Vallisimhan
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இந்தத் தொற்று சீக்கிரமே விலக இறைவன்
அருள் செய்ய வேண்டும்.
கேள்விப்படும் செய்திகளால் மன நிலையே
பிறழ்ன்று போய் விடுகிறது.
இயற்கை ஒருவிதமாக நம்மைப் பாதித்தால் மனிதர்கள்
ஒருவிதமாகத் தறி கெட்ட நிலையில்
சிந்திக்கிறார்கள்.
எல்லாம் மாறும். நம்புவோம் நம்பிக்கைதானே வாழ்க்கை!!!!
நட்புகள் நம்மைக் காக்கின்றன.
அந்தத் தொடர்பை விடாமல் பிடித்துக் கொள்வோம்.
ஏகப்பட்ட பொறுமை வேண்டும் எல்லா நிலைபாடுகளையும்
தாண்டி வர.
நம் விருப்பப் பிரகாரம் ஏதோ நடக்கவில்லை...
பிரதியாக வேறேதோ நடக்கிறது என்றால்
அதற்கும் ஒரு பொருள் இருக்கிறது
என்பதை எங்களுக்கெல்லாம் குருவாக இருப்பவர் அடிக்கடி
சொல்வது காதில் ஒலிக்கிறது.
அந்த ஞானக் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் நன்மைகள் செழிக்க வாழ்த்துகள்.
6 comments:
வணக்கம் சகோதரி
நல்ல பதிவு. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள். இந்த தீபத்திருநாளில், தீமைகளை அகற்றி, நன்மைகள் அனைத்தையும் இறைவன் உலகிற்கு தரட்டும்.
நடப்பவை நடந்து கொண்டேதான் உள்ளது. ஆனாலும், நல்லவையாக நடக்க எனது பிரார்த்தனைகளும். முதல் பாட்டு நன்றாக உள்ளது. பாடல் கேட்ட மாதிரிதான் உள்ளது. ஆனால் படம் என்னவென்று தெரியவில்லை. இறுதியில் டி எம் எஸ் தனது கம்பீரமான குரலில் முருகளை துதிக்கும் பாட்டும் நன்கு உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிவாஜி பாடல் இதுவரை கேட்டதில்லை. சிவாஜியின் நடிப்பு பிரமாதம்.
நோய் பற்றிக் கேள்விப்படும் செய்திகள் மனத்தைக் கலக்குகின்றனதான். அதில் மனதைச் செலுத்த வேண்டாம். நாம் நம் கடமையைச் செய்து, அதாவது முடிந்தவரை எச்சரிக்கையாக இருப்போம்.
மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்...
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அக்கா.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பகிர்ந்த பாடல்கள் இரண்டும் அருமை.
Post a Comment