Blog Archive

Monday, November 02, 2020

| Aloo Matar Sabzi |

நெய்யில் குளித்திருக்கிறது:)  இந்தியில் தான் சொல்கிறார்.  சமையல்  செய்யும் விதம் அழகு.
புரிகிறது.  இதயம்  என்ன சொல்லுமோ!!!!

8 comments:

ஸ்ரீராம். said...

ரொம்ப வேகமாகப் பேசுகிறார்.  இந்தியா அது?  ராஜஸ்தானியோ?  ஆனால் புரிகிறது.  சுவாரஸ்யம்தான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு ஸ்ரீராம். எனக்கு மிகவும் பிடித்தது. என்னால் சாப்பிடமுடியாது. ஆசை இருக்கு.
வைத்தியரிடம் பேச்சு வாங்க முடியுமா:)

வல்லிசிம்ஹன் said...

Language Marvari!

Thulasidharan V Thillaiakathu said...

ஓஹோ இப்படி ஒரு வ்ளாக் வருகிறதா!!! அட!!!

ஆஹா நான் ஒரு ராஜஸ்தானி/குஜராத்தி உறவினர் (அப்ப்டித்தான் நான் சொல்லுவதுண்டு ஏனென்றால் அவர் அங்கேயே இருந்ததால் அவர்களைப் போலவே தான் அவர் சமையல் எல்லாமுமே இருக்கும்) அவரிடம் நான் கற்றுக் கொண்ட சமையல் குறிப்புகள் நிறைய உண்டு. ஒன்று கூட எபியில் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனக்கு குஜராத்தி ராஜஸ்தானி உணவுகள் மிகவும் பிடிக்கும். வீட்டிலும் செய்வதுண்டு.

இவர் நன்றாகச் சொல்கிறார்...அழகாகவும் செய்கிறார். மேலும் அவர் வீடியோக்கள் பார்க்கிறேன் அம்மா.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நிறைய நெய் எண்ணை பயன்படுத்துவார்கள் இவரும்!!!!!!!! எனக்குச் சொல்லிக் கொடுத்த உறவினர் கொஞ்சம் மட்டாகப் பயன்படுத்தச் சொல்லிக் கொடுத்தார். சிம்மில் வைத்து க்ரேவி சாமானை நிறைய நேரம் வதக்கிவிட்டால் அதிகம் எண்ணை அல்லது நெய் போடாமல் செய்யலாம் என்பார். நானும் அதையேதான் பின்பற்றுகிறேன் கூடியவரை.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
மிக நன்றி, வார்த்தைகள் உருண்டோடினாலும்
புரிகிறது.
நெய்யோ , எண்ணெயோ இந்த வீட்டில் எடுபடாது.
மகள் மிகக் கண்டிப்பு:)
அதனால் நீங்கள் சொல்வது போலச் செய்யலாம்.
எனக்கு ஒரு சந்தேகம்மா.
இவ்வளவு நெய் நமக்கு ஒத்துக்குமா.
குஜராத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆரோக்கியம்
ஸ்பெஷலாகக் கொடுத்திருக்கிறாரோ
கிருஷ்ண பகவான்:)

வல்லிசிம்ஹன் said...

கொண்ட சமையல் குறிப்புகள் நிறைய உண்டு. ஒன்று கூட எபியில் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனக்கு குஜராத்தி ராஜஸ்தானி உணவுகள் மிகவும் பிடிக்கும். வீட்டிலும் செய்வதுண்டு.///////////////////////////////////////////////////////////////////////////////////////ஆமாம் நினைவுக்கு வருகிறது.
நல்ல விவரமாகப் போட்டிருந்தீர்கள் கீதாமா.
நிறைய இங்க்ரெடியண்ட்ஸ்.

இவருடைய ஆலூ பராத்தா யம்ம் யம்ம்:)

கோமதி அரசு said...

நெய்யில் குளித்து! மிக அருமையாக இருக்கிறது.