Blog Archive

Saturday, January 28, 2023

மனதைத் தொடும் சில ராகங்கள்


வல்லிசிம்ஹன்

எல்லா நேரங்களிலும் மனதை அமைதியாக
 வைத்துக் கொள்வது மிக மிக அசாத்தியமான விஷயம்.

உடலின் சங்கடங்கள் , மனதின் கவலைகள்
சூழும்  வெப்ப தட்ப நிலை
என்று பலப் பல காரணங்கள்.

நம்மூரில் 24 மணி நேரமும் கேட்கும் சாலை ஓசைகள்.
வந்து போகும் மனிதக் குரல்கள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
என்னை அவ்வளவாகப் பாதித்ததில்லை.
என்னுடைய  நல்ல உறக்கத்துக்கு அவை
ஏதுவாகக் கூட இருந்திருக்கின்றன.:)

இங்கோ வெளியே சத்தம் இல்லை.
குளிர் வேளையில் வீதி நடமாட்டம் கூட இல்லை.
உறைந்த பனியில் தங்கள் செல்லங்களை நடைக்கு
அழைத்துச் செல்லும்  அம்மாக்களும், அப்பாக்களையும் அடையாளம் தெரிவதில்லை.
கண் மட்டும் தெரியும் படி  சிரம் முதல் பாதம் வரை மூடிய கம்பளி
உடைகள்.
தனிமை பழகி விட்டது.
சமைப்பது ஒரு வரமாகி விட்டது.
ஓயாமல் நான் இருக்கிறேன் என்பதை நினைவூட்டும்
வலிகள். 
அதை மறக்க வைக்கும் அன்பு விசாரிப்புகள்.

எல்லாமே சரியாகி இதுவும் கடந்து போகும்.

ஆகக் கூடி நம்மை உயிர்ப்பிப்பது யூடியூபும்
அதில் கேட்கும் இசையும் தான்.
அவற்றில் சிலவற்றை இங்கே பதிகிறேன்.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.



வராஹ ரூபம் பாடலைத் தினம் இரு தடவை கேட்கிறேன்.
கடவுள் ஏதாவது ரூபத்தில் நம்முடன் இருப்பார் என்பதற்கு

இந்தப் பாடல் ஒரு உதாரணம்.


வலைப் பதிவுகளைப் படிக்காமல் இத்தனை
நாட்களைக் கழிப்பது இதுவே முதல் தடவை.

என்னை எழுத வைத்தது ஒரு நிகழ்வு என்றால்

அதற்கு அப்புறம் எழுதியதால் நான் இருக்கிறேன் 
என்று குரல் கொடுக்கவோ, இல்லை பதிய வைக்கவோ செய்த
முயற்சியாக இருந்திருக்கிறது. 
நட்புகளைச் சேர்த்து வைத்தது.
இன்று பதிவிட்ட பிறகு பதில் பின்னூட்டம் இடுவதே
பெரிய முயற்சியாக இருக்கிறது.
அனைவரும் மன்னிக்க வேண்டும்.

மீளலாம்.நன்றி.




13 comments:

நெல்லைத்தமிழன் said...

உங்க பதிவுகள் எப்போதுமே மிகவும் ரசிக்கும்படி இருக்கும்.

காந்தாரா படம் இருமுறை தியேட்டரிலும், முதல் அரை மணி, கடைசி அரை மணி என இரண்டு முறைகளுக்குமேல் ஓடிடியிலும் பார்த்தேன். அந்தப் படம் எழுப்பும் உணர்வும், பாடல் மற்றும் அதற்கான நடிப்பு, ஆட்டம் என் மனதை என்னவோ செய்யும்.

சீர்காழிக்கு மைக் தேவையில்லாத சுமை. அவர் மாதிரி கணீர் குரல் யாருக்கு வாய்க்கும்? சில வருடங்களுக்கு முன் முத்துச்சிற்பியை ரசித,தேன் - சூப்பர் சிங்கர்

மாமியார் மெச்சிய- பாடலைக் கேட்டதில்லை

உங்களுக்கு என்றும் நலமே விளையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளி மா. மிக நன்றி. எப்பவும் சௌக்கியமா இருக்க வேண்டும். எனக்கும் காந்தார அவ்வளவு பிடித்து விட்டது. அந்த இசை அந்த மிகச் சிறந்த முக.பாவங்கள் எல்லாமே மனதை மிக நெ
கிழச் செய்தன. நன்றி மா.

மாதேவி said...

மனதுக்கு இனிய இசை கேட்பது உற்சாகத்தை தரும் . எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா, காந்தாரா படம் பார்க்கவில்லை ஆனால் இந்த வராக ரூபம் பாட்டு கேட்டு ரசித்த பாடல். அதன் ஒரிஜினல் இசை மலையாளத்தில் ஆல்பம் ஒன்றில் வந்த பாடலும் அருமையா இருக்கும்...அந்த ஆல்பம் சொல்லும் கதை மனதை என்னவோ செய்துவிடும்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் வலிகள் எல்லாம் விரைவில் சரியாகி நன்றாகிவிடும். உங்களை முதல்ல பார்த்துக்கோங்கம்மா அது போதும். வலைக்கு அப்புறம் வரலாம்.

