தமிழ்த் தினசரி தேதிகளைக் கிழிக்கும் போது
ஐப்பசி சதயம் கண்ணில் பட்டது.26 ஆம் தேதியே
அந்த விழா நடந்திருக்கலாம்.
பொன்னியின் செல்வன் கல்கி கொடுத்த செல்வமாகப்
படித்த நாட்கள் நினைவில் வந்தன.
தொடர்ந்து இணையத்தில் வந்து கொண்டிருந்த விவாதங்கள்.
தஞ்சைக் கோயிலைக் கட்ட வானுலகிலிருந்து வந்த வேற்றுக் கிரகவாசிகள்
, சித்தர்கள்,
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்,
கல்வெட்டுகளைப் படித்துப் புரிந்து கொள்பவர்கள்,
காலச்சக்ரம் நரசிம்மா எழுதின மாற்று சரித்திரம்
என்று மனது சுற்றி வந்தது,.
நல்லதையே விரும்பும் மனம்
அவரது நாவலைப் படித்துப் பிரமித்துக் குழம்பியது,
கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
தமிழ் மன்னன்,
இத்தனை பெரிய கோயிலைத் திட்டமிட்டு
அத்தனை சிற்பிகளைக் கொண்டுவந்து
அந்தக் கோவிலைக் கட்ட நல்ல நிலத்தைத் தேர்ந்தெடுத்து
கட்டி இருப்பது எவ்வளவு பெரிய சாதனை!
சிவகாமியின் சபதம் நாவலில் அரசர் மஹேந்த்ர வர்மன்
சித்தரிக்கப் படும் அளவுக்கு ,
அரசன் ராஜ ராஜ சோழனையும் பற்றி அவர் இன்னோரு நாவல்
எழுதி இருக்கலாம்:)
எழுத்தாளர் பாலகுமாரன் எழுதி இருப்பதாகத் தெரிகிறது.
அதை நான் படிக்கவில்லை.
கண்முன்னே குந்தவை தேவியையும், அருள்மொழி வர்மரையும்
காணும் ஆசையில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின்
படத்தைப் பார்த்தேன்.
இந்தத் திரைக்கதை யார் எழுதினார்களோ தெரியவில்லை.
திரு டி ஆர் மஹாலிங்கம் அவர்களின் கணீர் குரல்,
எஸ்.வரலக்ஷ்மியின் நல்ல தமிழ்ப் பாடல்கள்,
சீர்காழி கோவிந்தராஜன் குரல் எலாமே மிகப்
பொருத்தமாகக் கதையுடன் செல்கின்றன.
கொஞ்சம் ஒட்டாதது அந்த வேங்கி நாட்டு அரசன்,
ராஜராஜனின் புதல்வி காதல்.
ஆனால் இதெல்லாம் இல்லாமல்
படம் எடுத்திருக்க முடியாது என்று தோன்றுகிறது.
20 comments:
பாலகுமாரன் எழுதியது உடையார். எட்டு பாகமோ, ஏழு பாகமோ... நான் இரண்டு பாகம் மட்டும் படித்திருந்தேன். மேலே படிக்க ஓடவில்லை.
ராஜராஜசோழன் பற்றிய கதை ஒன்று ஜெகசிற்பியன் எழுதி உள்ளதாக நினைவு. சரியாக நினைவில்லை. என் மாமா ஒருவரைக் கேட்டால் சொல்லுவார்.
திரைப்படப் பிரம்மாண்டங்களில் ஒன்றான ராஜராஜசோழனை பலமுறை விரும்பிப் பார்த்துள்ளேன்.
அருமையான பாடல்கள்...
பாலகுமரன் ராஜேந்திர சோழன் பற்றி தான் எழிதிருப்பார் உடையாரில் என்று நினைக்கிறேன்.
ராஜராஜ சோழன் கதை அமைப்பு அரு.ராமனாதன் அவர்கள்.
திரைக்கதை டைரக் ஷ்ன் எ.பி. நாகராஜன் அவர்கள்.
மிக அருமையான பதிவு வல்லி. ராஜராஜசோழன் படம் நாங்க அம்பத்தூரில் முதல் ரவுன்ட் இருக்கையில் எங்க கலை மன்றம் மூலமாப் போய்ப் பார்த்தோம். உறுப்பினர்களுக்கு 2 டிக்கெட், விருந்தாளிகளுக்கு 2 டிக்கெட் எனக் கொடுப்பார்கள். எங்களுக்கு உறுப்பினர் டிக்கெட்டும், எங்களோடு இருந்த மைத்துனனுக்கு விருந்தாளி டிக்கெட்டும் வாங்கிக் கொண்டு போனோம். சயானி தியேட்டரில் பார்த்த நினைவு. கௌரவம் படமும் அங்கே தான் பார்த்தோம். இதே மாதிரி சபா மூலம் தான். நல்ல நல்ல நாடகங்கள் பார்த்திருக்கோம். அதெல்லாம் ஒரு காலம்.
