Blog Archive

Monday, May 09, 2022

தேடி மீண்ட கதைகளில் ஒன்று

வல்லிசிம்ஹன்



Friday, May 28, 2010
மீண்டோம் சென்னை... 2010 மே மாதப் பதிவு.
தேடினேன் வந்தாரே:)






துபாயிலிருந்து சென்னை மீளும் பதிவு.

 
மதிய தூக்கத்துக்குப் பேத்தி தயார் ஆனதும் ''பாப்பா ,அப்புறமா பார்க்கலாம்' என்று பயந்துகொண்டே சொன்னோம். ''நின்னி தாச்சி.ஈவனிங் வவ்வா'' என்று அவளும்
சம்மதம் சொல்ல அறைக்கதவு சாத்திக் கொண்டது.
அதாவது நான் தூங்கப் போகிறேன். சாயந்திரம் வருவேன் என்கிற அர்த்தம்.:)

சத்தம் போடாமல் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம்.
எழுந்ததும் எங்களைத் தேடுமே என்கிற பயம்.
இன்னும் கொஞ்சம் மாதங்கள் ஆகுமே என்கிற மனக் கிலேசம், எல்லாம் கலந்து
எங்களை மௌனமாக்கியது.

வெளியில் வந்து கண்கூசும் ,சுட்டெரிக்கும் பாலைவெய்யிலைக் கண்டதும் ,ஆளைவிடு !
சென்னை இதற்கு எவ்வளவோ தேவலை என்று விமான நிலையம் வந்தடைந்தோம்.
அதி நவீன புதிய டெர்மினல்.வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லாத போர்டிங் ரொடீன்.

212ஆம் எண் கொண்ட எமிரெட்ஸ் வாயிலுக்கு வந்ததுதான் கையில் தண்ணீர் இல்லை என்று தெரிந்தது.
உடனெ வீட்டு எஜமானர் நான் வாங்கி வரேன்,நீ வேணுமானால் ட்யூட்டி ஃப்ரீல ஏதாவது வாங்கிக் கொள் என்றதும், பழைய அனுபவங்கள் காரணமாக நான் நாற்காலியை விட்டு நகரமாட்டேன், நீங்கள் போய் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

அவரும் போனார். போனார்.போனார்.
என்ன வாழ்க்கையின் ஓரத்துக்கே போய் விட்டாரா என்று நான் பயப்பட ஆரம்பிக்கும்போதே லாஸ்ட் அண்ட் ஃபைனல் கால் ஃபார் போர்டிங் சென்னை ஃப்ளைட்'' ஒலிபெருக்கியில் வந்தது.
அங்கு நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் ''அம்மா, எங்க வூட்டுக்காரர் தண்ணி பிடிச்சாரப் போயிருக்காரு. நீ கொஞ்சம் பொறுமையா இரு தாயீ'' ன்னு சொல்லிட்டு நான் ஒரு காலில் தவம் இயற்ற ஆரம்பித்தேன். நிமிடம் நகர எனக்கு துடிப்பு அதிகமாகியது. இப்போது அந்த லௌஞ்சில் நான் மட்டுமே திக்கற்ற ரேவதியாக நின்று கொண்டிருந்தேன்.!!!!

இதென்னடா கஷ்டகாலம், ஓரோரு தடவையும் நாந்தானே தொலைவேன். இப்ப இவர் எங்க போனார்.எங்கபோய்த் தேடுகிறது. இந்தப் பொண்ணு வேற மகாக் கேலியாக என்னைப் பார்க்கிறாள்!!!. ''ஹி ஹேஸ் டு கம் நௌ''என்று மிரட்டல் அவள் கண்ணில்.
சடக்கென்று எதிர்வரிசையில் நடக்கும் உருவம் ரொம்பப் பழகினதாகத் தெரியவே
நம்ப முடியாத வேகத்தில் அந்தத்திசையில் பாய்ந்தேன்.
சத்தியவான் சாவித்திரி கூட அப்படி இரைச்சல் போட்டு இருக்க மாட்டாள்.
இவர் பெயரைச் சொல்லிக் கையைத் தட்டி..ம்ஹூம், மனுஷன் திரும்பணுமே!!

இப்ப தானா  என் குயில் குரல் மங்கி ஒலிக்க வேண்டும்???????
சத்தம் போடத் தெரியவில்லையே ரேவதி உனக்கு:*****(((((((((((((

அவர் பாட்டு எண்களைப் பார்த்துக் கொண்டே எதிர்வரிசையில் போய்க் கொண்டிருக்கிறார்.
இந்தச் சமயம் ஒன்று சொல்லியே ஆகணும். அவருக்கு எப்பவுமே ஏகாக்கிர சிந்தனை தான்.
ரிஷப ராசி. ஒன்றில் முனைந்தால் வேறு எதுவும் அவர் சிந்தனையைக் கலைக்க முடியாது!!!

