பதின்ம வயதுகளில் காணும் எல்லாமே
நினைவில் நீங்காமல் தங்கி விடுகிறது.
சென்னையில் ஒரு வருட காலம்
பாட்டியின் வீட்டில் தங்கிப் படித்த நேரம்.
அதுவரை வருடத்துக்கு ஒரு முறை ,
கோடைகாலத் தென்றலாக சென்னை
தோன்றிய நேரங்கள்.
அன்பு மாமா அனுப்பிய ஒரே ஒரு கடிதம்
அம்மா அப்பாவின் கட்டுப்பாட்டோடு
இருந்த என்னை பாட்டியின் கட்டுக்குள்
பந்தப் படுத்தியது.
ஒரு வெய்யில் காலம் நிலாக் காலம் ஆகியது.
முப்பது பைசா செலவில் கல்லூரி சென்று திரும்பி விடலாம்.
எத்தனை வித விதமான நட்புகள்.
வட இந்தியப் பெண்களின் நாகரீகம்,
என்ன விட மூன்று வயது சீனியர்களின்
நளினம், என்னுடன் பயணித்த தமிழ்த் தோழிகளின் பாசம்
என் 365 நாட்களின் ஒவ்வொரு
நொடியும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
திண்டுக்கல்லில் வீட்டு ஜன்னலோரம் நிற்கக் கூட
அப்பா விடமாட்டார்.
அவருக்கு என் விஷயத்தில் அத்தனை அக்கறை.
எனக்கு வெளி உலகத்தைக் காண்பித்த
அந்த வருடத்திற்கு என் நன்றி.
சென்னையில் ஷாந்தி தியேட்டரில் பார்த்தபடம் சங்கம்.
முக்கோணக் காதல்.
கௌரவமான ராஜேந்திரகுமார்,
உற்சாகமே உரு வெடுத்த ராஜ் கபூர்,
அழகும் ,ஆசையும்,காதலும் பொங்கும் வைஜயந்தி மாலா.
சிறு வயது முதல் சேர்ந்து வளர்ந்த மூவரில், ராஜு
இராணுவத்தில் சேர,
அவன் உயிராகக் காதலிக்கும் தோழி,
தன் மற்றோரு தோழனை நேசிக்கிறாள்.
அந்தக் கட்டத்தில் வரும் பாடல் இது.
காதலுக்காக ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து
கடைசியில் திருவேணி சங்கமத்தில்
ஒருவருடைய சாம்பல் கலக்கிறது.
சரஸ்வதியாக ஆத்மாவுடன் கலக்கிறார் ராஜேந்திர குமார்.
இது பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்று சொல்லத் தேவை
இல்லை,.
வெளி நாடுகளில் சுற்றிப் படம் எடுத்தார் ராஜ் கபூர்.
ராஜேந்திர குமார் தன் அமைதி தியாகத்தால்
மற்ற இருவரின் நெஞ்சங்களில் பூரணமாகக் குடியேறுகிறார்.
படம் பார்த்துவிட்டு வந்த பிறகு
ஆராய்ச்சி செய்வது என் வழக்கம்.
புரியாத வருத்தம் என்னை இரண்டு நாட்கள் மௌனமாக்கி விட்டது.
மற்ற படங்களைப் பார்த்து கலக்கம்
தீர்ந்தது வேறு விஷயம்:)
அப்போது அதுதான் வாழ்க்கை.
17 comments:
சங்கம் படம் பார்த்ததில்லை எனினும் பாடல்கள் கேட்டு ரசித்திருக்கிறேன். இனிய பாடல்கள். கதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ராஜ்கபூர் பூனைக்கு கண்களுடன் மிகவும் கவர்ச்சியாக இருப்பார். ராஜேந்திர குமார் எனக்கு அவ்வளவு பிடிக்காது. ராஜேந்திரகுமார் மகன் அடித்த படம் பின்னாட்களில் ஆர் டி பர்மன் இசைக்காக பார்த்திருக்கிறேன். லவ்ஸ்டோரி என்று ஞாபகம்.
கே.ஏ. அப்பாஸ் ராஜ்கபூரின் ஆஸ்தானக் கதாசிரியர். அவர் கதை அமைப்பில் வந்த படம் வெற்றி பெறக் கேட்கணுமா? ஆனால் நான் அதிகம் ராஜ்கபூர் படங்கள் பார்த்ததில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாகப் பார்த்திருக்கேன். சங்கம், பாபி, மேரா நாம் ஜோக்கர் எல்லாம் ஆங்காங்கே சிற்சில தொகுப்புக்களாகப் பார்த்தது தான். நல்ல நினைவலைகளுடன் கூடிய பகிர்வு.
இனிமையான பாடல்கள் அனைத்துமே. படம் பார்த்ததில்லை என்றாலும் பாடல்கள் கேட்டு ரசித்திருக்கிறேன்.
அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
பாடல்கள் அனைத்துமே அருமை.
அந்த வயதில் இம்ப்ரெஸ் செய்த படம்.
நல்ல மேக் அப் போட்டு ராஜேந்த்ர குமாரும்
நன்றாக இருப்பார்.
ராஜ்கபூர் முழுவதும் பஞ்சாபின் ஜீன்ஸ்.
