Blog Archive

Friday, July 03, 2020

தண்ணிலவு

வல்லிசிம்ஹன்  இனிய இசை  எப்பொழுதும் நம்  வாழ்வை நிறைக்கட்டும்.
60  


முதல்  வந்த படங்கள் அனைத்துமே   ஏதோ நல்ல கருத்தைக் கொண்டு வந்தவை.
படித்தால் மட்டும் போதுமா படம் அந்த வரிசையில்
வந்தது.
அண்ணன் தம்பிகளுக்குள் கல்வியில் இருந்த வித்தியாசம்
குணத்தில் இருந்த வித்தியாசம்,

ஒரு உயிர் பலியாவதிலும்,இன்னோரு உயிர்
நீதிக் கூண்டுக்குள் நிறுத்தப் படுவதிலும்
முடிகிறது.

அண்ணன் விபத்தில் உயிர் துறக்கிறான்.
தம்பி கொலைக் குற்றம் சாட்டப் படுகிறான்.
அண்ணி வந்து நடந்ததைக் கூறி அவன் விடுதலைக்குக்
காரணம் ஆகிறாள்.

அதற்கு முன் அண்ணனும் அண்ணியும் தாம்பத்யம் நடத்தும்
அருமையை விவரிக்கும் விதமும்,
தம்பி அண்ணனின் மீது வைத்த பாசம், அண்ணியின்
மேல் வைத்திருக்கும் பக்தி எல்லாமே சிறப்பாகச் சித்தரிக்கப்
படும். 
படித்த அண்ணன், படிக்காத மனைவியுடன் 
பண்பாக ,காதலுடன் நடத்தும் 
வாழ்க்கையின் போது வரும் பாடலாக
''தண்ணிலவு தேனிறைக்க" பாடல் மனதோடு 
இழையோடும் இசையுடன்,சுசீலாம்மாவின் குரலில்
இன்பமாக ஒலிக்கும்.

தேன் நிலவு படம் அதற்கு முன் வந்து விட்டது.
டைரக்டர் ஸ்ரீதர் கதை வசனம் எழுதி தயாரிக்க
 பெரிய நட்சத்திரங்களின் அணிவகுப்பில் தங்கவேலு, எம்.சரோஜா
நகைச்சுவையில் பார்த்தவர்கள் எல்லோரும்
மயங்க,
காஷ்மீர் காட்சிகளில் நாங்கள் எல்லாம்
சொக்கிப் போக வந்த படம். ஏ.எம். ராஜா இசையமைப்பில்,
கவிஞர் கண்ணதாசனின்  கவிதை
வரிகள் தமிழில் நடனமாட வந்த காதல் காமெடி சினிமா.
அந்தப் படத்தில் வந்த நிலவுப் பாடல்
இந்தப் பதிவில் இணைக்கிறேன்.

15 comments:

வெங்கட் நாகராஜ் said...

இரண்டுமே இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்தேன் மா....

Geetha Sambasivam said...

இரண்டு படங்களுமே தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். பாடல்களும் நன்றாக பொருள் பொதிந்தவையாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் ரசிக்கும் இனிமையான பாடல்கள்...

கோமதி அரசு said...

முதல் பாட்டு பக்கத்து வீட்டு அக்கா கல்யாணத்திற்கு வைத்தார்கள். படம் நன்றாக இருக்கும். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு நடிப்பார்கள்.

அடுத்த படமும் பாடல்களும் சிரிப்பான கதையும் நன்றாக இருக்கும் தொலைக்காட்சியில் வைத்தால் பார்ப்பேன்.
பாடல்கள் பகிர்வு நன்றாக இருக்கிறது அக்கா.

பிலஹரி:) ) அதிரா said...

மிக அழகிய பாட்டு, படம் பார்க்கும் ஆசை வருகிறது..

பிலஹரி:) ) அதிரா said...

இரண்டாவது பாட்டும் அழகு ஆனாலும் முதலாவதுதான் மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல்..

Thulasidharan V Thillaiakathu said...

தண்ணிலவு பாடல் ரொம்பப் பிடிக்கும் சூப்பர் பாடல் அம்மா..

நிலவும் மலரும் ஆடுது...ஆஹா அதூவ்ம் பிடித்த பாடல்.

இன்று உங்கும் தேனிலவு எபியிலும் தேன்நிலவு!!

படங்கள் பார்த்ததில்லை

ரசித்தேன் வல்லிம்மா

கீதா

ஸ்ரீராம். said...

ஓ...  இதைத்தான் சொன்னீர்களா?  அதற்கு அப்புறம் இரண்டு பதிவுகள் போட்டு விட்டீர்கள் போல...  இனிமையான பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா வெங்கட்.உடனுக்குடன் கருத்து சொல்வது மிக மகிழ்ச்சிமா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதாமா.
ஒன்று படிப்பினை. இன்னொன்று காதல். ரசிக்கும்படி எடுத்திருந்தார்கள்.
புதுமை என்ற பெயரால் நம்மைப் படுத்தவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
உண்மைதான்.
இனிய மென்மையான இசை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
எல்லோரும் பார்க்கும்படியான படங்கள் அப்போது வந்தன.
விகல்பமான காட்சிகள் இருக்கும் என்றால்
அப்பா அனுமதிக்க மாட்டார்.

நம் ஊர்களில் திருமணம்ங்கள்,
மற்ற நல்ல சடங்குகள்
எல்லாம் இசை இல்லாமல் நிறைவேறாது.

அதற்காகவே நான் தென் தமிழகத்தில் இருந்ததற்கு
பெருமை அடைகிறேன்.
இப்பொழுது மாறி இருக்கலாம்.
நினைவுகளுக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
உண்மைதான் அம்மா.கொஞ்சம் நீளமான கதை.
ரசிக்கும்படியாக எடுத்திருப்பார்கள்.
கண்ணதான் கவிதைகளுக்காகவே
பார்க்கலாம்.
முடிந்தால் இணையத்தில் காணலாம்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன் மா.
காதுக்கு உறுத்தல் இல்லாத இசை
எப்பொழுதுமே இனிமை.
மனதொடு உறவாடும் பாடல்கள்.
உள்ளங்களைச் சேர்க்கும் பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.:)
எல்லோருக்கும் ஒரே மாதிரி பாடல்கள் பிடிப்பது
இனிமை தான்.