ஒரே எட்டு. இருபது நொடிகள் தான் ஆகியிருந்தது. அவர்கையைப் பிடித்துவிட்டேன்.
ஏனோ சுஜாதா சாரின் பத்துசெகண்ட்.....கதை நினைவுக்கு வந்து தொலைத்தது:)
எப்பவுமே யாராவது  தன் மேலெ இடிப்பதோ கையைப் பிடிப்பதையோ விரும்பாத அவர், படு கோபமாக இன்னோரு கையை என்னைப் பார்த்துத் திருப்பினார்.
''சாமி, நாந்தான்பா எங்க போறதா நினைப்பு, கேட் இந்தப் பக்கம்னு''
 அவரைத் திருப்பினேன்.
''ஓ,இங்கேயா இருக்கு. நான் கீழ் தளத்துக்குப் போய்த் தண்ணீர் வாங்கிக் கொண்டு வந்து தப்பான படிகளில் ஏறி விட்டேன் போலிருக்கிறது''
என்றவரைப் பார்த்து
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

என் முகத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டு,''சரிம்மா என்ன ஆச்சு இப்ப, ப்ளேனைக் கிளப்பிட்டானா? ''என்று சிரிக்கிறார்.
கஷ்டப்பட்டுக் கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்கையிலிருந்து
தண்ணீரை வாங்கி குடித்துக் கொண்டே எங்கள் போர்டிங் கேட்டு'க்கு வந்தேன்.
அவரும் பாஸ்போர்ட்,டிக்கட் எல்லாவற்றையும் காட்ட ஒருவழியாக ,
விமானத்தில் போய் உட்கார்ந்தோம்.
இதில் சுவை என்ன வென்றால் எங்களுக்கு அப்புறமாக ஐந்து நபர்கள் வந்ததுதான்.:)

பற்றாததற்கு விமானம் பல தடவை. கீழே இறங்கி,குதித்து,ஆடி எங்கள் பயணத்தை இன்பமாக முடித்து வைத்தது.
வந்துட்டோம்பா.:)



எல்லோரும்  நிறைவாக வாழ வேண்டும்.

21 comments:

கோமதி அரசு said...

இப்ப தானா என் குயில் குரல் மங்கி ஒலிக்க வேண்டும்???????
சத்தம் போடத் தெரியவில்லையே ரேவதி உனக்கு:*****(((((((((((((

ரசித்தேன், குயில் குரல்தான்.

அவருக்கு எப்பவுமே ஏகாக்கிர சிந்தனை தான்.
ரிஷப ராசி. ஒன்றில் முனைந்தால் வேறு எதுவும் அவர் சிந்தனையைக் கலைக்க முடியாது!!!//


சிந்தனை ஒரு முக படுத்தும் போதுதானே செய்யும் காரியம் வெற்றி பெறும்!

//விமானத்தில் போய் உட்கார்ந்தோம்.
இதில் சுவை என்ன வென்றால் எங்களுக்கு அப்புறமாக ஐந்து நபர்கள் வந்ததுதான்.:)//

அதில் கொஞ்சம் மன சமாதானம்.
பயணத்தை ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
ஆமாம் பா ரிஷப ராசி, ரிஷப லக்கினம்:)
ஆனா தப்பான பாதையில் போய்க் கொண்டிருந்தாரே:)))))))))))


அடுத்த ஃப்ளைட் இரவு 12 க்குத்தான்.
அதுவரை என்ன செய்வது!!!

ஆனை போல இருந்த என்னை ஓட வைத்த பெருமை
இவருக்குத் தான்.:))))

''சரியா..... இப்ப என்ன தப்பு பண்ணினே''ன்னு
பேரன் கேட்பான் !!!
அதே போல இந்த நிகழ்ச்சி நடந்ததுமா
நன்றி கோமதி.

ஸ்ரீராம். said...

இந்தப் பகுதி ஏற்கெனவே படித்தது போல இருக்கிறது.  அநேகமாக அங்கு என் கமெண்ட் இருக்கலாம்!

ஸ்ரீராம். said...

பதட்டத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.  நமக்கோ பதட்டமாய் இருக்க, எதிர்த்தரப்போ அமைதியாய் இருந்தால் இன்னும் கஷ்டம்தான்!

ஸ்ரீராம். said...

அப்படியும் தண்ணீர் வாங்கி குடித்தது சிரிப்பு.  உங்களுக்குப் பின்னும் இன்னும் ஐந்து பேர் வந்து சேர்ந்தது இன்னும் சிரிப்பு!

மாதேவி said...

