சேலத்திலிருந்து கோவை வரும் வழியில்
நல்ல விலை கொடுத்து வாங்கிய ஹாமர்மாஸ்டர்
டபிள் ஃப்ளாஸ்க் உடைந்தது.இரண்டு வாக்வம் ஃப்ளாஸ்க் கொண்ட
நல்ல சாதனம். ஒன்றில் வென்னீர், மற்றொன்றில்
சில்லென்ற பால்.
எப்படி உடைந்தது என்று கேட்கக் கூடாது:)
கோவை வந்து பார்க்கும் போது ஃப்ளாஸ்க் இருக்கவேண்டிய இடத்தில் தூள்கள்
இருந்தன.
சிங்கத்தின் நல்ல குணம் எப்போதும் உதவியாக இருக்கும்.
யார்கையிலும் குத்தவில்லை. காயம் இல்லை
அதைத் தூக்கிப் போடும்மா என்று
அடுத்த இரண்டு குடுவைகள் வாங்கியாகிவிட்டார்.
அடுத்த நாள் காலை உணவுக்கு அப்புறம் உதகை மண்டலம்
வந்தோம். டிசம்பர் மாதக் குளிரும்
மழையும் வரவேற்றன.
இரண்டு குழந்தைகளுக்கும் ஸ்வெட்டர் மாட்டி விட்டு
டிராவலர்ஸ் பங்களோவில் முன்பதிவு செய்திருந்த
அறைக்கு சென்றோம்.
அப்போது தமிழ் நாடு கெஸ்ட் ஹௌஸ் என்று சொல்வோம்.
அங்கிருந்த உணவுக் கூடம் அப்போது
நல்ல புகழ் பெற்றது.
அதில் தலைமை பொறுப்பில் இருந்தவரும் சிங்கத்துக்குப்
பழக்க மானவர். அவர்களின் வண்டிகள்
சேலத்துக்குத் தான் வரும். உரிய உபசாரம் செய்து
நல்ல வாகனங்களாகத் திரும்பிச் செல்லும்.
தம்பியும் இவரும் , குழந்தைகளுக்குச் சூடான பருப்பு சாதம்
தயார் செய்து கொண்டுவந்தார்கள்.
எங்களுக்குக் காப்பியும்,மாலை வேளைக்கான
மசால் தோசையும் வந்தன.
இந்தப் பயணத்தில் நடந்த ஒரு செய்தியை முன்பே
ஒரு கதையில் சொல்லி இருந்தேன்.
ஒரு குடகு நாட்டுப் புதுமணமக்களின் கதை:)
எங்கள் வாழ்வில் சாகசங்களுக்கும்
சுவாரஸ்யங்களுக்கும் குறையே இல்லை:)
As requested by Nellai Thamizhan .@ Mural Seshan
here are the links.
https://naachiyaar.blogspot.com/2022/01/blog-post_5.html
https://naachiyaar.blogspot.com/2022/01/blog-post_4.html
22 comments:
அந்த சுவாரஸியத்துக்கு லிங்கும் கொடுத்திருக்கலாம்.
சிங்கம் நினைவு நன்று. பயணமும் நன்று.
அன்பின் முரளிமா,நலமுடன் இருங்கள்.
லிங்க் கொடுக்கலாம். அதற்கான லேபல்
என்ன என்று தெரியவில்லை மா.
தேடிப் பார்க்கிறேன்.
ஆமாம் .சிங்கம் எப்பொழுதுமே கோபிக்க மாட்டார். அடுத்து என்ன
என்றுதான் பார்ப்பார். மிக நன்றி மா.
பழைய நினைவலைகள் அருமை அம்மா.
டிசம்பர் மாதத்தில் உதகையா? அம்மாடி... குளிர் தாக்கி இருக்குமே...
//சிங்கம் எப்பொழுதுமே கோபிக்க மாட்டார். அடுத்து என்ன என்றுதான் பார்ப்பார்//
எங்கள் யோகா மாஸ்டர் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த வாக்கியம் "அதனால் என்ன? அடுத்தது என்ன?"
அது நினைவுக்கு வருகிறது.
அன்பின் தேவகோட்டைஜி
வந்து படித்துக் கருத்தும் சொன்னதற்கு
மிக நன்றி மா.
அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள் மா.
இப்போது டிசம்பரில் அவ்வளவு குளிர் இல்லை
என்றார்கள் என் தோழியும் கணவரும்.