பூனைக்கண்கள் அந்தக் குடும்பத்தில்
ஷஷி கபூர்,ஷம்மி கபூருக்கும் இருந்தது.
ஃபிலிம் ஃபேர் பத்திரிக்கையில் அட்டையில் வந்த வண்ணம் இருப்பார்கள்.
நன்றி மா.
ராஜேந்த்ரகுமார் மகன் நடிக்கத் தெரியாமல் விழித்த படம்
லவ்ஸ்டோரு.
குமார் கௌரவ்னு நினைக்கிறேன்.:)
அன்பு கீதாமா,
முதலில் குஞ்சுலு அவள் அப்பாவிடம் வந்து சேர்ந்ததுக்கு
வாழ்த்துகள். நலமாக இருக்கட்டும்.
அப்பாஸ் கதைகள் எல்லாமே அழுத்தம் கூடி
ரசிக்கும்படி இருக்கும்.
அதனால்தான் எல்லாப்படங்களும் வெற்றி அடைந்தன.
கூடவே கவர்ச்சி மசாலாவும் தூவி எடுப்பார்.
நான் ராஜ் கபூர் படம் இது ஒன்றுதான் பார்த்திருக்கிறேன்.
திருமணமாகி வெளியூரில் இருந்த போது ஆங்கிலப் படங்கள்
பார்த்த அளவு மற்ற படங்கள்
பார்க்கவில்லைமா.
பாடல்கள் அருமை...
பதிவு பக்கம் பிரிந்து பார்வைக்குப் பட்டதும் டக்கென்று கவிதையோ என்று நினைத்தேன். அப்புறம் தான் வரிகள் மடங்கி மடங்கி வந்திருப்பது புலப்பட்டது.
நினைவுகளின் உள்நோக்க பயணத்திற்கு எப்பொழுதுமே ஒரு புனிதத்துவம் உண்டு. அது புலப்பட்டதில் மகிழ்ச்சி, வல்லிம்மா.
கே.ஏ. அப்பாஸ் என்றதும் உடனே பிளிட்ஸ் பத்திரிகையின் கடைசி பக்கம் நினைவுக்கு வந்தது. உங்கள் நினைவுகளின் உள்நோக்கிய பயணம் அழகு, வல்லிம்மா.
அன்பு வெங்கட்,
தவறாமல் வந்து கருத்திடுவதற்கு மிக நன்றி மா.
அது ஒரு கவிதையான படம்.
அன்பு தனபாலன்,
பொழுதைக் இனிமையாகக் கடக்க இசையை விட
நல்ல மருந்து ஏதும் இல்லை.
நன்றிமா.
ஆமாம் ஜீவீ சார். நான் word il டைப் செய்து
இங்கே காப்பி பேஸ்ட் செய்யும் போது இப்படி ஆகிறது.
நானாவது கவிதையாவது ரொம்ப தூரம் சார்:(
எனக்கும் ப்ளிட்ஸ் நினைவிருக்கிறது. சென்சேஷனல்.
கரஞ்சியா தானே?
உள் நோக்கிப் பயணம் உயிர்ப்பு கொடுக்கிறது.
அங்கும் இங்கும் ஓடும் நெஞ்சம்
என்கிற மாதிரி, கடந்த ,நிகழ் காலங்கள்
சுவையாக ஒப்பிட முடிகிறது.
மாமா ,மாமியுடன் மௌண்ட் ரோடில்
அந்த இரவு வேளையில் நடந்து வந்து
சித்ரா டாக்கீஸ் அருகில் 16 ஆம் நம்பர் பஸ் பிடித்து
மௌனமாக வந்ததும் மறக்கவில்லை.
நீங்கள் வந்து படித்தது இன்னும் சுவை,.
நன்றி சார்.
உங்கள் நினைவுகளின் பகிர்வும் அருமை.
பாடல்களும் அருமை.
சங்கம் பார்த்து இருக்கிறேன்.
தொலைகாட்சியில் சோனியில் பார்த்து இருக்கிறேன்.
' சங்கம்' இளம் வயதில் பார்த்தது. ஆனாலும் அதன் வண்ணக்கலவைகள் இன்னும் நினைவில் உள்ளன. ' ஏ மேரா பிரேம் பத்தர் ஹை' பாடலும் ' ' ' dost dost na raha 'பாடலும் அப்படியொரு புகழ் பெற்றவை!
அன்பு கோமதி மா.,
உண்மைதான். எல்லாப்பாடல்களும் இனிமை.
சங்கம் படம் பார்க்க வேண்டிய ஒன்றுதான். நல்ல நடிப்பு. நல்ல கதை.
உங்களுக்குப் பிடித்தது மகிழ்ச்சிமா.
அன்பு மனோ,
நற்காலை வணக்கம்.
நானும் இந்தப் படத்தை ப்ரி யுனிவர்சிடி
படிக்கும் போது பார்த்தேன்.
காதல் என்பது புதிதாக இருக்கும் காலம்.
தோஸ்து தோஸ்த் ந ரஹா கேட்டால் 'கண்ணீர்
வந்துவிடும்,
யே மேரா ப்ரேம் பத்ர படுக்கர்,
அற்புதமான கவிதை.
உங்களுக்கும் இந்தப் பாடல்கள் பிடித்தது
எனக்கு மகிழ்வே. நன்றி மா.
Post a Comment