சுவாரசியமான சம்பவங்கள். அந்த நேரத்தில் படபடப்பாக இருந்திருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.
என்றும் நலமுடன் இருங்கள்.
ஓ யெஸ். உங்க கமெண்ட் இருக்கு.
படங்கள் நன்றாக இருக்கின்றன என்று
சொல்லி இருக்கிறீர்கள். அப்போது இட்ட படங்களை இப்போது காணோம்.

உங்கள் காமிரா நல்ல காமிரா என்றும் சொல்லி இருக்கிறீர்கள்:)
அதாவது நல்ல விஷயங்களைப் படம் எடுக்கிறது என்று.!!!

அந்தப் பின்னூட்டத்தை காபி பேஸ்ட் செய்ய முடியவில்லை.




வல்லிசிம்ஹன் said...

பதட்டமான பதட்டம்.
அவருக்கு எந்த நிலையிலும்
அது வராது.
துபாயில் தாகத்தைத் தவிர வேறெதுவும் நமக்குத் தெரியாது.
அவ்வளவு உக்கிரமான
வெய்யில்.
இத்தனைக்கும் நாம் அந்த பாட்டிலை உள்ளெ
கொண்டு போக முடியாது. ப்ளேனுக்குள் நுழையும் போது
ஒரு பெட்டி இருக்கும். அதில் போட்டு விடவேண்டும்.
பிறகு அவர்கள் தரும் தண்ணீரைத் தான் குடிக்க
வேண்டும்.

எங்களைப் போல திசைக்கு ஒருவராகத்
திரும்பும் தம்பதியை நீங்கள் பார்த்தே
இருக்கமுடியாது:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம் ஒரு நொடி கூட அலுப்பில்லாத வாழ்க்கை:)
நன்றி மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இந்த நேரத்தில் அனைவருக்குமே பதட்டந்தான் வரும். எப்படித்தான் மனப்போராட்த்துடன் சமாளித்தீர்களோ? ஆனால், தங்களவர் பதட்டம் இல்லாமல் இருந்ததை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. சில எண்ணங்களில் மாறுபட்ட குணாதிசயங்களை உடையவர்கள்தான் இறைவன் சேர்த்து வைப்பான் எனக் கேள்விபட்டுள்ளேன்.

பிளைட் கிளம்பும் நேரம் வரை உங்களவரை காணவில்லை என்றால் உங்களுக்கு எவ்வளவு டென்ஷன் வரும் என்பதை என்னாலும் உணர முடிகிறது. அதைவிட அதன்பின் வந்த ஐவர். அவர்கள் எந்த டென்ஷனுடன் வந்து ஏறினார்களோ? இல்லை கூலாக எவ்வித பதட்டமும் இல்லாமல் வந்தார்களோ? அப்படியும் சிலபேர்கள் இருக்கிறார்களே... பழைய நினைவுகளுடன் பதிவு நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள் அம்மா.

அவர் என்றும் எதற்கும் அசர மாட்டார்.
ஃப்ளைட்டே கிளம்பி இருந்தாலும் கவலைப் பட்டிருக்க மாட்டார்.
நான் அதற்கு எதிர்மறை.

பயம் ,கவலை எல்லாம் என் குணம்.

''இந்த நேரத்தில் அனைவருக்குமே பதட்டந்தான் வரும். எப்படித்தான் மனப்போராட்த்துடன் சமாளித்தீர்களோ? ஆனால், தங்களவர் பதட்டம் இல்லாமல் இருந்ததை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. சில எண்ணங்களில் மாறுபட்ட குணாதிசயங்களை உடையவர்கள்தான் இறைவன் சேர்த்து வைப்பான் எனக் கேள்விபட்டுள்ளேன்.''

சரியாகச் சொன்னீர்கள்.
பல சமயங்களில் அவரின் தைரியம் எனக்குத் துணை இருந்தது.
பல சமயங்களில் என் பொறுமை
அவருக்குப் பலம் கொடுத்தது.


அப்புறமாக வந்த ஐவர் ஜப்பான் காரர்கள்.
அவர்கள் அமைதியாகத் தான் இருந்தார்கள். என் கோபம்
எல்லாம் அந்த ஃப்ளைட் அட்டெண்டண்ட் அம்மாவிடம் தான்.
இந்தியர்கள் என்றால் ஒரு டிரீட்மெண்ட்.
வெள்ளைத்தோலுக்கு ஒரு மாதிரி.



Thulasidharan V Thillaiakathu said...

விமான நிலையத்தில் இப்படியான நிகழ்வுகள் ரொம்பவே பதற்றப்பட வைக்கும்தான். ஃப்ளைட்டிற்கு லாஸ்ட் கால் கொடுக்கிறார்கள் ரயிலுக்கோ சிக்னல் விழுந்ததும் கூ என்று கிளம்பிவிடுமே. எதுவாக இருந்தாலும் பதட்டம்தான்.

