எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
அன்பின் கீதாவுக்கும் அவர் அன்புக் கணவர் திரு சாம்பசிவத்துக்கும் இனிய மண நாள் வாழ்த்துகள். என்றும்
ஆனந்தமும் அமைதியும் ஆரோக்கியமும்
நிறை வாழ்வு அமைய வேண்டும்.
ஸ்ரீரங்கன் அருள். மகள்,மாப்பிள்ளை,பேத்திகள்,
மகன்,மருமகள் குட்டிக் குஞ்சுலு அனைவரும்
அமோகமாக இருக்க வேண்டும்.
சில நாட்கள் நடந்ததை நினைத்து
சந்தோஷம். சில நாட்கள் நடந்ததை நினைத்து வருத்தம்.
ஆனால் நிலா மட்டும் என்றும் மகிழ்ச்சி தர மறுப்பதில்லை.
ஏய்...மூன் வந்துட்டது. பார்க்கணுமா? இது சிங்கம்.
பாட்டி..... ''moon pictures .I am sending from my apartment" இது பெரிய பேரன்.
அம்மா ,பால்கனில நிலா தெரிகிறது பார்க்கணுமா?'' மருமகள்:)
வாசலுக்கு வரியாம்மா. மூன் படம் எடுக்கணுமா ?''
இது மகள் மாதாமாதம் கேட்கும் கேள்வி.
இறைவா நன்றி.
இன்று கிரஹணம் பிடித்து விட்ட முழு நிலா,
ஜகஜ்ஜோதியாக வானில் ஒரு தங்கத்தட்டு
போல மின்னியது. காலை நான்கு மணிக்குக்
கண் விழித்ததும் நினைத்தது அதைப் பற்றித்தான்.
படங்களும் எடுத்துவிட்டு மற்ற வேலைகளைப்
பார்த்தேன்.
பழைய கிரஹண நினைவுகள்.
பாட்டி நாட்கள் பட்டினியும் குளியலும்,
சிங்க நாட்கள் அவ்வளவு சிரமம் இல்லாமல்
கடந்தன.
முதல் பையன் தரித்த போது ,புதுக் கோட்டையில்
ஒரு அறையில் ஜன்னல்களையும், கதவையும் அடைத்து
வேலைக்கார கிழவி (அவர் பெயரே அதுதான்)
துணை இருக்க நாலு மணி நேரம் இருந்த நினைவு.
அதற்கப்புறம் எத்தனையோ கிரஹணங்கள்.
ஒவ்வொன்றும் ஒரு விதம்.
பேரன் சொன்ன ஐடியா. எல்லா சாப்பாட்டையும்
ஃப்ரிட்ஜுக்குள் வைத்து ,ஃப்ரிட்ஜின் மேல்
தர்ப்பையைப் போட்டு வைக்கலாமா!!!
மகள் வீட்டில் சௌகரிய கிரஹணம். நான் தூங்கும் போது
பிடித்து விழிப்பதற்குள் பூரணமானது.
20 comments:
இனிமையான நினைவுகள். நிலா என்றைக்கும் பிடித்தது - சூரியன், இயற்கை, கடல், மலைகள் என பிடித்த பட்டியல் அநேகம்.
மண நாள் காணும் தம்பதியர் என்றென்றும் நலமுடன் இருக்க எங்கள் பிரார்த்தனைகள்.
நிலவின் மீதான உங்கள் ஆர்வம் எங்களுக்கே தெரிந்திருக்கும்போது உங்கள் மகள், மருமகள், பேரன்களுக்கு தெரியாதா என்ன? பௌர்ணமி கடந்ததும் உங்கள் நிலவு போட்டோக்களை உங்கள் தளத்தில் எதிர்பார்க்கலாமே..
அருமையான பாடல்களால் இன்றைய பதிவை நிறைத்திருக்கிறீர்கள். இசை சர்வரோக நிவாரணி. மகிழ்ச்சி தரும் மாமருந்து.
கீதா அக்காவுக்கும் மாமாவுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகளை மறுபடி இங்கு சொல்லிக் கொள்கிறேன்! அவர்களுக்கும், உங்களுக்கும் நமஸ்காரங்கள்.
இரண்டு நாட்களுக்குமுன் செல்லப்பா ஸார் பதிவில் கூட இப்படி சந்திர கிரகணம் அன்று வீட்டுப் பாட்டியின் வற்புறுத்தலால் ஒரு அறைக்குள் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்டு ஒரு கர்ப்பிணி பற்றி எழுதி இருந்தார். அது நினைவுக்கு வருகிறது.
இருவருக்கும் திருமண நன்நாள் வாழ்த்துகள்.
எனது வணக்கங்களும்...
கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் அவர்கள் குடும்ப நலனுக்கு.
பாடல்கள் எல்லாம் அருமை. முதல் படம் பாடல் கேட்டு இருக்கிறேன். ஆனால் ஆனந்தன் பாடுவார் என்று நினைக்கவில்லை.
எனக்கும் இனிய நினைவுகள் இருக்கிறது பெளர்ணமி நிலாவை பார்க்கும் போது.
எனக்கும் பெளர்ணமி நிலா பிடிக்கும் என்று என் குழந்தைகளும் , என் கணவரும் பார்க்க படம் எடுக்க சொல்வார்கள். இந்த வீட்டில் வெளியில் போனால்தான் படம் எடுக்க முடியும்.
எனக்கும் மகளை குழந்தை உண்டாகி இருக்கும் போது "சந்திர கிரகணம் "
மாமியார் வெளியில் போகவே அனுமதிக்கவில்லை .அப்படி கொல்லை பக்கம் போக வேண்டும் என்றால் குடை பிடித்து போக சொல்வார்.
