நம் ஊரை நினைத்து நினைத்து மகிழ்கி'றேன்.
வாழ்வில் அரசியலில் எத்தனை போட்டி இருந்தாலும்
தேர்தல் என்று வந்த பின்னே
மக்கள் தீர்ப்பு தெய்வத் தீர்ப்பு என்று வணங்கி விடை
பெறும்
நல்லவர்களையே பார்த்து உரம் பெற்றிருக்கிறேன்.
தேர்வுக்கு முன்னும் பின்னும்
முட்டி மோதி அரசியல் செய்வார்கள்.ஆனால்
தேர்தலையே அசிங்கப் படுத்த மாட்டார்கள்.
இங்கே ஒரு வயதானவருக்கு உடல் நலமே பாதிக்கப் பட்டு விட்டது.
அவர் எதிர்பார்த்த தலைவருக்கு இன்னும் அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்று வருத்தப் பட்டு
பேசிக்கொண்டிருந்தவருக்கு
ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டதாம்.
நல்ல வேலை உடனே கவனித்ததில் நலமடைந்து
வருகிறார்.
ஒரே ஒரு மனிதனின் அக்கிரம செயல்
எத்தனை நபர்களைப்
பாதிக்கிறது. இது அராஜகம் இல்லையா.
காலம் மாறும்.
என்னை முதலில் நான் கவனிக்கிறேன்.
கொஞ்ச நாட்கள் செய்தி படிக்காமல்
இருக்கவேண்டும்.அவ்வளவுதான்.
இறை அருள் நிறையட்டும்.
12 comments:
தி வாசிங்டன் போஸ்ட் செய்தியைப் படித்தீர்களா?
https://www.washingtonpost.com/national-security/trump-possible-security-risk/2020/11/09/f19c853e-229e-11eb-952e-0c475972cfc0_story.html?fbclid=IwAR07T5E4PzZwgvrl8Wug-GBU_AAUysB23dZoIHfUVKc_rCT7KTWbOtGMBlQ
அன்பு துரை,
அதைப்பற்றி யூடியூபில் படித்தேன். எத்தனை அபாயகரம் பாருங்கள்.
மனதுக்கு மிகக் கலக்கமாக இருக்கிறது. இப்படிக்கூட
ஒரு மனது இருக்குமா. அது தன்னை இந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று சொல்லுமா..
அவமானம் மா.
உண்மைதான். செய்திகள் பார்ப்பதைத் தவிர்த்து நீண்ட நாட்களாகி விட்டது. தொலைக்காட்சியில் அவ்வப்போது பாடல்கள் கேட்பதோடு சரி.
நல்லதே நடக்கட்டும். மனிதர்கள் இம்மாதிரி சமயங்களில் காட்டுவதே உண்மையான முகம்.
ஒரு செயல் பல பாதிப்புகளை உண்டாக்கும் என்பது உண்மை. அதுவும் இவரைப்போன்றோர் மேற்கொள்ளும் செயல் சற்றே அபாயகரமானதாகக்கூட இருக்கக்கூடும். வாஷிங்டன் போஸ்ட் இணைப்பைப் படித்தேன். என்னவெல்லாம் நடக்குமோ என எண்ணத்தோன்றுகிறது.
இன்றைய பல செய்திகள் மனம் நொந்து போகவே செய்கிறது...
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று தெரியாமலா சொன்னார்கள். பதவி ஆசை ஆட்டிப்படைக்கிறது என்ன செய்வது?
ஆமாம் ஸ்ரீராம். இரண்டு நாட்களாகச் செய்திகள் பார்ப்பதில்லை.
ஆமாம் கீதாமா.
நான் சொல்பவர் ஒழுங்காகப் பேசின நாளே கிடையாது.
ஆனாலும் அவரை நம்புபவர்கள் எத்தனை பேர் மா.
நான் முட்டாளாகத்தான் இருப்பேன் என்றால் என்ன செய்வது.
வணக்கம் முனைவர் ஐயா.
தலைவராக இருப்பது மிகப் பெரிய பொறுப்பு.
நான் என்னை மட்டும் தான் பார்த்துக் கொள்வேன் என்பவரை
என்ன செய்ய முடியும்.
நன்றி.
அன்பு பானுமா,
நான் சொல்பவருக்கு எல்லாமே அபரிமிதம்.
என்ன செய்யலாம்.
நன்றி மா.
அன்பு தனபாலன்,
இறைவன் முன்னிருந்து எல்லோரையும் காக்க வேண்டும்.
Post a Comment