பதட்டத்தையும் சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

ஹப்பா முடிவு தெரிந்ததும் சமாதானம் ஃப்ளைட் மிஸ் ஆகவில்லை என்று.

//அவருக்கு எப்பவுமே ஏகாக்கிர சிந்தனை தான்.
ரிஷப ராசி. ஒன்றில் முனைந்தால் வேறு எதுவும் அவர் சிந்தனையைக் கலைக்க முடியாது!!!//

ஹாஹாஹாஹா எப்படியோ கையைப் பிடிப்பது பிடிக்காவிட்டாலும் கடைசியில் அப்பா புரிந்துகொண்டாரே உங்கள் பதற்றத்தை. நிம்மதி.

நீங்கள் சமாளித்துவிட்டீர்கள்.

சத்தம் போடவில்லையே ரேவதி உனக்கு//

ஹாஹாஹாஹா.....அம்மா செம எழுத்து!

ரொம்ப ரசித்து வாசித்தேன். கண்டிப்பாக நீங்கள் அந்த நிமிடங்களில் எவ்வளவு பதற்றம் அடைந்திருப்பீர்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. எதிர்வரிசையில் இருந்த அப்பா உங்கள் கண்ணில் பட்டதும் நல்லதாயிற்று.

நான் இந்த நிலையில் கண்டிப்பாக ரொம்ப டென்ஷன் ஆகியிருப்பேன் கண்ணில் நீர் வேறு வந்திருக்கும். பழக்கம் இல்லையே இன்டெர்நாஷனல் விமான நிலையங்கள், அவர்கள் பேசும் ஆங்கிலமும் எனக்கு அந்த அக்சென்ட் பிடிபடுவது சிரமம் வேறு எனக்குண்டு....


கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கடைசில பாருங்க உங்களுக்குப் பின்னாடி 5 பேர் வந்திருப்பது ...ஹாஹாஹாஹா

இதைக் கேட்பவர்கள் பதற்றப் படாமல் இருக்கக் கத்துக்கணும் என்று அரை மணி நேரம் லெக்சர் கொடுப்பார்கள் ஆனால் என்னைப் பொருத்தவரை அந்த நிமிடங்கள் பதற்றம்தான்.

அழகா எழுதியிருக்கீங்கம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பேத்தியின் மழலையை மிகவும் ரசித்தேன் அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நான் எட்டு மணிக்கு ரயில் என்றால்
6 மணிக்கு ப்ளாட்ஃபார்மில் இருப்பேன்.
அவர் ஓடும் ரயிலில் கூட ஏறிவிடுவார்:)

ஆனால் பாவம், எனக்காகத் தானே தண்ணீர் வாங்கப் போனார்.

''பதட்டத்தையும் சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்''
Thanks ma.
Vaazhka valamudan.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

'நீங்கள் சமாளித்துவிட்டீர்கள்.

சத்தம் போடவில்லையே ரேவதி உனக்கு//

ஹாஹாஹாஹா.....அம்மா செம எழுத்து!''
ஹீ ஹீ.

எல்லாம் ஒரு ஃப்ளோ தான்.:)
இப்ப கூட யாராவது அனியாயமா ஏதாவது செய்தால்
கத்தத் தோன்றுகிறது.
மகள் வீட்டில் கத்தமுடியுமா!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

''நான் இந்த நிலையில் கண்டிப்பாக ரொம்ப டென்ஷன் ஆகியிருப்பேன் கண்ணில் நீர் வேறு வந்திருக்கும். பழக்கம் இல்லையே இன்டெர்நாஷனல் விமான நிலையங்கள், அவர்கள் பேசும் ஆங்கிலமும் எனக்கு அந்த அக்சென்ட் பிடிபடுவது சிரமம் வேறு எனக்குண்டு....''

ஓ அது இருக்கவே இருக்கு:)
துபாய் ல அந்தப் பிரச்சினை இல்லை. அவர்களுக்கு
நம் நாட்டு பிரஜைகளுடன்
நல்ல பழக்கமாகி இருக்கிறது. 2019 இல் நம் ஊர்ப் பெண்களெ
அட்டெண்டண்ட்டாக இருந்தார்கள். ஸோ நோ ப்ராப்ளம்:)
நன்றி அம்மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
பேத்திக்கு அப்போது இரண்டு வயது.
மழலை வெகு இனிமை தான். நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

பதிவு படிக்கும் போதே, நீங்கள் எத்தனை டென்ஷன் ஆகி இருப்பீர்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவை ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நன்றி மா.
இடுக்கண் வந்தால் சிரிக்கச் சொல்லி இருக்கிறார்
இல்லையா வள்ளுவர்!!

அப்போது அவஸ்தை. இப்போது நினைவில்
வேறு மாதிரி தோன்றுகிறது.

அதுதான் வித்தியாசம்,.
என்றும் நலமுடன் இருங்கள் மா.