சோழ மகாராஜனை நினைவு கூர்ந்து நல்லதொரு பதிவு...
வல்லிம்மா பொன்னியின் செல்வன் பல பல வருடங்களுக்கு முன் வாசித்தது. ரசித்து ரசித்து வாசித்தேன். அப்புறம் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்படமும் பார்த்ததுண்டு. நம் வீட்டில் எப்போதேனும் எல்லா குட்டீஸையும் படத்துக்குக் கூட்டிக் கொண்டு போவாங்க. அதுவும் அவர்கள் முடிவு செய்யும் படம் தான். என் அம்மாவின் அம்மா/பாட்டிக்கு சிவாஜியின் மிகப் பெரிய விசிறி. எனவே இப்படம் நாகர்கோவிலில் சக்கரவர்த்தி தியேட்டரா, ராஜேஷ் தியேட்டரோ ஏதோ ஒன்றில் போட்ட போது கூட்டிக் கொண்டு சென்றார்கள். அப்போது பார்த்து ரசித்த படம்.
கீதா
அவ்வப்போது வருவேன் அம்மா ப்ளாக் பக்கம்
கீதா
உடையார் நாவல், ராஜராஜ சோழனைப் பற்றித்தான். அதிலும் அந்தக் கோவிலை எழுப்பியதைத்தான் பல பாகங்களாகச் சொல்லியிருப்பார். இப்படித்தான் அந்த வாழ்க்கை இருந்திருக்கும் என்று அனுமானித்து அதை நாவலாக எழுதியிருப்பார்.
ஆனால் கல்கி எழுதிய நாவலில் நாம் ஆழ்ந்தோம்.
இரண்டுக்கும் வித்தியாசம் நிறைய உண்டு.
ராஜ ராஜ சோழன் படத்தை நான் 2-3ம் வகுப்பு படிக்கும்போது பரமக்குடி ரவி தியேட்டரில் பார்த்தேன். முழுத் திரையில் சிவாஜியின் வெற்றிலை கொடுக்கும் கையும், முகமும் நினைவில் இருக்கிறது.
அப்போதெல்லாம், திரையில் வருபவர்கள், தியேட்டரின் பின்னால் உள்ள அறையில் மேக்கப் போட்டுக்கொண்டு எதிரில் உள்ள திரையில் நடிக்கிறார்கள் என்று நம்பினேன்.
வணக்கம் சகோதரி
நல்ல நினைவு கூற வைக்கும் பதிவு. ராஜராஜ சோழன் பிரமாண்ட திரைப்படம். அதற்காகவே அம்மா வீட்டிலிருக்கும் போது திரையரங்கம் சென்று பார்த்து வந்தோம். அனைவரும் சிவாஜியின் நடிப்பு அந்தப்படத்தில் மிகையென கூறினாலும், அந்த அரசருக்கே உரிய கம்பீரமான நடிப்பை அவரால் மட்டுமே தர முடியுமென தோன்றியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு ஸ்ரீராம்.
பெரிய பெரிய புத்தகங்களைக் கையில் வைத்துப் படிப்பது
சிரமம் ஆகிறது.
இரண்டு புத்தகங்களை பிரிக்காமல்
அப்படியே வைத்திருக்கிறேன்.
பாலகுமாரன் அவர்கள் புத்தகங்கள்
ஆரம்பத்தில் எழுதியவைப் படித்துப் பிடித்ததுண்டு.
ஏனோ சுவை போய் விட்டது.
அதனாலயே உடையார் வாங்கவில்லை.:)
நன்றி மா.
அன்பு முனைவர் ஐயா, வணக்கம்.
நீங்கள்,கரந்தை ஜெயக்குமார்,நம் துரை செல்வராஜு
எல்லோரும் காவிரி பூமியைச் சேர்ந்தவர்கள்.
புண்ணியசாலிகள்.
அதுவும் நீங்கள் நல்ல நிபுணர்.
உங்கள் பதிவுகள் விட்டுப் போகின்றன.
மன்னிக்கணும்.
ஆமாம் ஐயா, அந்த மாமன்னர் புகழில் கொஞ்சமாவது மக்களைச் சென்றடைந்ததற்கு
இந்தப் படமும் ஒரு காரணம்.
திரு ஏ.பி.நாகராஜன் ஐயாவுக்குத் தான் நன்றி சொல்லணும்.
