Blog Archive

Tuesday, May 25, 2021

Pinnawala, the March of the Elephants.:)))))

14 comments:

ஸ்ரீராம். said...

யானைகள் எப்போதுமே அழகு.

வெங்கட் நாகராஜ் said...

முன்னரும் இந்தக் காணொளி வந்திருந்தது என நினைவு. மீண்டும் பார்த்து ரசித்தேன் மா.

கரந்தை ஜெயக்குமார் said...

கண் கொள்ளா காட்சி

கோமதி அரசு said...

ஆடு மாடை மேய்த்து கொண்டு போவது போல் அல்லவா? அழைத்து போகிறார்கள். முன்னே ஒருத்தர், பின்னே இருவர்.

ஒரு யானை நொண்டி நடக்கிறது பார்க்கவே கஷ்டமாய் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
முன்பு யானைகள் குளிக்கும் காட்சியை'
இணைத்திருந்தேன். இந்தக் காணொளி புதிதாக
வந்தது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
யானை,கடல்,குழந்தை இவை யாவும் எப்பொழுதும்
எவ்வளவு பார்த்தாலும் அலுப்பதில்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு ஸ்ரீராம். எப்போதும்
ஒரு உற்சாகம் வரும் யானைகளைப் பார்த்தால்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
யானைகள் எத்தனை சாதுவான மிருகங்கள் என்று உணருகிறேன்.
ஒரு அங்குசத்துடன் முன்னே ஒருவர் நடக்க
இந்தப் பெரிய யானைகள் அமைதியாகத் தொடர்கின்றன.
தன் பலம் அறிந்த வல்லவன் கொண்ட அடக்கம்.!!

அந்த யானையின் கால் ஒரு லாண்ட்மைனில்
வைத்ததால் ஊனமானதாம்.
மிக மிக மிக வேதனை. மனிதர்களின் சண்டையில் விலங்கினம்
பாதிக்கப் படுகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

என்ன அழகு!!! ஆனை ஆனை!!! அழகா தலையை ஆட்டி ஆட்டி பாவம் அந்தக் கடைசி யானை கால் முடியவில்லை போலும் ..மனசு கஷ்டமாகிவிட்டது. மருத்துவர் யாரும் இல்லை போலும் அங்கு சரணாலயத்தில்

இலங்கை யானை சரணாலயம் இல்லையாம்மா இது?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

யானைகளின் அணி வகுப்பு காணொளியை மிகவும் ரசித்தேன்.

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
ஆமாம் பா. இலங்கைதான். இன்னோரு டாக்குமெண்டரியில்
யானைகள் லாண்ட்மைனில் காலிழப்பதைச் சொல்லி இருந்தார்கள்.

கவனித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
பாவப்பட்ட ஜீவன் எத்தனை உரம் கொண்டு இறங்குகிறது
பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு துளசி மா.உங்க ஊரிலயும் யானைகள்
போற்றப் படுகின்றன.

மாதேவி said...

எங்கள் நாட்டு சரணாலயம் :) நேரடியாக பார்த்து மகிழ்ந்திருக்கிறேன் அவைகள் குளிப்பது மிக அழகாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி.