Blog Archive

Wednesday, September 01, 2021

வாழைப்பூ சாண்ட்விச்!!!

செப்டம்பர் மாதம் ஆரம்பித்தாச்சு. வெய்யில் குறையலாம்.

14 comments:

ஸ்ரீராம். said...

அவர்களே செய்து அவர்களே சாப்பிடுகிறார்கள்!  முதல் வியப்பு, அரிவாளை நிமிர்த்திப் போட்டு அதில் நறுக்குவது.  இரண்டாவது வியப்பு வாழைப்பூவை அப்படி நறுக்குவது.  மூன்றாவது வியப்பு பச்சை மிளகாய் உட்பட எலலவற்றையும் எண்ணெயில் பொரித்தெடுப்பது!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
எல்லாமே என்னையும் ஆச்சரியப் பட வைத்ததுமா.
நாம் வாழைப்பூவின் இதழ்களில் உப்புமா, மோர்க்கூழ்,
மற்றும் பாட்டி கை குழம்பு சாதம் சாப்பிட்டுப்
பழகி இருக்கிறோம்.

இவர்கள் முழுப்பூவையும் உபயோகிக்கிறார்கள்.
தேங்காய் எண்ணேய் பெருக்கெடுத்த சமையல்.

என்னெய் வடிந்து போகும் வண்ணம் ஒரு பிரம்புக் கூடை.
அம்மாவும் பெண்ணும் சாப்பிடும் அழகு.

அவர்களைப் படம் எடுத்தவரும் சாப்பிட்டிருப்பார்
என்று நம்பலாம்:))
நன்றி மா.

மாதேவி said...

இந்த விடியோ ஸ்ரீலங்கா சிங்கள சமையல் என நினைக்கிறேன்.
நாங்கள் வாழைமொத்தி வெளி இதழ் மூன்று,நான்கை பிரித்துவிட்டு உப்புநீரில் கொத்திப் போடுவோம் பிழிந்து எடுத்து அதில் பொரியல்,காரப்பிரட்டல், பால் கறி செய்வோம்.
இவர்கள் கட்லட், சிப்ஸ் பிரட்டல் போல் செய்கிறார்கள்.

நெல்லைத் தமிழன் said...

இது ஸ்ரீலங்காவோ? அதிரா ஒரு முறை அப்படியே வாழைப்பூவை நறுக்கி பொரியல் செய்வதுபோல படங்கள் போட்டிருந்தார்.

நேற்றைக்கு முந்தைய தினம், வாழைப்பூவின் உள்ளே கடைசியில் வெண்மையான வாழைப்பூ பகுதியில் பாதி சாப்பிட்டேன். தண்ணீர் பக்கத்தில் இல்லாமல் சாப்பிட்டால் மென்னைப் பிடித்துவிடும்.

மிளகாயை எண்ணெயில் பொரித்தெடுத்துக் கலப்பதில் ஆச்சர்யம் இல்லை. குஜராத்திகள் மிளகாயை கொஞ்சம் வதக்கி டோக்ளா மீதோ இல்லை வேறு உணவுக்கோ தொட்டுக்கொள்ளத் தருவார்கள். சூப்பராக இருக்கும் சாப்பிடும்போது (அப்புறம் மறுநாள் வயிற்று வலி வருவதுபோலவே ஒரு ஃபீலிங் இருக்கும்)

நெல்லைத் தமிழன் said...

நாங்க சின்னப் பையன்களாக இருந்தபோது, மோர் சாதம், குழம்பை கையில் போடும்போது வாழை மடல்களைத்தான் தட்டாக உபயோகித்திருக்கிறோம். அது இல்லைனா, வாதா மர இலை. வாழை மடல் வாசனையே என்னை சின்ன வயது நினைவுகளுக்குக் கூட்டிச் சென்றுவிடும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
ஆமாம் பா. நானும் அப்படித்தான் நினைத்தேன்.
தமிழாக இருந்தால் பேசி இருப்பார்களே.

இருந்தாலும் செய்முறை புதிதாகஇருந்தது.
நாங்கள் பூவில் கள்ளன் என்று ஒரு
பகுதியை நீக்கி இட்டு செய்வோம்.
அது ஜீரணமாகாது என்று சொல்வார்கள்.