உங்கள் பணி சிறக்கப் பிரார்த்தனைகள்.
அன்பு தனபாலன் ,ஆமாம் ராஜா.
நல்ல தமிழ், நல்ல உச்சரிப்பு, நல்ல இசை.
ராஜாவே கம்பீரம். அப்போது குடிமக்களும் சிறந்திருப்பார்கள் என்பது உறுதி. நன்றி மா.
அன்பு கோமதி,
வாங்கப்பா. நீங்கள் இங்கே எல்லாம் நிறையச் சென்று பார்த்திருப்பீர்கள்.
ஆஹா அரு.ராமனாதனின் கதை அமைப்பா.
எத்தனை பெரிய கல்விமான் களைக் கொண்டது நம்
தமிழகம். வியந்து முடியாது.
எனக்கு உடையார் நாவலைப் பற்றித் தெரியாது.
தந்தை,மகன் இருவரையும் சொன்னதாகத் தோழி சொல்லி இருந்தார்.
நன்றி மா.
அன்பு கீதாமா,
எல்லாம் பொன்னியின் செல்வன் மேலிருக்கும் பாசம் தான் காரணம்.
இப்போது சிவகாமியின் சபதம் பாட்காஸ்ட்
வருகிறது.
மீண்டும் பழைய படிப்புலகம் சென்று விடுகிறேன்.
மீள நேரம் ஆகிறது.
உங்கள் பெருந்தன்மையால் சொல்கிறீர்கள்.
சோழ மன்னர்கள் சேவை எல்லாம் இந்த
ஒரு பாராவில் முடியும். ஏதோ சிற்றறிவுக்கு எட்டியது.
நாங்கள் திருச்சியில் இருக்கும் போது இந்தப்
படம் வந்தது.
அங்கே படங்களுக்குச் செல்வது அபூர்வம்:)
குழந்தைகள் பொருந்தி உட்கார மாட்டார்கள்.
நீங்கள் காண முடிந்தது சந்தோஷம் அம்மா..
அன்பு துரை,
ஐப்பசி சதயம் மறக்க முடியாது.
சோழ அரசர்களைப் பற்றி யார் பதிவிட்டாலும் படித்து விடுவேன்.
செயல் திறன் படைத்தவர்களைப்
பாராட்டாமல் இருக்க முடியுமா.
நீங்கள் எல்லாம் எழுதுவது போல முடிவதில்லை.
உங்கள் பதிவு மெய்சிலிர்க்க வைத்தது.
நன்றி மா.நலமுடன் இருங்கள்.
அன்பு கீதா ரங்கன்மா,
நீங்க வந்ததே மிகச் சிறப்பு.
நேரம் அல்லவா அருகிவிட்டது.!!!
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே
என்பதை நிரூபிக்கவே நம் தோழமை.
பாட்டி நல்ல படத்துக்குத் தான் அழைத்துச் சென்றிருக்கிறார்,.
அது உங்கள் நினைவில் இருப்பதே
அதிசயம். மிக மிக நன்றிராஜா.
இனிய இரவுக்கான வணக்கம்.
அன்பு முரளிமா,
இந்தக் குளிர் மிகுதியாகும் போது
மனம் சலிப்படைகிறது. எழுதுவதைவிட
இணையம் பார்ப்பது அதிகரித்துவிட்டது.
நீங்கள் உடையார் படித்திருக்கிறீர்களே. நல்ல பொறுமைதான்.
கல்கி மனதோடு ஒட்டும்படி கதை சொல்வார்.
பாலகுமாரன் விஞ்ஞான அடிப்படையில்
நடத்திச் செல்வார்.
சில பேருக்கு விவரங்கள் வேண்டும். என்னைப் போன்றவர்களுக்கு
உணர்வுகள் வேண்டும்.
படம் பார்த்து சிவாஜியின் முகமும் நினைவில்
வைத்திருக்கிறீர்களே.
நல்லதுதான். நன்றி மா. பத்திரமாக இருங்கள்.
அன்பு கமலாமா,
நீங்கள் சொல்வது உண்மையே.
அப்போது நடித்த நடிப்பெல்லாம் மிகையாகத் தான் சொல்கிறார்கள்.
இப்போது பார்க்கும் போது கூட எனக்கு
மிகையாகத் தோன்றவில்லை.
அந்த அசைப்பும், நடையும் ம்,கம்பீரமும்
இல்லாமல் ஒரு அரசனை நினைக்க முடியவில்லை.
உங்களுக்கும் பிடித்திருந்தது மகிழ்ச்சி.
உங்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் என் அன்பு.
Post a Comment