Blog Archive

Saturday, April 09, 2022

அன்பு நிறை இதயம்


    அனைவரும் வளமுடன் வாழ இறைவன் அருள வேண்டும்.

அன்பு நமக்கு என்றும் கிடைக்கவும், நாம் அதே அன்பை
அவர்களுக்கு அளிக்கவும் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்
என்று தினமும் உணருகிறேன்.

அம்மா  ஆர் யூ ஓகே இப்படிக் கேட்கும் முகம் அறியாத
அன்பின் கீதா ரங்கன்.

ரேவதி நலமாக இருக்கிறீர்களா என்று விசாரிக்கும் என் அன்பு கீதா சாம்பசிவம்.

அக்கா எப்படி இருக்கிறீர்கள் என்று வார்த்தையால்
அணைக்கும் அன்பின் கோமதி அரசு,

இதோ இன்று கனடாவிலிருந்து அழைத்து
நீங்கள் நலம்தானே என்று கேட்ட அன்பின் பானு வெங்கடேஸ்வரன்,

தினம் காலையில் குட் மார்னிங்க் சொல்லி என்னை நல்ல வார்த்தைகளால்
உற்சாகப் படுத்தும்  எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்,

வேர்டில் ரிசல்ட் போட்டு தினம் டிப்டோ வில் வைத்திருக்கும்
கேஜிஜி  சார்.
அன்பின் கமலா ஹரிஹரன், அன்பின் வெங்கட்,

இன்னும்  முகனூலில் இப்போது வாழ்த்திக் கொண்டிருக்கும்
நட்புகள் அனைவருக்கும் நிரம்பிய   மனதுடன் 
அன்பின் காமாட்சிமஹாலிங்கம் அம்மாவுக்கு
நமஸ்காரங்களுடன்

அன்பையும், ஆசிகளையும் சொல்லிக் கொள்கிறேன்.
குடும்பம் என்று நான் நினைத்தவர்கள்

விலகிவிட்ட (பிறந்த வீட்டின் சகோதரர்கள்) இப்போது 
உங்கள் எல்லோர் ரூபத்தில் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

பல்லாண்டுகள் நீங்கள் என்னுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.
   எங்கிருந்தாலும் என்னை வாழ்த்தும் என் கணவருக்கும் ஒரு பாடல்.

 எல்லாப் பாடல்களும் இனிமைக்காகத் தேர்ந்தெடுத்தேன்.

21 comments:

ஸ்ரீராம். said...

நமஸ்காரம் அம்மா.  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.

ஸ்ரீராம். said...

இனிய பாடல்களால் பதிவை நிறைத்திருக்கிறீர்கள்.  நெகிழ்வான வார்த்தைகளால் பதிவை நிறைப்பி இருக்கிறீர்கள்.  உங்களின் அன்பான மனமும், குணமும் எங்களுக்கு முன்மாதிரி, பூஸ்ட்.  'எல்லோரும் நலமாயிருக்கவேண்டும் என்கிற உங்கள் தினசரி வரி ஸ்பெஷல்.  இருக்கும்போதே எல்லோருடனும் மனம் விட்டு பேசி மகிழ்ந்திருங்கள், மறைத்து வைக்கவேண்டாம் அன்பை என்கிற உங்கள் அறிவுரை எங்களுக்கு டானிக்.  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.  உங்கள் ஆசிகளும் அன்பும் எங்களுக்கு கட்டாயம் உண்டு என்று தெரிந்தாலும் இந்நாளில் கிடைப்ப்பது இன்னும் ஸ்பெஷல் இல்லையா?!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும்
என் நிறை ஆசிகள்.

வாழ்வில் எல்லா நலங்களும் உங்கள் இல்லத்தில் நிரம்ப வேண்டும்.

இசையைத் தவிர வேறெந்த பரிசை
உங்களுக்கெல்லாம் நான் கொடுக்க முடியும்.
இசையும் அன்பும் நம் வாழ்வில் சேர்ந்திருக்கட்டும்.
அதுவே நான் இறைவனிடம் வேண்டுவது.
நற்சிந்தனைகளும் நல்ல வார்த்தைகளும்
நம் வாழ்வை சிறக்க வைக்கும்.
நம்பி முன்னேறுவோம்.
மாங்காட்டு அம்மன் சங்கடங்களை நீக்கி நல் வழி காண்பிப்பாள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தங்களுக்கு அன்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். (இப்போதுதான் எ.பியில் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.) நீங்கள் எந்த வித உடல் பிணிகளும் இன்றி நாளும் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்க வேண்டுமென ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். அந்த ஒரு வரந்தான் நமக்கு எப்போதும் வேண்டுமில்லையா?