நீங்கள் இங்க பகிர்ந்திருக்கும் பாடல்களில் மாமியார் மெச்சிய பாடல் கேட்டதில்லை. சர்ச் பெல்ஸ் மற்றும் கோயில் மணி ரொம்ப இதம்....சீர்காழி பத்தி சொல்லணுமா!!! ரசிக்கும் பாடல்

கீதா

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்லியுள்ள சுற்றுப்புறச் சூழ்நிலைகள் நன்றாய் புரிகின்றன. என்னுடைய 25 ஆம் வயதில் எனக்கு முடிஸ் எஸ்டேட்டில் வேலை கிடைத்தது.  அரசு வேலைக்கு இணையான சம்பளம், தனி பங்களா, உதவிக்கு இரண்டு பணியாளர்கள்..   பாதி விலைக்கு மளிகை, அரிசி என்று சலுகைகள்..  ஆனால் நான் அதை மறுத்து விட்டு மதுரை ஓடிவந்தததற்கு காரணம் இரண்டு.  அந்த ஊர்களின் அமைதி என் மனதில் அலறலாக இருந்தது.  என்னால் தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.  இரண்டாவது...  ஹிஹிஹி..  அதைச் சொல்ல வேண்டுமா?

கோமதி அரசு said...

வணக்க்ம் அக்கா, வாழ்க வளமுடன்
நீங்கள் சொல்வது சரியே.
எல்லா நேரங்களிலும் மனதை அமைதியாக வைத்துக் கொள்வது மிக மிக அசத்தியமான விஷயம் தான்.


//உடலின் சங்கடங்கள் , மனதின் கவலைகள்
சூழும் வெப்ப தட்ப நிலை
என்று பலப் பல காரணங்கள்.//

பல காரணங்கள் நம்மை அலைகழித்தாலும் குழந்தைகள் முகம் பார்த்து கடக்க முயல்வோம்.

//ஓயாமல் நான் இருக்கிறேன் என்பதை நினைவூட்டும்
வலிகள்.
அதை மறக்க வைக்கும் அன்பு விசாரிப்புகள்.

எல்லாமே சரியாகி இதுவும் கடந்து போகும்//

முடிந்த போது தொடர்பில் இருங்கள் அக்கா. நம் வலிகளை மறக்க வைக்கும்.

இதுவும் கடந்து போகும் கடப்போம்.

பாடல்கல் பகிர்வு அருமை. முதல் படம் பார்த்தேன். இந்த பாட்டும் நடனமும் மெய்சிலிர்க்க வைத்தது.

மற்ற பாடல்கள் எல்லாம் அருமை.

கோமதி அரசு said...

பெல் சத்தம் மிகவும் பிடிக்கும். கேட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி.
என்றும் நலமுடன் இருங்கள் அம்மா.
நட்புகளின் நல்ல வார்த்தைகளும் நல் ஒசயைப் போன்றதுதான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா மா,
எப்பவும் நலமாக இருக்கணும்.
மலையாளத்திலும் இந்தப் பாடல் இருக்கா.

ஏனோ இந்தப் பாடல் கேட்டால்
மனம் இளகிக் கண்ணீர் வருகிறது.
சம்சாரம் விலகி நாம் கிளம்பிவிடலாம் என்றும் தோன்றுகிறது.
நல்ல படம். நல்ல நடிப்பு,நல்ல இசை.
நீங்களும் ரசித்ததில் மிக மிக சந்தோஷம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

@Geetha Rengan

உங்கள் வலிகள் எல்லாம் விரைவில் சரியாகி நன்றாகிவிடும். உங்களை முதல்ல பார்த்துக்கோங்கம்மா அது போதும். வலைக்கு அப்புறம் வரலாம்.''

Thank you ma.

வல்லிசிம்ஹன் said...

Dear Sriram,

God Bless.
என்று சலுகைகள்.. ஆனால் நான் அதை மறுத்து விட்டு மதுரை ஓடிவந்தததற்கு காரணம் இரண்டு. அந்த ஊர்களின் அமைதி என் மனதில் அலறலாக இருந்தது. என்னால் தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. இரண்டாவது... ஹிஹிஹி.. அதைச் சொல்ல வேண்டுமா?'''''''''''''''''''''''''''

ஓஹோ. வலிமையான காந்தம் மதுரையில் இருந்திருக்கிறது.
சரிதான் நன்றாகப் புரிகிறது.
திரும்பி வரும் தைரியத்தை அதுதான் கொடுத்திருக்கும்.
மனசுக்கு ரொம்ப சந்தோஷம் ஸ்ரீராம்.
வாழ்வின் மலைப்பான கட்டங்களைத் தாண்டி வருவது இறைவன் அருளால்
சாத்தியமாகும்.
நன்றிமா. என்றும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன் தங்கச்சி.

;;வணக்க்ம் அக்கா, வாழ்க வளமுடன்
நீங்கள் சொல்வது சரியே.
எல்லா நேரங்களிலும் மனதை அமைதியாக வைத்துக் கொள்வது மிக மிக அசத்தியமான விஷயம் தான்''

உண்மை. எல்லா செயல்களும் பிரம்மப் பிரயத்தனம்
ஆகின்றது.
சமாளிக்க முயற்சிக்கிறேன்.
நீங்களும் உடல் நலம் பேணி சுகமாக இருக்க வேண்டும்.
நன்றி மா.