Blog Archive

Friday, July 10, 2020

Mohana Ranga Ennai Parada - Maamiyar Mechiya Marumagal

வல்லிசிம்ஹன்
மாமியார் மெச்சிய மருமகள் படம் 
அருமையான கதையுடன் வெளிவந்தது.
ஜி.வரலட்சுமி,  எஸ்.எஸ்.ராஜேந்திரன்,எம் என் ராஜம் எல்லோரும் போட்டி 
போட்டுக் கொண்டு  நடித்திருப்பார்கள்.
ஒரு குழந்தைக்காக  இந்தத் தம்பதி படும்  பாடும்,
அம்மாவை நம்ப வைக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் நகைக்க வைக்கும்.
 மோஹன ரங்கா பாடல் ,எம் எல் வி அம்மா, சீர்காழி கோவிந்தராஜன் குரல்களில்   அமிர்த கானம்.

அடுத்த பாடல் சிவகாமி என்ற படத்தில் வந்தது என்று பதிய பட்டு இருக்கிறது .
தி எம் சௌந்தர  ராஜன் அவர்களின் குரலில் 
கம்பீரமாக ஒலிக்கும்  .
இந்தப் பாடலை நிலவுப் பாடல்களோடு சேர்த்திருக்க வேண்டும்.

பாடல் வரிகளை மறந்து தேடிக்கொண்டிருந்தேன்.
சட்டென நினைவுக்கு வந்தது.

நல்ல பாடல் கிடைத்தது.
உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

10 comments:

ஸ்ரீராம். said...

முதல் பாடல் கேட்டதில்லை.  ஆனால் மா மெ ம படத்தின் கதையைச் சுட்டு அப்புறம் தமிழில் நிறைய பாடங்கள் எடுத்து விட்டார்கள் போல...

வானில் முழு மதியைக் கண்டேன் அருமையான பாடல்.  வெள்ளி விடீயோவிலும் பகிர்ந்திருந்தேன்!

ஸ்ரீராம். said...

மோஹன ரங்கா இணைப் பாரடா...    இந்த வரிகள் பாஹுபலி அனுஷ்கா வாயசைக்கும் பாடலை நினைவு படுத்துகின்றன!

வெங்கட் நாகராஜ் said...

படம் கேள்விப்பட்டிருந்தாலும் முதலாவது பாடல் கேட்டதில்லை.

இரண்டாம் பாடல் பிரபலமான பாடலாயிற்றே! நிறைய முறை கேட்டிருக்கிறேன்.

இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்தேன் மா.

திண்டுக்கல் தனபாலன் said...

முதல் பாடல் கேட்டு பல ஆண்டுகள் உண்டு...

இரண்டாவது பாடல் காணொளியின் உரிமையாளர் வேம்பார் மணிவண்ணன் அவர்கள் காணொளி பக்கத்தில், பல அரிய பழைய பாடல்கள் கிடைக்கும்... மற்ற இடங்களில் கிடைக்கவில்லை என்றால், அவர் பக்கம் தான் செல்வேன்...

கோமதி அரசு said...

மோஹன ரங்கா பாடல் கேட்டு இருக்கிறேன் படம் பார்க்க ஆவல். பழைய படங்கள் என்று போட்ட படத்தையே திரும்ப திரும்ப வைக்கிறார்கள்.

வானில் முழுமதியை கண்டேன் பாடலும் மிக பிடிக்கும்.
கேட்டேன் அக்கா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
பெரும்பாலும் என் நினைவுகளைப் பதம் பார்க்கவே
பாடல்களை அலுக்காமல் தேடுகிறேன். கூகிள்
சொல்லும் விஷயங்களை உருப்போடுகிறேன்.
நீங்கள் கேட்டு ரசிப்பதும் நல்ல
உத்சாகம்.மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஓ. கண்ணா நீ தூங்கடா பாட்டா,?
அனுஷ்கா பெயர் ரொம்ப நாட்களாகக் காதில் விழவே
இல்லையேன்னு நினைத்தேன் ஸ்ரீராம்:)))))))

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு வெங்கட்.
பாடல்கள் எல்லாமே நல்ல கற்பனைத் திறனுடன் பின்னப்
பட்டு இருக்கின்றன.

முழுமதியும் போய் ஆறு நாட்கள் ஆகிவிட்டன.
வேறு பாதை பார்க்கலாம். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா.
மா மெ ம பட லிங்க் கிடைத்தால் அனுப்புகிறேன்.
நல்ல நடிப்பு. ஜி.வரலக்ஷ்மி

சுவையான பாத்திரத்தில் மெருகேற்றி நடித்திருப்பார்கள்.
நீங்கள் ரசிப்பதே எனக்கு பெரிய ஆதரவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் உங்களுக்குத் தெரியாமல் எந்தப் பாடலும் இருக்க முடியாது
ஆமாம் திரு வேம்பார் மணிவண்ணன்
பல வருடங்களாகத் தெரியும்.
இத்தனை பாடுபட்டுப் பாடல்களைச் சேர்த்திருக்கிறார்.

எல்லாமே சிலோன் வானொலியில் கேட்டுக் கேட்டு இன்புற்ற பாடல்கள்.

இது ஒரு பெரிய கொடை.
நன்றி ராஜா.