Blog Archive

Monday, July 13, 2020

VADIVEYRU THIRISOOLAM THONTRUM MLV GROUP @ PAARTHTHIBHAN KANAVU

வல்லிசிம்ஹ    வடிவேறு திரிசூலம் .....
முன்னம் அவனுடைய நாமம் 
வல்லிசிம்ஹன் .

ஜீவி சார் சொல்லி அவர் மகன் ஜீவாவின் 
பதிவைப் பார்த்ததும்,http://jeevagv.blogspot.com/2020/06/blog-post_21.html
சிறிதே  மறந்திருந்த சிவகாமியின் நினைவுகள் வந்து விட்டன.

மிக நன்றி ஜீவி சார் ,ஜீவா.

நான் நினைத்திருந்த மாமல்லருக்கும்,
பார்த்திபன் கனவில் வரும் மாமல்லரூ க்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் 
கதை அதேதான் இல்லையா:)

மீண்டும் அந்தப் பாடல்கள் 
எம் எல் வி அம்மா  குரல் வழியே 
ஆனந்தமாக நினைவு கொள்ள வைத்தன.


இங்கே சில பாடல்கள்  சிவகாமிக்கு சமர்ப்பணம்.
கேட்டு பார்த்து ரசிக்க முடியும் என்று நம்புகிறேன்.❤🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
அந்தி மயங்குதடி..

17 comments:

ஸ்ரீராம். said...

இனிமையான பாடல்கள்.  அது வடிவேலின் திரிசூலமோ?

ஸ்ரீராம். said...

அந்தி மயங்குதடி, ஆசை பெருகுதடி ரொம்ப இனிமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம் மா.

அது வடிவேறு திரிசூலம் தான்.
திரு நாவுக்கரசர் பதிகம்.
அந்தி மயங்குதடி பாடல் மிக அழகு.
அதற்கு ஸ்ரீமதி கமலா நடனம் இன்னும் நளினம்.
நன்றி ராஜா.

ஸ்ரீராம். said...

என் அப்பா கமலாவின் பரமரசிகர்.  அவர் நாட்டிய பாடல்கள் என்றால் விரும்பி பார்ப்பார்.

Geetha Sambasivam said...

எனக்கும் இந்தப் படமும் கமலாவின் நாட்டியமும் தான் ஜீவாவின் பதிவைப் படித்ததும் நினைவில் வந்தன. இங்கே பகிர்ந்ததுக்கு நன்றி ரேவதி. கமலாவின் நாட்டியம் கிளாசிக். எப்போதுமே ரொம்பப் பிடிக்கும்.

Geetha Sambasivam said...

அருமையான ஆடல். கமலாவின் நளினம் வேறே எவருக்கும் வராது என்பது என் கருத்து. உடல் தான் ரப்பரைப் போல் எப்படியெல்லாம் வளைகிறது. கைகளும், விரல்களும் பேசும் முத்திரைகள்! அற்புதமான நடனம்.

வல்லிசிம்ஹன் said...

ஶ்ரீராம் , என் அம்மாவுக்கு இவர்களை மிகவும் பிடிக்கும். இலக்கணம் மாறாமல் ஆடுகிறார் என்பார்.

Geetha Sambasivam said...

வைஜயந்தியின் நடனத்துக்கும் கமலாவின் நடனத்துக்கும் எத்தனை வேறுபாடுகள். இயல்பாகக் கமலாவின் கை, கால்கள் இயங்குவதும் வைஜயந்தி இயக்குவதும் நன்றாகத் தெரிகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா.. இத்தனை நாட்கள் அவர் பதிவை பார்ககாமல் விட்டு விட்டோமே என்று தோன்றியது.

பார்த்திபன் கனவு எழுதிய பிறகு தானே சிவகாமி வந்தாள்.. நல்ல படம்.. நமக்கெல்லாம் இவை மாதிரி படங்களைப் பார்ததுவிட்டு வேறு படங்கள் பிடிக்கவில்லை.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்து பாடல்களும் இனிமை. கேட்டு ரசித்தேன் மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்கள்...

கோமதி அரசு said...

பாட்டு மிக அருமை.

சிவகாமிசபதம் கதையில் வருவது போல்

//தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே //

பார்த்திபன் கனவு படத்தில் மாறு வேடத்தில் வரும் நரசிம்ம பல்லவர் கதை சொல்வார் விக்கிரமனுக்கு.
பார்த்திபன் கனவில் குமாறி கமலாவிற்கு அவர் பாடிய பாடல்கள் மிக நன்றாக இருக்கும்.

கோமதி அரசு said...

முதல் பாடலில் நரசிம்மர் கதை சொல்வதும் பாடலும் சேர்ந்து வருகிறது பார்த்தேன் .

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
வைஜயந்தி நடனத்தில் கொஞ்சமாவது அபினயம் பார்க்கலாம்.
பத்மினி நடனத்தில் இயக்குனரின் முத்திரை தான் தெரியும். சினிமா அவகளை
விழுங்கி விட்டது.
கமலா அப்படி இல்லை. அவரிடம் பாடம் கற்றவர்களும்
நிருத்தம் என்று இயல்பாக ஆடுவதாக இங்கிருப்பவர்கள்
சொல்கிறார்கள்.
மனமும் கைகளும் கருத்துடன்
ஒன்றிணைந்து இயங்கும் நடனம் அவருடையது. சரியாகச் சொன்னீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு தனபாலன்.
தமிழில் கொஞ்சும் பாடல்கள்.
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
இனிய காலை வணக்கம்.
எம் எல் வி அம்மாவின் குரல்
கமலா அவர்களின் நடனத்துக்குப் பொருந்தி வருகிறது.
சிவகாமியின் சபதத்தில் ஒரு காட்சியையும் மறக்க முடியவில்லை.
நரசிம்ம பல்லவராக வரும் ரங்கா ராவின்
நடிப்பும் உயர்த்திதான்.

உணர்ந்து நடித்திருப்பார்.
கடைசியில் சிவகாமி தலைப் பட்டாள் நங்கை
என்று இறைவன் பாதங்களைச் சரண்
அடையும் போது கண்ணில் நீர் வராமல் இருக்காது.
மிக நன்றி மா.