வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
சில பாடல்கள் காதில் அவ்வப்போது ரீங்கரிக்கும்.
அவற்றில் சில இனியவற்றை இங்கே பகிர்கிறேன்.
காதல் கோட்டை ஒரு சலனம் இல்லாத
காதல் கதை.
இளைய அஜீத் சாதாரணமாக நடிக்க
தேவயானி சிறந்த உணர்ச்சிகளைக் கொட்டி
சிறப்பாகச் செய்திருப்பார்.
கவர்ச்சிக்கு ஹீரா:)
கூடவே தலைவாசல் விஜய், கரண், கமலியின் தோழி,
அந்த ஹாஸ்டலில் வேலை செய்பவர் கூட
அருமையாக வசனம் பேசுவார்.
வசனங்களின் சிறப்புக்கு அகத்தியன் காரணம்.
நல்ல இசை இந்தப் படத்தின் வெற்றிக்கு
இன்னோரு வெற்றி. இதயத்தில் ஆரம்பித்து கண்ணில்
முடியும் காதல்.
கமலியின் அக்கா கணவராக ராஜீவ், அக்கா நடிகை
யாரென்று நினைவில்லை:) சபிதா?
ஜெய்ப்பூர் காட்சிகள். இந்தி பேசும் தமிழ் நடிகர்,
டெலிஃபோன் பூத் நடத்தும் மணிவண்ணன்.
ஊட்டி காட்சிகள் எல்லாமே அருமை.
இந்தப் பாடலும் மிக அழகாகப் படமாக்கப்
பட்டிருக்கும்.
கமலி ரயில் ஏறியதும் கைப்பையைப்
பறி கொடுத்ததும்,
டிக்கெட் பரிசோதகர் வரும்போது ,
எந்த இளைஞர்களைப் பார்த்து அவள் பயப்படுகிறாளோ
அவர்களே அவளுக்கு உதவுவது அருமை.
மிகப் பிடித்த சீன்.
அடுத்ததாக நான் ரசிக்கும் இன்னோரு படம்
திரு திரு துறு துறு.
++++++++++++++++++++++
த்ரில்லர்+காமெடி.
19 comments:
காதல் கோட்டை அழகான படம். தேவா அருமையாக இசை அமைத்திருப்பார். சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது பாடலும் நன்றாய் இருக்கும். எஸ் பி பி!
திரைப்படங்களுக்கே உரித்தான நாயகனும் நாயகியும் மறுபடி மறுபடி சந்தித்துக் கொள்வார்கள்.. இவர்தான் அவர் என்று ஒருவருக்கொருவர் தெரியாது. கிளைமேக்சையும் ரசிக்கலாம்.
இரண்டாவது படம் பார்த்த மாதிரியும் இருக்கிறது. சரியாய் நினைவில் இல்லை.
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
இந்தப் பாடல்கள் எல்லாமே எஃப்.எம்மில் கேட்டுக் கேட்டு ரசித்தவை.
காதல் கோட்டை பார்த்து ரசித்தது.
ஆமாம் .இருவரும் சந்திப்பார்கள். ஆனால்
தெரியாது.:0)
வெகு அருமையாகக் கதையைக்
கொண்டு போயிருக்கிறார் அகத்தியன்.
சிகப்பு லோலாக்கு பாட்டுப் போட நினைத்துப்
பதிய முடியவில்லை.
த்ரிஷா பாடலும் வானொலியில் கேட்டதுதான்.
அடுத்த படம் திரு துறு
நல்ல சுவையான விறு விறுப்பான படம். நல்ல
நைப்பு. மௌலியின் நடிப்பு சுவாரஸ்யம். ஒரு விளம்பர ஏஜென்சியை மையமாக வைத்து
எடுத்திருப்பார்கள்.
கண்டிப்பாகப் பார்க்கலாம்.
கருத்துப் பெட்டி சிறிதாக இருக்கிறது அம்மா
நல்ல ரசனையான காட்சிகள் ரசித்தேன்.
முதல் படம் அருமையான படம் அம்மா. சில காட்சிகள்தான் பார்த்திருக்கிறென். ஆனால் நன்றாக இருக்கும். முழுவதும் பார்க்க வேண்டும். அதில் பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள். வெள்ளரிக்கா பிஞ்சு அருமையான மோகனம்.
