம் கன்னங்களிலும், நாக்கிலும் கூரிய வேல்களால் குத்திக் கொண்டு, முருகன் சிலையைச் சுமந்து செல்லும் பெரிய தேர்களை பெரிய கொக்கிகள் கொண்டு முதுகின் தோலால் துளைத்துக் கொள்வார்கள். இந்த நடைமுறை அலகு குத்துதல் (காவடி) என்று அழைக்கப்படுகிறது.
இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் தமிழ் இந்துக்கள் இந்த இடத்தை கதிர்காமம் என்று குறிப்பிடுகின்றனர். கதிர்காமன் சைவக் கடவுளான முருகனுடன் தொடர்புடைய பெயராகும். தென்னிந்தியாவின் சைவ இந்துக்கள் இவரை சுப்ரமண்யர் என்றும் அழைக்கிறார்கள். இவர் கந்தசாமி, கதிரதேவன், கதிரவேல், கார்த்திகேயன், தாரகாசிதன் என்று அழைக்கப்படுகிறார். இந்த பெயர்களில் சில கதிர்காமத்திலிருந்து வேரான கதிரிலிருந்து பெறப்பட்டவை. "கதிர்" என்றால் உருவமற்ற ஒளி எனப்பொருள். தெய்வம் ஆறு முகங்கள் மற்றும் பன்னிரண்டு கைகள் அல்லது ஒரு முகம் மற்றும் நான்கு கைகளால் சித்தரிக்கப்பட்டுள்ளது. முருகன் மீதான அன்பின் காரணமாகவும், வினைப்பயன்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் தம் கன்னங்களிலும், நாக்கிலும் கூரிய வேல்களால் குத்திக் கொண்டு, முருகன் சிலையைச் சுமந்து செல்லும் பெரிய தேர்களை பெரிய கொக்கிகள் கொண்டு முதுகின் தோலால் துளைத்துக் கொள்வார்கள். இந்த நடைமுறை அலகு குத்துதல் (காவடி) என்று அழைக்கப்படுகிறது.
அழகன், குமரன், கந்தன், கடம்பன், கார்த்திகேயன், கதிர்வேலன், கதிர்காமன் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தமிழ்க்கடவுள் முருகனுக்கு மிகவும் உகந்த நாள் தைப்பூசம். மாதம்தோறும் வரும் பூசம் சிறப்புதான் என்றாலும் தைப்பூச நாளுக்குத் தனிச்சிறப்பு உண்டு. சூரியன் வட திசைப் பயணம் முடித்து, தென் திசைப் பயணம் தொடங்கும் உத்தராயன காலத்தின் தொடக்கமான தை மாதத்தில் வரும் முதல் பூசம்..
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியின் அம்பாந்தோட்டையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கதிர்காமம். வேட்டுவ குலப் பெண்ணான வள்ளியை காதலித்துக் கரம் பிடித்த இடமாகச் சொல்லப்படுகிறது. கதிர்காமம் முருகன் கோயிலில் சிங்களர்களும் வழிபடுகிறார்கள்.வைகாசி விசாகத்தில், சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளிலிருந்து அவதரித்த முருகக் கடவுள்.
கார்த்திகை மாதத்தில் அன்னை சக்தியின் அணைப்பால் ஒருவராகி, தைப்பூசத்தில் தன் அன்னையிடம் வேல்வாங்கி( புராணத்தில் பார்வதி என்றும், சில சங்க இலக்கிய நூல்களில் கொற்றவை என்றும் சொல்லப்படுகிறது) ஐப்பசி சஷ்டியில் அசுரனை அழித்து, பங்குனி உத்திரத்தில் வள்ளியை மணம் முடித்தான் நம் வேலன்.
இந்தத் தைப்பூச நன்னாளில் முருகப்பெருமானுடைய வேலின் ஒளியாகத் திகழும் கதிர்காமத்தில் இருக்கும் கந்தக் கடவுளின் திருக்கோயிலை தரிசிப்போமே...