அவர்களுக்கு அங்கே ஒரு டைம் ஷேர் இருக்கிறது.
எல்லாம் மாறிக் கொண்டு வருகிறது.
அப்போது நல்ல குளிர்தான்.:)
நன்றி மா.
ஆமாம் மா ஸ்ரீராம்.
அசரவே மாட்டார். வாழ்வில் அத்தனை நேர் எண்ணம்.
So what .move on"
இதுதான் அவர் சொல்லும் சொற்கள்.
மிக நன்றி மா. யோகா நன்மை தரட்டும்.
இனிமையான பயணம். நினைவுகளிலிருந்து சொல்லும் விஷயங்கள் அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் பயணம்... நானும் தொடர்கிறேன்.
அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.
என்னால் நினைவுகளை ரசிப்பது எப்பொழுதும்
சுலபம்.
தொடர்வதற்கு நன்றி மா.
அனுபவங்களை அழகாக, சுருக்கமாக சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டது போன்ற டபிள் பிளாங்க் எங்கள் வீட்டில் கூட இருந்தது. அது அடைந்ததை பொருட்படுத்தாத உங்கள் கணவரின் குணம் போற்றத்தக்கது.
அம்மா பயணம் இனிமை. ஆமாம் அம்மா நடந்தது நடந்தாச்சு அதை போஸ்ட் மார்ட்டம் செஞ்சு என்ன யூஸ். அடுத்து என்ன என்று யோசித்தால் காரியம் நடக்கும் கோபமும் வராதுதான். ஆனால் சில சமயம் அப்படி நடப்பது திரும்பப் பெற இயலாது அலல்து உடனே செய்ய முடியாது எனும் போது இயலாமை கோபத்தை ஆதங்கத்தை வரவழைக்கும் தான்...
அப்போதே டூ இன் ஒன் ஃப்ளாஸ்கா!! அட...
கீதா
ஆமாம் அந்த புதுமணத் தம்பதிள் பத்திய கதை நினைவுக்கு இருக்கு. உங்கள் ரூமிற்குள் தள்ளாடி வந்து அமர்க்களம் செய்த நிகழ்வு...
கீதா
நானும் ரோஸ், வெள்ளை கலரில் டபிள்ஃப்ளாஸ்க் வைத்து இருந்தேன், பெரிய கூடையில் குழந்தைகளுக்கு வேண்டியதை தூக்கி செல்வோம்.
பழைய நினைவுகளை மிக அருமையாக சொல்லி வருகிறீர்கள் அக்கா.
//சிங்கத்தின் நல்ல குணம் எப்போதும் உதவியாக இருக்கும்.//
நல்ல குணம் , உயர்ந்த மனிதர்.
நாங்களும் குடும்பத்துடன் ஊட்டிக்கு குளிரில் போய் விட்டோம். மாமியார், மாமனார், மச்சினர்கள், ஓர்படிகள், கொழுந்தன் என்று.
எங்கள் வாழ்வில் சாகசங்களுக்கும்
சுவாரஸ்யங்களுக்கும் குறையே இல்லை:)
முக்கொம்பு சாகசங்கள் படித்து இருக்கிறேன்.
ஊட்டிக்கு நீங்க வந்ததுமே நானும் அந்தக் குடகுத் தம்பதிகளைத் தான் நினைச்சேன். :)))) மற்ற நாட்கள் ஊட்டியில் நன்றாகக் கழிந்திருக்கும்.
அன்பின் பானுமா.
நலமுடன் இருங்கள்.
இளமைக்கால நெடும் பயணம் அது. எல்லாமே நினைவில்.
ஃப்ளாஸ்க் உடைந்ததற்கு எனக்கு தான்
மிக வருத்தம்.
ஆரம்பமே இப்படி என்ற பயம். கணவர் பொறுமையால் நிறைய மகிழ்ச்சியாக
இருந்தது.
உடனே கோவையில் ஒரு பிள்ளையார் கோவிலில்
தேங்காய் உடைத்து விட்டுக் கிளம்பினோம்.:)
மிக நன்றி பானு.
Dear Geetha Rengan;
''ஆனால் சில சமயம் அப்படி நடப்பது திரும்பப் பெற இயலாது அலல்து உடனே செய்ய முடியாது எனும் போது இயலாமை கோபத்தை ஆதங்கத்தை வரவழைக்கும் தான்...