நலம் நலமறியா ஆவல் பாடலும் செம...இன்னொன்னு உண்டே சிவப்பு லோலாக்கு அதுவும் செம் பாட்டுமோஹனத்தில்
கீதா
அகத்தியன் அதன் பின் வேறு ஒரு படம் எடுத்தார் என்று நினைக்கிறேன் ஆனால் அதுக்கு அப்புறம் ஆளைக் காணவில்லை
திரு திரு துறு துறு படம்? கேட்டதில்லையே....இணையத்தில் இருந்தால் பார்க்கிறேன். திரில்லர் நா பார்க்க வேண்டும்
கீதா
இரு படங்களுமே பார்த்ததில்லை பாடல்களும்அதிகம் கேட்ட நினைவில்லை. நன்றாக இருக்கின்றன, ய்ட்யூபில் படம் கிடைக்கும் பார்க்கிறேன்
துளசிதரன்
அன்பின் தேவகோட்டைஜி,
நலமுடன் இருங்கள் அப்பா.
கருத்துப்பெட்டி சின்னதா இருக்கா. எனக்கு வழக்கம் போல் தான் தெரிகிறது அம்மா.
நன்றி மா.
அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
அகத்தியனின் படங்கள் வெவ்வேறு கோணத்தில் இருக்கும்.
பிரகாஷ ராஜ் நடித்த விடுகதையும் எனக்குப் பிடிக்கும்.
திரு திரு துறு துறு நல்ல காமெடி. கிடைத்தால் பாருங்கள். நன்றி மா.
இந்தப் பாடகளையும் கேட்டு ரசியுங்கள்.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
காதல் கோட்டை படமும் பாடல்களும் இனிமை.
அகத்தியன் 11 படங்கள் எடுத்ததாக விக்கி சொல்கிறது.
சில படங்களைத் தேடிப் பார்க்க வேண்டும்.
திரு திரு படம் குழந்தை அழகாக இருக்கும். படமும்
பாடல்களும்.
நல்ல நடிப்பு கூட.
முடிந்தால் பாருங்கள் அம்மா.
திருதிரு துறு துறு இப்பொழுதுதான் பெயரே கேள்விப்படுகிறேன். திரில் என்று சொல்லியுள்ளீர்கள்.
காதல் கோட்டை/வாலி இவை எல்லாம் பார்த்தது தொலைக்காட்சி தயவில். அருமையான பாடல்கள் தாம் அவையும். வழக்கம் போலக் கடைசி வீடியோ வரலை.:)
தேர்ந்தெடுத்து பகிர்ந்து கொண்ட பாடல்கள் எனக்கும் பிடிக்கும். காதல் கோட்டை படம் பிடிக்காது - பாடல்கள் மட்டுமே பிடிக்கும்.
அன்பின் மாதேவி.
என்றும் நலமும் சுகமும் சூழ வாழ வேண்டும்.
நல்ல படம் அம்மா அது.
அலுக்காமல் பார்க்கலாம். கொஞ்சம் த்ரில், கொஞ்சம் காமெடி,
விறுவிறுப்பு எல்லாம் கலந்த படம். பாருங்கள்.
அன்பின் கீதாமா,
நானும் தியேட்டரில் போய் படங்கள் பார்ப்பதே
விட்டுப் போனது. பிடிக்கவும் இல்லை,
இந்த இரண்டு படங்களும், எனக்கு 18 படமும்
தொலைக்காட்சியில் பார்த்தது தான் மா.
உங்களுக்கும் பிடித்தது மகிழ்ச்சி.
நலமுடன் வாருங்கள்.
அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
''தேர்ந்தெடுத்து பகிர்ந்து கொண்ட பாடல்கள் எனக்கும் பிடிக்கும். காதல் கோட்டை படம் பிடிக்காது - பாடல்கள் மட்டுமே பிடிக்கும்.''
பாடல்கள் ,அவற்றின் இசை எல்லாம் அருமைதான். படம் பிடிக்காதா:)
ஏன் மா. !!!!
Post a Comment