Blog Archive

Sunday, February 20, 2022

பழைய பாடல்கள்.

வல்லிசிம்ஹன்

அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்.

எத்தனையோ நினைக்கிறோம்.
பேசுகிறோம். 
இங்கே அலெக்ஸா. நாம் ஏதாவது சத்தமாகப் 
பேசிவிட்டால் நீ  சொல்வது புரியவில்லை. மீண்டும் கேள்
என்று சொல்லும்.

பெண்ணின் கணினி அதற்கு மேல்.
டவலே இல்லையே என்று மாடியிலிருந்து அம்மாவிடம்
 சத்தமாகப் பேரன் கேட்டால்
விசிட் பேப்பர் டவல்ஸ்.காம் என்று ஒரு குரல்
அங்கிருந்து வரும்:)

அதற்காகச் சுற்றும் முற்றும் பார்த்துப்
பேசமுடியுமா என்ன. 
இந்த யூ டியுபையே கவனிக்கலாம்.
இது நான் நினைத்தாலே அந்தப் பாட்டைப் போட்டு விடுகிறது!!

இது எப்படி என்று புரியவில்லை.
வாய்ஸ் அக்டிவேட் கூட செய்ய வில்லை.
முன்னால் தேடி இருக்கிறேனோ 
என்று பார்த்தால் அங்கேயும் இருக்காது.
கொஞ்சம் அதிர வைக்கும் இணையம் 
என்று தான் சொல்ல வேண்டும்.:)
அடுத்தது கை ராசி படப்பாடல்.
ஒரு வேளை முன்பு அன்பு மதுமிதா பேட்டியில் சொன்னதை 
இது 
ரெகார்ட் செய்திருக்குமோ:)


சின்னத்தம்பி விரும்பிக் கேட்கும் பாடல்களில் 
சிவாஜி கணேசன் கண்டிப்பாக இருப்பார்!!
அதுபோல அவன் கேட்கும் பாடல்கள் 
இரண்டு.
அம்மாடி பொண்ணுக்குத் தங்கமனசும்

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் ........




அதன் பிறகு சுசீலா அம்மாவின் குரலில்
பாலும் பழமும் படப் பாடல்.
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா??
மிக மிக அருமையான கவிதை வரிகளுடன்

உணர்ச்சி ததும்ப  அவர் பாட நாம் கேட்கும் 
இந்த அருமை கொடுத்த இறைவனுக்கு நன்றி.


தங்கப் பதுமை என்று சிவாஜி பத்மினி 
படம் ஒன்று வந்தது. பாடல்களும் சோகமும்
சிறந்த நடிப்பும் ஒன்று சேர்ந்த உணர்ச்சிக் கலவை:)

அதில் வரும் ஆரம்பம் ஆவது பாடலை தம்பி பாடுவான். 
அதை இங்கே பதியப் போவதில்லை:)

இன்னோரு சந்தோஷப் பாடலைப் பதிவிட்டு
இந்தப் பதிவைப் பூர்த்தி செய்கிறேன்,.
அனைவரும் வாழ்க வளமுடன்.




22 comments:

ஸ்ரீராம். said...

இனிய பாடல்கள். நினைத்ததை யு டியூப் கொண்டு வருகிறதா?  ஆச்சர்யமாக இருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இணையத்தில், இப்போதைய கூகுள் காலத்தில் ரகசியம் என்பதே இல்லை!! அதுதான் உண்மை

என் மகன் சொன்னான் மிச்சிகன் யுனிவெர்சிட்டியில் உள்ள ஐடி மக்கள் சொன்னார்களாம் கூகுள் க்ரோம் வேண்டாம் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பயன்படுத்துங்கள் என்று. ப்ரௌசர் எட்ஜ் தான் அவன் பயனப்டுத்துகிறான் என்னையும் எட்ஜ் ல யூஸ் பண்ணு என்றான். என்னிடமும் எட்ஜ் இருக்கு...அதிலும் கூகுள் பேஜஸ் வருமே!!!

