Blog Archive

Saturday, April 11, 2020

ஒரு புதுக்கதை.

வல்லிசிம்ஹன்
ஒரு புதுக்கதை.
 தன்  முன் நிற்கும்  நிற்கும்  பத்துவயதுச் சிறுவனைப்
பார்த்தார், அந்தப் பிரபலப் பள்ளியின் தலைவி.
அவனை அழைத்து வந்த   அவனுடைய அன்னையையும்
கவனித்தார் . இரண்டு பேருடைய முகமும் களைத்திருந்தது.

என்ன  பிரச்சினை. பையனோ ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டினான்.
அன்னையும்  அவர் கேட்ட கேள்விகளுக்கு 
சட்டென்று  பதில் சொன்னார்.
சென்னைக்குப் புதிதாக வந்தவர்கள். இந்தப் பள்ளியின் சம்பளமோ 
அதிகம் .
அவர்களுக்குச் சிபாரிசோ சென்னையின்   பிரபலத் 
தொழிலதிபரின்  மனைவியிடம் இருந்து.


ஒரு  காலாண்டுக்கே  2000 அளவில்  செலவாகும்.
அதற்கப்புறம்  யூ னிஃபார்ம் , காலுறை, ஷூ 
என்று செலவு.
இதெல்லாம் முடியுமா இந்தப் பெண்ணால்.

அந்தப் பெண்ணுக்கு இருந்திருந்தால்  27 வயது இருக்கும்.
அவள் கணவருக்கு அம்பத்தூர்   தொழிற்பேட்டையில் 
பேருந்து ஓட்டும் வேலை.

மந்தைவெளியில்   சொந்த வீடு.  அதனால் தான் பக்கத்திலிருக்கும் 
இந்தப் பள்ளியில்  இடம் தேடி வந்திருக்கிறாள்.

சட்டென முடிவுக்கு வந்தவராக  அந்தப் பையனுக்கு 
ஐந்தாம் வகுப்பில்  இடம் இருக்கு என்று  எழுதிக் கொடுத்துவிட்டார்.
அப்போது கட்ட வேண்டிய தொகையையும்,
யூனிஃபார்ம்  தைக்க வேண்டிய இடத்தையும் சொன்னார்.

அந்தப் பெண்ணின் முகத்தில்  மாற்றம் ஏதும் இல்லை.
நன்றி சொல்லி கைகூப்பித் 
 தன்மகனின்  கையைப் பிடித்தபடி வெளியேறினாள் .

இண்டர்காமில்  தன்  குமாஸ்தாவை அழைத்தவர் 
அந்தப் பெண்   ,பணம் கட்டும்   விவரத்தைத் தன்னிடம் சொல்லும்படி 
கேட்டுக்கொண்டபடி    ,தன்  அறை  ஜன்னல் வழியே  வெளியே விளையாடும் மாணவர்களைப்  பார்த்தவர் 
நெடுமூச்செரிந்தார் .

Mother and child cartoon Royalty Free Vector Image

சிறிது நேரத்தில்  அந்த அன்னையும் மகனும்  மகிழ்ச்சி 
ததும்பும் முகங்களோடு  பள்ளிக்கூடத்தின் 
வாயிலைக் கடப்பதை பார்த்தார்.
குமாஸ்தாவிடமிருந்து   தொலைபேசி  மணி அடித்தது .
அவர்கள் பணம் கட்டிவிட்டதாக தெரிவித்தார் அவர்,.

மனதில் படர்ந்த வியப்புடன், தன நண்பரான தொழிலதிபருக்குத் 
தொலைபேசினார்.

