Blog Archive

Wednesday, August 18, 2021

பாட்டிம்மா.தாத்தா நினைவுகள்


  எத்தனையோ நல்ல குறும்படங்கள் 
இணையத்தில்  இருப்பதை, வேறு எதையோ
தேடும்போது பார்க்கக் கிடைத்தன.
நான் கண்டு மகிழ்ந்ததை 
இங்கே பகிர்கிறேன்.

எளிமையான இனிமையான கருத்துகள்.
நல்ல நடிகர்கள். இத்தனை அருமையாக நடிக்க வைத்த இயக்குனர்கள்,
கதை எழுதியவர்கள் எல்லோரையும் 
மனம் நிறைய அன்பு கொண்ட மனிதர்களைச் சந்திக்கும் மகிழ்ச்சி.

வயதானவர்கள் என்றும் ரசிக்கப் பட வேண்டியவர்கள்.
அவர்களைத் தனிமை அண்டாத படி
கவனிக்க வேண்டிய கடமை இளைய தலைமுறைக்கு இருக்கிறது.
அதேபோல் இளைய தலைமுறையை
மதித்து சீராட்டுவதும் முதியோர் கடமை.
சின்ன வயதில் அம்மா வீட்டில் இருப்பதைக் 
கண்டு சற்றே பொருமல்.
அம்மா ஆனபிறகு வீட்டிலிருக்கும் பாட்டி மாமியாரைக்
கண்டு ஆச்சரியப் படுதல்,
இப்போது அப்பாடி நாமும் கடைசி கட்டத்துக்கு வந்து விட்டோம்
என்ற நிம்மதி.
அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துகள்.



13 comments:

கோமதி அரசு said...

மூன்று குறும் படங்களும் மிக அருமை அக்கா.
தாய் குழந்தை ஆக மாறி போவது, மகன் தாய் ஆகி கண்டிப்பது அப்புறம் தாய் கேட்பதை கொடுப்பது கண்ணில் நீர் வந்து விட்டது.

பாட்டிம்மா பேரன் பேத்திகளின் வரவுக்கு காத்து இருப்பது அவர்கள் அலைபேசியில் மூழ்கி இருப்பது. பழங்கதை சொல்வது, பேரன் பேத்திகள் பேசுவதை கேட்டு நீங்களும் அப்படியா என்று கேட்பது எல்லாம் அருமை.

வயதான ஒரு கணவன் மனைவியைப்பார்த்து கணவன் நினைவு வந்து வருந்துவது, பேரன் பாட்டி அழுவதை பார்த்து ஒரு நிமிடம் திகைத்து நின்றாலும் வெங்காயம் வெட்டியதால் தான் என்று நினைத்து கொண்டு போவது அப்புறம் , புரிந்து கொண்டு பாட்டியிடம் எண்ணெய் தேய்த்து கொள்ள வருவது பாட்டியின் மனநிலையை மாற்றி மகிழ்ச்சியில் ஆழ்த்துவது அருமை. வயதானவர்களின் மனநிலையை மிக அழகாய் எடுத்து இருக்கிறார்கள்.

கடைசி படம் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. சிறுமியின் முடிவு வருத்தம் தான், ஆனால் வயதானவர் மன மாற்றம் அருமை.

இருக்கும் வரை அன்பை கொடுத்து அன்பை பெறுவோம்.
அருமையான பதிவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதிமா,
எத்தனை அருமையாகக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்கள்!!!
இரண்டு பாட்டிகளையும் அந்தத் தாத்தாவையும்
எப்படித்தான் நடிக்க வைத்திருக்கிறார்கள்!!
அந்தச் சின்னப் பிள்ளைகளும்
எத்தனை அழகாக சிறப்பாக, அந்த வெங்காய சீன் உள்பட

மிக மிக அருமை. ஸ்வெட்டர் பின்னுவது போல
காட்சிகள் ஒரு மாலை வேளையில்
சீராக வருகின்றன.
முதல் படத்தில் மகன் மிக பாசத்தோடு நடிப்பைக்
காணவைக்கிறார்.

இந்தப் படங்கள் நம் வாழ்க்கையயும் பிரதி பலிக்கிறது.
உங்களுக்குப் பிடித்ததில் அதிசயமே இல்லை.
நன்றி மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...


இருக்கும் வரை அன்பை கொடுத்து அன்பை பெறுவோம்.
அருமையான பதிவு.///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////அதுதான் நம் லட்சியம் மா கோமதி.

ஸ்ரீராம். said...

மனதை நிறைக்கும் விவரங்கள்.  கோமதி அக்காவின் விவரணங்களைப் படிக்கும்போது உடனே குறும்படங்களை பார்க்க ஆசை.  வயதானவர்கள் உலகமே தனி.  அதில் தனிமைக்குதான் முதலிடம்.  இளையவர்கள் தங்களுக்கும் வயதாகும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
ஆமாம் முதுமையில் தனிமை தேடுவது
பழக்கமாகி விடுகிறது.
பேரன் பேத்திகள் கூட இருக்கும் போது தனி தைரியம்
வரும்.
பழைய நினைவுகள் வந்து போகும்.
உலக வழக்கம் தானேமா. எல்லாம் சரியாகும் பா.

திண்டுக்கல் தனபாலன் said...

நம்ம தல வலைப்பூ அடுத்து இங்கும் அருமையான குறும்படங்கள்... அருமை...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பல குறும்படங்கள் இணையத்தில் இருக்கின்றன வல்லிம்மா. நீங்கள் பகிர்ந்த குறும்படங்களை மாலையில் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
ஆமாம் உண்மைதான். அன்பு வெங்கட்
குறும்பட மன்னர்.

நான் இணையத்தில் பார்க்கும் படங்கள் கொஞ்சம் நீளமானவை.
அவற்றைப் பகிர்ந்து எல்லோரையும்
சிரமப் படுத்துவதில் பொருளில்லை:)
குறும்படங்கள் அருமை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நீங்கள் ஆரம்பித்து வைத்த நற்செயல் இது.
சிரமம் இல்லாமல்
மிக நல்ல கதைகளைக் காண முடிகிறது.
நன்றி மா.

மாதேவி said...

மனதுக்கு நிறைவான குறும்படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
மிக நன்றி மா.நலமுடன் இருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

முதல் குறும்படம் முன்னரே பார்த்து, பகிர்ந்தும் இருக்கிறேன்.

மற்ற இரண்டும் பார்த்து ரசித்தேன் மா. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நன்றி தனபாலன்.

Geetha Sambasivam said...

பொறுமையாய் ரசித்துப் பார்க்கணும். பார்க்கிறேன்.