Blog Archive

Wednesday, May 18, 2022

தன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டு இருப்பவர் l Ki Rajanarayanan l கி.ரா ...

🙏🙏🙏🙏🙏🙏

8 comments:

இராய செல்லப்பா said...

நாம் காலத்தின் பிரமிப்பூட்டும் எழுத்துக் கலைஞர் அமரர் கி. ரா அவர்கள். இவருடைய தகுதியை உணர்ந்து பாண்டிச்சேரி பலகலைக்கழகத்திற்கு இவரை அழைத்துவந்து பெருமைப்படுத்திய டாக்டர் வெங்கட சுப்பிரமணியனை இந்த நேரத்தில் நினைவுகொள்ளவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீ செல்லப்பா.
அதையும் அவரே சொல்லி இருக்கிறார். என் வருத்தம் எல்லாம் அவரும் கணவதி அம்மாவும் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கிப் போன போது
ஒரு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூடத் தோன்றாத லயிப்பில்
இருந்துவிட்டேன். மாமேதை. நல்லவர்.

ஸ்ரீராம். said...

நீங்கள் இவரைப் பற்றி அடிக்கடி சிலாகித்துச் சொல்லி உள்ளீர்கள்.  இவர் பெயர் சொன்னாலே எனக்கு கோபல்ல கிராமமும், கோபல்ல புறத்து மக்களும்தான் நினைவுக்கு வரும்.  இதுவரை இவர் ஆக்கம் எதுவும் படித்ததில்லை.  இவர் உங்கள் வீட்டுக்கு வந்தது பற்றியும் முன்னர் நீங்கள் குறிப்பிட்டுக் கேட்டிருக்கேன்/படித்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.
என்றும் நலமுடன் வாழுங்கள்.

என் அப்பாவை விட இரண்டு வயதே சின்னவர். அதனாலயே இவர் மேல்
பிரியம்.
டெலிஃபோனில் பேசும்போது அப்பா என்றே அழைப்பேன்.
அவருக்கு எல்லாமே சிரிப்பு. எல்லாமே சுவை.
மே 17த் என்றதும் அவர் நினைவு வந்தது.

யாரையாவது ஸ்வர்க்கத்தில் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்.
முடிந்த போது அவர் எழுத்தைப்
படியுங்கள் மா.

கோமதி அரசு said...

கரிசல் இலக்கியத்தின் அரசர் அவரைபற்றி அழகாய் சொல்லி இருக்கிறார் ஞானசம்பந்தம் அவர்கள்.
கி.ராவின் நினைவு தினத்தில் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா நீங்கள் இவரைச் சந்தித்திருக்கிறீர்கள் இவர் உங்கள் வீட்டிற்கும் வந்திருக்கிறார் இல்லையா முன்பு எழுதியிருந்தீங்க. கடிதத் தொடர்பும் கூட இருந்தது இல்லையா அவர் புத்தகங்கள் கூட அன்பளிப்பாக...

நான் இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். கன்னாபின்னா கதைகள் என்று சிறுகதைகள் தொகுப்பு.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.

நல்ல எழுத்துக்கு சொண்டமானவரை
நாம் நினைத்துக் கொண்டாடுவது அவசியம் தானேம்மா.
எல்லோர் மனத்தையும் தொடும்
எழுத்து அவருடையது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.

நமக்கு அனபானவர்களை,
நம்மிடம் அன்பு செலுத்தினவர்களை

கனிவுடன் நினைத்துப் பார்க்கும்போது தனி சந்தோஷம்.

உங்கள் நினைவு மிகச் சிறப்பு.
நன்றி மா.