//அதற்காகச் சுற்றும் முற்றும் பார்த்துப்
பேசமுடியுமா என்ன.
இந்த யூ டியுபையே கவனிக்கலாம்.
இது நான் நினைத்தாலே அந்தப் பாட்டைப் போட்டு விடுகிறது!!//

ஹாஹாஹா....ஆச்சரியம். நீங்கள் அடிக்கடி சிவாஜி படப் பாடல்கள் அல்லது அந்தக்கால பாடல்கள் போடுகிறீர்கள் என்று உங்கள் ஆர்வத்தை நோட் செய்திருக்கும்...எனக்கு நான் ஒரு நாள் ஏதேனும் ஒரு வீடியோ பார்த்தால் அடுத்த நாள் அது கூகுளில் அதற்கு ஒத்திசைவான வீடியோ ஒன்றை நானே மனதுள் நினைத்திருப்பேன் பார்க்க வேண்டும் என்று ஆனால் அது தந்துவிடுகிறது...

ஆர்ட்ட்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் கும் அப்படித்தான் நான் பார்த்த வீடியோ வை வைத்து அது கணித்து அடுத்த நாள் ஏ ஐ யில் புதிய வரவு ஒன்றை எனக்கு அறிமுகப் படுத்தியது!!!!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள் அம்மா...

கீதா

Bhanumathy Venkateswaran said...

எல்லாமே மிகவும் இனிமையான பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

அதிசயமாக இருக்கிறது இல்லையா.
இந்தப் பதிவில் நான் தங்கப்பதுமை படம்
பற்றி எழுத நினைத்து யூடியூப் பக்கம்
போனபோது ஏற்கனவே (கீழே கீதா ரங்கன் சொன்னது போல)

அங்கே தங்கப் பதுமையின் இன்னோரு பாடல் இருந்தது.

most probably I might have searched for the same movie long back.)

உண்மையில் புரியாத புதிர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
ஹாஹா.ஹை ஃபைவ்!!.

என்றும் நலமுடன் இருங்கள் அம்மா.
ஆமாம் இங்கே வீட்டில் எட்ஜ் தான் பயன்படுத்துகிறார்கள்.
எனக்கென்னவோ கூகிள்
பிடிக்கிறது.:)
ஜிமெயிலில் தம்பிகள் எழுதின கடிதங்கள் இருக்கின்றன.
அதனால் மாற விருப்பம் இல்லை.
ஏஐ முன்னால் எப்பவோ படித்தது.
ஆட்டோமாட்டிக்காக நம்மைப் பதிந்து கொள்கிறது என்று நினைக்கிறேன்.

நல்ல வேளை நம் கையெழுத்தைக்
காப்பி அடிக்காமல் இருந்தால் சரி.
உங்கள் மகன் சொல்வது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.
மிக நன்றி கீதாமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா,
நம் இண்ட்டெலிஜென்ஸ் ஆர்டிஃபிசியல் ஆகாமல் இருந்தால் சரி.
பாடல்களை ரசித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,
வந்து கேட்டு ரசித்ததற்கு மிகவும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! மனம் மயக்கும் பாடல்கள்...

மாதேவி said...

இனிய பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
உண்மையிலேயே இனிய பாடல்கள்.
தேய்ந்து ஒலித்தது ஒரு பாடல் மன்னிக்கணும்.

Geetha Sambasivam said...

ஆஹா! அருமையான பாடல்கள். அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்களும் கூட. நீங்க கூகிளின் திரைப்படத் தேர்வு பற்றிப் பாராட்டுவது போலவே எனக்கு என்னோட பதிவுப் பக்கங்களில் ஐடியாஸிலும் முகநூலிலும் அடிக்கடி நடக்கும். பழைய வாஷிங் மிஷின் வீணாகிவிட்டது எனப் புதிசாக வாங்கினோம். அதுக்கு எப்படித் தெரியுமோ! மறுநாள் முகநூலில் வாஷிங் மிஷின் பற்றிய பல தகவல்கள்!

Geetha Sambasivam said...