முருகன் வள்ளியைச் சந்தித்து காதல் கொண்டு, கரம் பற்றிய இடம் தொண்டை மண்டலத்தில் உள்ள வள்ளிமலை என்றுதான் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஈழத்தமிழர்களின் நம்பிக்கையோ வேறு மாதிரியாக இருக்கிறது.
'முருகன் பிறந்தது வேண்டுமானால் தமிழ்நாட்டில் இருக்கலாம். ஆனால், மணம் முடித்தது கதிர்காமத்தில்தான். எனவே, முருகன் ஈழத்து மாப்பிள்ளை' என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.
கதிர் என்றால் ஒளி; காம என்பது கிராமத்தின் திரிபு. வேலவனின் வேலின் ஒளியாகத் திகழும் கிராமம்தான் கதிர்காமம்.
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியின் அம்பாந்தோட்டையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கதிர்காமம். வேட்டுவ குலப் பெண்ணான வள்ளியை காதலித்துக் கரம் பிடித்த இடமாகச் சொல்லப்படுகிறது. கதிர்காமம் முருகன் கோயிலில் சிங்களர்களும் வழிபடுகிறார்கள்.
அருணகிரிநாதர் " வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே" என்று பாடியிருக்கிறார்.
Sunday, February 05, 2023
Friday, February 03, 2023
மதுரை நம் மதுரை+++++திருமண நாள்
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத
இடம் தேடும் மனம் என்ன செய்தால் அடங்கும்>
பயணப் பட வேண்டியதுதான்.
மானசீகமாகப் போக ஒரு தடையும் இல்லையே!!!!
அனைவரும் வளமாக வாழ வேண்டும்.
பின்னோக்கிப் பயணிக்காதே. முன்னால் வருவதை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்.
இதை எல்லாம் சொன்னது கூட என் அப்பாதான்.
அவர் வார்த்தைகளை அவரது மறைவு நாளில்
நினைவு கொள்வதை அவரின் சொல்லுக்கு
எதிர்மறையாக நான் நினைக்கவில்லை.
முன்னோர்களை நன்றியுடன் நினைப்பதற்காகவே
அமாவாசை வருகிறது .வருஷந்தோறும்
திதி கொடுக்கிறோம்.
இதோ இங்கே எழுதிக் கொண்டிருக்கும் எழுத்து
அப்பாவின் கொடை. என் மணவாழ்க்கை,
எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அவரது பங்களிப்பு,
உழைப்பு எல்லாவற்றுக்கும் இன்னோரு பிறவி எடுத்தாவது
பதில் சொல்ல வேண்டும்,.
இணையத்தில் கர்மா,அதன் பலன் என்று அதிக செய்திகளைக்
கேட்கும் போது, நாம் தீர்மானித்துத்தான் இந்தப் பெற்றோருக்குப்
பிறக்கிறோம். நம் துணையைத் தேர்ந்தெடுக்கிறோம்
என்ற கருத்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்
படுகிறது.
இதுதான் உனக்குக் கல்வி, இதுதான் உன் மண வாழ்க்கை,
இவர்கள் தான் உன் புத்திரச் செல்வங்கள்
என்று கடவுள் நமக்குச் சொல்வதை
நம்புகிறேன்.
தை மாதத் திருமணங்கள் என்று பார்க்கும்போது,
எங்கள் ,திருமணம், திருமதி கோமதி அரசு அவர்களின் திருமண நாள்,
அம்மாவின் பிறந்த நாள், எங்கள் மகன்கள், மகள்
என்று அனைவரின் மண நாட்களும் வருகின்றன.
அனைவரும் மிக மிக அருமையான நலங்களைப் பெற வேண்டும்.
நோயில்லா வாழ்வும், மகிழ்ச்சித் தருணங்களும்
இறைவன் அருள வேண்டும்.
வாழ்த்துகள்.
Subscribe to:
Posts (Atom)