Blog Archive

Monday, January 25, 2021

மீண்டும் தை. திருமணங்கள் ஆரம்பம்.

வல்லிசிம்ஹன்


ஒரு ஐப்பசியில்  அடை மழைக்காலத்தில்
ஆரம்பித்த உறவு,
இன்னோரு ஐப்பசியில் நிறைவுற்றது.
நாலாம் நம்பருக்கு அத்தனை வலிமை.

31ஆம் நாள் 13 ஆம் நாள்.
வேடிக்கைதான்.
எல்லாவற்றையும் எழுதியாகி விட்டது.
சரித்திரமே எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
புத்தகம் எல்லாம் போட வேண்டிய அவசியமே இல்லை!!!!

சிவகாமியின் சபதம் இப்போது  கூட ஆடியோ பாட்காஸ்ட் ஆகப் 
போய்க் கொண்டிருக்கிறது.
கல்கி அவர்களின் எழுத்தில் எத்தனை மாயம். 
14,15 வயதில் என்னை எப்படி ஈர்த்ததோ அதே போல
இப்பொழுதும் கவர்கிறது.
அந்தப் பழைய 2010இல் எழுதிய அந்தப் பதிவு கண்முன் வந்து குதித்தது.

சிவகாமியும், மாமல்லரும், அந்தக் கோபங்களும்
தாபங்களும், மகேந்திர வர்மரின் அன்பும் ,தந்திரங்களும்
மாறு வேடங்களும்.
அவருடைய ஒற்றர்கள் சத்ருக்னன், குண்டோதரன்.

அந்தக் காலங்களில் நரசிம்ம பல்லவரும்,பரஞ்சோதியும்,
நாக நந்தி ,புலிகேசி என்று இனிமையும் பயமும் 
கலந்த நினைவுகள்.
பாட்டி வீட்டிலேயே வைத்து விட்டு வந்த 
புத்தகம், அதை எடுத்துக் கொண்டு போகட்டுமா
என்று கேட்க முடியாத தயக்கம்.
இரண்டு வருடம் கழித்து வந்த திரைப்படப்
பாடலால் விழித்துக் கொண்ட நினைவுகள்.

முதல் அத்தியாயத்தில் வரும் யானை,
பரஞ்சோதியின் வேல், சிவகாமியின் பயம்
ஆயனரின் திகைப்பு,அந்தப் பல்லக்கு...இதெல்லாம்
வினுவின் கைவண்ணம்.
நான் பார்த்த புத்தகத்தில் சந்திரா
அவர்களின் கலையில் இன்னும் அழகாக இருக்கும்.
அக்டோபர் 20 ஆம் தேதி வாக்கில்
வந்த கடிதம், ஜாதகம் இன்னும் அப்படியே
நினைவில்.

''இத்துடன் சிம்முவின் ஜாதகம்'' என்று பார்த்ததும்
அப்போதே சம்மதித்து விட்டேன் என்று சொல்ல வேண்டும்.


 புரசவாக்கம் பாட்டி வீட்டில் முதன் முதலாகப்
பார்த்துக் கொண்ட  அன்னியோன்யம்......
நடு நடுவில் சிடுசிடு கடுகடு உண்டு.:)
47 வருடங்கள் அவரை விட்டு நகர்ந்ததில்லை.

அவருக்கே அலுத்ததா என்றும் எனக்குத் தெரியாது.
அம்மா வீட்டுக்குப் போனால் 3 மணி நேரத்துக்குப் பிறகு

அழைப்பு வந்துவிடும்.
இப்போது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

எங்கள் திருமண நாளைத் தொடர்ந்து நிறைய
நாட்கள் வருகின்றன.
நாளை அதாவது 26 ஆம் தேதி திருமண நாள் கொண்டாடும் முதல் மகனுக்கும்,
அவனுடைய திருமதிக்கும் இறைவன் சகல
சௌபாக்கியங்களையும் வழங்க வேண்டும்.



5 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஓவியங்கள் அனைத்தும் அசத்தல்...

மண நாள் காணும் தங்களது மகனுக்கும் மருமகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தொடரட்டும் நினைவுகளும் பதிவுகளும்.

திண்டுக்கல் தனபாலன் said...

தம்பதியருக்கு வாழ்த்துகள்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
மிக நன்றி மா. தை மாதம் ஒரு மங்கல
மாதம்.
இங்கு வந்து படித்து கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா.
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்
மிக நன்றிமா. எல்லா வாழ்த்துகளும் எல்லோரையும் சேர வேண்டும்.

கோமதி அரசு said...

உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
மகன் , மருமகள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
இறைவன் சகல செளபாக்கியங்களையும் அருள்வார்.