Blog Archive

Tuesday, July 14, 2020

வணங்காமுடி

வல்லிசிம்ஹன்

 சிந்தாதிரிப் பேட்டையில், சித்ரா டாக்கீஸும்
கெயிட்டியும் இருக்கும்.
மெரினா போய்விட்டு வரும்போதோ

காசினோ தியேட்டர் போய் சினிமா பார்த்துவிட்டு வரும்போதோ
புரசவாக்கம் பஸ் அந்த வழியாகத்தான் போக வேண்டும்.

1957 என்று நினைக்கிறேன்.
அந்த மாபெரும் கட் அவுட் கண்ணில் பட்டது.
அப்பொழுது அதற்குப் பெயர் கட் அவுட் என்று கூடத் தெரியாது.
சிவாஜி மிகப் பெரிய உருவத்தில்
 விலங்குகளால் கட்டப்பட்ட, கை கால்களுடன் 
கம்பீரமாக நிற்பார்.அந்தப் பிரம்மாண்டத்தைப்
பார்க்க ஒரு கூட்டமே நிற்கும்.
அது போல இது வரை ஒரு கட் அவுட் வந்ததோ தெரியாது.
என் நாலடி உயர்த்துக்கு 
அந்த பிம்பம் அவ்வளவு பெரிதாகத் தெரிந்ததோ:)

வணங்காமுடி என்ற பெயர் வேறு அதிசயமாக
இருந்தது.

பாட்டி என்னை இந்தப் படத்துக்கு அழைத்துப்
போகவில்லை. 
பின்னர் வணங்காமுடியின் பாடல்கள் சிலோன் வானொலியில் 
கேட்டு
மிகப் பிடித்தது.மோகனப் புன்னகை வீசிடும் நிலவே பாடலும் தான்
எத்தனை இனிமை.
தஞ்சை ராமையாதாஸ் அவர்களுக்கும், திரு .ஜி.இராமனாதனுக்கும்
எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. மலையே உன் நிலையே நீ பாராய்.,
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI  அவர்களுக்கும் என்றும் நன்றி
சொல்லுகிறேன்.

யூ டியூபில் இருக்கும் பழம் பாடல்களை
அவர் மீட்காவிட்டால் இன்று கேட்கமுடியுமோ
என்னவோ!!!

6 comments:

ஸ்ரீராம். said...

உங்கள் பழைய நினைவுகளுடன் பாடல் விவரங்கள் படிப்பது சுவாரஸ்யம்.  அந்தக் காலத்தில் காலியான அண்ணா சாலையில் பெரிய கட்டவுட்டை கற்பனை செய்து பார்க்கிறேன்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
மௌண்ட் ரோடு எத்தனை விசாலமாய் இருக்கும்!!!
இந்தப் பக்கம் ஸ்பென்சர், ஹிக்கின்பாதம்ஸ், JaffarS
ஐஸ்க்ரீம் பார்லர், ஒரு தர்கா என்று வரிசையாக நினைவுக்கு வருகிறது.

உடனே இடது பக்கம் திரும்பினால்,
கூவத்தைக் கடந்து அந்தப் பக்கம் சித்ரா டாக்கீஸ்.
அங்கே சம்பூர்ண ராமாயணம் பார்த்த நினைவு,
என் டி ராமராவ், பத்மினி,சிவாஜி நடித்தது:)
நீங்கள் சொல்வது உண்மையே மா.
யாதோங்கி பாராத் தான் என் பதிவுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அந்தக் கால பாடல்களில் உள்ள இனிமையே தனி... நெசவு நெய்து கொண்டே என் அப்பா பாடிய பாடல்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது அம்மா...

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள்.

இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன் மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
தங்கள் தந்தை தறி வைத்திருந்தாரா.!!!
அதுதான் வள்ளுவர் உங்கள் கைவசம் வருகிறார்!!!!
எத்தனை அதிர்ஷ்டசாலி நீங்கள்.

இசையும் ,தறியின் தாளமும் நிறைந்த ஒரு வாழ்க்கை.
அற்புதம் மா.
மிக மிக நன்றி. உண்மையே, அந்த நாட்களின் இசையும், தமிழ் உச்சரிப்பும்
இப்போது இருக்கிறதா? தெரியவில்லை.
இருக்கலாம்.
என் காதுகளுக்குப் பழகின இசையை
மீண்டும் ரசிக்கிறேன். நீங்களும் ரசிப்பதில் மகிழ்ச்சி மா.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு வெங்கட்.