''என்னப்பா நீ சொன்னவங்களுக்கு சீட் கொடுத்துவிட்டேன்.
அவர்களால் சமாளிக்க முடியுமா. 
பார்த்தால்   மத்தியதர  வகுப்பைச் சேர்ந்தவர்கள் 
பொல்லாத தெரிகிறது. அதனால் தான்  கேட்டேன்''

என்று விவரம் தெரிவித்தார்.
'' நீ கவலைப்படாதே.  அவர்கள் எனக்கு  தூர உறவுதான்.
அந்தப் பெண் மிக்க கேட்டுக் கொண்டதால் 
உன்னிடம் அனுப்பினேன் . அவள் திடம் எனக்குத் தெரியும். 
அவளே பட்டதாரிதான்.   தன கணவனைத் தேர்ந்தெடுத்துத் தான் திருமணம்  செய்து கொண்டாள் .

ஒருவிதத்தில் அவள் தந்தைக்கு நான் கடமைப் 
பட்டிருக்கிறேன்.  ஸ்கூல்  சம்பளம் கட்டுவதில் 
ஏதாவது  தொந்தரவு இருந்தால் சொல்லு. நான் கட்டிவிடு கிறேன்.''
என்றார்  அந்தப் பெரியவர்.
மனத்தில் திடீரென எழுந்த யோசனையை 
அவரிடம் பகிர்ந்து கொண்டார்  பள்ளி முதல்வர்.

அடுத்த நாள் பள்ளியில் மகனைக் கொண்டு வந்து விட்ட அந்த அம்மாவுக்கு ,முதல்வரிடம் அழைப்பு  வந்தது.

அறை  வாசலில்  நின்ற  பெண்ணை அழைத்து அவள் பெயரைக் 
கேட்டார்.
 சந்திரா சேகர் என்றவளிடம்,

''தன்  பள்ளியில்  இரண்டாம் வகுப்பு ,
ஆசிரியைப்  பதவி  காலி இருப்பதாகவும் 
தற்காலிகமாக அந்தப் பொறுப்பை 
எடுத்துக் கொள்ள முடியுமா '' என்று கேட்டார்.

இதை எதிர்பார்க்காத  சந்திரா,தான்  ஆசிரியைப் பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை  என்ற செய்தியைச் சொல்லி, தயங்கினாள் .

எங்களுக்கு மிகவும் அவசரத் தேவை இருப்பதால் 
தற்போதைக்கு ஏற்றுக் கொண்டு 
பிறகு பயிற்சி எடுக்கலாம் என்று  சொன்னவரை ஆச்சரியத்துடன் பார்த்தாள்  அவள்.

750 ரூபாய்  அந்தப் பதவிக்கு சம்பளம் என்று தெரிந்து கொண்டதும் அவள் கண்கள்  கலங்குவதைப் 
பாராதது   போலத்  திரும்பிக் கொண்டார்.
தன்கணவனிடம் ஒரு  வார்த்தை சொல்லிவிட்டு அடுத்த நாளே 
பொறுப்பேற்றுக்  கொள்வதாகத் தெரிவித்தாள்  சந்திரா.


அவளுடைய உடைகள் சீராக இருக்க
வேண்டிய அவசியத்தைச் சொல்ல வந்தவர்
அந்த கண்ணியமான முகத்தைப் 
பார்த்துப் பேசாமலிருந்தார்.
அவள் கிளம்பியதும் தன் சினேகிதனுக்கு
போன் செய்தார். உன் தொழரின் பெண்ணுக்கு 
வேலை கொடுத்து விட்டேன்.
அவளுக்கு வாரம் தோறும் உடுத்த நல்ல
உடைகள் வேண்டாமா என்று சொன்னவருக்குத் தோழரின் சிரிப்பு தான் கேட்டது.
அதெல்லாம் என் மனைவி பார்த்துக் கொள்வாள்.

இலவசமாக எதையும் வாங்கிக் கொள்ள மாட்டாள் சந்த்ரா.
நீ கவலையை விடு என்று ஃபோனை வைத்து விட்டார்.

