வல்லிசிம்ஹன்
நன்மை ஓங்கட்டும்.
நடக்கக் கூடாதது நடக்கும் போது,
மக்கள் பொங்கி எழுவது அவ்வளவு சுலபமாக
அடங்குவதில்லை.
கண்முன்னே ஒரு வரலாறு நடந்தேறுகிறது.
குரூரமாக ஒரு உயிர் போக்கடிக்கப் படுகிறது.
அந்த வீடியோவைத் தவறிப் போய்ப்
பார்த்துவிட்டேன்.
அந்தக் குரல் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அடக்கியாண்டவர்களை நாமும் நம் வரலாற்றில்
பார்த்திருக்கிறோம்.
இன்னுமா அந்த மிருகத்தனம் போகவில்லை என்று நினைக்கவே
அருவருப்பாக இருக்கிறது.
இந்தத் தேசத்தின் மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் கண்டனக்
குரல்கள் எழுந்த வண்ணம், ஊர்வலங்கள் நடந்து
கொண்டிருக்கின்றன.
மக்களின் ஆதங்கம் பொங்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த வண்ணம்,அந்த வண்ணம் என்றெல்லாம் இல்லை.
எல்லா தேசத்தவரும் ,வர்ணத்தவரும்
பங்கெடுக்கிறார்கள்.
நல்ல நிலைமை, நல்ல தீர்ப்பு வரட்டும்.
நன்மை ஓங்கட்டும்.
நடக்கக் கூடாதது நடக்கும் போது,
மக்கள் பொங்கி எழுவது அவ்வளவு சுலபமாக
அடங்குவதில்லை.
கண்முன்னே ஒரு வரலாறு நடந்தேறுகிறது.
குரூரமாக ஒரு உயிர் போக்கடிக்கப் படுகிறது.
அந்த வீடியோவைத் தவறிப் போய்ப்
பார்த்துவிட்டேன்.
அந்தக் குரல் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அடக்கியாண்டவர்களை நாமும் நம் வரலாற்றில்
பார்த்திருக்கிறோம்.
இன்னுமா அந்த மிருகத்தனம் போகவில்லை என்று நினைக்கவே
அருவருப்பாக இருக்கிறது.
இந்தத் தேசத்தின் மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் கண்டனக்
குரல்கள் எழுந்த வண்ணம், ஊர்வலங்கள் நடந்து
கொண்டிருக்கின்றன.
மக்களின் ஆதங்கம் பொங்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த வண்ணம்,அந்த வண்ணம் என்றெல்லாம் இல்லை.
எல்லா தேசத்தவரும் ,வர்ணத்தவரும்
பங்கெடுக்கிறார்கள்.
நல்ல நிலைமை, நல்ல தீர்ப்பு வரட்டும்.
24 comments:
இறைவனும், இயற்கையும் அவ்வப்பொழுது மனிதர்களுக்கு உணர்த்திக் காட்டினாலும் இன்னும் புரியா மடந்தைகளாகவே வாழ்கிறோம்.
காணொளி பார்க்க எனக்கு மனதே இல்லை. செய்தியே பதட்டப்பட வைத்தது. எத்தனை நாளைக்கு இந்த வன்மமும் சகமனிதனை மனிதனாக பார்க்க முடியாத எண்ணமும்....
வேதனை தான் மிஞ்சுகிறது இது போன்ற நிகழ்வுகளால்.
எந்தக் காணொளி என்று புரியவில்லை வல்லிம்மா....
இந்த மனநோய் தீர என்ன வழி என்று தெரியவில்லை... ஏன் தான் இப்படி செய்கிறார்களோ... சே...
அந்த வீடியோவைப் பார்க்கும் தைரியம் எனக்கு இன்னும் வரவில்லை. எந்த நூற்றாண்டில் நாம் இருக்கிறோம். இன்னும் மனிதர்கள் மாறவில்லை என்பது அயர்ச்சியை அளிக்கிறது.
கொடுமைக்கும் அளவில்லை :(
உண்மைதான் வல்லிம்மா.. நாட்டைக் காக்க வேண்டியவர்களே இப்படி நடந்தால், மக்கள் நிலைமை என்ன ஆகும்... அதேபோல ட்றம்ப் அங்கிளைப்போட்டு உளக்குவதுபோல ஒரு மீம்ஸ் சுற்றுது, பார்த்தீங்களோ தெரியாது.. ஹா ஹா ஹா..
நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும்.
இதயம்அற்றவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.
இது எல்லா ஊரிலும், எல்லா நாட்டிலும் பொதுவாகவே இருக்கிறியாது. பதினேழு வயதுப் பெண்ணின் முயற்சியால் அந்தக் கொடூரம் வெளிப்பப்ட்டிருக்கிறியாது.
அம்மா நான் காணொளி பார்க்கவில்லை எனக்குப் பார்க்கும் தைரியம் இல்லை.
நடந்தது மிக மிக கொடுமையான ஒன்று.
அவர்களுக்குக் கண்டிப்பாகத் தண்டனை கிடைக்க வேண்டும்.
மகன் செய்தி சொல்லி நிறைய விஷயமும் சொன்னான்.
கீதா
இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட
யானை ஒன்று வலுக்கட்டாயமாகப் பிடித்து முகாமில் வைக்கப்பட்ட போது மனம் வெதும்பி பட்டினி கிடந்து தன் உயிரைப் போக்கிக் கொண்டது அந்த அப்பாவி ஜீவன்...
அதற்கென ஒருபதிவும் அப்போது வெளியிட்டுள்ளேன்..