அப்போதே டூ இன் ஒன் ஃப்ளாஸ்கா!! அட...''
மிக உண்மை அம்மா.
குழந்தைகளோடு இருக்கும் போது அவர்களை மட்டுமே
கவனிப்பேன்.
புத்தம் புது ஃப்ளாஸ்க் அப்போதுதான் மும்பையிலிருந்து வந்திருந்தது.
அப்பாவின் சொல்படி இவை எல்லாமுடையக் கூடியவை. அதற்காக நாம் வருந்தக் கூடாது என்பதே.
மற்ற இழப்புகளை ஈடு செய்ய முடியாது.
நன்றி மா. என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம் அந்த புதுமணத் தம்பதிள் பத்திய கதை நினைவுக்கு இருக்கு. உங்கள் ரூமிற்குள் தள்ளாடி வந்து அமர்க்களம் செய்த நிகழ்வு..."
@Geetha Rangan,
😀😁😀😁😀😁😀😁 Thank you ma.
நானும் ரோஸ், வெள்ளை கலரில் டபிள்ஃப்ளாஸ்க் வைத்து இருந்தேன், பெரிய கூடையில் குழந்தைகளுக்கு வேண்டியதை தூக்கி செல்வோம்.''
@GOMATHY ARASU,
நாங்களும் குடும்பத்துடன் ஊட்டிக்கு குளிரில் போய் விட்டோம். மாமியார், மாமனார், மச்சினர்கள், ஓர்படிகள், கொழுந்தன் என்று.
நினைவில் இருக்கிறது அன்பின் கோமதிமா.
வாழ்க வளமுடன்.
நாங்கள் வைத்திருந்தது சிகப்பு வெள்ளை ஃப்ளாஸ்க்..
சிகப்பு மூடி சூடு, வெள்ளை மூடி சில்லிப்பு.
நீங்களும் அந்தப் பதிவை மீள் பதிவாகப்
பதியுங்களேன்.
'''''''''''''''''முக்கொம்பு சாகசங்கள் படித்து இருக்கிறேன்.''
நினைத்தாலே நடுங்கும் அன்பு கோமதி.
நலமுடன் இருங்கள்.
நாம் நல்ல கணவர்களை அடைந்து வாழ்ந்தது இறைவன்
கருணை.
# Geetha Sambasivam,
''ஊட்டிக்கு நீங்க வந்ததுமே நானும் அந்தக் குடகுத் தம்பதிகளைத் தான் நினைச்சேன். :)))) மற்ற நாட்கள் ஊட்டியில் நன்றாகக் கழிந்திருக்கும்.''
ஹாஹ்ஹா. கீதாமா. இப்போ தானே ஜனவரியில் எழுதி இருக்கிறேன்.
அப்போதே இந்தப் பயணப் பதிவை ஆரம்பித்திருக்க வேண்டும் .
குளிர் படுத்தின பாட்டில் எல்லாவற்றையும்
நிதானப் படுத்தினேன்.
நன்றி மா. நல்ல நலமுடன் இருங்கள்.
எங்களிடமும் அந்த இரட்டை ஃப்ளாஸ்க் இருந்தது தி/கீதா. எங்க பெண் பிறந்த உடனே ஆர்மி கான்டீனில் அதை வாங்கி மதுரை வரும்போது எடுத்து வந்து கொடுத்தார். எல்லோருக்கும் அதைப் பார்த்து அப்போ ஆச்சரியம். :)))) அது தான் குழந்தையோடு நான் சென்னை வரும்போது ரயிலில் போர்ட்டர் மூலம் தொலைந்து போக இருந்தது. பின்னர் நெடுநாட்கள் அது உழைத்தது.
எங்களிடமும் அந்த இரட்டை ஃப்ளாஸ்க் இருந்தது தி/கீதா. எங்க பெண் பிறந்த உடனே ஆர்மி கான்டீனில் அதை வாங்கி மதுரை வரும்போது எடுத்து வந்து கொடுத்தார். எல்லோருக்கும் அதைப் பார்த்து அப்போ ஆச்சரியம். :))))
இதனால் தெரிய வருவது என்ன என்றால்
அப்போதே நாம் ஒரே மாதிரி செயல் பட்டிருக்கிறோம்:)
சந்தோஷமா இருக்கு.
Post a Comment