Artist Daniel Popper.
என்ன கேட்கின்றன இந்தக் கைகள்:(
மரங்கள் மரங்கள் மீண்டும் மரங்கள்.
பச்சையும் நீலமும் கண்களை விட்டு மறைய இரண்டு நாட்கள்
பிடித்தது.!!!
வல்லிசிம்ஹன்
கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த ஊர் ஆரண்யத்துக்கு சென்று வந்தோம்.
வண்டியை விட்டு ஒரே ஒரு இடத்தில் தான்
இறங்கினோம்.
கூட்டம் அதிகம் வந்ததால் இடைவெளி
கொடுக்க முடியாமல் நாலு திசைகளிலும்
சுற்றி வந்தோம். மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும்.
1650 ஏக்கர் பரப்பளவில்
20 ஏக்கர் பார்த்திருப்போம்.
அந்த வெய்யிலிலும் ஒரு சைனாக்காரர் ஜாகிங் செய்து போய்க் கொண்டிருந்தார்.
நாவறண்டு போகவே,
அதிக தூரம் எங்களால் நடக்க முடியவில்லை.
கொண்டு வந்திருந்த உணவை மரத்தடியில் உண்டு விட்டு
மெதுவாக காடு வலம் வந்தோம்.
அந்தப் படங்கள் மேலே.
நடு நடுவே மரத்தால் சிற்பங்கள் செய்து வைத்திருந்தார்கள்.
இந்தியாவின் மரங்களைத்தவிர எல்லா தேசத்து மரங்களும்
அங்கே இருக்கின்றன.
ஒரு வேப்ப மரம் வைக்கக் கூடாதோ என்று தோன்றியது:)
கோடை, வசந்தம், இலையுதிர்காலம், குளிர்காலம் என்று மரங்கள் வித விதமாகக்
காட்சி தரும் இடம்
அந்தந்த சீசனில் போக வேண்டும்.
15 comments:
பசுமை கண்களை அசத்துகிறது என்றால் மரச்சிற்பங்கள் அப்படியே ஆளை அசத்துகின்றன! என்ன ஒரு தத்ரூபமான கைகள்! இந்த மரச்சிற்பங்கள் எங்கே இருக்கின்றன?
அழகிய பசுமையான இடங்கள் அம்மா
பசுமை காடு மிகவும் அழகு.
Artist Daniel Popper.
மரச்சிற்பங்கள் நன்றாக செய்து இருக்கிறார்.
மரச்சிற்பங்கள் என்றவுடன் சார் நினைப்பு வந்து விட்டது.
சார் அழகாய் மரச்சிற்பங்கள் செய்வார்கள் அல்லவா!
பசுமை காடு , பச்சை புற்கள், நீலநிற வானம் அழகு.
கைச்சிற்பமும், கடைசிச்சிற்பமும் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன.
வியக்க வைத்தது...!
மார்ட்டன் மரக்காடுகள் அற்புதமான இடமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பகிர்ந்த படங்கள் அனைத்துமே சிறப்பு. இணைய வழி மேலதிகத் தகவல்கள் தெரிந்து கொள்ள ஆசை வந்திருக்கிறது. பார்க்கிறேன் வல்லிம்மா.
பதிவு நன்று. தொடரட்டும்.
வணக்கம் சகோதரி
பதிவும், படங்களும் நன்றாக உள்ளது. அத்தனை பசுமையும் ஒரே இடத்தில் பார்க்கும் போது மனது சந்தோஷமாக குளுமையாக இருக்கும் இல்லையா? மரச்சிற்பங்கள் அழகாக உள்ளது. கைகளை நீட்டி "எங்களது நிம்மதியை மட்டும் மீண்டும் வரமாக தந்து விடு.." என இயற்கை அன்னையிடம் அந்த கைகள் கேட்கிறதோ ..?
முதிய தோற்றம் கொண்ட (தாத்தா..!)அந்த மரச்சிற்பத்தில் குழந்தைகள் உரிமையுடன் ஏறி விளையாடுவதை கண்டதும், "நாமும் குழந்தைகளாகி விடக் கூடாதா.." எனத் தோன்றுகிறது.
"எங்கள் இதயத்தை திறந்து காண்பித்தாலும், எங்களுக்குள் பசுமையான எண்ணங்களைத்தான் எப்போதும் வைத்திருக்கிறோம்.. பாருங்கள்..!" என்கிறதோ மூன்றாவது மரச்சிற்பம்.
எல்லாமே அருமை சகோதரி. மேலும் இனிமையான மரக்காடுகள் பயணம் பற்றிய தகவல்கள் குறித்தும் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
அன்பின் மனோ,
வருகைக்கு நன்றி. இங்கே சிகாகோவின்
சபர்ப், ஒன்றில் மார்ட்டன் ஆர்பரீட்டம் இருக்கிறது.