நீங்கள் சொல்லும் முறை இன்னும் சுவையாக
இருக்கிறது.
வாழைப்பூ கிடைத்தால் செய்து பார்க்கலாம்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
ஆமாம் வாழைப்பூ என்றதும் முதலில் நினைவு
வருவது அதன் மணம் தான். அதுவும் சூடாக
அதில் இட்ட உணவு மிகச் சுவை.

அடுத்தாற்போல அந்தக் கூம்பு.கடைசி கடைசியாக
அதைச் சாப்பிட எப்போதும் ஆசை.
குருத்து வெண்ணெய் போல இருக்கும்.
தொண்டையில் மாட்டிக் கொள்வது போல ஒரு உணர்ச்சி.:)

வல்லிசிம்ஹன் said...

இது ஸ்ரீலங்காவோ? அதிரா ஒரு முறை அப்படியே வாழைப்பூவை நறுக்கி பொரியல் செய்வதுபோல படங்கள் போட்டிருந்தார்.////

நீங்கள் எல்லோரும் சொல்வதைப்பார்க்கும் போது
அதிராவின் பல குறிப்புகளை
படிக்க விட்டுப் போயிருக்கிறது!!!

இந்த வாசனைகள் தான் நம் ஊரை நமக்குப்
பசுமையாக நினைவில்
வைக்க உதவுகிறது.நன்றி மா.

கோமதி அரசு said...

கள்ளன் எல்லாம் எடுக்க வேண்டாமா?
நாம் எல்லாம் அந்த வெளி மடல், மற்றும் பூவின் நடுவில் உள்ள கள்ளன் எல்லாம் எடுத்து விட்டுதான் சமைப்போம். இவர்கள் இரண்டு மடல்தான் எடுத்தார்கள் அப்படியே சமைத்து சாப்பிட்டு விட்டார்கள். அவர்கள் செய்வது எளிதாக இருக்கே!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
ஆமாம் நாம் கள்ளனை எடுத்து விட்டுத்தான் பிறகு நறுக்கி
மோரில் போட்டு வைத்திருந்து
பிழிந்தெடுத்து , பருப்புசிலியோ, பொரியலோ

செய்வோம்.
இவர்கள் செய்வது நல்ல வித்தியாசமாக
இருக்கிறது.
எண்ணெயில் பொரித்தெடுப்பதால் எல்லா வேண்டாத
விஷயங்களும் நீங்கி விடும் என்று நினைக்கிறேன் மா.

பார்க்க சுவாரஸ்யமாகச் செய்திருக்கிறார்கள்.

Geetha Sambasivam said...

புதுமையான குறிப்பு. இங்கே பாதி வாழைப்பூ இன்னமும் இருக்கு/ என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன். இந்த மாதிரிச் செய்தால் எண்ணெய் ஒத்துக்காது. பார்க்கலாம். புதுசு புதுசாத் தேடி எடுத்துப் போடறீங்க. ரசனை அதிகம்.

வல்லிசிம்ஹன் said...

அனபின் கீதாமா, நீங்கள் செய்யாததா.

வாழைப்பூ கூட்டாகச் செய்து விடுங்கள். மாமாவுக்குப் பிடித்தால்!

இங்கே எண்ணெய் சமாசாரம் செல்லுபடியாகாது.:)

புதுசாக் கண்ணில் பட்டால் பதிகிறேன் மா.பெரிசாக ஒன்றும் இல்லை.நன்றி மா.

Geetha Sambasivam said...

வாழைப்பூக் கூட்டுத்தான் பண்ணினேன். ரசம் வைச்சு அப்பளம் பொரித்துக் கொண்டோம். அதுவே ரொம்ப ஹெவியாகி விட்டது. :(

வல்லிசிம்ஹன் said...

கீதாமா,
இன்னும் உணவு கொடுப்பவர்கள்
வரவில்லையா.
நிற்பதால் கால்வலி வரப்போகிறதே.
பத்திரமாக இருங்கள்.