வல்லிசிம்ஹன் என்ன சொல்லி இந்தக் குரலைப்
போற்றுவது.!!
நம் செவியை நிறைத்த குரல் இப்போது இறைவனை
நோக்கிச் சென்று விட்டது.
அவர் தொடாத துறையில்லை.
தொடாத மொழியில்லை. பக்தி, காதல்,பாசம்,தேசம்
எல்லாமே அவர் குரலால்
மகிமை பெற்றன.
வெறும் வார்த்தைகளால் அவருக்கு அஞ்சலி
செலுத்த முடியாது.
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம்.
விவித் பாரதியும் ரேடியோ சிலோனும்
நம் தாகத்தை உணர்ந்து அவர் குரலைப்
பகிர்ந்து கொண்டே இருந்தன.
இன்னமும் நாம் கேட்போம்.
அன்புச் சகோதரி லதா மங்கேஷ்கர் என்றும் நம்முடன்.
30000 பாடல்கள். !!!!!
அத்தனையையும் மீண்டும் மீண்டும் கேட்கலாம்.
வாழ்வு வளம் பெற இசை நம்முடன்.
13 comments:
தன் குரலால் இறைவனை மகிழ்விக்க சென்று விட்டார் போலும்.... மறக்க முடியாத பாடல்களை பாடி எண்ணிலடங்கா மக்களை மகிழ்விக்க செய்தவர்.....
அன்பின் வெங்கட் ,
உண்மைதான் மா.
இத்தனை தலைமுறைகளாக அத்தனை இதயங்களையும்
தன் வசத்தில் வைத்திருக்கின்றார்.
என்னாளும் மறையாத இனிமை.
ஆத்மா இறைவனிடம் ஒன்றி இருக்கும்.
இறைவனால் அனுப்பப்பட்ட அற்புதக் கொடையாளர் மீண்டும் அங்கேயே சென்று விட்டார். அவர் கொடுத்திருக்கும் பொக்கிஷங்கள் இங்கே நம்மிடம்தான் இருக்கின்றன.
மறக்க முடியாத பல விஷயங்களுக்குச் சொந்தக்காரர். அருமையான பாடகி. ஆனால் தன்னை யாரும் மிஞ்சக்கூடாது என்று இருப்பதிலும் வல்லவர். அவரையும் மீறித்தான் மற்றவர்கள் வர முடிந்தது என்பதும் உண்மை. இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்.
உண்மையே அன்பு ஸ்ரீராம்.
அவருக்குப் பிறகு நல்ல பாடகிகளும் வந்தாகிவிட்டது.
இருந்தாலும் அவருக்குத் தனி இடம் தான்.
அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.
''ஆனால் தன்னை யாரும் மிஞ்சக்கூடாது என்று இருப்பதிலும் வல்லவர். அவரையும் மீறித்தான்''
இதையும் நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவர் தங்கையே வளர முடியாமல் போனது என்பார்கள்.
சுமன் கல்யாண்பூர் இவர் மாதிரியே பாடுவார்.
70 களில் நிறைய பேசப்பட்டது.
தனது குரலால் என்றும் வாழ்வார்.
வணக்கம் சகோதரி
இனிய குரல் இனி தெய்வத்திற்கு சமர்பணமாக சென்றடைந்து விட்டது அறிந்து வருத்தம் வருகிறது. என்ன செய்வது? எல்லாம் விதிப்படிதானே நடக்கும். அவரின் இனிய பாடல்களை கேட்டு இனி மனச்சமாதானம் கொள்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அஞ்சலிகள்! லதா மங்கேஷ்கர் பற்றி அவ்வளவாகத் தெரியாது. குரல் நல்ல குரல் வளம் அது மட்டும் தெரியும் ஆனால் மற்ற பாடகிகளிடமிருந்து வித்தியாசப்படுத்தவும் தெரியாது!!! ஒன்றே ஒன்று மட்டும் சமீபத்தில் அறிந்தது அது எதிர்மறை வேண்டாம் அவர் போன பிறகு அதைப் பற்றிப் பேசக் கூடாது இல்லையா...
கீதா
கண்டிப்பாக இறைவன் அவருக்கு நல்ல குரல்வளம் கொடுத்து கடைசி வரை அவரைப் போற்றும்படி வைத்திருந்தார்!! அது இறைவனின் அருள். அவரது ஆன்மா அங்கும் பாடிக் கொண்டிருக்கட்டும்!
கீதா
அன்பின் கமலாமா,
நம் செவிக்கான இன்பம் கொடுத்தவரைப் போற்றுவோம்.
வேறொன்றும் வேண்டாம்.
அன்பின் கீதா ரங்கன் மா,
''ஒன்றே ஒன்று மட்டும் சமீபத்தில் அறிந்தது அது எதிர்மறை வேண்டாம் அவர் போன பிறகு அதைப் பற்றிப் பேசக் கூடாது இல்லையா...'
அதே தான் கண்ணா. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
மறைந்தவரைப் பற்றி நல்லதே சொல்லுவோம்.
அவர் பாடிய பாடல்களில் என்றும் வாழ்வார்.
அவர் பாடல்கள் சேகரிப்பு கேஸட்கள் வீட்டில் இருக்கிறது.
அவர் இசையால்தான் இவ்வளவு காலம் வாழ்ந்தார்.
இனியும் வாழ்வார்.
Post a Comment