Blog Archive

Monday, April 11, 2022

ஸ்ரீராம பாதுகை

வல்லிசிம்ஹன்
எல்லோரும் என்றும் நலமுடன் வாழ வேண்டும்.
ஸ்ரீராம நவமியில்  பிரத்யேக அர்ச்சனை ,ஆராதனை

கண்டருளும் நம் ராமன் என்றும் மனதில் 
இருந்து ரட்சிக்க வேண்டும்.
   ஸ்ரீராமனை விட அவன் பாதுகைகளுக்கு 
அத்தனை மகிமை.
அவனுடைய பிரதி நிதியாக அயோத்தியைப்
பதினான்கு  ஆண்டுகள் சுபிஷமாக ஆண்ட 
பாதுகைகளின் மகிமையைப்
பரதனும் சத்ருக்கினனும் அனுபவித்தார்கள்.
நம் ஸ்வாமி தேசிகன்  ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்
என்று ஆயிரம் ஸ்லோகங்களை ஒரே
இரவில் எழுதி முடித்ததாக  மாமியார்  சொல்வார்.

ஸ்ரீராமனின் பாதுகைகளைப்  பாதுகா தேவி என்றே
அழைக்கிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகர்.


 பாதுகா ஸ்லோக மந்திரங்களில் 
முக்கியமாகச் சொல்லப் படும்  ஸ்லோகத்தில் பின் வருமாறு
வரும்,
 ஸ்ரீரங்க நாத மணி பாதுகைகளே, (ஸ்ரீ ராமனின் மிருதுவான பாதங்களை
அலங்கரித்த) காரணத்தால் உன்னை நினைப்பவர்களின் தலை எழுத்தத்
தங்கத்தால் எழுதியது போல மாற்றி விடுகிறாய்.

நல்ல சிந்தனை இல்லாதவர்களுக்கு எட்டாத தொலைவுக்குச் சென்று விடுகிறாய்.
இது போலச் செய்ய உன்னால் மட்டும் தான் முடியும்.
உன் (பாதுகை) மணி ஓசைகளால் பெருகும்
இசை அகத்திலும் புறத்திலும்
நன்மைகளைப் பெருக்கும். 
ஸ்ரீராமன் அடியிணையை அடைந்தவர்களை என்றும் 
பாதுகாப்பாய்.
ஸ்ரீராமன் திருவடிகளே சரணம்.


நமக்கு அவை தமிழிலும் கிடைப்பதால் அனுபவிக்க
முடிகிறது. இந்த விஷயத்தில் லிஃப்கோ பதிப்பகம் செய்திருக்கும்
சேவை சொல்லற்கரியது.




நாடிய பொருள் கை கூடும்
ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும்
வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை
நீறுபட்டழிய வாகை 
சூடிய சிலயி ராமன்
தோள்வலி கூறுவோர்க்கே.

கமலை நோக்கு   லக்ஷ்மி கடாக்ஷம்








13 comments:

ஸ்ரீராம். said...

பாதுகையின் சிறப்பு அறிந்தேன்.  நைமிசாரண்யம் சென்றபோது பரதன் பாதுகையை வைத்து அரசாண்ட காட்சிகள் அங்கு சிலை வடிவில் இருக்கக் கண்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

என்றும் நலமுடன் இருங்கள்.
எங்கள் வீட்டில் மடத்து ஆச்சாரியர்கள்
பாதுகைகளை வைத்து பூஜிப்பது வழக்கமாக இருந்தது.
துவாதசி அன்று செய்வோம்.
நான் அங்கே இல்லை என்பதால், மச்சினர்
வீட்டுக்கு அவை சென்றன.
பாதுகா சஹஸ்ரத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும்
ஒரு ஸ்லோகம் இருக்கும்.
ராமனை விட அவன் பாதுகை உயர்ந்தது
என்று வேதாந்த தேசிகர் சொல்வார்.

நெல்லைத்தமிழன் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

இன்னும் பாதுகா சஹஸ்ரம் படிக்கலை. படிக்கணும் என்ற எண்ணம் வருகிறது,

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
கண்டிப்பாக ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் சேவிக்கலாம்.
ஸ்ரீ தேசிகர் சொன்னது ஸ்ரீரங்க நாதருடைய
பாதுகைகளைப் பற்றித்தான்.
எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த மாஸ்டர்
ஸ்ரீராமனக் குறித்தும் சொல்வார்.

கோமதி அரசு said...

பாதுகையின் சிறப்பு மற்றும் பாடல்கள் அருமை.
சம்பூர்ண ராமாயணம் பாடல் மிக அருமை.
பாதுகையே சரணம். இறைவனின் பாதாரவிந்தங்களே சரணம்.


//நாடிய பொருள் கை கூடும்
ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும்
வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை
நீறுபட்டழிய வாகை
சூடிய சிலயி ராமன்
தோள்வலி கூறுவோர்க்கே//

ராம நாமம் அனைத்தும் தரும்.
அபிஷேக காட்சிகள் அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

பாதுகா சஹஸ்ரம் பற்றி நன்றாக இருக்கிறது அம்மா. புகுந்தவீட்டிற்கு வந்த பிறகுதான் இதெல்லாம் அறிந்தது.

ஆனால் கற்றதில்லை.

காணொளிகளும் நன்றாக இருக்கிறது

கீதா

Geetha Sambasivam said...

பாதுகா சஹஸ்ரம் படிக்கணும் என்னும் ஆவலை உண்டாக்கி விட்டீர்கள். அந்தப் பாதுகைகளே சரணம். அனைவரையும் நல்லபடியாய்க் காத்து ரக்ஷிக்க வேண்டும். உங்களுக்கு மச்சினர் எல்லாம் உண்டா? சிங்கம் ஒரே பிள்ளை என நினைச்சேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
ராம நாம மகிமை எல்லோரையும்
தீயவர்களிடம் இருந்து நம்மைக் காக்கும்.

நாம் நம்பி அவனை நினைப்போம்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
ஸ்ரீராமனின் பாதுகைகள் பற்றிய ஸ்லொகங்கள் மிக உயர்வான

இலக்கியத் தரம் வாய்ந்தவை.
நீங்களும் ரசிப்பீர்கள். பெரியவர்கள், முன்னோர்களைச் சரண் அடைவதால்
எப்பொழுதுமே நம் வாழ்வு செழிக்கும்.
ரங்க நாதர் ,ரகு குல ராமனை வந்தடைந்து,
பரதனால் மேலும் சிறப்புற்றார்.
உங்களுக்கு நேரம் கிடைத்து நீங்கள் படிக்க வேண்டும்.
நன்றி மா. என்றும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்,
ஒரே இரவில் வேதாந்த தேசிகர் எழுதி முடித்ததாகச் சொல்வார்கள்.

படிக்கப் படிக்க மனம் விரிவடையும்.
இலக்கிய தரம், வார்த்தை நயம் , உள்ளர்த்தம் எல்லாமே
சிறப்பு.

அனைவரும் சுபிக்ஷமாக இருக்க வேண்டும்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மச்சினர் என்றால் சின்ன மாமியாரின் பிள்ளை.:)

வெங்கட் நாகராஜ் said...

பாதுகா சஹஸ்ரம் குறித்த சிறப்பினை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். படித்து மகிழ்ந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
குடும்பமும் நீங்களும் என்றும் நலமுடன் இருங்கள்.

ராம பாதுகைகள் என்றும் கருணை செய்யும். நன்றி மா.