மனதில் இருந்து பாரம் இறங்கியதை உணர்ந்த
பள்ளி முதல்வர், அன்று தன் அன்னையிடம் சொல்ல
நிறைய செய்திகள் இருப்பதை நினைத்து மகிழ்ந்தார்.

நாற்பது வருடங்களுக்கு முன் தானும் தன் அன்னையும்
இதே பள்ளிக்கு கிட்டத்தட்ட சந்த்ராவின் நிலையில்
 வந்த சூழல் மனதில் நிழலாடியது.
தன் திறமைக்குக் கிடைத்த இடத்தைத் தக்க வைத்துக் 
கொள்ள அவரும் அவர் அன்னையும் மிகப் 
பாடுபட்டனர். அம்மா செய்த தியாகங்கள் 
அவருக்குத் தெரியும்.
இப்போது இந்த நிலைமைக்கு வந்தும்
தன் வேர்களை மறக்காமல் ,இன்று போல 
வருடாவருடம் ஒரு குழந்தைக்கு உதவ
வேண்டும் என்ற ஆசையை அன்னையிடம் அன்று
பகிர்ந்து கொண்டார்.

அவளும் பரிபூரண சம்மதம் தர ஷண்முகவடிவு

டிரஸ்ட் சீக்கிரமே உருவாகியது.


















23 comments:

ஸ்ரீராம். said...

உண்மைக்கதை யாருடையது என்று தெரியவில்லை. தொடர்கிறேன். உதவியாக எதையும் எதிர்பாராத ஏற்றுக்கொள்ளாத சந்த்ரா, சமயமறிந்து தந்திரமாக உதவும் முதல்வர், அந்தத் தொழிலதிபர்... எல்லோருமே கவர்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், சுபம் போட மறந்துவிட்டேன்.
உதவி எந்த விதமாக வழிவழியாக வரலாம் என்பதற்காகவே எழுதினேன்.
யாரோ உதவ செய்து சில பேர் முன்னுக்கு வருகிறார்கள்.

நான் சொன்ன பையனும் பெரியவன் ஆனபிறகு

இன்னோரு பையன் படிக்க உதவி செயதான். வாழ்க்கையில் நடப்பதால் தான்
உண்மையாகத் தெரிகிறது.நன்றி மா.

Geetha Sambasivam said...

என் பெரியப்பாவும் அவர் நண்பர் திரு ஈஸ்வரனும் (ஈசன் இஞ்சினிரிங்) நினைவில் வருகிறார்கள். திரு ஈஸ்வரன் திருநெல்வேலியில் இருந்தும் பெரியப்பா மேல்மங்கலத்திலிருந்தும் (அப்போது மதுரை மாவட்டம்) ஒரே சமயம் சென்னைக்கு வந்தார்கள். அங்கே அவர்களுக்கு உதவியவர்கள் குடும்பத்திற்குக் கடைசிவரை உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கதை

வெங்கட் நாகராஜ் said...

பாடல் நன்று.

நல்ல மனம் வாழ்க.

கதை நன்றாக இருக்கிறது.

கோமதி அரசு said...

மிக அருமையான மனிதர்களை மனித உறவுகளை சொல்லும் கதை.
ஒருவருக்கு ஒருவர் உதவும் பண்பு சொல்லப்படுகிறது கதையில்.
தொடரும் நற்பணிகள் வாழ்க!
எல்லோரும் மகிழ்ச்சியாக இது போல் உதவி கொண்டு இருக்கட்டும்.
வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

சங்கிலித் தொடர்போல் உதவி செய்யும் மனப்பான்மையும் தொடரட்டும்
அருமை சகோதரி

நெல்லைத் தமிழன் said...

இந்த நாளை நீங்கள் எழுதிய கதையப் படித்துத்தான் ஆரம்பித்தேன். மனம் மிகவும் நெகிழ்ந்தது.

