Blog Archive

Thursday, May 19, 2022

KI RAA SHORT STORY " கதவு "

மனதைப் பிழிந்த கதை. நன்றி ஐயா.

10 comments:

ஸ்ரீராம். said...

பின்னர் கேட்கவேண்டும் அம்மா.

கோமதி அரசு said...

கதை மிக அருமை. முன்பு படித்து இருக்கிறேன். நினைவில் இல்லை கேட்டவுடன் நினைவு வந்து விட்டது.

கதவில் பஸ் , ரயில் விளையாட்டு விளையாடத அந்த கால குழந்தைகள் கிடையாது.
பெரியவர்கள் "கதவை ஆட்டாதே, நாதாங்கியை கலக்காதே "என்று சொல்லாத பெற்றோரும் இருக்க மாட்டார்கள்.
எனக்கு ஒரு டிக்கட் வேண்டும் திருநெல்வேலி செல்ல.

கோமதி அரசு said...

எல்லா குழந்தைகளும் முன்பு கதவில் படங்கள் ஒட்டி வைத்து இருப்பார்கள். வித விதமாக ஒட்டி இருப்பார்கள்.

குழந்தையின் காய்ச்சல் ரெங்கம்மாவுக்கு தேள் கொட்டிய கடுப்பு , குழந்தைகளின் பயம்
கதவு இல்லையென்றால் எவ்வளவு கஷ்டம் நாய் உணவை தின்று விட்டு போய்விட்டது. சின்ன குழந்தை இறைந்து விடுகிறது வாடை தாங்காமல்.

குழந்தைகள் கிராம சாவடியில் போய் அவர்கள் கதவை பார்த்து
தடவி பார்ப்பதும், தூசியை தட்டுவதும் கண்ணில் நிற்கிறது. ஏழ்மை தரும் பரிசா இது!

கோமதி அரசு said...

சிவக்குமார் அருமையாக கதையை சொன்னார்.
பகிர்வு அருமை அக்கா.

கோமதி அரசு said...

என் சின்ன மாமனார் மகன் நாறும்பூநாதனும் இந்த கதையை வாசித்து போஸ்ட் போட்டு இருக்கிறார்.
தங்கம் வள்ளிநாயகத்தின் தம்பி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்
என்றும் வளமுடன் வாழ்கவும்.
மெதுவாகக் கேளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா.
வாழ்க வளமுடன்.
வாசலில் இருக்கும் கேட், வீட்டு நிலைப்படி கதவு எல்லாமே
நமக்கு விளையாட்டுத் தளங்கள் தான். அதுவும் அந்தக் காலத்துக் கதவு க
குமிழிகள் வைத்து அருமையாக இருக்கும். இந்தக் கதையின் குழந்தைகள் தான்
எத்தனை பரிதாபத்துக்குத் தள்ளப் படுகிறார்கள்;'நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

@ கோமதி மா,
''கதவை ஆட்டாதே நாதாங்கியைச் சத்தம் போடாதே"
உண்மையான சொற்கள்.

அதையும் மீறி க்ரீக் க்ரீக் என்று ஆடுவோம்.

''எனக்கு ஒரு டிக்கெட் வேண்டும் திரு நெல்வேலிக்கு"
ஆஹா போட்டுடலாம். மானசீகமாகப்
போய் வரலாம் அன்பு தங்கச்சி.

அந்தக் குழந்தைகள் படும் பாடு. அவைகளுக்குத் துன்பமே பழகி விடுகிறது.
அதுதான் அங்கே ஏழ்மையின் கோலம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
கி ரா அவர்கள் , உண்மையிலேயே இது போன்ற
கதவைக் கண்டதால் இந்தக் கதையை எழுதினதாகச் சொல்லி இருக்கிறார்.
முதலில் ஒரு பத்திரிகை இந்தக் கதை ரொம்ப எளிமையாக இருக்கு
என்று பிரசுரிக்க வில்லை.
இந்தக் கதைக்கு விருது கிடைத்தது என்று வேடிக்கையாகச் சொல்வார்,.
உங்கள் மச்சினர் நாறும்பூ நாதனும்
எழுதி இருக்கிறாரா!!
என்ன அழகான பெயர்,.
முக நூலில் போய்ப் பார்க்கிறேன். தங்கம் வள்ளி நாயகம் தெரியும்.
இவரைத் தெரியாது.
நல்ல தமிழில் எழுதுவார் என்று நினைக்கிறேன்.
சிறப்பான செய்தி கொடுத்திருக்கிறீர்கள் அன்பு தங்கச்சி.

Thulasidharan V Thillaiakathu said...

கேட்கிறேன் அம்மா. முந்தைய வீடியோவும் கேட்டேன்...அருமை. இதையும் கேட்டுவிடுகிறேன். கொஞ்சம் வேலைப்பளு...

கீதா