Blog Archive

Monday, January 24, 2022

வெள்ளி நிலா.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.


தை வெள்ளிக்கிழமை அனைவருக்கும் நன்மைகள் தொடரட்டும்.

நிலவைத் தொடர்ந்து கண்டு வரும் இன்பமே
தனி. இந்தக் குளிர்காலத்தில் வானத்த்ன் நீல நிறம்
அதீதமாகச் சிறப்பாக விளங்குகிறது. 
கோடை காலத்தில் மேகங்கள் திரண்டு நிலவை மறைக்கும்.

மார்ச் ,ஏப்ரிலில் ஆரம்பிக்கும் மழை காலங்களில்
நிலவைக் காணமுடியாமல் வருத்தமாக
இருக்கும். அனேகமாகக் குளிர் மாதங்களிலும் இந்த
நிலைமை வரும்.
இப்போது  அதிசயமாக பௌர்ணமி நாளிலிருந்து
காட்சி தரும் நிலா அன்னை,அத்தனையும் வெள்ளி
உருக்கிவிட்டது போல தக தகவென்று
ஒளிவிடுகிறாள்.

காலையில் எழுந்ததும்   முதலில் வரும் நினைப்பு
நிலாவைப் பற்றிதான்.
மழை வராத இந்த நாட்களையும்,
மேகங்கள் இல்லாத வானையும் நன்றியுடன்
வாழ்த்துகிறேன்.



காதல் நிலவையும்  சேர்த்துக் கொள்கிறேன்:)


பாக்யலக்ஷ்மி படப் பாடல்கள்
அனைத்தும் திண்டுக்கல்லில் இருந்த போது கேட்டது.
காண வந்த காட்சியென்ன பாடல்

அப்போது புரியாவிட்டாலும், பின்னர் தொலைக்காட்சியில் பார்க்கும் போது
ரசிக்க முடிந்தது.



19 comments:

கோமதி அரசு said...

பாட்டுக்கள் எல்லாம் மிக இனிமையான பாடல்கள்.தை வெள்ளிக்கிழமை வாழ்த்துக்களும், நிலாவை பற்றி சொன்னதும் அருமை.
இங்கு வந்து நிலவை பார்க்க வில்லை.
வீட்டை விட்டு வெளியே போனால் தான் முழு நிலா பார்க்கலாம். அதிகாலை நிலா பின் பாலகணீ வழியாக பார்க்கலாம்.

ஸ்ரீராம். said...

வெள்ளிக்கிழமை எழுதி வைத்த பதிவோ?  பாடல்கள் இனிமை.  வெள்ளிநிலாவினிலே, வெண்ணிலா வானில் வரும் வேளையில், வெண்ணிலா வானத்திலே வேணுகானம் என்று வன்னிலா பாடல்களுக்கு பஞ்சமேயில்லை!

மாதேவி said...

நிலா பாடல்கள் நிறைந்து நிற்கின்றன.

வானில் நிலாவை பார்த்தாலே உங்கள் நினைவுதான் .

எனக்கும் நிலாவை பார்க்க பிடிக்கும் மனதுக்கு குளிர்ச்சிதரும் எங்கள் அம்மா இருக்கும்போது மூன்றாம் பிறை தவறாமல் பார்த்து கும்பிடுவார்.

KILLERGEE Devakottai said...

ரசனையான பாடல்கள் அம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.

கட்டிடங்கள் மறைக்கும் போதும், கிழக்கு மேற்காக
நம் வீடு அமையாத போதும்
சில சமயம் நிலா கண்ணில் படுவதில்லை.
அதுவும் இப்போது உத்திராயண காலம்
சூரியன் உதிக்கும் திசை கொஞ்சம் தள்ளியே
இருக்கிறது.
இந்தக் காரணங்களால் நாம் நிலவைக் காணமுடிவதில்லை.

ஆனால் காலை நிலவைக் கண்டிப்பாகப்
பார்த்துவிடுகிறேன் அம்மா.
என்றும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆமாம் வியாழன் இரவு வரும்வெள்ளிக்காக
இந்தப் பாடல்களைப் பதிந்தேன். நிலவும்
மெயின் காரணம்:)

நிறையப் பாடல்கள் இருக்கின்றன. வெள்ளி நிலா
பலரின் கற்பனைகளைத் தூண்டி விடுகிறது.
நாலு பாடல்கள் போதும் என்று தோன்றியதுமா.:)
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,

என்றும் நலமுடன் இருங்கள்.
நிலவைப் பார்த்தால் அம்மா நினைவுதான்
வரும். உங்களுக்கும் உங்கள் அன்னையின் நினைவும் என் நினைவும் வந்தது
மிக மிக இயற்கை. மனம் நிறை
நன்றி உங்கள் பாசத்துக்கு. மூன்றாம் பிறை என்றும் க்ஷேமம் தரும்.
நிறைய பிறைகள் கண்டு நிறை வாழ்வு வாழ வேண்டும் அம்மா.