அலெக்ஸா பற்றிப் பலரும் சொல்கிறார்கள். எழுதுகிறார்கள். நான் இன்னும் அலெக்சாவை எதுவும் கேட்டதில்லை. எங்க பையரும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் தான் பயன்படுத்தச் சொல்கிறார். எனக்குக் க்ரோம் பழகி விட்டது. மாற்றிக்க முடியலை.

Geetha Sambasivam said...

எப்போவானும் தவற விட்ட சீரியலைத் தேடிப் பார்க்கப் போனால் அது வரவே வராது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பொதுவாக ஈடுபாட்டுடன் தொடர்கள் பார்ப்பதில்லை என்பதால் ஒண்ணும் பிரச்னை இல்லை. பொழுது போகணுமே என்பதற்காகப் பார்ப்பேன். செய்ய வேண்டிய எத்தனையோ வேலைகள் இருக்கின்றன. மனம் பதியவே இல்லை. ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது. சோம்பேறி ஆகி விட்டேன். :(((((

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,
பதிவு எழுதும்போது பக்கத்துலயே , தமிழில் கேள்வி பதில்
எப்படி வரும்னு ஐடியா இருந்தது. அதற்கு முதல் நாள் கேள்விக்கென்ன பதில்
பதிவு போட்டிருந்தேன்:)
எப்படியோ கூகிளார் நம்முடன் பயணிக்கிறார் என்று எடுத்துக் கொண்டு விட்டேன்.
வாஷிங்க் மெஷின் பற்றி
யோசனை சொல்லித்தா ஹஹ்ஹா.!!!!!!????
நல்ல டிராக் சிஸ்டம் தான்!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
ஒரு வருஷமா எழுதவில்லையா. எங்களுக்குத் தான் நஷ்டம்.

எவ்வளவோ விஷயங்கள் தெரியுமே உங்களுக்கு.
சமிபத்தில் பரவாக்கரை போய் வந்ததை எழுதினீர்கள்.
தேன் குழல் குஞ்சுலுவுக்கு செய்து கொடுத்ததையும் எழுதி
இருந்தீர்கள். எனக்கு நினைவில்
இருக்கிறது.

உடம்பு சரியாக இல்லாவிட்டாலும் மனம் ஓய்ந்து
போகும். எழுதினால் பழைய உற்சாகம் வரும் அம்மா,.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
எப்பொழுதும் உடல் நலத்துடன் இருக்கவும். அலெக்ஸாவை
சத்தம் இல்லாமல் செய்துவிட்டோம். திடீரென்று
பாட ஆரம்பித்து விடுகிறது.:)

இங்கே மாப்பிள்ளை எட்ஜ். நான் எப்பவும் கூகிள் தான்!!!!

கோமதி அரசு said...

பாடல்கள் எல்லாம் மிக அருமையான, இனிமையான பாடல்கள்.

மலரும் நினைவுகளும் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

உடல் நலம் தேவலையா.
பதிவுக்கு வந்து பாடல்களை ரசித்ததற்கு மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

அலெக்சா - :) நீங்கள் சொன்ன விஷயங்கள் புன்னகைக்க வைத்தது.

பாடல்களை பொறுமையாக கேட்க வேண்டும். பிறகு வந்து கேட்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் என்றும் நலமுடன்
இருங்கள்.
அலெக்ஸா வந்த புதிதில் ஒரே கோலாஹலமாக
இருந்தது.:)

அது பாட்டுக்குப் பேசிக் கொண்டே இருக்கும்.
There is package at the door!! நு எல்லா விஷயங்களையும் சொல்லும்.
செக்யூரிட்டி காமராவோடு இதற்கும் கனெக்ஷன்
இருப்பது அப்போதுதான் தெரிந்தது!!!!


இப்போதெல்லாம் வெதர் கேட்க மட்டும்
அதுவும் தப்புத்தப்பா.... சொல்வதை அவ்வப்போது கேட்கிறோம்:)

ரொம்பப் பேருக்கு அலெக்ஸா நல்ல தோழி!!