வல்லிசிம்ஹன்எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
ஏன். எதற்கு, எதனால் என்ற கேள்விகளுக்கு எல்லா வேளைகளிலும் பதில்
கிடைப்பதில்லை.
பல விசாரங்களும் விசாரணைகளும் பயன் தராமல் இருக்கும்.
சில கேள்விகளுக்கு. உரியவர் களிடமிருந்தோ
இல்லை. குருவினடமிருந்தோ பதில் கிடைக்கலாம்.
குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு இப்போது கூட பதில்
சொல்ல முடியவில்லை என்னால்.
பல விசாரங்களும் ஆய்வுகளும். பதில் கிடைக்காமலேயே மறைகின்றன.
நாம் வளர்ந்த போது. பெரியவர்கள் சொல்வார்கள்
அதன்படி நடப்போம்.
ஆராய வேண்டும் என்று தோன்றியதில்லை.
இப்போது அப்படி இல்லை. பிறக்கும் போதே ஆராய்ந்து கொண்டே
பிறப்பார்கள் என்று தினைக்கிறேன்:)
எழுதி வைத்த அத்தனையும் காணோம்:)
பரவாயில்லை. பாடல்களைக் கேட்கலாம்.
வானம்பாடி என்று கவிஞர் எடுத்த படம்.
பாடல்களில் இனிமை சொல்லி முடியாது. அதிலிருந்து ஒரு கேள்வி
பதில் பாடல்.
ஆயிரத்தில் ஒருவன் படம் வந்த போது
மதுரை திமிலோகப் பட்டது. அதன் கருத்து, படம் எடுக்கப் பட்டவிதம்
வாலியின் பாடல்கள் எல்லாமே
அருமை.
அதில் வந்த பாடல் ஏன் என்ற கேள்வி.
சிறப்பாகப் படம் பிடித்திருப்பார்கள்.
17 comments:
ஆம் இன்றைய குழந்தைகளுக்கு அபரிதமான கேள்வி ஞானம் இருக்கிறது அம்மா.
//பல விசாரங்களும் ஆய்வுகளும். பதில் கிடைக்காமலேயே மறைகின்றன.
நாம் வளர்ந்த போது. பெரியவர்கள் சொல்வார்கள்
அதன்படி நடப்போம்.
ஆராய வேண்டும் என்று தோன்றியதில்லை.//
நன்றாக சொன்னீர்கள் அக்கா.
மனதில் தோன்றிய சில கேள்விகளுக்கு சில நேரம் பதில்கள் கிடைப்பது இல்லை.
தியானம் செய்து அமைதியாக இருந்தால் நம் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்கிறார்கள். அமைதியான மனம் வேண்டுமே ! தியானம் செய்ய . அலைபாயும் மனதை முதலில் அமைதி படுத்தி விட்டு கேல்விகளுக்கு விடையை பெற வேண்டும்.
பகிர்ந்த பாடல்கள் எல்லாம் மிக அருமையான பாடல்கள் கேட்டேண் அக்கா.
ஒரு வீடியோ வரலை. மற்றவை நன்றாக இருக்கின்றன. எல்லாமே அந்தக் கால கட்டத்தில் மிகவும் ரசித்தவை.
அம்மா நீங்கள் சொல்லியிருப்பது டிட்டோ...செய்திகிறென். இப்போதைய தலைமுறை நிறைய சிந்திக்கிறார்கள். எதையும் கண்மூடித்தனமாக ஏற்பதில்லை. கேள்விகள் கேட்கிறார்கள்.
(நானும் அப்படித்தானே இருந்தேன்!!!! ஹாஹாஆ)
என் மகனும் நிறைய கேள்விகள் கேட்பான். நான் சொல்லும் சில பதில்கள் முன்னே அவன் எடுத்துக் கொண்டதை இன்னும் வளர்ந்ததும் அதை ஆராய்ந்து இப்போது அவனே அறிவியல் லாஜிக்கல் என்று பதில் சொல்கிறான். நிறைய யோசிக்கிறான். பல பதில்களுக்கு எனக்கு அட இது கரெக்ட்டாதன் இருக்கு என்று தோன்றுகிறது. சில எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஹாஹாஹா
நீங்கள் இங்க பகிர்ந்திருக்கும் பாடல்களில் என் கேள்விக்கென்ன பதிலும், ஏன் இந்தக் கேள்வி இந்த இரு பாடல்களும் தான் நிறைய கேட்டிருக்கிறேன் மற்றவை இப்போதுதான் கேட்கிறேன் அம்மா
கீதா
வணக்கம் சகோதரி
நல்ல பதிவு.
எல்லா கேள்விகளுக்கும் இன்னமும் விடை தெரியாமல்தான் நிற்கிறோம்.