தொடர்ந்து எழுதுங்கள். எபிக்கும் ஒன்றை அனுப்பிவையுங்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா கதை சூப்பர்!!! உண்மைக் கதை என்று தெரிகிறது. ஒரு சில பள்ளிகள் மனதில் வந்து போகிறது.

சந்திராவின் குணம் மிகவும் பிடித்தது. சுயமரியாதை!!!!

முதல்வர் புத்திசாலி காமன்சென்ஸ்...மறைமுகமாக உதவி புரிகிறார். அதன் ரூட்ஸ் அவரது கடந்தகாலம்!! அவர் அம்மா செய்த நற்பணி தொடர்கிறது. அதே பொல அந்தப் பெரியவர். சூப்பர். நல்ல மனங்கள் இருந்தால் நாடும் வீடும் போற்றப்படும்!!! ஏற்றம் பெரும். சூப்பர்..

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
வழி வழியாகக் கொடை வள்ளல்கள்
நிறைந்தது நம் தேசம்.
வறுமையில் இருந்தாலும் மேன்மக்களாக இருந்து,
வாழ்வில் முன்னேறியதும் மற்றவர்களைக் கைதூக்கிவிடும்
எத்தனையோ நல்லவர்களைப்
பார்த்திருக்கிறேன். எங்கள் சித்தப்பா குடும்பத்தில்
அவருக்கு சந்ததி இல்லாதபோது
இது போல நிறைய உதவி செய்திருக்கிறார்.
கொடுப்பது இயல்பாக வரவேண்டும்.
உங்கள் பெரியப்பா பற்றி அறிய மிக மகிழ்ச்சி.
என் சித்தப்பா இப்போது இல்லை.
ஆனால் அவரால் வளம் பெற்றவர்கள்
அதிகம். அவரைப் பார்த்து கொடுக்கவேண்டும் என்ற சிந்தனை
வளர்த்தவர்களில் இந்தப் பள்ளி முதல்வரும் ஒருவர்.
இருவரையும் என் பதிவில் இணைக்கத் தோன்றியது.
சந்த்ரா கிடைத்தாள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி மா வெங்கட். சற்றே வயிற்றுத் தொந்தரவு.பதில் சொல்லத் தாமதம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ஆமாம் மா. எத்தனையோ நல்ல உள்ளங்கள் நம் கண் முன்னே.
இப்பொழுதும் இருக்கிறார்கள்.
கை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்போதுதான் குடும்பம் வளரும் மனம் நிறையும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார். சட்டென்று பிடித்தீர்கள் கருவை!! அதுதான் என் நோக்கம்.
மகிழ்ச்சி.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா. வாழ்வில் எத்தனையோ நல்லவர்களைப் பற்றி
தெரிந்து கொள்கிறோம்.

நேற்றூ இவர்கள் நினைவுக்கு வந்தார்கள்.
பணம் படைத்தால் மட்டும் போதாது.
அதைக் கொடுக்கவும் நல்ல உள்ளம் வேண்டும்.
அதுவும் கல்விக்குக் கொடுப்பது உன்னதம்.
கதையின் நாயகிகள் இருவருமே எனக்கு நெருங்கியவர்கள்.

அந்த சந்த்ராவின் மகன் இப்போது கோடீஸ்வரர்.
தாம் பெற்ற கொடையை மறக்கவில்லை.
அவரும் செய்கிறார் இப்போது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
உண்மைதான். சென்னையில் நல்ல பள்ளியில் சேர்ப்பதே
சந்த்ராவின் நோக்கம். பெற்றோரிடம் இருந்து கூட
எதையும் எதிர்பார்க்க மாட்டார்.
சுயமரியாதை. கணவர் பெயருக்குப் பங்கம் விளைவிக்கக் கூடாது.
பிடிவாதக்காரி என்று பெயர் வாங்கியவர்.
பள்ளி முதல்வர்,
ஷண்முகவடிவு அம்மாவும் அதுபோலத்தான். சமீபத்தில் மறைந்தார்.