ஆனால் இப்போது மனம் தாள முடிய வில்லை..
இப்படியான கொடும்பாவிகளுக்கு
என்னென்ன நேருமோ!...
அன்பு தேவகோட்டைஜி,
நம் ஊரில் மனிதன் மிருகத்தை ,அதுவும் கர்ப்பவதியை
அழித்தான். இங்கு மனிதனை மனிதனை உயிர் நீக்கச் செய்தான்.
யார் கேள்வி கேட்கப் போகிறார்கள்? தெரியவில்லையே.
இப்போது மக்களின் எழுச்சியைப் பார்த்தால் நன்மை
நடக்கும் என்று தோன்றுகிறது.நன்றி மா,
அன்பு வெங்கட் உண்மையே.
சாதாரணமாக் கொரோனா செய்தி அப்டேட்
செய்து கொண்டிருந்தேன்.
திடீரென்று இந்த செய்தி ப்ரேக்கிங்க் நியூஸ் ஆக வந்து
வந்துவிட்டது.அதிர்ச்சியிலிருந்து மீளவே
சில நிமிஷங்கள் பிடித்தது.
தெரியவில்லை மா. உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது...
அன்பு முரளி மா,
சென்ற வாரம் ஒரு அனியாய கொலை நடந்தது.
நம்மை க் காக்க வேண்டியவர்களே
உயிரைப் போக்கினார்கள்.
உங்களுக்கு செய்தி அனுப்புகிறேன்.
அன்பு தனபாலன்,
ஒரு நொடியில்ல ஒன்பது நிமிடம், அந்த உயிர் துடித்திருக்கிறது
என்ன சொல்வது:(
அன்பு ராமலக்ஷ்மி,
நாமெல்லாம் எந்த மாதிரி உலகத்தில் இருக்கிறோம் என்றே தெரியவில்லைமா.
வீடியோ பார்க்காவிட்டால் பரவாயில்லை.
உண்மைதான், உலகம் எங்கும் எத்தனையோ கொடுமைகள் அரங்கேறுகின்றன.
நாமும் அதைக் கடந்து மறக்கப் பார்க்கும் வேளையில்
இது நடக்கிறது.
அன்பு அதிரா,
எனக்கு மீம்ஸ் வருவதில்லை.
உணர்ச்சியே காட்டாமல்
உயர்ந்து இடத்தில் உலாவும் மனிதர்களை என்ன சொல்வது மா.
ஆமாம் கோமதிமா. நல்ல தீர்ப்பு கிடைக்க
இறைவன் தான் வழி செய்ய வேண்டும்.
அன்பு ஸ்ரீராம்,
ஆமாம் நம் ஊரில் நடக்காத கொடுமைகளா.
இது செய்தியாகி பரப்பப் படுவதால் நீதி கிடைக்கலாம்.
அன்பு கீதாமா,
பார்க்க வேண்டாம்மா. மனது மிக உளைச்சல்
பெறுகிறது.
உங்கள் மகன் சரியாகச் சொல்லி இருப்பார்.
நான் டிவி பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.
செய்தியில் அந்தக் கர்ப்பவதியான யானையைப் பற்றிப் படிக்கும் போது
மனம் பதறியது.
அன்பு துரை,
இந்த வைகாசி மாதம் எத்தனையோ தெய்வ தரிசனங்களும்
விழக்களும் நடந்து நாம் உய்யும் வழியைப் பார்க்காமல்,
ஒரு அறியாத பசித்த ஜீவனைக் கொன்றிருக்கிறார்களே.
வாயில்லாத ஜீவன் என்ன பாடுபட்டதோ.
இறைவன் இவர்களுக்கு எந்த இடத்தை
ஒதுக்கி இருக்கிறாரோ.
வல்லிம்மா... அமெரிக்காவில் சக மனிதனுக்கு இழைக்கப்பட்ட அநீதி, மிகவும் கொடுமையானதுதான். அதிலும் மன ஆழத்தில் ஒருவேளை அவருக்கு இனரீதியான வெறுப்பு இருந்திருக்கலாம்.
கேரளாவின் மலப்புரத்தில் கர்ப்பிணி யானைக்கு கொடுமை விளைவித்து இறக்கக் காரணமானவர்களும் என் மனதைக் கலங்கடித்தது.
இதயம் என்பது இவர்களுக்கு மட்டும் இரும்பாலானதாக இருக்கும் போலிருக்கு.
அன்பு முரளிமா,
யானை கொல்லப்பட்ட செய்தியையும் பார்த்தேன்.
ஒரு வாய் பேச முடியாத ஜீவனைக் கொன்றிருக்கிறார்கள். அதற்கு நீதியும் கற்பிக்கப்
பார்க்கிறார்கள்.
யானைகளிடன் இருப்பிடத்தை அழித்து ரிசார்ட்ஸ் கட்டியாகிவிட்டது.
அவை உணவு தேடும் பாதையை மறைத்தாகிவிட்டது.
அவைகள் எங்கே போகும்.
இங்கே இந்த மன வக்கிரத்தை என்ன சொல்வது.
இந்த கண்டன ஊர்வலங்களைப் பார்க்கும் போதே
மனம் பதைக்கிறது.
இவர்களையும் மீறி திருட்டு நடக்கும்
பெரிய கடைகளில் ,பலர் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள்.
வழி நடத்த வேண்டியவரோ
உணர்ந்த மாதிரியே தெரியவில்லை.
கடவுள் தான் காக்க வேண்டும்.
Post a Comment