பதிவு அருமையாக எழுதி உள்ளீர்கள். அன்பெனும் தாரக மந்திரம்தான் நம்மை போன்றவர்களை இணைக்கும் பாலங்கள் என நினைக்கிறேன். உங்கள் பதிவிலும், உங்கள் பதிவுக்கு தரும் கருத்துரை பதில்களிலும், என் பதிவுகளுக்கு நீங்கள் வந்து தரும் அன்பான வார்த்தைகள் என்னை நிறைய தடவை உற்சாகப்படுத்தியுள்ளது. சுருங்க கூறினால், இந்த வலைத்தளம் மூலமாக நாம் பழகிய நாட்களில் அன்பை பற்றி உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அதற்கு என் நன்றிகள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நீங்கள் பகிர்ந்த பாடலை பிறகு கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Gayathri Chandrashekar said...

அன்புள்ள வல்லிம்மா, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மா! இணையம் வழி நம்மை இணைக்கும் பாலமாய் அன்பு இருப்பது மகிழ்ச்சி மா! தங்கள் வார்த்தைகளில் தாய்மையின் வாஞ்சை நிரம்பி இருப்பதால், எங்கள் மனதும் நிறைகிறது!

Geetha Sambasivam said...

அருமையான பாடல்களால் மனதை நிறைத்து விட்டீர்கள். எல்லாப் பாடல்களுமே தேர்ந்தெடுத்தவை. முதல் பாடல் வழக்கம் போல் வரலை. ஆனால் யூ ட்யூப் சுட்டி கொடுத்திருக்காங்க. :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், மீண்டும், மீண்டும். உடல் நலனைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். ஊருக்கு வரும் ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டனவா?

கோமதி அரசு said...

வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! அனைவரையும் அன்பாய் வாழ்த்தியதற்கு நன்றி அக்கா.

பாடல்கள் அருமை.
உங்கள் அன்பு மழையில் எப்போதும் எல்லோரும் நனைந்து மகிழ வேண்டும். நீங்கள் ஆரோக்கியத்துடன், நலமுடன் பல்லாண்டு வாழ வேண்டும்.

நெல்லைத் தமிழன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

கீழநத்தம், திருக்குறுங்குடி தொடர்பு இருக்கும் உங்களை எப்படி மறக்க இயலும்? எப்போதும் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வாழ ப்ரார்த்தனைகள்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலாமா,
உங்கள் பெயரிலேயே பொறுமை பூத்திருக்கிறது.
வாழ்வின் சங்கடங்களைக் கலங்காமல்
எப்படிக் கடக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு
முன்னுதாரணம்.
உங்களின் வாழ்த்துகள் கிடைப்பது
எனக்கு மிக மகிழ்ச்சி.

அன்பு வரமாக நம் நட்பு அமைந்திருப்பதில்
இறைவனின் பங்கும் இருக்கிறது.

நாம் இவ்வுலகில் இருக்கும் வரை
உலகைக் கடந்த பின்னும் இந்தப் பாசம் நீடிக்கும்.

அன்பு நிறைந்த உங்கள் உரைக்குச் சமமான
பதில் சொல்ல முடியாமல் திகைப்பு.
எல்லோர் வாழ்விலும் மங்கலம் நிறையட்டும். மக்களும் மனையும்

சிறக்க இறைவன் நம்முடன் இருக்க வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் காயத்ரி சந்திரசேகர்,
என்றும் நலமுடன் இருங்கள்.

எத்தனை அழகான அருமையான வாழ்த்து.
அன்பும், கனிவும் தான்
உலகில் அனைவருக்கும் தாராளமாக
வழங்கக் கூடிய உணர்வுகள்.
நாம் எல்லோருமே நலமுடன்
இருப்போம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்ப்ன் கீதாமா,
எப்போதும் நலமாக இருக்க வாழ்த்துகள்.

பழைய இசை ஒன்றுதான் எனக்குத் தெரிந்த ஒன்று. அதிலும்
கசமுசா என்று நடிப்பு இருந்தால்
படமாகப் பதிவதில் சங்கடங்கள் வந்துவிடுகின்றன.:)
பப்ளிஷ் செய்த பிறகுதான் அந்தப் பாடல் வராததைக் கவனித்தேன்.
வழக்கம் போல், யூ டியூப் போய்ப்
பார்க்க வேண்டி வருகிறது.

