Blog Archive

Monday, August 02, 2021

முன்னம் ஒரு காலத்துல....1

வல்லிசிம்ஹன்

  'ஒரேயடியாக வேர்க்கிதே. ராத்திரி மழை வருமோ
தெரிசா?'என்று கேட்ட  எஜமானியைப் பார்த்து தெரிசா
ஆமாம் என்று தலையாட்டினாள். 
எஜமானி சொல்லும் எதற்கும் ஆமாம் சாமி போட்டால் தான்
அந்த ஊட்டி மலையில் அவளுக்கு வாழ்வு.

அத்தனை பெரிய தேயிலைத் தோட்டத்தின்
சொந்தக்காரரின் மனைவி எல்சியம்மா.

நல்ல சிவப்பு நிறத்தில் ,ராஜ களையுடன்
அழகாகவே இருப்பாள்.
இந்த நிறத்துக்காகவே எஜமானர் வில்லியம்ஸ்
அவளை கூர்க் நாட்டிலிருந்து மணம் முடித்தாராம்.

எஜமானர் கொஞ்சம் கறுப்பு நிறம் தான்.



பரம்பரையாக இந்த கூனூர் எஸ்டேட்
அவரது குடும்ப சொத்தாக இருந்து வந்தது.
கோவையின் அருகில் வேலாண்டி பாளையத்தில் 
நல்ல பெரிய பங்களோ, இத்தாலிய
வல்லுனரைக் கொண்டு கட்டிய வீடு இருக்கிறது.
வில்லியம்ஸின் தந்தை தாத்தா
எல்லோரும் வெள்ளைக்காரன் காலத்திலேயே

இந்த தேயிலைத் தோட்டத்தை வாங்கி
விஸ்தரித்து சில நூறு ஏக்கர் கொண்ட பண்ணையாக
மாற்றி இருந்தார்கள்.
இவரும் ஒரு சகோதரியும் தான் வாரிசுகள்.
அக்காவுக்குத் திருமணம் செய்து
அவளுக்கு உரிமையான சில தோட்டங்களை
வில்லியம்ஸ் வாங்கித் தன் தோட்டத்துடன்
இணைத்துக் கொண்டார்.





வில்லியம்ஸ், எலிசபெத் தம்பதிக்கு இரண்டு பெண்கள். இருவருமே
அந்த ஊர் பெரிய பள்ளியில்  எட்டாம் வகுப்பிலும் ஒன்பதாம்
வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு உபயோகத்துக்காகவே ஒரு வண்டி.

எஜமானி அம்மாவுக்கு கோவை சென்று வர, எஜமானருக்கு மேட்டுப் பாளையம்
சென்று வர ஒரு வண்டி என்று மூன்று வண்டிகளுக்குப்
பெரிய  கராஜ்.
தெரிசா சமையல் வேலைகளுக்கு உதவி.,
வீட்டைத் தினம் சுத்தம் செய்து, படுக்கை அறைகளில்
படுக்கை விரிப்புகளை மாற்றி,
மலர் அலங்காரங்கள் செய்ய இருவர்,,
துணிமணிகளைத் தோய்த்து கஞ்சி போட்டு,
இஸ்திரி செய்ய கணவன் மனைவி என்று இருவர்,

வீட்டோடு இருக்கும் தோட்டங்களைக் கவனிக்க,

உயர் ரக செல்லங்களைப் பேணிப் பாதுகாக்க இருவர்,
வண்டிகளை ஓட்ட இரண்டு ஓட்டுனர்கள்
என்று  வீட்டில் எப்போதும் நடமாட்டம் இருக்கும்.

இவர்கள் எல்லோரையும் கவனித்து வேலை
வாங்குவதில் எலிசபெத் நல்ல சாமர்த்தியசாலி. 
அவர்கள் மத ஒழுக்கங்களை கணவன் மனைவி
இருவரும் தீவிரமாகப் பின்பற்றுபவர்கள்.

இவர்கள் வாழ்வில் சற்றே சலனம் ஏற்படுத்தியது
என்று எலிசபெத் நினைக்கக் காரணமாக
ஒரு க்ருஸ்துமஸ் நாள் அமைந்தது.  ...............தொடரும்.




18 comments:

ஸ்ரீராம். said...

ஆஹா...    சம்பவக்கதை   .தொடர்கிறேன்.  வீடியோ என்ன இணைத்திருந்தீர்கள் என்று தெரியவில்லை.  வரவில்லை.

ராமலக்ஷ்மி said...