கடைசிவரை தன் கொள்கைகளிலிருந்து விலகாதவர்.
என் திருமணத்துக்கு அவர் அளித்த மதுரை சுங்குடி ரொம்ப நாட்களுக்கு இருந்தது.

மிக நன்றி மா.

மாதேவி said...

உதவும் மனங்கள் வாழ்க!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

கதை மனதை வருடிவிட்டது வல்லிம்மா, கதைக்கு மிகப் பொருத்தமான பாட்டும் தேடிப்போட்டு விட்டீங்களே.. இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், இதெல்லாம் அப்பெண்ணும் குழந்தையும் செய்த முன்வினைப் பயனாகக்கூட இருக்கலாம்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

எங்கள் வீட்டில் எப்பவும் வேலைக்கு ஆள் இருந்தார்கள்.

நான் குழந்தையாக இருந்தபோது, என்னைத்தூக்கி திரிந்தவர் ஒருவர், மிக தங்கமான வேலைக்காரர். நாங்கள் ஊருக்குப் போகும்போது, நகைகளை ஒரு அலமாரியில் வைத்துப் பூட்டி, திறப்பை அவரிடம் கொடுத்து, பார்த்துக் கொள் எனச் சொல்லி விட்டுச் செல்வாவாம் அம்மா.. அப்படி ஒரு அருமையானவர்.. அவரின் பூர்வீகம் தமிழ்நாடுதான், தேயிலைத்தொழிலாளி குடும்பம். பின்னர் வளர்ந்து ஒரு நல்ல ஒரு பணக்காரனாக, எங்கோ ஒரு கொம்பனியில் பார்ட்னராகி வேலை செய்தவர்.. கழுத்தில் சங்கிலி மோதிரம் எல்லாம் போட்டு நம் வீட்டுக்கு வந்து போவார், எங்கள் வீட்டிலும் அவரை ஒரு மகனைப்போலவே கவனிப்பார்கள்..

ஆனால் அவர் விட்ட பிழை, அந்தக் கொம்பனியில் தன் பங்கை, நம்பி மற்ற முதலாளியோடு விட்டு வைத்திருந்தாராம், அவர் சிங்கள இனத்தவர், நாட்டுக் கலவரத்தின்போது, இவருக்கு எதுவும் கொடுக்காமல் அனுப்பி விட்டார்கள்.

பின்னர் மிகவும் கஸ்டப்பட்டு, மூன்று குழந்தைகள்.. எங்கள் அப்பா, ஒவ்வொரு மாதமும் பணம் கொடுப்பார்.. பிரச்சனைகளால் தொடர்பு இல்லாமல் போய், இடையில அவரும் இறந்துவிட்டார் நோய் வாய்ப்பட்டு என அறிஞ்சோம்.. இருப்பினும் குழந்தைகளுக்கு தொடர்ந்து அப்பா பணம் அனுப்பினார்...

நாட்டு நிலைமை மிகவும் மோசமடைந்த காலத்தில், தொடர்புகளற்றுப்போய், பணம் அனுப்ப முடியாமல் போய் விட்டது பின்பு.

சிவகுமாரன் said...

உண்மைக் கதை இது.மனதை நெருடியது.
வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கொடை வாழட்டும் .நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
என்னவோ அந்த பெண்மணியின் நினைவு வந்தது.
நீங்கள் சொன்னது போல பூர்வ ஜன்ம பலனாக
இருக்கலாம்.
உங்கள் வீட்டு வேலைக்காரரை நினைக்க
மிக வருத்தமாக இருக்கிறது
ஆனால் சந்த்ரா, மனத் திடத்துடன் இருந்து சமாளித்தாள்.
தக்க தருணத்தில் உதவி கிடைத்தது மிக அருமை.
அது சங்கிலித் தொடராகத் தொடர்வதுதான் இனிமை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சிவகுமாரன் ,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
கதை படித்துக் கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா.