Blog Archive

Friday, May 13, 2022

பழைய படம் பழைய பாடல்...



"தேன் தூங்கும் தென்பொதிகை சாரலிலே"... அழகர் மலைக் கள்வன் (1959) பாடல் : புரட்சி தாசன் இசை : பி. கோபாலம் பாடியவர் : திருச்சி லோகநாதன்
மதுரை அருகினில் இருக்கும் திருமங்கலம் ஊரில் 1954 லிருந்து 1960 வரை இருந்து இனிமையான வாழ்வு அமையப் பெற்றோம். எளிமையான மக்கள். இதயம் நிறை அன்பு.

 பாடல்கள் கேட்கமுடியும் என்று 
நம்புகிறேன். இல்லாவிடில் யூ டியூபிலாவது கேட்கவேண்டும்.
பாதுகாப்பான வாழ்க்கை. 62 வருடங்களுக்கு முன்பு இருந்த அருமையான நட்புகள். அம்மாவின் தோழிகள். அப்பாவின் சினேகிதர்கள். உறுத்தாத வெய்யில். உருட்டி மிரட்டாத மழை. நல்ல மருத்துவர்கள். அரச மருத்துவமனை. மதம் நல்லிணக்கம் என்ற வார்த்தைகளை அறியாமலேயே இணங்கி இருந்த காலம். ஒரே ஒரு தியேட்டர், ஒரே ஒரு நெடு வீதி, இரண்டு உயர் நிலைப் பள்ளிகள். பெருந்தலைவர் காமராஜ், நடிகர்கள் சிவாஜி, மக்கள் திலகம் எம் ஜி ஆர், பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி என்று அனைத்துப் பிரமுகர்களும் வந்து சென்ற ஊர். நாங்கள் இருந்த வீடும், கிணற்றங்கரையும், கோடைப் பந்தலும், அதன் நடுவே காணும் மஞ்சள் வெய்யில் அழகும், நித்திய மல்லிக் கொடியும், செம்பருத்தியும், மீனாக்ஷி அம்மன் கோவிலையும் இன்னோரு முறை பதிகிறேன். நல்ல நினைவுகளைப் போற்ற வேண்டும் இல்லையா. எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.

18 comments:

மாதேவி said...

'அன்பு நிறைந்த எளிமையான மக்கள்' அக்காலம் இனிமைதான் இப்பொழுது எங்கே? விரைந்தோடும் வாழ்க்கை எட்டிய உறவுகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
வயதான பிறகும் நாங்கள் மாறவில்லை. நீங்களும் மாறவில்லை. அடுத்த தலைமுறை கூடப்
பராவாயில்லை.

காலத்துக்கு ஏற்ற மாதிரி நாமும் அரவணைத்துப் போக வேண்டியதுதான்.
பொறுமையாகக் காத்திருப்போம் அம்மா.
நலமுடன் இருங்கள்.

ஸ்ரீராம். said...

பின்னாட்களில் திருமங்கலத்தில் அப்பா பணிபுரிந்திருக்கிறார்.  நானும் திருமங்கலம் வஹியாக ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்ராப், விருதுநகர், சாத்தூர் ஆகிய இடங்கள் சென்று பணிபுரிந்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

அஞ்சலிதேவி மாடர்ன் உடையில் கலக்குகிறார்!  இளமையாக இருக்கிறார்.  இந்தப் பாடல்கள் எல்லாம் நான் கேட்டதே இல்லை.  நீலமலைதிருடன் என்றால் ரஞ்சன் ஹீரோவாக நடித்த படம்தானே?  சத்தியமே லட்சியாய் கொள்ளடா பாடல் வருமே...

ஸ்ரீராம். said...

ஆரம்பித்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது எல்லோருக்குமே அவரவர் இளமைக்காலம் மிக இனிதாகதான் இருக்கிறது.  எவ்வளவு அமைதியான இடங்கள், காலங்கள் அவை... 

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

நீங்கள் இந்த இடங்களில் பணி புரிந்ததை சொல்லி இருக்கிறீர்கள்.
மதுரையிலிருந்து செல்வீர்களா.
அப்பாவும் அங்கே பணி புரிந்திருக்கிறார் என்பது புது செய்தி மா.

வத்றாயிருப்பு, சாத்தூர், விருது நகர் எல்லாமே தென்னையும் பனையுமாக
இருக்கும்.
இப்போதெல்லாம் காற்றாலை விசிறிக் கம்பங்கள் மின்சாரம் உற்பத்தி செய்தபடி நிற்கின்றன.
நீங்கள்
இளவயதில் உழைத்தது வீணாகாது மா.

Geetha Sambasivam said...

திருமங்கலத்தில் பெரியப்பா இருந்தார். அப்பாவின் அண்ணா. பெரிய வீடு. ஆனால் தோட்டமெல்லாம் போடவில்லை. கொஞ்ச நாட்கள் அங்கே இருந்தது தான் நினைவுகள். மற்ற நினைவெல்லாம் இல்லை. நீங்கள் சொல்லி இருக்கும் படமோ/பாடல்களோ நான் அறியாதவை எப்போதும் போல!:(
இப்போதெல்லாம் அத்தகைய பசுமையைத் தேடினாலும் கிடைப்பதில்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா நீலமலைத் திருடன்
படம் தான்.
திருமங்கலம் ஆனந்தா தியேட்டரில் பார்த்த
படங்கள் .மின்னல் வீரனும் அந்த வகை .

அஞ்சலி தேவி அந்தக் காலத்து அழகு ஹீரோயின்!!!
மஞ்சள் மகிமை தெலுங்கு படத்தின் மறு பிறவி:)
பாடல்கள் அருமையாக இருக்கும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நம் இளமைக் காலங்கள் அருமையானவை
இருந்ததற்கு முழுக் காரணம் நம் பெற்றோர் தான்.
நமக்கும் பொறுப்பேதுமில்லாத காலம்.
அதுதான் அந்த இனிமைக்குக் காரணம்.
நல்ல நினைவுகளைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

கோமதி அரசு said...

பழைய பாடல்களும் திருமங்கல் நினைவுகளும் அருமை.

இப்போது எல்லோரும் அவர் அவர் வேலைகளில் ஆழந்து இருக்கிறார்கள். அக்கம் பக்கத்தினருடன் பேச நேரமில்லை. (அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்களுக்கு.)

அம்மா வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் இன்னும் முன்பு போலவே பேசுகிறார்கள்.

//மதம் நல்லிணக்கம் என்ற வார்த்தைகளை அறியாமலேயே
இணங்கி இருந்த காலம்.//

அம்மா காலத்தில் இருந்தவர்கள் நஸீர் அம்மா , அவர்களின் பிள்ளைகள், பேரன்கள் என்று இன்றும் நட்பு தொடர்கிறது, மாமி, அத்தை, மதினி , அக்கா என்று உறவு முறை சொல்லி.


கோமதி அரசு said...

நான் போட்ட பின்னூட்டம் வந்து விட்டதா என்று தெரியவில்லை.
மீண்டும் பதிகிறேன்.

முதல் பாடல் இலங்கை வானொலியில் கேட்டு இருக்கிறேன், இரண்டாவது பாடல் வரவில்லை.
மின்னல் வீரன் பாட்டு கேட்டது இல்லை.
நீலமலை திருடன் பாட்டு கேட்டு இருக்கிறேன்.
கடைசி பாடலும் கேட்ட நினைவு இல்லை.
எல்லா பாடல்களும் நன்றாக இருக்கிறது.

பழைய பாடல்களும், திருமங்கல மலரும் நினைவுகளும் அருமை.





Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பொக்கிஷமான நினைவுகள் அம்மா...

பாடல்கள் கேட்க முடியலைம்மா வால்யூம் ரொம்பக் கம்மியாக இருக்கு போல யுட்யூபில்..

மின்னல் வீரன் பாடல் என்ன என்று தெரியவில்லை ஆனால் இசை அந்த தாளம் வெகு அருமை. ரிதமிக்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓ மழை பத்தி நீங்கள் சொன்னது புரிகிறது கோடை மழை வந்தால் இன்பம் வரும் பாட்டு....செம பாட்டு கேட்டிருக்கிறேன். மற்ற பாடல்களையும் ய்ட்யூபில் போய் கேட்கிறேன் அங்கு வால்யூம் வருமொ...பார்க்கிறேன்

கீதா

இராய செல்லப்பா said...

நான் மிகச் சிரியவநாக இருந்த காலத்தில் பார்த்த படம், மஞ்சள் மகிமை. அருமையான பொழுதுபோக்கு சித்திரம். அற்புதமான பாடல்கள். அதிலும் 'கோடை மறைந்தால் ..' பாடலை இதுவரை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். அலுக்கவே இல்லை!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

இவை நீங்கள் பிறப்பதற்கு முன் வந்த படங்களாக இருக்கும் மா.

திருமங்கலம் இப்போது நிறைய மாறி இருக்கிறது
சாலையெங்கும் மருத்துவமனைகளும்,
ஷாப்பிங்க் செண்ட்டருமாகப் பார்த்தேன்.
உசிலம்பட்டி,வாடிப்பட்டி, வத்றாயிருப்பு
என்று பஸ்கள் ஓடும் நெரிசலான சாலைகள்.

கொஞ்ச காலமா ஆகி இருக்கு!!! நான் பேசுவது 60 வருடங்களுக்கு
முன் இருந்த ஊர்:)
நன்றி மா. உங்க பெரியப்பாவும் அங்கே இருந்திருக்கிறார்.
என் அப்பாவுக்குத் தெரிந்தவரோ என்னவோ.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

இரண்டு பின்னூட்டங்கள் வந்திருக்கின்றனவே.
ஆமாம் இப்போது அபார்ட்மெண்ட்டுகளில் இதுவே வழக்கமாகி விட்டது.

பழைய இடங்களிலாவது இன்னும் மனிதாபிமானம்
இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.
கோவிலைச் சுற்றி நடக்கும் கொண்டாட்டங்கள் அனைத்திலும்
எல்லா வீட்டினரும் கலந்து கொண்டு
அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

பழைய நட்புகள் இன்னும் தொடர்பில் இருப்பது மிக மகிழ்ச்சி.
முஅ நூலில் ஆசியா ஒமார் பெயர் பார்த்ததும் என் சிறுவயதுத் தோழிதான் நினைவுக்கு வந்தார்.
அதே போலக் கிறிஸ்துவ மதத்தினரும்
நல்ல நண்பர்கள்.
நாம் மனம் மாறாமல் ஒன்றாக இருப்போம்.
பழைய பாடல்களை நீங்கள் ரசித்தது தான் சிறப்பு.
மின்னல் வீரன் கொஞ்ச நாட்கள் தான் ஓடியது:)

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள். பாடல்களை ஒவ்வொன்றாக கேட்கிறேன்.