பிரமாதம்.. விவரணைகளும் நடையும்! ஆர்வத்தைத் தூண்டும் ஆரம்பம். தொடருங்கள்.

KILLERGEE Devakottai said...

சுவாரஸ்யமான தொடக்கம்... அம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

மிக நன்றி மா. எனக்கு வீடியோ வேலை செய்தது. மாற்று கிறேன் மா.
தேயிலை தோட்டத்தைத் தான் இணைத்திருந்தேன்.
ஆமாம் நடந்த சம்பவத்தைத்தான் எழுதுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ராமலக்ஷ்மி,
நலம் என்று நம்புகிறேன் மா.
ஆமாம் இது வெகு நாட்களாக மனதில் தேங்கிய கதை.
சம்பந்தப் பட்டவர்கள் உயிருடன் இல்லை.
அதனால் எழுதலாம் என்று யோசனை வந்தது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,

அற வழி நடக்க , முன்பு நடந்த கதைகளைச் சொல்வது வழக்கமாகி விட்டது.
நீங்களும் வந்து படித்தது மகிழ்ச்சி மா.
நலமுடன் இருங்கள்.
தொடரலாம்.

vaanampaadi said...

அன்புள்ள வல்லிம்மா, சுவாரஸ்யமாய் தொடங்கும் அழகிய வர்ணனைகள் கொண்ட கதை. மலைப் பிரதேசம் சென்று வந்த மகிழ்ச்சியை உருவாக்கி, என்ன சலனமோ என ஆவலை தூண்டுகிறது...காத்திருக்கிறேன் இதன் தொடர்ச்சிக்காக. நல்லதொரு கதைக்கு நன்றி மா!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வானம்பாடி,
எனக்கு இவர்களைக் கோவையில் இருந்த போது
தெரியும். என்னை விடப் பதினைந்து வயது மூத்தவர்.

அவர்களது உபசாரமும் விருந்தோம்பலும்
சொல்லி முடியாது.
இன்னும் விரிவாக அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறே,
அம்மா.
பிரியம் கொண்டு படித்ததற்கு மிக நன்றி.
நலமுடன் இருங்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நல்ல வளமையான கதை. பரந்த விஸ்தீரணமான தேயிலை தோட்ட காட்சிகள் காணொளியில் கண்டேன். உங்களின் கோர்வையான எழுத்துகள் கதையில் அடுத்து என்ன என்ற ஆவலை உண்டு பண்ணுகின்றன. அழகாக செல்லும் கதையில் குடும்பத்தின் தலைவிக்கு கிருஸ்துமஸ் அன்று ஏன் சலனம்.? அறிய காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

கதை ஆரம்பம் மிக அருமையாக இருக்கிறது.

தேயிலைத் தோட்ட படங்கள் மிக அழகு.

இயற்கை எழில் கொஞ்சும் மலகளின் ராணி என்ற பேர் பெற்ற ஊட்டியில் அமைந்த கதை , வாழ்வில் என்ன சலனம் ஏன் ஏறபட்டது என்று படிக்க
தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

தேயிலை தோட்டம் காணொளி பார்த்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலா மா,
நெடு நாட்களாய் மனதை அரித்துக் கொண்டிருந்த கதைக் கரு இப்பொழுது
எழுதலாம் என்ற துணிவு வந்தது.

சலனம் வரக் காரணங்களா இல்லை அம்மா:)நன்றி.
நல்லபடியாக எழுத முயற்சிக்கிறேன். சுருங்கச் சொல்ல முடியவில்லை.
மீண்டும் நல்ல வார்த்தைகளுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தொடக்கம். ஸ்வாரஸ்யமாக ஆரம்பித்து இருக்கிறது. தொடர்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

ரொம்ப சுவாரசியமாகச் செல்கிறது.

உங்க அனுபவத்துக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கும். எழுதுங்கள். அதில் எங்காவது படிப்பினை இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,வந்து படித்து கருத்தும் சொன்னதற்கு நன்றி மா. அப்போது அனுபவித்ததை இப்போது கொஞ்சம் கற்பனை சேர்த்து சொல்கிறேன்.!

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா. வாழ்வு முழுவதும் படிப்பினைகள் தான். கற்றுக் கொண்டால் நன்மை. அதற்காக புத்தி சொல்வது போலக் கதை அமைக்கவும் முடியவில்லை.நல்ல. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி. நாங்கள் எல்லாம் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் கூட இருந்தது. காணொளி கண்டதற்கு மிக நன்றி.

மாதேவி said...

இனிய ஆரம்பம் தொடர்கிறேன்.