Blog Archive

Thursday, October 06, 2022

அம்பாள் வெற்றிவிழா............1

வல்லிசிம்ஹன்

 எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

அம்பாள் வெற்றி அடைந்து அசுரர்களை 
அழித்து விழாவும் கொண்டாடி விட்டோம்.

மங்கையர் கூடி மகிழும் நவராத்திரி நாட்கள், அதுவும் மூன்று 
வருடங்களாக அடை பட்டுக் கிடந்தவர்கள்
இப்பொழுது மீண்டு வந்து நேரே பார்த்து பேசிக் கொள்வது
பெரிய நிகழ்வாக நடந்தது.
இத்தனை நாட்களாக நடந்த கோவிட் யுத்தத்தை
அதன் மன அழுத்தத்தை விடுவித்து

இந்த ஊர் அம்மாக்களும் பெண்களும், கணவர்களும்
வந்தார்கள்.
தோழியின் அம்மா என்று கொலு முதல் படியில் என்னை
வைத்து அவர்கள் அன்பு காட்டியது மறக்க முடியவில்லை.

பல கொலுக்களின் படங்களைப் பதிய வேண்டும்.

அட்டகாச கொலுப் பொம்மைகள்.
அதை ஆக்கிப் படைத்த அழகு.
மனமார்ந்த உபசரிப்பு. தாம்பூலம் அளித்த அருமை.

எல்லாவற்றையும் முடிந்த வரையில் பகிர்ந்து
கொள்கிறேன்.


 Friend's  Golu  beginning.
Golu Chennai 2013


 சிரிப்பும் களிப்பும் 




16 comments:

ஸ்ரீராம். said...

மீண்டும் பழைய உற்சாகம் திரும்பிக் கொண்டிருப்பது கண்டு மகிழ்ச்சி. மாஸ்க் போடா உலகம் மறுபடி திறக்கிறது. ஹிந்தி தெரியாது போடா மாதிரி மாஸ்க் வேணாம் போடா என்று சொல்லும் நாள் அருகில் வந்து விட்டது. கூடி மகிழ்வோம். ஆனாலும் கொஞ்சம் விலகியே எச்சரிக்கையாகவும் இருப்போம்!!! ஹிஹிஹிஹி...

கோமதி அரசு said...

நவராத்திரி கொலு படங்கள் அருமை.
நீங்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சி.
பழைய கொலு படங்களும், இப்போது இருக்கும் ஊரின் கொலுவும் அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை

KILLERGEE Devakottai said...

அழகிய படங்கள் அம்மா தரிசனம் நன்று.

Geetha Sambasivam said...

கொலு எல்லாம் மிக நன்றாய் வைச்சிருக்காங்க. இந்த வருஷம் எங்க பெண்ணும் சரஸ்வதி பூஜை அன்று மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் சிலரைக் கூப்பிட்டு வெற்றிலை, பாக்குக் கொடுத்ததாகச் சொன்னாள். நான் போன வருஷம் கூட எப்படியோ ஒப்பேத்தினேன். இந்த வருஷம் படு சொதப்பல். சுண்டல் எல்லாம் பண்ணி செக்யூரிடிக்குக் கொடுத்தோம். அவங்களுக்கு எல்லாம் மயக்கமே வந்துடுத்து. சுண்டலைப் பத்திரப்படுத்திக் கொண்டு வைச்சுச் சாப்பிட்டோம் என்றார்கள். :)))))

Thulasidharan V Thillaiakathu said...

கொலு சூப்பரா இருக்கு அம்மா. ஆமாம் கோவிட் காலம் முடிந்து இப்போது எல்லோரும் நேரில் பார்த்துக் கொள்வது மகிழ்ச்சிதான்.

நட்புகளின் கொலு பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

ஆஞ்சு மனதை ஈர்க்கிறார்!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உங்களின் உற்சாகமும் தெரிகிறது!!!

மாஸ்க் அணிய வேண்டாம் என்றாலும் நாம் எச்சரிக்கையாகவே இருப்போம் அம்மா.

