Blog Archive

Monday, November 09, 2020

14 ஆண்டுகளுக்குப் பின் நிஜமாகும் பைடனின் கனவு! இந்தியாவுக்கு உச்சபட்ச மு...

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் 
திரு ஜோ பைடன், திருமதி கமலா ஹாரிஸ்
இருவருக்கும்  நல்ல் ஆட்சி செய்ய இறைவன்
உதவ வேண்டும்.

நம் நாட்டிலிருந்து 19 வயதில் அமெரிக்கா வந்த திருமதி ஷ்யாமளா
கோபாலனின் மகள் திருமதி கமலா.

இங்கு சந்தித்த  
 ஜமைக்கா நாட்டை சேர்ந்த திரு ஹாரிஸ் அவர்களைக்
காதலித்து மணமுடித்தார்.

ஒரு விஞ்ஞானியான அம்மாவும், பொருளாதார நிபுணரான
அப்பாவுக்கும் மணமுறிவு ஏற்பட்ட போது 
கமலாவும் தங்கை மாயாவும் குழந்தைகள்.

தன் குழந்தைகளை தன்னம்பிக்கை மிக்கவர்களாக
வளர்த்த திருமதி ஸ்யாமளா,
புற்றுக்கு நோயில் மறைந்தார்.
கறுப்பினத்தவர் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து முடித்து
வெற்றியுடன்   கலிஃபோர்னியா மாகாணம்
வந்தவர் பலவித போராட்டங்களுக்கு
இடையில் பப்ளிக் ப்ராசிக்யுட்டராக தேர்ந்தெடுக்கப்
பட்டு, 
அட்டர்னி ஜெனரலாகவும் ஆனார்.
இதோ தன் 57 ஆம் வயதில் கறுப்பினத்தவர் அடைய முடியாத
உயரத்துக்கு சிகரம் தொட்டு விட்டார்.

நம் ஊர் அடையாளம் இருந்தாலும் 
பொதுவாகக் கறுப்பினத்தவரே இவரைத் தங்கள் ஆதரிசத் தலைவியாகத்
தாங்கள் இதுவரை சந்தித்த இனவெறுப்பிலிருந்து
மீண்டவராக,
பெண் இனத்தின் பிரதி நிதியாகப் பார்க்கின்றனர்.
நேற்று நடந்த மாபெரும் கூட்டத்தில் 
அனைவரின் தோழமையையும் சந்தித்த நல்ல மங்கையாகவே
பார்க்கிறேன்.
எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற 
வேண்டிய பெரிய பொறுப்பு 
அவர் தோளில் ஏற்றப் பட்டிருக்கிறது.
ஒரு இந்தியப் பிரஜையாக 
திருமதி கமலா ஹாரிசுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.
வெகு முன்னெச்சரிக்கையுடன் தன கடமைகளை 
நிறைவேற்ற இறைவன் துணை நிற்க வேண்டும்.
அவரது கணவருக்கும் நம் வாழ்த்துகள்.
கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.





10 comments:

ஸ்ரீராம். said...

கமலா ஹாரிஸ் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்வோம்.  இந்தியாவுக்கு எதிரான நிலை எடுக்காமல் இருந்தால் சரி!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
தங்கள் நாட்டிலேயே ஏகப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வேண்டிய
நெருக்கடியில் இருக்கிறார்கள்.
ஒருனாளைக்கு 200 ஆயிரம் என்ற அளவில்
தொற்று அதிகரித்து வருகிறது
ஏற்கனவே இருப்பவர் போவேனா என்கிறார்.
இருவரும் எனக்குத் தெரிந்த வரையில் யோசித்துச் செயல்படுபவர்கள்.

நமக்கு நலம் விளையட்டும்.

கோமதி அரசு said...

//தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும்
திரு ஜோ பைடன், திருமதி கமலா ஹாரிஸ்
இருவருக்கும் நல்ல் ஆட்சி செய்ய இறைவன்
உதவ வேண்டும்.//

ஆமாம், நல்லதே நடக்கட்டும்.

நெல்லைத் தமிழன் said...

புதியவர்கள் இருவரும், இந்திய நலனுக்காக எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கெடுதல்கள் செய்யாமல் இருந்தால் போதும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நம்ம ஆளுக்கு சிறிது சிரமம் என்றாலும், வடைகள் பல சுட்டு விழுந்து விடுவாரா அல்லது வீழ்ந்து விடுவாரா என்பது தான் தெரியவில்லை...

KILLERGEE Devakottai said...

எமது வாழ்த்துகளும் கூடி...

ஜூமைக்கா மேடம் ஒருவர் மிகவும் வேண்டப்பட்டவர் நினைவு வந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
ஆமாம் மா.
அவர்களுக்குத் தலைக்கு மேல் சங்கடங்கள் இருக்கின்றன.

நமக்கு நம் நாடு பற்றி,இதனால விளையும் நன்மை
தீமை பற்றிய கவலை.
நேர்மைப் பாதையில் செல்லும் வரை கவலை இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா.
உண்மையே.
கொள்கைகளில் முரண்பாடுகள் இருக்கலாம்.

ஆனால் நடவடிக்கைகளில் யோசித்தே செய்வார்கள் என்றே நம்புகிறேன்.
திரு ஜோ.இறை நம்பிக்கையில் சிறந்தவர்.
நம் நாட்டுக்குக் களங்கம் வரக்கூடாது. நம்புவோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
வாயால் பேசியே தீமையைத் தேடிக்கொண்டவர்
இங்கே பலர்.
நாம் நன்மையே நினைப்போம்.
அரசியலில் எதுதான் நிரந்தரம்.
தரம் இருக்கட்டும் என்பதே நம் பிரார்த்தனை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
இவர்களும் வாழ்ந்து நம்மையும் வாழ வைக்க வேண்டும்.
ஜமைக்கா தோழி வேறயா:)
நீங்கள் எழுதுங்களேன் மா.
நன்றி.