பழைய வீட்டில் வெளிபக்கம் இருந்தது கழிவறை, குளியல் அறை. அப்புறம் வீட்டுக்குள் கட்டி விட்டார்கள்.
இந்த வருஷம் இந்தியாவில் தெரியும் கிரஹணம் குறைவாகவே உள்ளது. இங்கேயும் எங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி. _/\_
அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்..
உண்மை தான் மா. மஹா பெரியவரே சொல்லி இருக்கிறார்.
கடல், யானை,குழந்தை,நிலா எல்லாமே. பார்க்கப் பார்கக அலுக்காத விஷயங்கள் என்று குறிப்பிடுவார்.
உங்களுக்கும் பதிவு பிடித்ததே மகிழ்ச்சி.
அன்பின் ஶ்ரீராம் ,
என்றும் நிறைவுடன் இருங்கள்.
ஆமாம் என் நிலாப் பைத்தியம்எல்லோரும் அறிந்ததே:)
அம்மா வீட்டில் வருடத்துக்கு இரண்டு மூன்று முறையாவது நிலாச் சாப்பாடு உண்டு.
திருச்சியில் மாடி வீட்டில் குடி இருந்ததால் ஒவ்வொரு பௌர்ணமியும் கொண்டாட்டம் தான்:)
உங்கள் வாழத்துகள் அவர்களைச் சேரும் கீதாவிம் திரு சாம்பசிவமும் மிக உன்னதமான தம்பதியர்.
மன நிலை மகிழ்ழ்வடைய. இசை. நமக்குத் தெரிந்த ஒரே வழி. நன்றி மா.
செல்லப்பா அவர்களின் பதிவைப் படித்தேன் மா. அவரும் இங்கே வந்திருக்கிறார்் இல்லையா. எல்லோருக்கும் கிரஹண. நினைவு வருகிறது. நன்றி மா ஶ்ரீராம்.
அன்பின் தேவகோட்டை ஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் வாழ்த்துகள் திருமதி கீதா சாம்பசிவத்தை அடைந்தது் நன்றி மா.
அன்பின் கோமதி மா,
என்றும் வாழ்க வளமுடன்.
உண்மைதான் நிலவைப் பிடிக்காதவர்கள் யார்.
கிரஹண்ம் பற்றிய நம்பிக்கைகளுக்கு ஆதாரம் உண்டு என்று நம்புகிறேன் நம் வாழ்வில்
பல விஷயங்கள் ஒத்துப் போகின்றன. நாம்்நிறையப்பார்க்கிறோமே.
மாமியாரின் அன்பு மகிழ்விக்கிறது.
இந்தப் பாடல் வெகு நாட்கள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
வார்த்தைகளை எழுதியதும் ஆனந்தனும் பி சரோஜாவும் நடித்த படம் என்று தெரிந்தது.
பதிவு உங்களுக்கும் பிடித்தது தான் மகிழ்ச்சி. நன்றி மா.
அன்பின் கீதாமா.
விசாக நக்ஷத்திரத்தில் பிடித்தது். ஸ்வாதி விசாகத்துக்கு கோவிலில் அர்ச்சனைக்குச சொன்னேன் மா. இங்கு மட்டும் தான் கிரஹணம்.
சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் அவரது கணவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள். என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை வேண்டுவோம்.
உங்களின் நிலா ஆர்வம் அதற்கு உங்கள் குழந்தைகள் பேரக் குழதைகள் எல்லோரும் ரசித்து உதவுவது மகிழ்வான விஷயம். இனிய நினைவுகள்.
துளசிதரன்
நிலாவின் மீதான உங்கள் காதலுக்கு பேரன் வரை ஆசையுடன் அன்புடன் ஆதரித்து மகிழ்விப்பதை மிகவும் ரசித்தேன். இந்த அன்புதான் மகிழ்ச்சிதானே நம்மை வழி நடத்துகிறது!
நிலா, இயற்கை கடல், சூரியன் மலைகள் நதிகள் விலங்குகள் பறவைகள் மரங்கள் பூக்கள் இவை யாவும் என்றென்றும் அலுக்காதவை. ரசித்து ரசித்துப் பார்க்கலாம்.
நீங்கள் எழும் போது ஃப்ரெஷ்ஷாக நிலாவும் காட்சி தந்திருப்பாளே!
கீதா
கீதா அக்காவுக்கும் மாமாவுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள். நம் எல்லோரது பிரார்த்தனைகளும் அவர்களையும் எல்லோரையும்நலமுடம் வைத்திருக்கட்டும்!
கீதா
அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
'உங்களின் நிலா ஆர்வம் அதற்கு உங்கள் குழந்தைகள் பேரக் குழதைகள் எல்லோரும் ரசித்து உதவுவது மகிழ்வான விஷயம். இனிய நினைவுகள்.''
உண்மையே அன்புடையவர்கள் நம்மைச் சூழ்ந்திருப்பதும் இறைவம் அருள்.
நன்றி மா.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
''நிலா, இயற்கை கடல், சூரியன் மலைகள் நதிகள் விலங்குகள் பறவைகள் மரங்கள் பூக்கள் இவை யாவும் என்றென்றும் அலுக்காதவை. ரசித்து ரசித்துப் பார்க்கலாம்.
நீங்கள் எழும் போது ஃப்ரெஷ்ஷாக நிலாவும் காட்சி தந்திருப்பாளே!''
மிக உண்மை. முழு நிலவன்று பூரண நிலா காட்சி தந்தால் அதிர்ஷ்டம் தான்.
மழை மேகங்களுக்கும் நிலவுக்கும் என்ன
பொருத்தமோ தெரியாது . மூன்று நாட்களாக நிலவைக்
காண முடியவில்லை கீதாமா.
காணும் வரை ஆனந்தமே.
Post a Comment