Blog Archive

Thursday, July 02, 2020

இந்த நிலவில்

வல்லிசிம்ஹன்
அனைவரும் வளமாக வாழ வேண்டும். இன்னும் 
ஐந்து நாட்களுக்கு
நிலாப் பாடல்கள் தான்.

அதுவும் எங்கள் சாஹபுக்குப் பிடித்த தேவ் சாப்
பாடல்கள்.
சிங்கம் இருக்கும் போது
அவர் லயித்து இந்தப் பாடல்களைக் கேட்கும் காட்சி
எனக்கு வினோதமாக இருக்கும்.

ஏன் இப்படி என்று அவரை விடாமல்
கேட்பேன். ரொம்ப நளினமாக இருக்கிறார் என்று தேவ் ஆனந்தை
பரிகாசம் செய்வேன். பதிலுக்கு அவர்
எனக்குப் பிடித்த சில கதா நாயகிகளைச் சொல்வார்.
கடைசியில் எனக்கும் வேண்டாம் உனக்கும் வேண்டாம் என்று முடித்துக் கொள்வோம்:)

இப்போது நான் அவருக்குப் பிடித்த பாடல்களை 
யூ டியுபில் கேட்கும்போது'
என்ன நினைத்துக் கொள்வாரோ.
அப்பவே இருவரும் சேர்ந்து  கேட்டிருக்கலாமே
என்று நினைத்துக் கொள்வாராயிருக்கலாம்.

நல்ல பல இசைக் கோப்புகளை
எனக்கு அறிமுகப் படுத்தியவருக்கு இந்தப்
பாடல்கள் அர்ப்பணம்

14 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா நிலவுப் பாடல்கள். ஒவ்வொன்றாகக் கேட்டு விடலாம்!

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவில் இரண்டாவது பாடல் வருகிறது... முதல் பாடல் Youtube சென்று கேட்டேன்...

Geetha Sambasivam said...

நல்ல நினைவலைகள். நடித்தது யார்னு தெரியாது. ஆனாலும் பாடல்கள் பிடித்தவையே!

KILLERGEE Devakottai said...

பாடலை கேட்டு ரசித்தேன் அம்மா.

கோமதி அரசு said...

தேவ் ஆனந்தை அப்பாவிற்கு பிடிக்கும். மதுரை தங்கம் தியேட்டரில் போட்ட அவர் படங்களுக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இந்த பாடல்கள் தொலைக்காட்சில் பழைய பாடல் தொகுப்பில் ஒவ்வொரு நடிகர் பாடல்கள் வைக்கும் போது கேட்டு இருக்கிறேன்.

உங்கள் மலரும் நினைவுகளையும் பாடலோடு பகிர்வது மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்.
. கேட்கும் இன்பம் மட்டுமே நமக்கு
இல்லையாமா. ??அடுத்த பிரதோஷ நிலாவும்
இன்று பதிவிட்டாச்சு. நன்றி

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் இனிய காலை வணக்கம்மா.
ஆமாம் முதல் பாடல் வரவில்லை.
ஏன் என்று தெரியாது.
இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து செய்ய வேண்டும்.
இசையை வந்து கேட்டதற்கு மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
முதல் படம் கீதா பாலி, தேவ் ஆனந்த் நடித்த ''ஜால்''
படம்.
இந்தப் பாடலைப் பாடியவர் , கிஷோர் குமாரின் அண்ணன்
ஹேமந்த்குமார்.
ஜால் படம் நான் பார்த்ததில்லை.
பாடல்கள் பிடிக்கும்.
கீதா தத்தின் குரல் மிகவும் இனிமையாக இருக்கும்.
வெகு நாட்களுக்கு,
கீதா பாலி, கீதா தத் வித்யாசம் எனக்குத் தெரியாது:)
இவர் பம்பாயில் இருந்ததால் நிறைய இந்திப்
படங்கள் பார்த்த கதைகளைச் சொல்வார்.
நாங்கள் இருந்த இடங்களில் இந்திப் படங்கள் நிறைய வந்தது கிடையாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
இனிய காலை வணக்கம்.
கேட்டு ரசித்ததற்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
இனிய காலை வணக்கம்.
உங்கள் அப்பாவுக்கு தேவ் ஆனந்த் பிடிக்குமா.
எத்தனை அருமையான செய்தி.
உங்களையும் அழைத்துச் சென்றிருகிறார்.

குழந்தைகள் மீது அத்தனை பிரியம்.
மிக மகிழ்ச்சிமா.
என் அப்பாவும் படம் பார்ப்பதென்றால் நாங்கள் அனைவரும் வரவேண்டும்
என்று எதிர்பார்ப்பார்.
தேவ் ஆனந்த் படப்பாடல்கள் எல்லாமே அருமையாக இருக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அடுத்த பாடல் லவ் மாரேஜ் படம்.
இதைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.
மாலா சின்ஹா கதா நாயகி. அழகான படம்.

ஸ்ரீராம். said...

சில பாடல்களை நம் மனதுக்குப் பிடித்துப்போகும் டியூன்களுக்காகக் கேட்கலாம்.  சில சமயம் அவற்றைக் கேட்ட சூழ்நிலை காரணமாக மனதில் தங்கிவிடும்!

Thulasidharan V Thillaiakathu said...

இப்போதுதான் கேட்கிறேன் அம்மா. மிக நன்றாக இருக்கிறது. முதல் பாடல் வரவில்லை அம்மா.

கீதா

உங்கள் நினைவுகள் இனிமை!

இந்திப்பாடல்கள் கேட்டதில்லை. கேட்கும் போது பழைய தமிழ்ப்பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. முதல் காணொலி வேலை செய்யவில்லை.

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
மிக நன்றி மா.
உண்மைதான். எல்லாப் படங்களுக்கும்,
பாடல்களுக்கும் சரித்திரமே எழுதலாம்:)