எப்பொழுதுமே அபிநயம், நாட்டியம் என்று புன்னகைக்க
வைக்கும். அதாவது சீரியஸாக இல்லாத படங்கள்.
பேசும் தெய்வம் கொஞ்சம் காதல், கொஞ்சம் சிரிப்பு, பின் அழுகை
என்று மாறி வந்தாலும் ரசிக்கும் படியாக
இருக்கும்.
என் தம்பி ரங்கன் சொல்லிச் சொல்லி
நான் சிவாஜியின் இளமைக் கால படங்களை
நுண்ணிப்புடன் பார்த்து ரசிக்கக் கற்றுக் கொண்டேன்.
அவன் அளவு எனக்கு சிவாஜி பைத்தியம்
இல்லாவிடினும் பாராட்டத் தெரிகிறது:)
அதுவும் இங்கே கொடுத்திருக்கும் பாடல்
உண்மையிலேயே கணவன் மனைவி புரிதலுக்கு
உகந்த உகப்பு இருக்கும்.
தங்கப் பதுமை படமும் அது போலத்தான்.
கண்ணகி கதை திரும்பி வந்தது போல
ஒரு படம்.
அந்தப் படத்தில் பத்மினியின்
பாத்திரத்துக்கு ஏகப்பட்ட நடிப்புத் திறனை
வெளிப்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள்
உண்டு.
அப்படியே அல்வா சாப்பிடுவது போல
நடித்துத் தள்ளி விடுவார்.
சோகக் காட்சிகளைப் பதிவிட வில்லை:)
கை கொடுத்த தெய்வம் இன்னோரு படம்.
இரண்டு சிகரங்கள் மோதுவது போல
நடிப்பின் இலக்கணங்கள் சிவாஜியும் சாவித்திரியும்.
இங்கேயும் சிவாஜி அடக்கி வாசிப்பார்.
சாவித்ரிக்கே முக்கிய வெளிச்சம். மிக ரசித்த
கே எஸ்.கோபால கிருஷ்ணனின் படம்.
7 comments:
எல்லாமே மிக அருமையான பாடல்கள். நான் அனுப்புவது பாடல் அடிக்கடி கேட்கும் பாடல். அதே போல அதே படத்தில் வரும் அழகு தெய்வம் மெல்ல மெல்ல பாடல்.
ஏனோ கைகொடுத்த தெய்வம் படம் இதுவரை பார்க்கவில்லை. ஆனால் அபபடத்தின் பாடல்களைக் கேட்டு ரசிக்கத் தவறுவதில்லை!
அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
ஆமாம் எல்லாப் பாடல்களும் வானொலியில் கேட்டுக் கேட்டு ரசித்த
பாடல்கள்.
நானும் இரண்டு படங்களையும் தியேட்டரில் சென்று பார்க்கவில்லை. அதுவும் கை கொடுத்த தெய்வம் சோகமாக முடிகிறது என்று கேட்டதில் பார்க்கவே ஆசையில்லை:(
சாவித்ரி காட்சிகள் மட்டும் பார்ப்பேன்.
அழகு தெய்வம் பாடல் நாங்கள் ரசித்துக் கேட்போம்.
குறிப்பிட்ட படங்கள் எல்லாமே சிறப்பானவை அம்மா.
உண்மைதான் அன்பு தேவகோட்டைஜி,
அப்போது வந்த படங்களில் இவைகள்
நன்றாக பிரபலம் அடைந்தன.
வந்து பார்த்துக் கருத்தும் சொன்னதற்கு
மிக நன்றி மா,.
இந்த படங்களும் பார்த்து இருக்கிறேன். பாடல்களும் நிறைய தடவை கேட்டு இருக்கிறேன். படங்களை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன்.
அருமையான நடிகர்கள்.
ஆமாம் அன்பு கோமதி மா.
வாழ்க வளமுடன். நாம் நிறைய பாக்கியம் செய்திருக்கிறோம். நல்ல படங்கள் பார்க்க முடிகிறது.
சிறப்பான பாடல்கள். ரசித்த பாடல்களும் கூட.
Post a Comment