தமிழில் மரக்காடு என்று அர்த்தம்
பதிந்தேன். இங்கே மரங்களின் கூட்டங்களுக்கு
நடுவில் மரச் சிற்பங்களையும்,
மரத்தின் நடுவே நாற்காலி இருக்கைகளையும் செய்து வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே என் வீட்டுக்காரர் இருக்கும் போது
போயிருக்கிறோம். அப்போது இலையுதிர்காலம்.
மிக அழகான வண்ணங்களோடு இருந்தது.
இப்போது கோடைக்காலம்.
மரங்களின் பசுமை கண்ணைப்பறித்தது.
இன்னும் முழுவதும் பார்க்கவில்லை.
அன்பு தேவகோட்டைஜி.
நல்ல இடம்தான். இங்கே பேணிக் காக்கிறார்களே.!!!!
அதைத்தான் வியந்தேன். நம்மூரில் சாலையோர மரங்கள்
காணாமல் போய்விட்டனவே:(
வருகைக்கு மிக நன்றி மா.
அன்பின் கோமதி, வாழ்க வளமுடன் மா.
உங்கள் அன்பு உள்ளம் எப்படி உடனே
சாரின் சிற்பங்களை நினைக்கிறது பார்த்தீர்களா!!
இந்த அருமைக்கு அல்லவா நாம் எழுதுகிறோம்.
இங்கே அவரும் வந்திருக்கிறார். 2007 என்று நினைக்கிறேன்.
இங்கே சிற்பக்கூடம் பெரிதாக இருக்கிறது.
அவர்களிடம் பேசி பல விஷயங்கள் கற்றுக்
கொண்டிருக்கிறார்.
பிறகே நவீன உத்திகளை உபயோகித்து
உட்காரும் மனிதன் செய்தார்.தனித்தனியாக எடுத்து மாட்டலாம்.
என் அருமைத்தங்கைக்கு நன்றி.
அன்பு ஸ்ரீராம் நன்றி மா.
ஆமாம் மரங்களும் மரச் சிற்பங்களும் இன்னும் இருக்கின்றன.
காமிராவிலிருந்து எடுக்க வேண்டும்.
அருமையான வேலைப்பாடு.
அன்பு தனபாலன்.இயற்கை வளம் ,மனித
மேம்பாடு எல்லாம் பொருந்திய இடம் அப்பா.
நலமுடன் இருங்கள்.
அன்பின் வெங்கட்,
இந்தக் காலவரையற்ற வீட்டு அடைப்பிலிருந்த
ஒரு நல்ல இடத்துக்குப் போய் வந்தோம்.
வெய்யிலில் அலைய முடியவில்லை. இதோ ஆவணி மாதம்
மீண்டும் செல்லலாம்.
இறைவன் அருள்.
இந்த ஊரே மரங்களும் மலைகளூம் நிறைந்த
இடம். நீர் வளமும் கடவுள் அருளால்
இருக்கிறது.
இந்த மரங்களைச் சுற்றி சாலைகள்
அருமையாகப் போட்டிருக்கிறார்கள்.
வண்டியிலும் செல்லலாம். நடை பாதைகளும்
trails உண்டு. தொலையாமல்
இருக்க ஜிபிஎஸ் எடுத்துக் கொண்டு
கண்கொண்ட அளவு, காலாற நடக்கலாம்.
இணையத்தில் பாருங்கள் இன்னும் விவரம் கிடைக்கும்.
நன்றி மா.
மரச்சிற்பங்கள் அழகாக உள்ளது. கைகளை நீட்டி "எங்களது நிம்மதியை மட்டும் மீண்டும் வரமாக தந்து விடு.." என இயற்கை அன்னையிடம் அந்த கைகள் கேட்கிறதோ ..?//////////////////////////அன்பின் கமலாமா,
என்ன ஒரு அழகான பதில்.
வறுமையிலும் ,பட்டினியிலும்
சிறைப்பட்ட உயிர்களின் வேதனை
அந்தக் கைகளில் தெரிகிறதல்லவா.
உங்கள் அருமை நெஞ்சத்தின் ஈரம்
உங்கள் சொற்களில் வடிகிறது.
அதே போல அந்தப் பெண்ணின் சிற்பம்.
தாத்தாவின் மேலாடும் குழந்தைகள்.
இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன.
அலுத்துவிடுமோ என்று பயம் தோன்றியதால்
நிறுத்திக் கொண்டேன் அம்மா.
உங்கள் ரசனை பதிவுக்கு ஊட்டம் கொடுக்கிறது.
மனம் நிறை நன்றி.
பசுமை பார்க்கவே குளிர்ச்சி.
Post a Comment