நன்றியும் ஆசிகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
பதிவுக்கு வந்து பாடல்களை ரசித்ததற்கு மனம் நிறை நன்றி மா.

நெல்லைத்தமிழன் said...

நிலவே என்னிடம் நெருங்காதே, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், வெள்ளிநிலா முற்றத்திலே

நிலவே முகம் காட்டு,

நிலாக்காயுது,

சட் எனத் தோன்றும் பாடல்கள்.

Geetha Sambasivam said...

எல்லாம் இனிமையான பாடல்கள். எங்க படுக்கை அறைக்கு நிலவொளி வரும்போது இரவில் காத்திருந்து படம் எடுத்தேன். அந்தப் படத்தைப் போடணும்னு நினைச்சு மறந்து விடுகிறது. ஜன்னல் வழியே தெரிந்த நிலா! ஜன்னல் நிலா! பௌர்ணமி முடிஞ்சு நாளாயிட்டதால் இப்போக் கொஞ்சம் நடு ராத்திரியில் வெளிச்சம்/நிலவொளி பிரகாசிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
நலமுடன் இருங்கள்.

வெள்ளியும் நிலவும் சேர்ந்த மாதிரி
பாடல்கள் சேர்க்க நினைத்தே.
நீங்களும் பாடல்களைக் கேட்டது மிக மகிழ்ச்சி.
ஆமாம் ''இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்'' பாடல்
கூட இருக்கிறது.

எல்லோருக்கும் நிலா என்பது ஒரு ஊக்கம் தரும் உணர்வு.
நன்றிமா,.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா.
நலமுடன் இருங்கள்.

வான்மீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே
நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே''
பாட்டு நினைவுக்கு வருகிறது.
ஆமாம் இப்போது மிகத் தாமதமாகத் தான் நிலா உதிக்கிறது.

விரைவில் அமாவாசை வந்து விடும்.
நீங்கள் படம் எடுத்தீர்களா. அருமையாக வந்திருக்குமே.
படத்தைப் பதிந்திருக்கலாமே.

என் ஜன்னலும் கிழக்கு முகமாக இருப்பதால்
நிலவொளி உள்ளே வரும்.
இரவு குளிர் என்பதால் திரை போட வேண்டி இருக்கிறது.
நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

நேற்று உங்கள் பதிவு வந்ததுமே பார்த்து வாசித்துக் கருத்தும் இங்கு எழுதி வைத்துப் பப்ளிஷ் பண்ணாம போயிருக்கிறேன் ஹாஹாஹாஹா

நிலா பற்றிய பாடல்கள் முதல் பாடல் கடைசிப் பாடல் இந்த இரண்டும் மட்டுமே கேட்டிருக்கிறேன் மற்றவை இப்போதுதான் கேட்கிறேன் அம்மா.

அனைத்துமே நல்ல பாடல்கள்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நானும் நிலாவை எடுக்க முயற்சி செய்து செய்து ஹிஹிஹிஹி சரியாக வரவே மாட்டேன் என்கிறது.

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

நிலா பாடல்கள் என்றும் இனியவை...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.

வெள்ளியும் நிலாவும் சேர்ந்த தினம்
பதிவிட்டேன். நூற்றுக் கணக்கான பாடல்கள் இருக்கின்றன.

சில மிகப் பழசு. சில மீடியம் புதுசு.
என் கணக்கு 1950 யிலிருந்து ஆரம்பிக்கிறது:)
பாடல்களை ரசித்ததற்கு மிக நன்றி மா.

வெளியேவந்து ஃபோகஸ் செய்ய எனக்கும் ஆசை.
சில சமயம் வெற்றி.
உங்களுக்கும் நிலா கைவர வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
நலமுடன் இருங்கள் அப்பா.

இசை நம் வாழ்வுடன் ஒட்டியது.
நன்றி ராஜா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நிலா பாடல்கள் அனைத்தும் அருமை. கேட்டு ரசித்தேன். நிலவும் திரைப்பட பாடல்களும் என்றும் பிரியாது. எத்தனை முறைகள் கேட்டாலும் மனது சலிக்காது. அத்தனை நிலா பாடல்களுக்கும் நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலா மா, என்றும் நலமுடன் இருங்கள் அம்மா.

உண்மையே, திரைக் கவிஞர்கள் நிலா அன்னையை அநேக படங்களில்

நாயகியுடனும் நாயகனுடனும் அன்னையுடனும் இணைத்து அனுபவித்திருக்கிறார்கள்..
நாமும் இப்போது இசையுடன் அவற்றைக்கேட்டு ரசிக்கிறோம்.

என்னுடன் நீங்களும்! நன்றி மா.