ராமன் அரசாண்டால் பெண்கள் நிம்மதி.
ராவணன் ஆண்டால் சொல்லமலேயே புரியும்.
நம்மூர் ராவணனாவது வீணை வாசித்து
சிவனை வணங்கி , ஒரு நிமிடம் மயங்கித் தவறு இழைத்தான்.
சில இடங்களில் சில மனைவிகள் என்று
ஆடியவர்களையும் நமக்குத் தெரியும்.
பேச்சு மொழிகளால் வசியம் செய்தவர்கள் சிலர்.
உண்மை வார்த்தைகளால் கவர்ந்த காமராஜ் ,கக்கன் சிலர்.
ஆனால் நேர்மைக்கும் ஒரு பத்தினி,ஒரு சொல் என்ற
வார்த்தைக்கும் ஆளைத் தேடினால் இப்போது
கிடைப்பது சிரமம்.
தோற்றத்தையும் ஆளுமையையும் கொண்டு
மக்களை வென்றவரையும் தெரியும்.
நல்ல மனம் கொண்டிருந்தாலும் தோற்றவரையும் தெரியும்.
தீமை இழைத்தவரை விதி எப்படித் தோற்கடித்தது என்றும்
பார்த்திருக்கிறோம்.
வினாச காலம் வந்தால் மக்களுக்கும் விபரீத புத்தி
வரும் என்றும் பார்த்திருக்கிறோம்.
வலது கையை உயர்த்திப் பிரமாணம் செய்து
இடது கையால் கையெழுத்துப் போட்டு
தன் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டவர்களும் உண்டு.
உலகம் முழுவதும் பொய்மை
பெருகினாலும் மனம் பிறழாமல் நம் கடமையைச் செய்வோம்.
15 comments:
அது தான்...
அதே தான்!..
மலை புரண்டாலும் மனம் பிறழாது
நமது பணியைச் செய்து வருவோம்...
தர்மம் நமைக் காக்கும்!..
அருமையா சொன்னீங்க வல்லிம்மா. நலம்தானே
நன்றி அன்பு துரை.
தேர்தல் என்று வரும் நேரம் இத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. மனம். கசந்தாலும் நடப்பதை வேடிக்கை பார்த்து விலகி இருக்கலாம்.
தர்மம் தலை காக்கட்டும் .நேர்மை வெல்லட்டும். நன்றி மா
அன்பு தேனம்மா நலம் தான் அம்மா.
நீங்களும் குடும்பமும் நலம் என்று நினைக்கிறேன்.
அரசியல் சூட்டில் அள்ளி வீசப்படும் மொழிகள் கடந்தன. உடனே எழுதத் தோன்றியது மா :).
உண்மை. மாற்றங்களை நம்மிலிருந்தே தொடங்கலாம்.
எக்காலத்துக்கும் பொருந்தும் சொற்கள். நல்லதே நினைப்போம்.
அருமை...
நன்றாக சொன்னீர்கள் அக்கா.
பகிர்ந்த இரண்டு பாடல்களும் அருமை.
சீர்காழி பாடல் மிகவும் பிடித்த பாடல்.
அன்பு கீதாமா,
நன்மை நினைத்து நன்மை அடைவோம். நன்றி மா.
அன்பு ஸ்ரீராம்,
எனக்கே நான் சொல்லிக் கொண்ட பதிவு இது.:)
நன்றி மா.
அன்பு தனபாலன்,
மிக மிக நன்றி ராஜா.
இரண்டு நாட்களாகச் சத்தம் கேட்காமல் நிம்மதியாக இருக்கிறது.
அப்புறம் நிம்மதியை வெளியே தேடாமல்
உள்ளேயே தேடலாம் என்று பதிந்தேன்.
பாடல்களைக் கேட்டு ரசித்ததற்கு மிக நன்றி மா.
தங்கச்சி என்றும் நலமுடன் வாழணும்.
சூப்பர் அம்மா. நல்லா சொல்லிருக்கீங்க. அர்த்தமும் புரிகிறது!!!!!! நல்லதே நடக்கட்டும்
கீதா
அன்பு கீதா ரங்கன்,
இசை மகத்தான மருந்து. நன்றி மா.
Post a Comment