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. நவராத்திரி வாழ்த்துகள். கொலு படங்கள் நன்றாக உள்ளது. பழைய கொலுவும் பார்வையாக உள்ளது. கொலு தரிசனம் பெற்றுக் கொண்டேன். நீங்களும் உங்கள் குடும்ப நண்பிகளுமான படம் நன்றாக வந்துள்ளது. மேலும் கொலு படங்களை பகிருங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

மாஸ்க் எப்பொழுதுமே எனக்குப் பிடித்ததில்லை.
இப்போதும் வைத்தியரிடம் செல்லும் போதும் பல்,கண்
டாக்டரிடம் செல்லும் போதும்
மாஸ்க் வேண்டியதுதாம். இன்னும் நாலாவது தடுப்பூசி
போட்டுக் கொள்ளவில்லை.

ப்ராங்கைடிஸ் வந்துவிட்டது பேரனுக்கு.
அலுப்பா இருக்குமா.
எப்போதான் எல்லாம் சரியாகுமோ.

உத்சாகம் வரட்டும். மனம் நிம்மதியாக
இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.
இங்கு எல்லோரும் மகிழ்ச்சியாக
கொலு வைத்தார்கள். ஒன்பது நாட்களும்

சந்தித்து மகிழ்ந்தார்கள்.

வட இந்தியர்களும் வந்து தேவி பூஜா
என்று கலந்து கொண்டார்கள்.

பின்னூட்டத்திற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பின் ஜெயக்குமார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவ கோட்டைஜி,
வருகைக்கு நன்றி மா. என்றும் நலமுடன் இருங்கள்.

அத்தனை தெய்வங்களும் நம்முடன் இருப்பது போல
ஒரு உணர்வு நவராத்திரியின் நிறைவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

நலமுடன் இருங்கள் மா.
இங்கேயும் நான் வெறும் பார்வையாளர் தான். பெண் தான் எல்லா வேலையும்
பார்த்துக் கொண்டாள்.
உங்கள் பெண்ணும் நவராத்திரி கொண்டாடியது
மிக மிக அருமை.

பத்து வருடங்கள் முன்னாடியே அலுப்பு தட்டிவிட்டது.
வைத்தால் ஒழுங்காகப் பூஜை செய்து
பலகாரம் செய்து வைக்க வேண்டும்.

இவ்வளவாவது செய்தீர்களே .பரவாயில்லை மா.



''இந்த வருஷம் படு சொதப்பல். சுண்டல் எல்லாம் பண்ணி செக்யூரிடிக்குக் கொடுத்தோம். அவங்களுக்கு எல்லாம் மயக்கமே வந்துடுத்து. சுண்டலைப் பத்திரப்படுத்திக் கொண்டு வைச்சுச் சாப்பிட்டோம் என்றார்கள். :)))))

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)

வல்லிசிம்ஹன் said...

ஆஞ்சு மனதை ஈர்க்கிறார்!!!''

அன்பின் கீதா ரங்கன்,மா,
நீங்கள் உங்கள் வேலைகளுக்கு நடுவில் வந்தது
ரொம்ப சந்தோஷம்.

''மாஸ்க் அணிய வேண்டாம் என்றாலும் நாம் எச்சரிக்கையாகவே இருப்போம் அம்மா.''

உண்மைதான் ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலா மா,

என்றும் வாழ்க வளமுடன்.
''பதிவு அருமையாக உள்ளது. நவராத்திரி வாழ்த்துகள். கொலு படங்கள் நன்றாக உள்ளது. பழைய கொலுவும் பார்வையாக உள்ளது. கொலு தரிசனம் பெற்றுக் கொண்டேன்''


இன்னும் சில படங்களை அடுத்த பதிவில் இடுகிறேன் மா.
தங்கள் வருகைக்கு மிக மிக நன்றி அம்மா.

மாதேவி said...

கொலுவும் பெண்கள் கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் உங்கள் படமும் அழகாக இருக்கிறது. விழாக்கால மகிழ்ச்சி தொடர வேண்டுவோம்.