/பல விசாரங்களும் ஆய்வுகளும். பதில் கிடைக்காமலேயே மறைகின்றன.
நாம் வளர்ந்த போது. பெரியவர்கள் சொல்வார்கள்
அதன்படி நடப்போம்.
ஆராய வேண்டும் என்று தோன்றியதில்லை.
இப்போது அப்படி இல்லை. பிறக்கும் போதே ஆராய்ந்து கொண்டே
பிறப்பார்கள் என்று தினைக்கிறேன்:)
தாங்கள் சொல்வது உண்மை. அப்போது நாம் ஏதாவது கேள்வி கேட்டு பெரியவர்கள் எது சொன்னாலும், மறுபேச்சு கேள்விகள் கேட்டு பதிலை எதிர்பார்த்ததில்லை. இப்போது குழந்தைகளிடமிருந்து நிறைய கேள்விகளுக்கு பதில்களை கற்றுத் தெரிந்து கொள்கிறோம். அவர்களும் நம்மைப் போல கேள்விகளை நம்மிடத்தில் கேட்பதில்லை. கேள்வியையும் பதில்களையுந்தான் அவர்களே புரிந்து வைத்திருக்கிறார்களே ....!!!!
கேள்வி சம்பந்தப்பட்ட பாடல்கள் அனைத்தும் அருமை. வானம்பாடி படத்தின் கேள்வி பதில் பாடலும் நன்றாக இருக்கும்.எல்லாப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். இப்போதும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்றைய குழந்தைகள் புத்தகங்கள் குழந்தை சானல்கள், என நிறையவே கற்றுக் கொள்கிறார்கள் அவர்களுக்கு எழும் கேள்விகளும் அதிகம் நாங்கள்தான் இன்னும் படிக்கவேண்டி இருக்கிறது இங்கும் என் நிலை
இதுதான் :)
நீங்கள் பகிர்ந்து பாடல்கள் அருமை.
அன்பின் தேவ கோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள். தாமதமாகப் பதில் சொல்வதற்கு
வருத்தம்.
நம் மக்கள் கொஞ்சமாகக் கேள்வி கேட்டால்
அவர்களுடைய குழந்தைகள்
இன்னும் அதிகமாகக் கேட்கிறார்கள்.:)
பிஞ்சிலேயே பழுத்துவிடும் அறிவு.
மிக மிக நன்றி மா.
அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
''நன்றாக சொன்னீர்கள் அக்கா.
மனதில் தோன்றிய சில கேள்விகளுக்கு சில நேரம் பதில்கள் கிடைப்பது இல்லை.
தியானம் செய்து அமைதியாக இருந்தால் நம் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்கிறார்கள். அமைதியான மனம் வேண்டுமே ! தியானம் செய்ய . அலைபாயும் மனதை முதலில் அமைதி படுத்தி விட்டு கேல்விகளுக்கு விடையை பெற வேண்டும்.''
ஆஹா ...தியானம் கைவந்து விட்டாலும்ம்ம்ம்ம்.
நமக்கு என்று துணை இருந்த போது,
மற்ற பக்தியும் தியானமும், யோகமும்
கைகூடியது.
இப்போதும் ஏதோ நடக்கிறது. அலை பாய்தல்
நிற்கவில்லை.
சமாளிப்போம்.
குழந்தைகள் நலத்துடன் இருக்கட்டும். நன்றி மா.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம் பாடல்கள் வந்த காலத்தில்
அமைதியாக ரசிக்க முடிந்தது.
இப்போதும் ஒன்றும் குறைவில்லை:)
நன்றி மா.
அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் வளமுடன் இருங்கள்.
''என் மகனும் நிறைய கேள்விகள் கேட்பான். நான் சொல்லும் சில பதில்கள் முன்னே அவன் எடுத்துக் கொண்டதை இன்னும் வளர்ந்ததும் அதை ஆராய்ந்து இப்போது அவனே அறிவியல் லாஜிக்கல் என்று பதில் சொல்கிறான். நிறைய யோசிக்கிறான். பல பதில்களுக்கு எனக்கு அட இது கரெக்ட்டாதன் இருக்கு என்று தோன்றுகிறது. சில எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஹாஹாஹா''
குழந்தைகள் நிறைய படிக்கிறார்கள்.
கற்றுக் கொள்கிறார்கள். சிந்திக்கிறார்கள்.
இங்கிருக்கும் பேரன் என்னுடன்
பாடம் படிக்கிறான். அவன் புரிதல் என்னை
அதிசயிக்க வைக்கிறது.
இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக
இருக்கும் பாருங்கள்.
நன்றி மா.
