அனைவரும் நலமாக இருக்கப் பிரார்த்தனைகள்.1973 இல் வந்த இன்னோரு படம் சௌதாகர்.
ஒரு வெல்ல வியாபாரியைப் பற்றிய கதை.
அமிதாப், நூத்தன்,பத்மா கன்னா மற்றும் குணசித்திர நடிகர்கள்
நடித்த வித்தியாசமான படம்.
தன் காதலிக்கு மெஹர் ,வரதட்சிணை கொடுப்பதற்காக
இன்னோரு பெண்ணைத் திருமணம் செய்கிறார் மோதி.
அவள் அவர் கொண்டு வரும் பேரிச்சம்பழ ரசத்தைக்
காய்ச்சி, வெல்லம் செய்து கொடுக்க அதை விற்று,
பணம் சேர்ந்ததும்,
தலாக் சொல்லி விட்டு,
காதலியைக் கைப்பிடிக்கிறார்,.
இந்த துரோகத்தால் மனம் உடைந்து போகும்
மனைவியை இன்னோருவர் தன் குழந்தைகளுக்காகத்
தன்னை திருமணம் சொல்லக் கேட்டுக் கொண்டதும்
வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார்.
காலம் மாறுகிறது.
மோதியின் காதலிக்கு வெல்லம் காய்ச்சுவது கை வரவில்லை.
வியாபாரம் சறுக்கி விடுகிறது.
அவளிடம் ,தர்க்கம் செய்துவிட்டு, சாறு இருக்கும் பானைகளைக் கொண்டு
முதல் மனைவியின் கணவரிடம்
தயவாகக் கேட்கிறான்.
நல்ல மனிதர் அவர். வியாபார நீக்கு போக்குகள்
அறியாத அவர் அவனுக்குக் கனிவு காண்பிக்க,
நூதன் மறுக்க அந்த நேரம்
கண்ணீருடன் வரும் மோதியின் காதலியைக்
கண்டு மனம் கனிந்து அவளை அணைத்துக் கொள்கிறாள்.
பார்த்துக் கொண்டிருக்கிறான் வியாபாரி.
அவன் மனம் பதப் பட்டதா என்பது கேள்வியே.
வியாபாரி
7 comments:
இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.
சஜ்னா ஹை முஜே பாடலும், தேற மேரா சாத் ரஹே பாடலும்... இதில் வரும் இந்த கிஷோர் பாடலும் பிடிக்கும். இந்தப்படத்தின் இசை அமைப்பாளருக்கு கண் தெரியாது.
அந்தக் காலத்தில் வெற்றிகரமாக ஓடிய படம். ஆனாலும் பார்த்தது இல்லை. நூதன் அமிதாபோடு நடித்திருப்பதே புதிய விஷயமாய்த் தெரிந்தது. பாடல்கள் கேட்டிருக்கேன். நன்றாக இருக்கும்.
அன்பு ஸ்ரீராம்.
நீங்கள் சொன்ன இரண்டு பாடல்கள் பதிவிட்டிருக்கிறேன்.
மூன்றாவதைப் பதிவிட தயக்கம். சட்டுனு ஓடிப் போய்விட்டால்
என்னாவது.
ஹர் ஹசீ சீஸ் கா மை, வெகு நாட்களாகக் கேட்க்கும் பாடல்.
இதோடு ''தீரசே ஜானா கட்டியல் மேய்ன்'' தேவ் ஆனந்த்
பாடலும் மிக மிகப் பிடிக்கும். படம் சுப்பா ருஸ்தம்.:)
இந்தப் படத்தில் நூதனின் மிகப் பண்பட்ட நடிப்பு மனம் கவரும்.
அமிதாப் மிக சாதாரண மரமேறும் ,சம்பாதிப்பதில் ஆசை
கொண்ட கிராமத்து ஆளாக தூள் கிளப்பி இருப்பார்.
பாடல்களை கேட்டு ரசித்தேன் மா.
பாடல்களும் படத்தின் கதையும் நன்றாக இருக்கிறது அக்கா.
நல்ல பகிர்வு அம்மா...
Post a Comment