இறைவன் விக்னேஸ்வரன் தயவில் டிக்கெட்
பதிவு செய்து வாங்கியாச்சு.
ஜூலை மாதம் வர வேண்டும்.
எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும்.
உச்சிக் கோட்டை பிள்ளையார் விளக்கைப்
பார்க்க வேண்டும்.
உடல் நிலையைக் கட்டுக் கோப்பாகக்
கவனித்து யாருக்கும் சங்கடம்
இல்லாமல் போய் வரவேண்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன் என் அன்புத் தங்கச்சி.
இன்று மிக நல்ல நாளாக நட்புகள் உறவுகளுடன் கடந்து கொண்டிருக்கிறேன்.
அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் ஆதரவும் நிறையட்டும்.
எப்பொழுதும் நலமுடன் இருங்கள்.
நமக்கு அது மட்டுமே தேவை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா.
ஆமாம் மா. நம் வேர்கள் நம்மைப் பிணைக்கின்றன.
கீழ நத்தம் ஸ்ரீ வேணுகோபாலனும்
திருக்குறுங்குடி நம்பியும் நம்முடன் எப்பொழுதும் இருந்து
நம்மைக் காக்க வேண்டும். தங்களுக்கு
அவர்களின் தரிசனம் எப்பொழுதும் கிடைக்க வேண்டும்.
நன்றி மா. எப்போதும் நலமுடன் இருங்கள்..

Thulasidharan V Thillaiakathu said...

வல்லி அம்மா உங்கள் பிறந்தநாளன்று உங்கள் ஆசிகளை வேண்டி நாங்கள்.

நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடன் இருந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறோம். மனமார்ந்த வாழ்த்துகள்!

உங்கள் அலர்ஜி பிரச்சினை இப்போது தேவலாமா?

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

ஓ அம்மா நான் மிஸ்ட் யுவர் டே!! தாமதமான வாழ்த்துகள் என்று சொல்வதை விட உங்களிடம் ஆசி கோரி உங்களுக்கு நமஸ்காரங்கள்.

உங்களின் பாசிட்டிவ் வைப் தான் எங்கள் எல்லோருக்கும் டானிக்.

என் பதிவில் கூட மூத்த பதிவர்கள் என்று சொல்லியிருக்கிறேன். அதாவது நினைவுகளைப் பகிர்வது வீடியோக்கள் பகிர்வது இதெல்லாம் தான் பொக்கிஷங்கள் உற்சாகமாய் வைத்துக் கொள்ளும் ஒரு விஷயம். நீங்கள் எங்கள் எல்லோருக்கும் முன்னுதாரணம்!

இறைவனிடம் எப்போதும் நம் நட்புகள் அனைவரையும் நினைத்துச் சொல்லுவது எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று.

உங்கள் உடல் நலம் சந்தோஷத்திற்கு எப்போதும் பிரார்த்தனை, அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாப் பாட்டுகளும் சூப்பர் அம்மா

உங்கள் நேரம் மாறிவிட்டது இல்லையா...இன்றுதான் தெரிந்து கொண்டேன் அம்மா.

கீதா

வெங்கட் நாகராஜ் said...

நமஸ்காரம் வல்லிம்மா. தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...... எல்லா நாட்களும் இனிதாக அமையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்.
என்றும் நலமுடன் இருங்கள். தாமதமாகப் பதில் சொல்வதற்கு
மன்னிக்கணும்.
என் அலர்ஜி எவ்வளவோ தேவலை.
முகத்துடன் நிற்கிறது:)
தேங்காய் எண்ணெய் ஒன்று தான் மருந்து.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.
நீங்கள் என்றுமே அம்மாவின் நலம் விரும்பி.
பிறந்த நாள் ஜஸ்ட் ஒன் மோர் டே:)
அதனால் ஒண்ணும் நஷ்டம் இல்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

என் பதிவில் கூட மூத்த பதிவர்கள் என்று சொல்லியிருக்கிறேன். அதாவது நினைவுகளைப் பகிர்வது வீடியோக்கள் பகிர்வது இதெல்லாம் தான் பொக்கிஷங்கள் உற்சாகமாய் வைத்துக் கொள்ளும் ஒரு விஷயம். நீங்கள் எங்கள் எல்லோருக்கும் முன்னுதாரணம்!""

Thank you Dear Geetha Rangan.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.

நானுமே பல பதிவுகளைப் படிக்காமல் இருக்கிறேன். மீண்டும்
ஆரம்பிக்கணும். நன்றி மா.