அன்பின் கமலாமா,
என்றும் வளமுடன் இருங்கள்.
ஆமாம் அவர்களுக்கு சந்தேகம் வந்தால் தேடி
விடை கண்டு பிடித்து விடுகிறார்கள்.:)
''தாங்கள் சொல்வது உண்மை. அப்போது நாம் ஏதாவது கேள்வி கேட்டு பெரியவர்கள் எது சொன்னாலும், மறுபேச்சு கேள்விகள் கேட்டு பதிலை எதிர்பார்த்ததில்லை. இப்போது குழந்தைகளிடமிருந்து நிறைய கேள்விகளுக்கு பதில்களை கற்றுத் தெரிந்து கொள்கிறோம். அவர்களும் நம்மைப் போல கேள்விகளை நம்மிடத்தில் கேட்பதில்லை. கேள்வியையும் பதில்களையுந்தான் அவர்களே புரிந்து வைத்திருக்கிறார்களே ....!!!!"
இனிமேல் அவர்கள் தான் நம் ஆசான்கள்.
பேரன் சொல்லைத் தட்டாதே என்று சினிமா
வந்தாலும் அதிசயமில்லை.:)
அருமையான புரிதலுடன் தாங்கள் பின்னூட்டம் இடுவதே
சுகமாக இருக்கிறது.
மிக நன்றி மா.
அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள் அம்மா.
உங்கள் பின்னூட்டம் சிரிப்பு வரவழைக்கிறது.!!
''நாங்கள்தான் இன்னும் படிக்கவேண்டி இருக்கிறது இங்கும் என் நிலை
இதுதான் :)''
சரியாகச் சொன்னீர்கள்.
படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.
மிக நன்றி மா.
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லைதான்! எல்லாவற்றையுமே ஏன், எதற்கு எப்படி என்று ஆராய்ந்து பகுத்துணர்ந்து வாழ்ந்தால் கோடி நன்மை. இப்போதெல்லாம் தவறு என்று தெரிந்தும் சில வேலைகளை செய்ய வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயம்!
அருமையான பாடல்கள் தெரிவு.
அன்பின் ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம் மா.
நலமுடன் இருங்கள்.
நமக்கு எதற்குமே நேரம் இருப்பதில்லை என்பதுதான்
உண்மை.
செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டி
வருகிறது. கேள்விகள் கேட்கக் கூட நேரம் இல்லை.
அதுவும் உங்கள் அலுவலகக் கடமைகள்
காரண காரியங்கள் கண்டு நடப்பதில்லை.
எல்லாமே Go with the flow.
நிம்மதி வேண்டுமானால் வேறு வழிதான் பார்க்க வேண்டும்.
சொந்த வாழ்க்கையில் யோசித்து செய்யலாம்.
நன்றி மா.
என் பெண்ணுக்கு சின்னவயதில் புராணங்கள் சொல்லலாம்னு நினைத்தாலே, ஏதேனும் கேள்வி கேட்டு நம்மை யோசிக்கவைத்துவிடுவாள்... நமக்கும் எதுக்கு வம்புன்னு தோணிடும் (அல்லது நாம் ஏன் இந்த மாதிரி கேட்கலைனு இருக்கும்). உதாரணம்.. கடலிலிருந்து பூமியை வராஹ அவதாரத்தில் எடுத்தார்னு சொன்னா, அந்தக் கடல் எங்க இருந்தது என்று. நானும் நாம் ஏன் 'சோறு' என்று சொல்வதில்லை? நம்மாழ்வார் ப்ரபந்தத்தில் வருகிறதே என்றதற்கு என் பெரியப்பா, நம்மாழ்வார் அவருடைய குல ஆசாரத்தில் பாடியிருக்கிறார் என்று சொன்னார். உடனே 'ஆண்டாள்' சோறு என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறாரே என்று கேட்கத் தோணலை. கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பாரோ
ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு. நெய்யிடை நல்லதோர் சோறும்
அன்பின் முரளிமா,
நலமுடன் இருங்கள்.
பூமியைச் சுற்றி இருக்கும் கடல்.
அந்தக் கடல் உலகில் பூமியை மூழ்கடிக்கிறான் அசுரன்.
வராஹம் பூமியை மீண்டும் மேலே
கொண்டு வந்து விடுகிறது.
ஈரேழு பதினாலு உலகங்களில்
நம் பூமியும் ஒன்று இது எனக்குப் புரிந்த
விதம்.:)
சோறு நல்ல தமிழ்ப் பதமாக இருந்திருக்க வேண்டும்.
பிறகு சாதம் வந்திருக்க வேண்டும்.
நம்முடைய காசு, காஷ், காஸ் என்று மருவியது போல.
Post a Comment